செவ்வாய், 19 ஜூன், 2012

இனி கசந்த பாலும் இனிக்குமோ?

அறிவியல் வளர்ச்சியின் பயனால் தோற்றுவிக்கப்பட்ட மரபணு
மாற்றப்பட்ட பருத்திக்கும் (Bt Cotton) கத்திரிக்காயுக்கும் (Bt Brinjal) 
இன்ன பிற பயிர்களுக்கும்  ஏற்கனவே ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி
உள்ள நிலையில் இப்போது சீன விஞ்ஞானிகள் செய்துள்ள
இன்னொரு மரபணு மாற்றம் மேலும் புதிய சர்ச்சையை
கிளப்பும்போல் தெரிகிறது.

சீன விஞ்ஞானிகள் மரபணு மாற்றம் மூலம் (Genetically Modified)
சுக்களை இனப்பெருக்கம் செய்திருப்பதாகவும், இவை சாதாரண
பசுக்களை விட அதிக ஆரோக்கியமான பால் தரும் எனவும்  
18-06-2012 தேதியிட்ட ‘Business Line’ சொல்லுகிறது.

 Inner Mongolia University யில் நடத்திய இரு வேறு ஆராய்ச்சியின் பயனாக   விஞ்ஞானிகள், பசும்பால் சாப்பிடமுடியாமல், Lactose Intolerance (பாலில் உள்ள சர்க்கரையை ஏற்றுக்கொள்ளாத நிலை) எனப்படும் வியாதியால் ஆயுட்காலம் முழுதும் போராடுபவர்களும் குடிக்கக்கூடிய பால் தரும் ஹோல்ஸ்ட்டேன் (Holstein) பசுங்கன்று ஒன்றையும், மீன்களில் காணப்படுகின்ற ஆரோக்கியமான கொழுப்புச்சத்தை அதிக அளவில் கொண்டுள்ள பாலைத் தரும் இன்னொரு பசுங்கன்றையும்தோற்றுவித்திருக்கிறார்களாம்.

                                        (கூகிள் தந்த புகைப்படத்திற்கு நன்றி!)

நாம் விரும்பி சாப்பிடும் பாலில் உள்ள Lactose எனப்படும் சர்க்கரையை செரிமானம் செய்ய நமது இரைப்பை மற்றும் குடல்களில் உள்ள Lactase எனப்படும் நொதியம் (enzyme) தான் உதவுகிறது. ஆனால் சிலருக்கு 5 வயதுக்கு மேல் ஒரு சில காரணங்களால் அவர்கள் உடலில் இந்த enzyme இல்லாமால் போவதால் அல்லது குறைவதால்  இருப்பதால் ஏற்படும் Lactose Intolerance எனப்படும் இந்த வியாதியால் பாலை உட்கொள்ளும்போது வாந்தி, குமட்டல் போன்ற தொந்தரவுக்கு ஆளாகின்றனர்.
(குறிப்பாக 90 விழுக்காடு கறுப்பின மக்கள்தான் இந்த தொந்தரவுக்கு ஆளாகின்றனராம்.)
பாலையும் பால் சார்ந்த உணவுப் பொருட்களையும் தவிர்ப்பதால் மட்டுமே இதை எதிர்கொள்ளமுடியுமாம்.சீன விஞ்ஞானிகள் தோற்றுவித்திருக்கின்ற இந்த மரபணு மாற்றப்பட்ட பசுக்கள் தரும் பாலில் Lactose இருக்காதாம் அல்லது மிக குறைவாக இருக்குமாம். எவ்வளவு Lactose இருக்கும் என்ற ஆராய்ச்சி நடந்து கொண்டு இருக்கிறதாம்.எனவே இந்த நோயால் அவதிப்படுவோருக்கு இது ஒரு மகிழ்ச்சி தரும் செய்திதான்.
மரபணு  மாற்றம்மூலம்  இன்னொரு  ஆராய்ச்சிக்குழுவால்
தோற்றுவித்திருக்கின்ற பசுவின் பாலில்,  Omega-3 என்கிற கொழுப்பு அமிலம் (Fatty Acids) அதிக அளவில் இருப்பதாகவும் இவை இதய நோய் வராமல் தடுக்கவும் மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் விமர்சர்களோ தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதோடு அல்லாமல்  இந்த மரபணு மாற்றத்தால் உண்டாக்கப்பட்ட பசுக்கள் தரும் பாலின் ஆபத்தின்மை குறித்து கேள்விகளும் எழுப்பியுள்ளார்கள்.
எது எப்படியோ. வழக்கமான சீன தயாரிப்புக்களின் தரம் போல் அல்லாமல் இந்த புதிய கண்டுபிடிப்புகள் அவதிப்படுவோருக்கு உதவுமானால் இதுவரை அவர்களுக்கு கசந்த பால் இனிக்கும் தானே!

பி.கு:வழக்கமான எனது  அனுபவங்கள் பதிவுக்கு பதிலாக ஒரு மாற்றம் இருக்கட்டுமே என்பதால் இந்த பதிவு.

10 கருத்துகள்:

  1. முழுமையாக படிக்காமல் கருத்திட்டு விட்டேன், எனது முந்தைய கருத்தை நீக்கிவிடவும்., பகிர்வுக்கு நன்றி.!

    பதிலளிநீக்கு
  2. //பி.கு:வழக்கமான எனது அனுபவங்கள் பதிவுக்கு பதிலாக ஒரு மாற்றம் இருக்கட்டுமே என்பதால் இந்த பதிவு. //

    பதிவின் தொடர் என ஆர்வமாக வந்தேன். பரவாயில்லை.ஒரு நல்ல விஷயம் பற்றிப் பகிர்ந்துள்ளீர்கள்!நன்று.

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ‘வரலாற்று சுவடுகள்’ பதிவின் நண்பரே!

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. உங்களால் எது பற்றியும் சுவாரஸ்யமாக எழுத முடியும் என்பதை நிரூபித்துள்ளீர்கள். புதிய தகவல் ஒன்றை அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு.

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு கணேஷ் அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. பசுவின் பாலில், Omega-3 என்கிற கொழுப்பு அமிலம் (Fatty Acids) அதிக அளவில் இருப்பதாகவும் இவை இதய நோய் வராமல் தடுக்கவும் மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.// ஆமாங்க பதிவின் தொடர் என்றே வந்தேன் இருப்பினும் பயனுள்ள குறிப்பு நன்றிங்க .

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கு நன்றி திருமதி சசிகலா அவர்களே! தொடர்வதற்கு நன்றி. நீங்கள் எதிர்பார்த்த தொடர் அடுத்த பதிவில்.

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

    பதிலளிநீக்கு