செவ்வாய், 4 செப்டம்பர், 2012

ஆசையில் ஒரு கடிதம்? 5


நான் எழுந்து சார். அரசு அலுவலகங்களில் படிகளை 
அனுப்பும்போது Copy to என எழுதாமல் Copy submitted, Copy transmitted, 
மற்றும் Copy forwarded என வெவ்வேறு விதமாக எழுதுவதுண்டு. உண்மையில் அது சரியான முறையா?’ என்று கேட்டதற்கு,
பேராசிரியர் மாத்யூ ஏன் அவ்வாறு கேட்கிறீர்கள்?’ என்றார்.

அதற்கு சார், நான் அரசுப்பணியில் இருந்தபோது, Boss களுக்கு
அனுப்பும் Copy ல், Copy submitted என்றும், சம பணிநிலையில்
(Equal Cadre) உள்ளவர்களுக்கு அனுப்பும் Copy ல், Copy transmitted
என்றும்,கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு அனுப்பும் Copy ல்,
Copy forwarded என்றும் பதவிக்குத் தக்கவாறு எழுதவேண்டும்
என சொல்வார்கள். அது சரியா எனத் தெரிந்துகொள்ளத்தான்
கேட்டேன். என்றேன்.

அதற்கு அவர் நீங்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?’ என்று
கேட்டபோது நான் தமிழ் நாட்டை சேர்ந்தவன். என்றேன்.

உடனே அவர் சிரித்துக்கொண்டே ஆங்கிலேயர்கள் நம்மைவிட்டுப்
போய் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் உங்கள் மாநிலத்தில்
இன்னும் பழைய பிரிட்டிஷ் கால முறைகளையே தொடர்கிறீர்கள்
என நினைக்கிறேன்.

Submitted என எழுதுவதால், நீங்கள் என்ன உங்கள் Boss ன் காலில்
விழுந்து சமர்ப்பிப்பதாக எண்ணமா? அல்லது Forwarded என
எழுதுவதால் உங்கள் கீழ் உள்ள ஊழியர்களுக்கு அந்த கடிதத்தை
தூக்கி எறிகிறீர்கள் என்று பொருளா? எல்லோருக்கும் அந்த கடிதத்தின் படியை அனுப்புகிறோம். அவ்வளவே. யாருக்கு கடிதத்தின் Copy யை
அனுப்பினாலும் Copy to என்று எழுதினால் மட்டு போதும்.

ஆங்கிலேயர் நம்மை ஆண்டபோது யாரோ சிலர் ஏற்படுத்திய இந்த அடிமைத்தனமான செயலை நாம் இன்னும் தொடரவேண்டியதில்லை
என நினைக்கிறேன். என்றார். .  

மேலும் அவர் பேசுகையில், வேலைப் பளு காரணமாக, நாம்
Planned mood of writing ல் இல்லாததன் காரணமே நாம் செய்யும்
சிறுசிறு தவறுகள். அவற்றைத் திருத்திக்கொண்டுவிட்டால்
Business Writing’ என்பது ஒரு குழந்தை விளையாட்டுப்போல
(Child’s Play).’ என்றார்.

மேற்கொண்டு அவர் பேச நினைத்தாலும், அவருக்கு 
கொடுக்கப்பட்டிருந்த ஒன்றரை மணி நேரம் முடிந்துவிட்டபடியால் அத்தோடு நிறுத்திக்கொண்டு விடை பெற்றார். 

அவரது எங்களுக்காக அவர் செலவிட்ட நேரம் ஒன்றரை மணி 
நேரம்தான். ஆனாலும் அந்த நேரத்திற்குள் அவரிடமிருந்து நாங்கள் கற்றுக்கொண்டது ஏராளம்.

அவரிடமிருந்து இன்னும் கற்றுக்கொள்ளமாட்டோமா என்று 
எங்களுக்கு ஆவல் இருந்தாலும், நேரமின்மை காரணமாக அது முடியவில்லை. 

அந்த பயிற்சி முடிந்து கோவைக்கு வந்ததும்,முதல் வேலையாக, 
எனது வட்டார அலுவலகத்தில் இருந்த அலுவலர்கள் அனைவரையும் கூட்டி நான் கற்று வந்த, சரியான முறையில் (வணிக) கடிதம் 
எழுதும் முறை பற்றி விரிவாக  விளக்கினேன். அனைவரும் அந்த முறையையே பின்பற்றுவோம் என்றும் சொன்னேன். ஆனால் 
எவ்வளவு பேரால் அதை செய்யமுடிந்தது எனக்குத் தெரியவில்லை.

இந்த நேரத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட்டாகவேண்டும்.ஆங்கிலம் 
நமது தாய் மொழி அல்ல என்பதால் அந்த மொழியை 
கையாளும்போது கவனமாக இருக்கவேண்டும், இல்லாவிட்டால் 
அது எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேசிய விதைக் 
கழகத்தில் பணியாற்றியபோது எனது Boss திரு மோகன்  
சொல்லுவார்.

அவர் தான் சரியான ஆங்கிலச் சொல்லை கையாளாததால் 
தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தையும் சொன்னதும்தான் தெரிந்தது
கடிதம் எழுதும்போது நாம் எவ்வளவு கவனமாக இருக்கவேண்டுமென்று.

அவர் படித்து முடித்ததும் அஸ்ஸாமில் இருந்த, ஆங்கிலேயர்களால் நிர்வகிக்கப்பட்ட ஒரு தேயிலை நிறுவனத்திற்கு  நேர்முகத்தேர்வுக்கு
சென்று திரும்பியிருக்கிறார். அவரை தேர்ந்தெடுத்ததாக சொல்லி 
அந்த நிறுவனம் பணி நியமன ஆணையை அனுப்பி அவரது 
ஒப்புதலை தெரிவிக்க சொல்லி கேட்டு இருக்கிறது. 

அதற்கு நன்றி தெரிவித்து தான் எப்போது சேரவேண்டும் எனக்கேட்டு பதில் அனுப்பியிருக்கிறார். ஒரு மாதம் ஆகியும் பதில் வரவில்லை என்றதும் அந்த நிறுவனத்திற்கே நேரில் போய் கேட்டதும் அவர்கள் சொன்னார்களாம்  சரியான ஆங்கிலம் தெரியாத உங்களுக்கு இங்கு வேலை இல்லை. என்று.

அவருக்கு என்ன தவறு செய்தோம் எனத்தெரியாததால் அங்கிருந்த உதவியாளரிடம் கேட்டதற்கு அவர் சொன்னாராம் ‘’நீங்கள் அனுப்பிய ஒப்புதல் கடிதத்தின்  அடியில் Yours truly என்பதற்குப் பதில்   
Yours truely என எழுதிவிட்டீர்கள். அதுதான் நீங்கள் வேலை 
இழக்கக் காரணம். என்று.  

தொடரும்

12 கருத்துகள்:

 1. ஒரே ஒரு "e" போட்டதுக்கு.. வேலைக்கு ஆபத்தாய் அமைந்திருக்கிறதே? நல்லவேலை இப்படிப்பட்டவர்கள இன்றில்லை இருந்திருந்தால் என் நிலைமை என்னாவது :) :)

  cc நல்ல விளக்கம்! நன்றி!

  பதிலளிநீக்கு
 2. // ஆங்கிலேயர்கள் நம்மைவிட்டுப் போய் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் உங்கள் மாநிலத்தில் இன்னும் பழைய பிரிட்டிஷ் கால முறைகளையே தொடர்கிறீர்கள் என நினைக்கிறேன். //

  இன்னும் நாம் கோட்டை முதல் குமரி வரை அப்படியேதான் இருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 3. அடப்பாவமே!ஒரு ஈ(e) வந்து வேலையைக் கெடுத்துவிட்டதே!
  அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய செய்திப் பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 4. பேராசிரியர் மாத்யூ அவர்கள் எவ்வளவு விரிவாக விளக்கி உள்ளார்...

  அடுத்த பகுதியையும் படிக்க ஆவல்... நன்றி சார்..

  பதிலளிநீக்கு
 5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ‘வரலாற்று சுவடுகள்’ நண்பரே!

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி. தமிழ் இளங்கோ அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான்.

  பதிலளிநீக்கு
 7. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 8. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 9. நல்ல பயனுள்ள விஷயங்கள் தெரிந்துகொண்டேன்..தமிழிலும் பல நடைமுறைகள் காணப்படுகின்றன. நீங்கள் சொல்லும் ஆங்கில கடித முறையை அப்படியே மொழி பெயர்த்து இன்றும் அரசு அலுவலகங்களில் பயண படுத்தப் படுகிறது. உதாரணத்திற்கு பணிந்து சமர்ப்பிக்கப் படுகிறது.

  பதிலளிநீக்கு
 10. இந்த இடத்தில் நான் முன்பு வேலை செய்த கம்பெனியின் அமெரிக்க சி இ ஒ வை நினைக்க வைத்து விட்டீர்கள். அவரே எழுதி அனுப்பும் இ மெயில் களில் உள்ள எழுத்து பிழைகளை பற்றி ஒருமுறை சொன்னபோது அவர் சொன்னது.. I don't care man! i could wait for my sec. to send without errors, but it was more urgent. it is okay as long as you understand. English is neither your nor my mother tongue. why bother?

  பதிலளிநீக்கு
 11. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே! கடிதங்கள் பணிந்து சமர்ப்பிக்கப்படுகின்ற அவலம் இன்னும் தொடர்கிறது என்பதைக் கேட்கவே வருத்தமாய் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 12. வருகைக்கு நன்றி திரு bandhu அவர்களே! உங்களுக்கு ஏற்பட்டதுபோன்ற அனுபவம் எனக்கும் வட இந்திய நண்பர்களோடு பணியும்போது ஏற்பட்டது. ஒரு நண்பர் கடிதத்தில் I do not no என எழுதியிருந்ததைப் பார்த்து, ‘என்ன no என எழுதியிருக்கிறீர்கள்? know என்றல்லவா எழுதவேண்டும்?’ என சொன்னதற்கு அவர் ‘தகவல் பரிமாற்றத்திற்குத்தான் மொழி. நீங்கள் நான் என்ன எழுதினேன் என்று புரிந்துகொண்டீர்கள் அல்லவா? பின் எந்த ‘நோ’ போட்டால் என்ன?’ என்று சொன்னார்!

  பதிலளிநீக்கு