வியாழன், 26 ஜனவரி, 2012

எல்லோரும் நல்லவரே! 1

அனைவருக்கும் எனது குடியரசு தின
நல் வாழ்த்துக்கள்!


1966 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்.அப்போது நான்,
தஞ்சை (தற்போது நாகப்பட்டினம்)மாவட்டத்தில்
இருக்கும் நீர்முளை என்ற ஊரில் தமிழக(அப்போதைய
சென்னை மாநில) ஊரக வளர்ச்சித்துறையில்
வேளாண் விரிவாக்க அலுவலராக
(Agricultural Extension Officer) வேலை
பார்த்து வந்தேன்.

அந்த ஊர் திருத்துறைப்பூண்டிக்கும் தலைஞாயிறுக்கும்
இடையே இருக்கிறது.அங்கு தங்கும் வசதி இல்லாததால்,
5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த தலைஞாயிறில்
நண்பர்களுடன் தங்கியிருந்தேன்.

தலைஞாயிறு அக்ரஹாரம் என்ற அழைக்கப்பட்ட
தலைஞாயிறில் இருந்த ஒரு அக்ரஹாரத்தில் தான்
நான் தங்கியிருந்த வீடு இருந்தது.

அந்த வீட்டில் நானும்,அருகில் இருந்த பனங்காடி
என்ற ஊரில் வேளாண் விரிவாக்க அலுவலராக
பணியாற்றிக்கொண்டு இருந்த என்னுடைய
வகுப்புத்தோழர் திரு வீராசாமி அவர்களும்,
பொதுபணித்துறையில் இளநிலை பொறியாளராகப்
பணியாற்றிக்கொண்டு இருந்த திரு சுப்ரமணியன்
அவர்களும், கால்நடை மருத்துவமனையில்
உதவி கால்நடை மருத்துவராக பணியாற்றிக்கொண்டு
இருந்த Dr ரூடி அவர்களும் ஒன்றாகத் தங்கியிருந்தோம்.

(எனது தலைஞாயிறு அனுபவத்தையும், தமிழக ஊரக
வளர்ச்சித்துறையில் வேலை பார்த்த அனுபவம் பற்றி
முன்பே சொன்னபடி விரிவாக ’நினைவோட்டம்‘
தொடரில் எழுத இருக்கிறேன்.)

அந்த மாதம் 15 ஆம் தேதி எனது ஊரிலிருந்து,
என் சகோதரி எனக்கு அங்கு வந்திருந்த ஒரு
அஞ்சலை திருப்பி அனுப்பியிருந்தார். அஞ்சலை
பிரித்துப் பார்த்ததும் எனக்கு ஒரே மகிழ்ச்சி.

தேசிய விதைக் கழகத்தில் (National Seeds
Corporation Ltd.,
) விதை பெருக்க உதவியாளர்
(Seed Production Assistant) பதவிக்கு, நவம்பர்
மாதம் ஹைதராபாத்தில் நடந்த நேர்முகத்தேர்வில்
கலந்துகொண்டு இருந்தேன்.

அந்த தேர்வின் முடிவுப்படி,என்னை தேர்ந்தெடுத்து
இருப்பதாகவும்,மைசூர் மாநிலத்தில்(இப்போதைய
கர்நாடக மாநிலம்) தார்வாரில்உள்ள அலுவகத்தில்
உடனே சேரவேண்டும் என்ற பணி ஆணையினை
சுமந்து வந்த அஞ்சல்தான் அது.

எப்போது அந்த பணியிலிருந்து விடுபட்டு விடுதலை
பெறுவோம் என தினம் நினைத்துக்கொண்டு இருந்த
எனக்கு அந்த அஞ்சலைப் பிரித்து படித்தபின் ஏற்பட்ட
மகிழ்ச்சியை எழுத்தில் வடிக்க இயலாது.

மாலை தலைஞாயிறு திரும்பியதும்,எனது புதிய
பணிக்கான ஆணை பற்றி சொல்லி எனது மகிழ்ச்சியை
பகிர்ந்து கொள்ள, நண்பர்களின் வரவுக்காக காத்திருந்தேன்.


தொடரும்

10 கருத்துகள்:

 1. நண்பர்கள் வந்தார்களா? மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டீர்களா?காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கு நன்றி திரு மதுமதி அவர்களே! நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டதை உங்களிடமும் பகிர்வேன்.பொறுத்திருங்கள்.

  பதிலளிநீக்கு
 3. நண்பர்கள் வரவுக்காக எங்களையும் காத்திருக்க வைத்து விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 4. ''...அந்த அஞ்சலைப் பிரித்து படித்தபின் ஏற்பட்ட
  மகிழ்ச்சியை எழுத்தில் வடிக்க இயலாது....''
  ஓ! மகழ்ச்சி . மீதிக்காகக் காத்திருப்போம். தொடரட்டும் பணி.வாழ்த்துகள். வலைக்கு வந்து மனம் மகிழும் கருத்து எழுதியுள்ளீர்கள் நன்றி. நன்றி..
  வேதா. இலங்காதிலகம்.
  httpå://kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
 5. வருகைக்கும், காத்திருப்பதற்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

  பதிலளிநீக்கு
 7. எதிர்பார்த்த வேலை கிடைத்தால் ஏற்படும் ஆனந்தமே அலாதி ...நாங்களும் காத்திருக்கிறோம் ...வாசு

  பதிலளிநீக்கு
 8. வருகைக்கு நன்றி திரு வாசு அவர்களே! எதிர்பார்த்த வேலை எவ்வாறு இருக்கும் எனத் தெரியாமல் சந்தோஷப் பட்டேன் என்றால், நான் பார்த்த வேலை எவ்வாறு இருக்கும் என நீங்களே யூகித்துக்கொளுங்கள் நான் வரும் பதிவுகளில் எழுதும் வரை.

  பதிலளிநீக்கு
 9. வருகைக்கு நன்றி சகோதரி திருமதி வேதா,இலங்காதிலகம் அவர்களே!

  பதிலளிநீக்கு