வியாழன், 15 நவம்பர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 15



வயது ஏற ஏற ஏற்படும் அனுபவம் கற்றுத்தரும் பாடத்தால்தான்  
பொறுப்பு வரும்,அறிவு முதிர்ச்சி (Maturity of mind) அடையும்
என்பது எல்லோரும் சொல்வதும், நினைத்துக்கொண்டு 
இருப்பதும்.

ஆனால் வயதுக்கும், அறிவு முதிர்ச்சிக்கும் தொடர்பில்லை
என்பதை அறியும் வாய்ப்பை கல்விக் கடன் பெற்ற இரு 
இளம் வாடிக்கையாளர்கள் எனக்கு உணர்த்தினார்கள்.

ஒரு நாள் வங்கியில் என்னைப் பார்க்க ஒருவர் அவரது
மகனுடன் வந்தார். அவரது மகன் பொறியியல் கல்லூரியில்
இரண்டாம் ஆண்டு படிப்பதாகவும் முதல் ஆண்டுக்கான
கல்லூரிக் கட்டணத்தை வெளியில் அதிக வட்டியில் கடன்
வாங்கி செலுத்தியதாகவும், வட்டி அதிகமாக இருப்பதால்,
வங்கியில் குறைந்த வட்டியில் கடன் கிடைத்தால் மற்ற
மூன்று ஆண்டுகால கட்டணத்தை கட்டலாம் என்பதால்
அது கிடைக்குமா என கேட்டுத்தெரிந்து கொள்ள
வந்திருப்பதாக சொன்னார்.

அவரையும் அவரது மகனையும் உட்கார சொல்லிவிட்டு
அவரைப்பற்றி விசாரித்தேன்.அவர் அருகில் உள்ள ஒரு
கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் கூலி வேலை செய்வதாகவும் சொன்னார்.அவரது மகன் நன்றாகப் படித்து பள்ளி 
இறுதித்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதால் 
பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்து படிப்பதாகவும் 
சொன்னார்.

நான் அந்த மாணவன் வைத்திருந்த சான்றிதழ்களைப் 
பார்த்தபோது,பள்ளி இறுதித்தேர்வில் 90 விழுக்காடு மதிப்பெண்களும்,பொறியியல் கல்லூரியில் முதலாம் 
ஆண்டுத்தேர்வில் 80 விழுக்காடுமதிப்பெண்களும் 
பெற்றிருப்பது தெரியவந்தது.

நான் அவரிடம் ஏன் சென்ற ஆண்டே வங்கிக்கு 
வரவில்லை?’ எனக் கேட்டதற்கு, வங்கியில் கடன் 
தருவார்கள் என்று தனக்குத்தெரியாது என்றும் இப்போது 
அவருக்குத் தெரிந்த ஒருவர் வங்கியில் கல்விக்கடன் 
தருகிறார்கள் என  சொன்னதால் வந்ததாகவும் சொன்னார்.

அவரிடம் நான் அவசியம் உங்கள் மகன் படிக்க கடன் 
தருகிறேன். அது மட்டுமல்ல சென்ற ஆண்டு கட்டிய கல்வி
மற்றும் விடுதிகட்டணத்தின் இரசீதுகளைத் தந்தால் அதற்குரிய பணத்தையும் தருவோம். என்றேன்.(அவ்வாறு தரலாம் என்ற 
விதி இருந்ததால்நான் அப்படி சொன்னேன்.) அவருக்கு 
சொல்லமுடியாத சந்தோஷம்.

பின் ஓரிரு நாட்களில் தேவையான ஆவணங்களை கொடுத்து
அந்த மாணவர்  கடன் பெற்று சென்றார். அதற்குப் பிறகு
ஒவ்வொரு வருடமும் அவர் கல்லூரியில் பெற்ற மதிப்பெண்
பட்டியலைக் கொடுத்து அந்தந்த ஆண்டுகளுக்கான தவணைத்
தொகைக்கான காசோலையைப் பெற்று சென்றார். ஒவ்வொரு
ஆண்டும் 80 விழுக்காடுக்கு மேலேயே மதிப்பெண்கள்
பெற்றிருந்தார்.

படிப்பு முடிந்த மூன்று மாதங்களிலேயே அவருக்கு  
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி  ஆராய்ச்சி 
நிலையத்தில் பணி கிடைத்துவிட்டது. அந்த மகிழ்ச்சியான 
செய்தியை என்னிடம் வந்து சொன்னபோது அவரை மனதார 
வாழ்த்தி அனுப்பினேன்.

பின்னர் ஒரு மாதம் கழித்து அவர், தான் தவணைத் 
தொகையாக மாதம் எவ்வளவு கட்டவேண்டும் என கேட்டு 
கடிதம் எழுதியிருந்தார்.

அவர் பெற்றிருந்த கடன் தொகையோடு அதுவரை 
உள்ள வட்டியையும் சேர்த்து வந்த தொகையை அவருக்குத் 
தெரிவித்து, அந்த தொகையை 72 மாதத் தவணையில் 
கட்டலாம் என  தெரிவித்தேன்.

ஒரு வாரத்திற்குள் அவர் கடிதத்தோடு ஒரு கேட்புக் 
காசோலையையும் (Demand Draft) அனுப்பியிருந்தார்.  
வரது கடிதத்தைப் படித்து ஆச்சரியப்பட்டேன்.  





தொடரும்




28 கருத்துகள்:

  1. அடுத்த பதிவினைக்காண ஆவலைத் தூண்டி விட்டீர் விவரம் விரைவில் தருக!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், காத்திருப்புக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!

      நீக்கு
  2. ஆவலைத்தூண்டி விடும் கலையை அழகாகக் கையாளுகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

    பதிலளிநீக்கு
  4. கடிதப்போக்குவரத்து என்றாலே ஆர்வம் அதிகமாகவே உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!

      நீக்கு
  5. அறிவு முதிர்ச்சி சம்பவம் படிக்கும் வயதிலேயே அனுபவப்பட்டு விட்டேன்...

    அடுத்த பகுதியை படிக்க ஆவல்...

    நன்றி...
    tm2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  6. பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி ‘மாற்றுப்பார்வை’ நண்பர் அவர்களே!

      நீக்கு
  7. உங்கள் அனுபவம் பி.டி. சாமீ தொடர் கதையை தான் நினைவுக்கு வருகிறது.தொடருங்கள் !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு சீனிவாசன் அவர்களே!

      நீக்கு
  8. பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு இராஜவேல் அவர்களே!

      நீக்கு
    2. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி ‘வசந்தமுல்லை’ நண்பர் அவர்களே!

      நீக்கு
  9. Sir, my wife is an assistant in public sector bank. A cheque of Rs. 48000 has been presented and she has made the payment last week. Now the a/c holder is telling that the particular cheque leave was stolen and it has been presented to the bank with forged signature. It was a bearer cheque and while encashing she did not take the signature of the person to whom the payment was made in the back side of the instrument. Who is responsible for that amount?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் நன்றி திரு முத்துகுமார் சின்னசாமி அவர்களே! நீங்கள் குறிப்பிட்டுள்ள நிகழ்வில் பார்க்க வேண்டியவை.

      1 அந்த காசோலை தொலைந்துபோனதை ஏன் அந்த வாடிக்கையாளர் வங்கிக்கு தெரிவிக்கல்லை? அது தொலைந்து போனதை அவர் எப்போது கண்டுபிடித்தார்? தொலைந்துபோனதை தெரிவிக்காதது அவரது தவறே ஆகும்.
      2.அந்த காசோலையில் உள்ள கையெழுத்து வாடிக்கையாளரின் கையெழுத்துதானா என்று சரி பார்த்தது யார்? கையெழுத்து சரியாக இருக்குமானால் பணம் கொடுத்தவர் கவலைப் படத்தேவையில்லை. மேலும் அந்த கையெழுத்து அவரது இல்லை என அந்த வாடிக்கையாளர்தான் நிரூபிக்கவேண்டும்.
      3.Bearer காசோலை கொண்டுவருவோர் பின்பக்கம் கையெழுத்து இடத்தேவையில்லை. ஆனால் ஆண்டாண்டு காலமாக பணம் கொடுத்தற்கு அத்தாட்சியாக கையொப்பம் வாங்கிக்கொண்டே வங்கிகளில் பணம் தருவதால் அதுவே எழுதப்படாத சட்டமாக ஆகிவிட்டது. (The practice has become law!) இருந்தாலும் இது விவாதத்திற்கு உரியதே.
      மேலே குறிப்பிட்டுள்ளவைகளின் அடிப்படையில்தான் யார் அந்த payment க்கு பொறுப்பு என்று என்று தீர்மானிக்க முடியும்.

      நீக்கு
  10. படிக்கும் மாணவருக்கு சிறப்பாக உதவி புரிந்தமைக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

      நீக்கு
  11. என்ன சார் சஸ்பென்ஸில் விட்டு விட்டீர்கள்? தெரியாம மண்டையே வெடித்து விடும் போலிருக்கிறதே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு குட்டன் அவர்களே!. ‘சஸ்பென்ஸ்’ ஒன்றும் இல்லை நண்பரே! காத்திருங்கள் அடுத்த பதிவு வரை.

      நீக்கு
  12. சார் நாலு நாள் ஆச்சு !சீக்கிரம் சொல்லுங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! தயைசெய்து ஒரு நாள் பொறுத்திருங்கள்!

      நீக்கு
  13. Mudhal varugai. Padhivu nandraaga ulladhu. Aarvaththai thoondum anubavangal. Thodarvom. Pls visit my site:

    http://newsigaram.blogspot.com/2012/11/muga-nool-muththukkal-paththu-02-46-15.html

    பதிலளிநீக்கு
  14. முதல் வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு சிகரம் பாரதி அவர்களே!

    பதிலளிநீக்கு
  15. அன்பின் நடன சபாபதி - நூற்றுக்கொருவர் இம்மாணவர் மாதிரி படிப்பிலும் - குணத்திலிம் - சிந்தனையிலும் சிறந்து விளங்குகிறார் - அனைவரும் இவரைப் பின் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  16. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சீனா அவர்களே!

    பதிலளிநீக்கு