சனி, 15 செப்டம்பர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 2


வங்கியில் பணி புரியும்போது வாடிக்கையாளர்களோடு எனக்கு
ஏற்பட்ட அனுபவம் பற்றி எழுது முன், இந்த ஒரு சிறிய
அறிமுகத்தை தந்துவிட்டு தொடரலாம் என நினைக்கிறேன்.

நம் நாட்டில் இருந்த 14 பெரிய வணிக வங்கிகள் (Commercial Banks)  நாட்டுடைமையாக்கப்படுமுன் (அதாவது ஜூலை 19 ஆம் நாள்
1969 க்கு முன்) அவைகள் பெரிய நிறுவனங்களுக்கும்,வசதி
படைத்தோருக்கு மட்டுமே கடன் கொடுத்து வந்ததால் 
வங்கிகளில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அப்போது அதிக 
அளவில் இல்லை.அப்படி இருந்த வாடிக்கையாளர்களும், 
பெரும்பாலோர் மேல்தட்டு மக்களாகவே இருந்தனர் 
என்பதுதான் உண்மை
.
மேலும் சில தொழில் நிறுவனங்களை நடத்தியவர்களால்,
அவர்களது தேவைக்காக தொடங்கப்பட்ட வங்கிகளில், அந்த
வங்கிகளில் உரிமையாளர்களும்,அவர்களே வாடிக்கையாளர்களும்
அவர்களே!

ஆனால் வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டதும் தான் அரசின் கொள்கைக்கிணங்க விவசாயிகள் சிறுதொழில் புரிவோர்
போன்றோருக்கு வங்கிகள் கடன்கள் கொடுக்கத் தொடங்கியதால் வங்கிகளுக்கு பலதரப்பட்ட வாடிக்கையாளர்கள் வரத்தொடங்கினார்.

வங்கிகளில் அப்போது பணிபுரிந்தோர் அதுவரை Elite Customer
எனப்படும் ஒரு சில உயர் பிரமுகர்களுக்குமட்டும் அளித்து வந்த
சேவையை, புதிதாய் வரத்தொடங்கிய வாடிக்கையாளர்களுக்கு
அதுவும் குறிப்பாக விவசாயிகளுக்கு நீட்டிப்பதில் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டார்கள், ஏன் அவர்களிடம் பேசவே சிரமப்பட்டார்கள்
என்பதே உண்மை.

காரணம் அப்போது வங்கியில் பணியாற்றியவர்களில்
பெரும்பான்மையோர் நகர்ப்புற பகுதியை சேர்ந்தவர்கள்.
அவர்களுக்கு கிராமப்புறத்தைப் பற்றி எதுவும் தெரியாததால்
அங்கிருந்து வரும் மக்களிடம் பேசவே தயங்குவார்கள்.
ஒருவேளை அவர்களிடம் பேசுவதையே இழுக்கு என
நினைத்தார்களோ என்னவோ! 

அந்த நேரத்தில் தான் என்னைப் போன்றோர்கள் (வேளாண்
அறிவியல் பட்டப் படிப்பு படித்தோர்) விவசாயிகளுக்கு கடன்
தருவதற்காக பணியில் அமர்த்தப்பட்டார்கள்.   

நான் சிண்டிகேட் வங்கியில் பணிக்கு சேர்ந்தபோது, வங்கிகள்
நாட்டுடைமை ஆக்கப்பட்டு ஆறு மாதங்கள் கூட 
ஆகியிருக்கவில்லை. வங்கியில் நான் முதலில் பணி ஆற்றியது 
கோவை மாவட்டத்தில் இருக்கும் ஒரு வட்ட தலைமையகத்தில் 
(Taluk Head Quarters).

அப்போது அந்த ஊரில் ஸ்டேட் வங்கியையும் சேர்த்து ஆறுக்கு
மேற்பட்ட வங்கிகள் இருந்தாலும், வங்கிகள் நாட்டுடைமையாக்கு
முன்பே விவசாயிகளுக்கு கடன் கொடுத்து வந்த ஒரே வங்கி
எங்களது வங்கிதான் என்பதை பெருமையோடு 
சொல்லிக்கொள்வேன். 

ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகள் விவசாயிகளுக்கு கடன்கள் தர
கட்டுப்பாடு விதித்து இருந்தபோதிலும், அப்போது எங்கள்
வங்கியின் தலைவராக இருந்த திரு T.A.Pai அவர்கள்
(பின் நாட்களில் இவர் L I C நிறுவனத்தின் தலைவராகவும்,
மைய அரசில் அமைச்சராகவும் பணியாற்றினார்.) வங்கிகள் நாட்டுடைமையாக்கு முன்பே அதாவது 1964 லேயே
ரிசர்வ் வங்கியிடம் சிறப்பு அனுமதி பெற்று கடன்கள் வழங்கி விவசாயிகளுக்கு உதவினார் என்பது வரலாற்று செய்தி)  

ஆரம்பத்தில் அதாவது 1970 களின் ஆரம்பத்தில் நான் பணிபுரிந்த
வட்டத்தை சேர்ந்த விவசாயிகள் யாராவது கடன் கேட்டு
மற்ற வங்கிகளுக்கு சென்றால், அவர்களை எங்கள் வங்கிக்கு அனுப்பிவிடுவார்கள். காரணம் அப்போது அந்த வங்கிகளில்
அந்த வகை கடன்கள் தர அனுபவம் உள்ள அலுவலர்கள்
இல்லாததும் மற்றும் அந்த வங்கிகளுக்கே அந்த அனுபவம்
இல்லாததும் தான்.

எனவே எப்போதும் எங்கள் வங்கியில் விவசாய பெருமக்களின்
கூட்டம் அதிகமாகவே இருக்கும்.நான் விவசாயக் கடன் துறையை
கவனித்து வந்ததால், விவசாயிகள் யார் வந்தாலும் அவர்கள்
எதற்காக வந்திருக்கிறார்கள் எனக் கேட்காமலேயே Counter ல்
இருந்த நண்பர்கள் அவர்களை என்னிடம் அனுப்பிவிடுவார்கள்.

வந்தவர்களில் சிலர் நகைக்கடன் பெற வந்திருக்கலாம், சிலர்
வரைவுக் காசோலை (Demand Draft) பெறக்கூட வந்திருக்கலாம்.
அவர்கள் விவசாயக் கடன் கேட்டு வரவில்லை என்றாலும்
தயக்கத்தோடு வரும் அவர்களிடம் ஆதரவாகப் பேசி அவர்களுக்கு தேவையானவைகளை நான் செய்து தந்ததுண்டு.

Customer Relationship Manager என்று இப்போது வங்கிகளில்
சொல்கிறார்களே,அதுபோல விவசாயிகளின் அறிவிக்கப்படாத
தொடர்பு அலுவலராக இருந்தேன்.

கிராமத்திலிருந்து வந்தவன் என்பதாலும், வேளாண்மை அறிவியல் படிக்கும்போது பயிற்சிக்காக கிராமங்களுக்கு சென்று 
விவசாயிகளுடன் கலந்து  பழகியதாலும் என்னால் அவர்களோடு சுலபமாக உரையாடி அவர்களது அன்புக்கு பாத்திரமாகி 
அவர்களுக்கு உதவ முடிந்தது.

மூன்று ஆண்டுகள் கள அலுவலராக இருந்தபோது நான் சந்தித்த
கிராமப்புற வாடிக்கையாளர்கள் பல தரப்பட்டவர்கள். அவர்களில் 
பலர் மென்மையானவர்கள். வெகுளிகள் (வெள்ளந்தியானவர்கள்), தங்களின் உரிமையை அறியாதவர்கள், என சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் நகர்ப்புறங்களில் மேலாளராகவும், முதன்மை 
மேலாளராகவும், வட்டார மேலாளராகவும் இருந்தபோது நான் 
சந்தித்த வாடிக்கையாளர்கள் வேறுவிதமானவர்கள். தங்களின் 
உரிமையை உணர்ந்தவர்கள் (Demanding Customers), அதை 
நிலைநாட்ட போராடுபவர்கள் எனலாம். என்னுடைய அதிர்ஷ்டம் 
பணியில் இருந்தபோது எல்லாவிதமான வாடிக்கையாளர்களையும் சந்தித்ததுதான்.

வாடிக்கையாளர்களில் பலர் என்னை வாழ்த்தியிருக்கிறார்கள்,
சிலர் என்னிடம் கோபப்பட்டிருக்கிறார்கள், சிலர்
அச்சுறுத்தியிருக்கிறார்கள். இருந்தாலும் ‘All’s well that ends well’ என சொல்வதுபோல நான் செய்ததெல்லாம் அவர்கள் நன்மைக்கே 
எனத் தெரிந்ததும் என்னைத் தவறாக எண்ணியவர்கள் 
புரிந்துகொண்டுபின் நட்புடன் பழகியிருக்கிறார்கள்.



 தொடரும்

22 கருத்துகள்:

  1. நகைக் கடன் வழங்க நகைகளை எடை போடுவது போல வாடிக்கையாளர்களையும் நன்கு எடை போட்டு இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. இன்னும் உரிமையை உணர்ந்தவர்கள் அதிகமாக வேண்டும்... நன்றி சார்... தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  3. தமிழ்மணம் ஓட்டுப் பெட்டி வையுங்களேன். அதனால் என்ன பயன் என்று தெரியாது. ஆனால் எல்லோரும் வைத்திருக்கின்றார்கள் என்று நானும் வைத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! அவர்களே! உண்மைதான் உரிமையை உணர்ந்தவர்கள் அதிகமானால் நல்ல சேவை அதிகரிக்க வாய்ப்புண்டு.

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! நானும் முதலில் ‘தமிழ் மணம்’ வாக்குப் பட்டையை வைத்திருந்தேன். அவர்கள் சமீபத்தில் செய்த மாற்றத்தால் அது காணாமல் போய்விட்டது. இப்போது அதில் விழும் வாக்குகள் பற்றி சர்ச்சைகள் வருவதால் அதை சேர்ப்பதா அல்லது வேண்டாமா என யோசித்துக்கொண்டு இருக்கிறேன். இருப்பினும் தங்களது ஆலோசனைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. கிராமப் புறங்களில்தான் இன்னும் நிறைய வெள்ளந்தித் தனமும். அப்பாவித் தனமும் மிச்சமிருக்கிறது. நகர்ப்புற வாடிக்கையாளர்கள் நிச்சயம் வேறு ரகம்தான். உங்களின் அனுபவங்களைத் தெரிந்து கொள்ளும் ஆவலை நீங்கள் இதுவரை தந்த டீஸர்கள் அதிகரித்து விட்டன. ம்ம்ம்... சொல்லுங்க சீக்கிரம்.

    பதிலளிநீக்கு
  8. நான் சாராத ஒரு துறை பற்றி இவ்வளவு விஷயங்கள் இதுவரை நான் தெரிந்து கொண்டதில்லை நன்றி.
    பழனி கந்தசாமி அவர்கள் சொன்னது போல் தமிழ்மணம் ஓட்டுப பட்டை இணையுங்கள்.இதில் ஏதேனும் சிரமம் இருப்பின் பதிவுலக நண்பர்கள் நிச்சயம் உததவுவார்கள்.

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!


    பதிலளிநீக்கு
  10. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு பால கணேஷ் அவர்களே! நிச்சயம் எனது அனுபவங்கள் பேசும், வரும் பதிவுகளில். தயை செய்து காத்திருங்கள்.

    பதிலளிநீக்கு
  11. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே! தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை இணைக்க முயற்ச்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. விடுமுறையால் தொடர்பு பிந்தியுள்ளது.
    தொடருங்கள் படிப்பேன். நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  13. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி சகோதரி திருமதி வேதா. இலங்காதிலகம் அவர்களே!

    பதிலளிநீக்கு
  14. பயனுள்ள அனுபவங்கள்,காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  15. பாராட்டுக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  16. பயனுள்ள அனுபவங்கள்
    வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  17. வாழ்த்துக்கும், முதல் வருகைக்கும் நன்றி ‘Student Drawings’ நண்பரே!

    பதிலளிநீக்கு
  18. அன்பின் நடனசபாபதி - தொடர் அருமையகச் சென்றுகொண்டிருக்கிறது - அனைத்தையும் படிக்கிறேன் - சுய அறிமுக பதிவாக 1970 துவங்கி - சிண்டிகேட் வங்கியில் பணியில் இணைந்தது மௌதல் துவங்கியது நன்று. நல்லதொரு பதிவு- தொடர்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  19. அன்பின் நடன சபாபதி - அருமையான மலரும் நினைவுகள் - அசை போட்டு ஆனந்தித்து எழுதப்பட்ட பதிவு - தொடர்ந்து படிக்கிறேன் - 1970 - வேளான் அறிவியல் - சிண்டிகேட் வங்கி - கோவை - நினைவாற்றல் அதிகம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  20. வருகைக்கும்,நினைவாற்றல் பற்றிய பாராட்டுக்கும் நன்றி திரு சீனா அவர்களே!

    பதிலளிநீக்கு