பொருளாதாரம் படிக்கும் மாணவரிடம் கேட்டுப் பாருங்கள்.
ஒரு உற்பத்திக்கு முக்கியமான காரணிகள் என்னவென்று.
மனிதவளம், மூலப்பொருட்கள் மற்றும் நிதி என்பது அவரது
பதிலாய் இருக்கும். (Men, Materials and Money)
மேலாண்மை படிக்கும் மாணவரிடம் கேட்டுப் பாருங்கள்.
அவர் சொல்லுவார். மனிதவளம், மூலப்பொருட்கள் நிதி,
இயந்திரம், மற்றும் சந்தை ஆகியவை முக்கியமான காரணிகள்
என்று. (Men,
Materials Money, Machine and Market)
உண்மைதான் மனிதவளம், மூலப்பொருட்கள் நிதி, இயந்திரம்
ஆகியவைகள் இருந்தால்தான் ஒரு பொருளை உற்பத்தி
செய்யமுடியும். ஆனால் உற்பத்தி செய்தால் மட்டும்
போதாதே. அவைகளை உபயோகிக்கும் நுகர்வோர் எனப்படும் வாடிக்கையாளர்கள் இருந்தால்தானே வணிகத்தில்
இலாபம்
ஈட்டமுடியும்.
பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள்
மட்டுமல்ல, எல்லா வகையான சேவைகளைத் தரும்
நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்கள் தேவை.
வாடிக்கையாளர்கள் (ஆதரவு) இல்லாத எந்த நிறுவனமும்
நிலைத்து நிற்கமுடியாது என்பதுதான் நிதர்சனம்.
அதனால் தான் தொழில் நிறுவனங்களும் சேவை நிறுவனங்களும்
போட்டி போட்டுக்கொண்டு புதிய புதிய சலுகைகளை அறிவித்து
வாடிக்கையாளர்களைக் கவருவதோடு மட்டுமல்லாமல்
அவர்களை தக்க வைத்துக்கொள்ள முயற்சித்துக்கொண்டு
இருக்கின்றன.
வாடிக்கையாளரைப் பற்றிய கீழ்க்கண்ட பொன்மொழிகள் கொண்ட
பலகைகளை அநேக வணிக அலுவலகங்களில், குறிப்பாக வங்கிக் கிளைகளில் அதுவும் ‘வாடிக்கையாளர் வாரம்’ கொண்டாடும்போது
பார்த்திருக்கக்கூடும்.
வாடிக்கையாளர் என்பவர் நமது வளாகத்தில்
ஒரு அதி முக்கிய வருகையாளர்
அவர் நம்மை சார்ந்து இல்லை
நாம்தான் அவரை சார்ந்து இருக்கிறோம்
அவர் நமது பணிக்கு இடையூறு அல்ல
நமது பணியின் குறிக்கோளே அவர்தான்
அவர் நமது வணிகத்தில் வெளி ஆள் அல்ல
மாறாக நமது வணிகத்தின்
ஒரு பகுதியே அவர்
நாம் அவருக்கு சேவை செய்வதன் மூலம்
சலுகை ஏதும் செய்வதில்லை
அவருக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பு தருவதன்
மூலம் அவர்தான் நமக்கு சலுகை செய்கிறார்
வாடிக்கையாளர் யார் என்பதை இதைவிட யாரும் சிறப்பாக
சொல்லியிருக்கமுடியாது என எண்ணுகிறேன்.
இங்கு
குறிப்பிட்டுள்ள இந்த புகழ் பெற்ற கருத்தை சொன்னவர்
வேறு யாருமல்ல நமது நாட்டின் தந்தையான
மகாத்மா காந்தி அவர்கள்தான்.
1890 ல்,
தென்னாப்பிரிக்காவில் அவர் ஆற்றிய ஒரு
சொற்பொழிவில் சொன்ன
கருத்தே இது.
புகுமுக
வகுப்பில் (Pre University Course)
பொருளாதாரம்
படித்தபோதும் பின்னர்
வங்கியில் சேர்ந்த பிறகு C.A.I.I.B
தேர்வுக்காக பொருளாதாரம் படித்தபோதும்
The Customer is King
என்ற சொற் பிரயோகத்தைப் படித்தபோது
எனக்குள்
ஒரு சந்தேகம் எழுந்ததுண்டு. உண்மையில் வாடிக்கையாளர்கள்
ஒரு அரசனைப்போல்
வணிக நிறுவனங்களால்
நடத்தப்படுகின்றனரா
என்று.
எனக்குத்
தெரிந்தவரை, அதற்கான பதில் ஆம் என்பதும்
இல்லை என்பதும்
தான்.
வங்கியில்
34 ஆண்டுகள் பணியாற்றியபோது பல நூறு
வாடிக்கையாளர்களை
சந்தித்து இருக்கிறேன். அவர்களுக்கு
என்னாலான உதவிகளையும்
செய்திருக்கிறேன்.அவர்களோடு
எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களை பகிர்ந்துகொள்ளலாமென
நினைத்ததின் விளைவே இந்த
தொடர் பதிவு!
ஆகா!செம சுவாரஸ்யமா இருக்கும்போல! காத்திருக்கிறேன்
பதிலளிநீக்குவருக வருக திரு சென்னை பித்தன் அவர்களே! காத்திருப்பதற்கு நன்றி!
பதிலளிநீக்குநானும் பொருளாதார மாணவன் தான்.சென்ற தொடரின் பிற்பாதியை தவறவிட்டுவிட்டேன்.இந்த தொடரை தவறாமல் வாசிக்கிறேன் ஐயா.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி கவிஞர் மதுமதி அவர்களே!பொருளாதாரம் படித்தவரிடம் அதைப் பற்றி பேசுவது ‘கொல்லர் தெருவில் ஊசி விற்ற கதை’யாகிவிடும் என்பதை அறிந்தவன் நான்.எனவே தங்களிடம் மிகவும் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும்! தொடர்வதற்குநன்றி.
பதிலளிநீக்குஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
பதிலளிநீக்குகாத்திருக்கிறேன் அடுத்த பாகத்திர்க்காக!
பதிலளிநீக்குவங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ஒரு கலப்பான அனுப்வங்களே கிடைத்திருக்கிறது, உங்களைப்போன்ற அனுபவசாலிகளின் மூலம் இன்னும் மேலதிக தகவல்கள் கிடைக்கும், தொடருங்கள்,வாசிக்கிறோம்.
பதிலளிநீக்குகஸ்டமர் ராஜா என எழுத்தில் இருந்தாலும் இயல்பில் "கஷ்டமராக" தான் நுகர்வோர்கள் இருக்கிறோம் :-))
நானும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவன் தான். ஆயினும் ஏட்டில் பொருளாதாரம் வேறு. நடைமுறையில் பொருளாதாரம் வேறு. இல்லையா ஐயா...? வாடிக்கையாளர்களை டீல் செய்வது என்பதில் மிக சுவாரஸயமான அனுபவங்கள் நிறையப் பெற்றிருப்பீர்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை எனக்கு. எங்களுடன் அவற்றை நீங்கள் பகிரவிருப்பதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்கிறேன் நானும்,
பதிலளிநீக்குவங்கியில் பணியாற்றியவன் என்ற முறையில், நானும உங்கள் வங்கி அனுபவத் தொடர்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
பதிலளிநீக்குஇன்னும் நிறைய அறிந்து கொள்ள காத்திருக்கிறேன் சார்...
பதிலளிநீக்குThe Customer is our King என்று வங்கிகளில் எழுதப்பட்டதைப் பார்த்திருக்கிறேன்.ஆனால் உண்மையில் அப்படி நடத்துகிறார்களா என்பது ஐயமே.அவர்களுடைய பணிசுமைகூட அதற்கு காரணமாக இருக்கலாம்.
பதிலளிநீக்குவங்கி கணக்கு துவங்குதல்,க்ளோஸ் செய்தல் போன்றவற்றில் உள்ள விதிமுறைகளைச் சொன்னால் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் அய்யா!
வருகைக்கும்,எதிர்பார்ப்புக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!
பதிலளிநீக்குவருகைக்கும்,காத்திருப்பதற்கும் நன்றி ‘வரலாற்று சுவடுகள் நண்பரே!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வவ்வால் அவர்களே!நுகர்வோர் கஷ்டங்களை உணர்ந்தவன் என்பதால் அதுபற்றியும் எழுதுவேன்
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பால கணேஷ் அவர்களே! நீங்கள் கூறுவது உண்மையே. எனது அனுபவம் சுவாரஸ்யமா இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும். தொடர்வதற்கு நன்றி!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! வங்கியாளர் என்ற முறையில் எனது அனுபவம் போன்று நீங்களும் பெற்று இருப்பீர்கள்.இருப்பினும் ஒவ்வொரு அனுபவமும் வெவ்வேறு வகையானது தானே?
பதிலளிநீக்குவருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே! உங்களது சில ஐயங்களுக்கான பதில் எனது பதிவின் மூலம் கிடைக்கும் என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குவாடிக்கையாளர் யார் என்பதை இதைவிட யாரும் சிறப்பாக சொல்லியிருக்கமுடியாது என எண்ணுகிறேன்.
பதிலளிநீக்குசிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!
பதிலளிநீக்குஅன்பின் நடன சபாபதி - பணி நிறைவு செய்டஹ் ஒரு வங்கிப்பணியாளனாக தங்கலீன் இத்தொடரினைப் படிக விரும்புகிறேன் - படிக்கிறேன் - மறு மொழி இடுகிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குமுதல் வருகைக்கும், எனது பதிவைத் தொடர இருப்பதற்கும் நன்றி திரு சீனா அவர்களே! தாங்களும் வங்கியாளர் என்பதால் தொடரை இரசிப்பீர்கள் என எண்ணுகிறேன்.
பதிலளிநீக்குஅருமையான உண்மையான பதிவுகள். நன்றி
பதிலளிநீக்குவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு அனானி அவர்களே!
நீக்கு