ஞாயிறு, 14 அக்டோபர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 9

பத்திரங்களுக்கான முதிர்வுத் தொகையை திரும்பப் பெற 
ரிசர்வ் வங்கிக்கு தட்டச்சு செய்து கொடுத்த கடிதத்தைப் 
பெற்றுக்கொண்ட சென்ற அந்த விவசாயி பற்றி நான் மறந்து விட்ட நிலையில், ஒரு வாரம் கழித்து முகத்தில் சந்தோஷம் பொங்க, 
அவர் என்னிடம் வந்தார்.

அவர் கையில் ரிசர்வ் வங்கியிலிருந்த வந்த கடிதமும், அந்த 
வங்கியின் பத்திரத்தில் அவரது முதலீட்டுப் பணத்தின்  முதிர்வுத் தொகைக்கான கேட்பு காசோலையும் (Demand Draft) இருந்தது. 

உள்ளூர் பாரத ஸ்டேட் வங்கியில் பெறத்தக்க அந்த கேட்பு  காசோலையையும் கடிதத்தையும்,என் கையில் கொடுத்துவிட்டு
வராது என நினைத்து இருந்த பணத்தைப் பெற, நீங்கள் செய்த 
உதவிக்கு ரொம்ப நன்றி சார். நீங்கள் இந்த தொகையைப் பெற உதவியதால், உங்கள் வங்கியிலேயே இதை நிரந்தர வைப்பி‌ல்  
(Fixed Deposit) வைக்க விரும்புகிறேன்.அதிக வட்டி தரும் 
திட்டத்தின் கீழ் இதை வைப்பாக வையுங்கள்.என்றார்.

நான் அதை வாங்கிக்கொண்டு இதற்கெல்லாம் எதுக்குங்க நன்றி.உங்கள் பணம் வந்துவிட்டதல்லவா? அதுவே போதும். 
என்றேன்.பின்  வைப்புத்தொகை வைப்பதற்கான விண்ணப்பத்தில் கையொப்பம் வாங்கிக்கொண்டு, ‘இன்று இந்த காசோலையை  ஸ்டேட் வங்கிக்கு அனுப்பி பணத்தைப் பெற்ற பிறகு வைப்புத்தொகைக்கான  இரசீதை தயார் செய்து வைக்கிறோம்.
நாளைவந்து அதை பெற்றுக்கொள்ளுங்கள்.என்றேன்.அவரும் 
'சரி.'எனக் கூறி சென்றார்.

மறு நாள் வந்த அந்த வாடிக்கையாளரிடம், அவரது 
வைப்புத்தொகைக்கான இரசீதைக் கொடுத்தேன். அதை வாங்கிக்கொண்டுசார் ஒன்று கேட்பேன். தப்பாக எடுத்துக் 
கொள்ள மாட்டீர்களே?’ என்று தயங்கிக்கொண்டே கேட்டார். 

அதெல்லாம் தப்பாக எடுத்துக்கொள்ள மாட்டேன். சொல்லுங்கள். 
என்றேன். உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?’ என்று நான்எதிர்பார்க்காத கேள்வியை அவர் கேட்டதும் எனக்கு 
ஓரே அதிர்ச்சி.

அதை வெளிக்காட்டாமல், இன்னும் இல்லை. ஏன் கேட்கிறீர்கள்?’என்றேன்.அதற்கு அவர், சும்மாதான் கேட்டேன். என்று சொல்லிவிட்டுஅடுத்துஒரு கேள்வியைக் கேட்டார் பாருங்கள்.அதைக்கேட்டதும் அவர் எதற்காக முதற் கேள்வியைக் கேட்டார் என்பதை தெரிந்துகொண்டேன்.

அவர் கேட்ட இரண்டாவது கேள்வி நீங்கள் எந்த வகுப்பு எனத் தெரிந்துகொள்ளலாமா?’ என்பதுதான். அதற்கு நான் சிரித்துக்கொண்டே,  ‘பள்ளியில்S.S.L.C படிக்கும்போது 
முதல் வகுப்பு. ஆனால் கல்லூரியில் படித்தபோது,
இரண்டாம் வகுப்புதான். என்றேன். 

எனது இந்த பதிலை எதிர்பார்க்காத அவர். இல்லை சார். நான் அதைக்கேட்கவில்லை.நேரடியாகவே கேட்கிறேன். 
தவறாக எண்ணவில்லை என்றால் நீங்கள் என்ன ஜாதி 
என்பதை நான் தெரிந்துகொள்ளலாமா?’என்றார்.

நான் அது தெரிந்து உங்களுக்கு என்ன ஆகப்போகிறது. நான் எந்தப்பிரிவாக இருந்தாலும், இந்த வங்கியில் உங்களைப் போன்றவர்களுக்குசேவை செய்ய இருக்கும் 
அலுவலர் பிரிவைச் சேர்ந்தவன் (Officers Community).  
அவ்வளவுதான்.' என்றேன்.

உடனே அவர் நான் கோபப்படுவதாக எண்ணி சார் 
தவறாக கேட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். 
ஒருவேளை நீங்கள் எங்களவரோ என்ற சந்தேகத்தில்தான் 
அவ்வாறு கேட்டேன்.’ என்றார்.

அதற்கு நான் மன்னிப்பதற்கு இதில் ஒன்றுமில்லை. நானும் தப்பாகஎடுத்துக் கொள்ளவில்லை. ஒன்று மட்டும் சொல்லுவேன். நான் உங்களவர் இல்லை என்பதுதான். 
என்றேன். 

அவரும் அதைக்கேட்டு ஏமாற்றத்தோடு  என்னிடம்  விடைபெற்று சென்றார். பொதுவாக கிராமத்தில் உள்ளவர்கள்  மற்றவர்களைப் பற்றி அறிந்துகொள்ள அதீத ஆர்வம் 
காட்டுவார்கள் என்று எனக்குத் தெரியும். என்பதால் அதை 
பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 

என்னை அவரது உறவினராக மாற்ற எண்ணினாரோ 
என்னவோ எனக்குத்  தெரியவில்லை.ஆனால் நான் அந்த உதவியை செய்ததின் மூலம் அவருக்கும் வங்கிக்கும் 
ஒரு உறவை (Banker-Customer Relationship) ஏற்படுத்தினேன் 
என்பது மட்டும் நிச்சயம்.

தொடரும்

19 கருத்துகள்:

 1. அந்த அளவுக்கு ஜாதித் தீ நமது சமுதாயத்தில் பரவியுள்ளது. வேதனைதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ‘சாதி இரண்டொழிய வேறில்லை’ என்றார் ஔவைப் பாட்டி. ஆனால் உண்மையில் அவர் சொன்ன அந்த இரண்டு சாதிகள் தவிர அநேகம் சாதிகள் உண்டு இங்கே. அவைகளை ஒரே நாளில் அ(ஓ)ழித்துவிடமுடியாது என்பதுதான் உண்மை.

   நீக்கு
  2. ‘முதல் வருகைக்கு நன்றி திரு துரைடேனியல் அவர்களே! கருத்துக்கு நன்றி’ மேற்கண்ட சொற்களை தட்டச்சு செய்து நகல் எடுக்கும்போது விடுபட்டுவிட்டது. திரும்பவும் நன்றி சொல்கிறேன் உங்கள் வருகைக்கு.

   நீக்கு
 2. அவருக்கு உங்களோடு உறவு ஏற்படாவிட்டால் என்ன?வங்கியோடு உறவு ஏற்படுத்தி விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

   நீக்கு
 3. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பழனி.கந்தசாமி அவர்களே

   நீக்கு
 4. சாதியைப் பற்றி அறிவதில் நிறையப் பேர் அக்கறை காட்டுகிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே.

   நீக்கு
 5. பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

   நீக்கு
 6. "இது நம்ம ஆளு" என்று தெரிந்தால் கவனிப்பே வேறே... ...ம்...

  பதிலளிநீக்கு


 7. தங்களின் சேவை உணர்வுக்கு நான் மிகவும் பாராட்டுகின்றேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி புலவர் அய்யா அவர்களே!

   நீக்கு
 8. I think farmer is just an innocent country folk. That was the way people used to live. If any stranger walked in my street those days, he should be prepared to answer many questions from the locals on the street. Those days people ask many personal details.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொல்வதும் சரிதான்.

   நீக்கு
 9. நான் பழகும் எவரிடமும் ஜாதியைக் கேட்க மாட்டேன். காலப் போக்கில் அதுவாகத் தெரிந்தால் சரி. இல்லாவிடினும கவலையில்லை. ஆனால் பலர் இப்படி துருவி துருவி அறிவதில் ஆர்வமுள்ளவராகவே இருக்கிறார்கள். எப்படியோ... வங்கியுடன் உறவை நீங்கள் அவருக்கு ஏற்படுத்தியது சாதனை தானே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு பால கணேஷ் அவர்களே! என்ன சாதி என்று நானும் இதுவரை யாரிடமும் கேட்டதில்லை.கருத்துக்கும் நன்றி!

   நீக்கு