வியாழன், 7 ஜூன், 2012

Boss கள் பலவிதம்! 21


நாங்கள் ஆவலோடு RM முகத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தோம்
யார் பெயரை சொல்லப்போகிறார் என்று. சிறிது நேரம் எங்களை சஸ்பென்ஸில் வைத்துவிட்டு சொன்னார். முதலிடம் பிடித்தது
Professor’s Daughter என்று!

எனக்கு ஒன்றும் புரியவில்லை என்னைப்போலவே எல்லோரும்
யார் எனத் தெரியாமல் விழித்தார்கள். பின்பு அவரே சொன்னார். 'கல்லூரிகளில் நடக்கும் தேர்வுகளில் பேராசிரியருடைய மகள்
தான் முதலிடம் பெறுவார். காரணம் உங்களுக்கே தெரியும்.


ஆனால் இங்கு விடைத்தாளை திருத்தியது நீங்கள் என்பதால்,
அந்த சொற்பிரயோகம் சரியாக இருக்காது. இருந்தாலும் ஒரு வேடிக்கைக்காக அதை சொன்னேன்.முதலிடம் பெற்றிருப்பவர்
வேறு யாருமல்ல சபாபதி தான்' என்றதும், என்னால் நம்பவே
முடியவில்லை. திரு மோகன் அவர்களும், திரு அரோரா
அவர்களும் மற்ற எல்லா நண்பர்களும் வாழ்த்தைத்
தெரிவித்தார்கள்.

(திருமதி சசிகலா அவர்களும் திரு சென்னை பித்தன் அவர்களும்
திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களும் யார் முதலிடம்
பெற்றது என்பதை சரியாகவே யூகித்திருக்கிறார்கள்.)

அதற்குப் பிறகு திரு மோகன் அந்த நிதி ஆண்டிற்கு தார்வார்
வட்டாரத்திற்கு தலைமை அலுவலகம் தந்திருக்கின்ற இலக்கு
எவ்வளவு என்பதையும் அதை எவ்வாறு அடையவேண்டும்
என்பதைப்பற்றி விரிவாக விளக்கி, எல்லோரும் தங்களது
பணியில் சிறப்பாக செய்து முடிக்க வாழ்த்தி உரையை
முடித்தார். பின்பு திரு அரோரா அவர்கள் நன்றியுரை கூறியதும்
கூட்டம் முடிந்தது.

அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபோது கிழக்கே சூரியன்
எழும்பிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.ஒரு அலுவலக
ஆய்வுக்கூட்டம் ஒரு பகல் ஒரு இரவு தொடர்ந்து நடந்தது
அதுவாகத்தான் இருக்கமுடியும்.

எனக்கு தூக்கம் கண்ணை சுழற்றியது ஆனாலும் அறைக்குப்
போய் குளித்துவிட்டு திரும்பவும் அலுவலகம் வந்தேன்.
மற்ற நண்பர்கள்தாங்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றுவிட்டு
தங்களது பணியிடத்திற்கு திரும்பிவிட்டனர்.

என்னைப் பொறுத்தவரையில் அது வழக்கமாக நடத்தப்பட்ட
சம்பிரதாயக் கூட்டமாகத் தெரியவில்லை.அதற்கு மேலாக
ஒரு கலந்தாய்வு, வகுப்பறை, தேர்வு அறை மற்றும் நண்பர்கள்
சந்திப்பு கலந்த ஒரு புதுமையான நிகழ்வாகவே தெரிந்தது.

உண்மையில் அதில் பங்கேற்ற அனைவரும் அந்த புதுமையான
கூட்டத்தைப் பற்றி சிறப்பித்து பேசாத நாட்களே கிடையாது.
அதற்குப் பிறகு பணியில் இருந்த நாட்களில் எத்தனையோ
அலுவலகக்கூட்டங்களில் கலந்துகொண்டு இருக்கிறேன். நானும்
கூட்டங்கள் நடத்தியிருக்கிறேன். ஆனால் அதுபோன்ற கூட்டம்
நடந்தது அதுவே முதலும் கடைசியும் கூட.

திரு மோகன் அவர்கள் எதிலும் பிறரில் இருந்து மாறுபட்டு
செயல்படுபவர் என்பதற்கு அந்த கூட்டமே சான்று. அவரின் கீழ்
நான் ஒரு ஆண்டு தான் பணிபுரிந்தேன்.(பின்பு என்னை
புது தில்லிக்கு மாற்றிவிட்டார்கள்) அந்த குறுகிய காலத்திற்குள்
அவரிடம் நான் கற்றுக்கொண்டது அநேகம்.

திரு மோகனின் சேவை, புது தில்லியில் இருந்த எங்களது
தொழில்நுட்ப ஊழியர்கள் பயிற்சிக் கல்லூரிக்குத் தேவை
என தலைமையகம் நினைத்ததால் அவரும் தில்லிக்கு பணி
இட மாற்றம் செய்யப்பட்டார்.

எப்போதும் சுறுசுப்பாக இருப்பது, தான் பணிபுரியும் நிறுவனத்திற்கு நேர்மையாய் இருப்பது, மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவது,கண்டிப்பாக இருப்பது, தன்னோடு பணியாற்றுபவர்களிடம் தோழமையோடு பழகி உற்சாகப் படுத்துவது, நன்முறையில் பணியாற்றுபவர்களை தட்டிக்கொடுப்பது,சரியாக
பணியாற்றாதவர்களை தண்டிக்காமல் மென்மையாய் கண்டித்து பணியாற்ற செய்வது போன்ற அவரது செயல்பாடுகள் என்னைக்  
கவர்ந்தது என்பதும் அவைகளை நான் பின்பற்ற முயற்சித்தேன்
என்பதும் உண்மை.

நான் Boss கள் பலவிதம் 2 ல் குறிப்பிட்டுள்ள நான்கு பிரிவுகளில்
திரு மோகன் அவர்கள் சுறுசுறுப்பான தேனீ போன்றவர்கள்
வகையைச் சேர்ந்தவர் என்பது எனது கணிப்பு. அவரைப்
போன்றவர்கள் நம்மிடையே அதிகம் இல்லை என்பது
ஒரு குறையே.

மற்ற Boss கள் பற்றி அடுத்த பதிவுகளில்....
.

தொடரும்

10 கருத்துகள்:

  1. //அவரைப்போன்றவர்கள் நம்மிடையே
    அதிகம் இல்லை என்பதுஒரு குறையே.//

    உண்மை.உங்கள் எழுத்து அவரை நேரில் பார்ப்பது போல்காட்டி விட்டது .நன்று

    பதிலளிநீக்கு
  2. சுறுசுறுப்பான தேனீ போன்றவர்களை எனக்கும் பிடிக்கும். கொஞ்சக் காலமென்றாலும் அவரிடம் நிறையப் படித்தீர்களே இது நல்லது தானே. இப்படி அனுபவங்களை வாசிப்பது மகிழ்ச்சி. தங்களிற்கு நன்றியும் நல்வாழ்த்தும்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
    திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. எப்போதும் சுறுசுப்பாக இருப்பது, தான் பணிபுரியும் நிறுவனத்திற்கு நேர்மையாய் இருப்பது, மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவது,கண்டிப்பாக இருப்பது, தன்னோடு பணியாற்றுபவர்களிடம் தோழமையோடு பழகி உற்சாகப் படுத்துவது, நன்முறையில் பணியாற்றுபவர்களை தட்டிக்கொடுப்பது,சரியாக
    பணியாற்றாதவர்களை தண்டிக்காமல் மென்மையாய் கண்டித்து பணியாற்ற செய்வது//
    இத்தனை நற்பண்புகளும் ஒருங்கே பார்ப்பது அதிசயம் தான் உங்களுக்கு பழகும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி .

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    திருமதி சசிகலா அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
    திரு பழனி கந்தசாமி அவர்களே!

    பதிலளிநீக்கு
  8. //எப்போதும் சுறுசுப்பாக இருப்பது, தான் பணிபுரியும் நிறுவனத்திற்கு நேர்மையாய் இருப்பது, மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவது, கண்டிப்பாக இருப்பது, தன்னோடு பணியாற்றுபவர்களிடம் தோழமையோடு பழகி உற்சாகப் படுத்துவது, நன்முறையில் பணியாற்றுபவர்களை தட்டிக்கொடுப்பது,சரியாக
    பணியாற்றாதவர்களை தண்டிக்காமல் மென்மையாய் கண்டித்து பணியாற்ற செய்வது போன்ற அவரது செயல்பாடுகள் என்னைக்
    கவர்ந்தது//

    இதுபோல உள்ளவர்களை, பொதுவாக நம்மைப் போல உள்ளவர்களுக்குப் பிடிக்கத்தான் செய்யும். இவர்களையே பிற்காலத்தில் நாம் பொறுப்பேற்கும் போது ஒரு ரோல் மாடலாக வைத்துக்கொள்ளத்தான் நினைப்போம்.

    இவர்களைப்போன்ற தேனீக்களைப் பார்ப்பது அரிதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! நீங்கள் கூறியதுபோல திரு மோகன் அவர்கள் போன்ற தேனீ வகையைச் சேர்ந்த Boss களைப் பார்ப்பது அரிது தான்.

      நீக்கு