செவ்வாய், 16 ஏப்ரல், 2013

வாடிக்கையாளர்களும் நானும் 42எனது பணிக்காலத்தில் எனக்கு வாடிக்கையாளர்களுடன் எத்தனையோ வகையான அனுபவங்கள் ஏற்பட்டன, ஆனால் இந்த வாடிக்கையாளருடன் ஏற்பட்ட அனுபவத்தை மட்டும் என்னால் இன்னும் மறக்க இயலவில்லை.

அப்போது நான் எங்கள் வங்கியின் தமிழக கிளை ஒன்றில் முது நிலை மேலாளராக பணியாற்றிக்கொண்டிருந்தேன். ஒரு நாள் காலை எங்கள் வங்கியில் Pigmy எனப்படும் தினசரி சேமிப்புகளை வசூல் செய்யும் முகவர்  வந்து என்னிடம், சார். உங்களை நம்மிடம் Pigmy Deposit வைத்திருக்கும் டாக்டர் தம்பதியினர் உங்களை சந்தித்து பேசவேண்டும் என விரும்புகிறார்கள். தங்களுக்கு சௌகரியப்பட்ட நேரத்தை  சொன்னால்  அப்போது வந்து பார்ப்பதாக சொல்கிறார்கள். என்றார்.

என்ன விஷயமாக பார்க்க விரும்புகிறார்கள்?’  என கேட்டதற்கு, அவர் தெரியவில்லை. சார். என்றார். சரி. இன்று மதியமே அவர்களை என்னை வந்து பார்க்கலாம் என சொல்லுங்கள். என்றேன்.

இருவரும் மருத்துவர்கள் என்பதால் ஒருவேளை மருத்துவமனை கட்ட நினைக்கிறார்களோ என்னவோ. அதற்கு வங்கி கடன் கிடைக்குமா என தெரிந்துகொள்ள வருகிறார்கள் போலும் என நினைத்துக்கொண்டேன்.

மதியம் 3 மணிக்கும் அந்த டாக்டர் தம்பதியினர் வந்தனர்.வந்தவர்களை   அமர சொல்லிவிட்டு.என்ன விஷயமாக என்னைப் பார்க்க விரும்பினீர்கள்?’ என்றேன்.

அதற்கு அந்த ஆண் மருத்துவர், சார். நாங்கள் இருவரும் உங்கள் வங்கியில் Pigmy Deposit வாடிக்கையாளர்கள். எங்களுக்கு லிபியாவில் உள்ள திரிபோலியில் (Tripoli) உள்ள ஒரு பெரிய மருத்துவ மனையில் வேலை கிடைத்திருக்கிறது.விரைவில் அங்கு செல்ல இருக்கிறோம். எங்கள் பிள்ளைகள் இருவரும் இங்குள்ள பள்ளியில் (அது ஒரு பிரபலமான கிறித்துவப் பள்ளி) படித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களை எங்களுடன் அழைத்து  செல்ல முடியாது. உறவினர்கள் வீட்டில் அவர்களை விட்டு செல்ல விரும்பாததால், பள்ளியில் உள்ள விடுதியிலேயே விட்டு செல்ல இருக்கிறோம். அது விஷயமாக உங்கள் உதவி தேவைப்படுவதால் உங்களைப் பார்த்து பேச வந்தோம். என்றார்.

எனக்கு ஒரே ஆச்சரியம். இவர்களது பிள்ளைகளை பள்ளி விடுதியில் சேர்க்க நான் என்ன உதவி செய்ய முடியும். மேலும் இவர்களது பிள்ளைகள் அங்கேயே படிப்பதால் விடுதியில் சுலபமாக சேர்த்துவிட முடியும். மேலும் அந்த பள்ளி எங்கள் வங்கியின் வாடிக்கையாளர் அல்ல. அப்படி இருக்கும்போது இவர்கள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என நினைத்துக் கொண்டு, நான் எந்த விதத்தில் உங்களுக்கு உதவவேண்டும்? அந்த பள்ளி விடுதியில் உங்கள் பிள்ளைகளை சேர்க்க பள்ளி முதல்வரிடம் பேசவேண்டுமா?’ என்று கேட்டேன்.

அதற்கு அவர், அதெல்லாம் வேண்டாம் சார். நாங்கள் ஏற்கனவே எங்கள் பிள்ளைகள் அங்கு படிப்பதால் விடுதியில் சுலபமாக சேர்த்துக் கொண்டார்கள்.  நாங்களும் மூன்று மாத பள்ளி கட்டணத்தையும் விடுதிக் கட்டணத்தையும் கட்டிவிட்டோம்.

இனி வரும் மாதங்களில் கட்டவேண்டிய கட்டணத்தை நாங்கள் அங்கு சென்று வரைவு காசோலை மூலம் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு அனுப்புகிறோம். நீங்கள் அதை எங்கள் சேமிப்புக் கணக்கில் வரவு வைத்துவிட்டு, மாதாமாதம் அந்த பள்ளிக்கு பள்ளி கட்டணத்தையும் விடுதிக் கட்டணத்தையும் காசோலை மூலம் அனுப்பவேண்டும். அவ்வளவுதான். மேலும் நாங்கள் உங்கள் வங்கியிலேயே NRE கணக்கையும் தொடங்குகிறோம். என்று சொன்னார்.

எனக்கு ஒரே சந்தோஷம். வெளியில் செல்லாமலேயே ஒரு NRE கணக்கு கிடைத்திருக்கிறதே என்று. மேலும் முதல் மூன்று மாதங்களுக்கு நமக்கு வேலை இல்லை. இவர்கள் வெளி நாடு சென்றதும் பணம் அனுப்பப் போகிறார்கள். அதை அவர்கள் கணக்கில் வரவு வைத்துவிட்டு பள்ளிக்கு அனுப்பவேண்டும். அவ்வளவுதானே என எண்ணிக்கொண்டு, அதற்கென்ன நீங்கள் சொன்னபடி செய்து விடுகிறேன். நீங்கள் பள்ளியில் ஒவ்வொரு மாதமும் கட்டவேண்டிய தொகையை எங்களுக்கு அனுப்ப சொல்லி கடிதம் கொடுத்துவிட்டு, எங்களுக்கும் உங்கள் கணக்கில் இருந்து பணத்தை பற்று பதிவு (Debit) செய்யும்படி ஒரு கடிதம் கொடுத்துவிடுங்கள்.  என்றேன்.

அவர்களும்,’ரொம்ப நன்றி. சார். என சொல்லிவிட்டு சென்றார்கள். மறு நாள் சொன்னது போலவே வந்து கடித்ததைக் கொடுத்து விட்டு NRE கணக்கு ஆரம்பிக்க விண்ணப்ப படிவத்தையும் பெற்றுக்கொண்டு சென்றார்கள்.

நானும் மகிழ்ச்சியோடு Bon Voyage என சொல்லி அவர்களை அனுப்பி வைத்தேன், நான் கஷ்டப்படப்போவது தெரியாமல்!தொடரும்

22 கருத்துகள்:

 1. என்ன நடந்திருக்கும் என்று பல்வேறு சிந்தனைகள் வருகின்றன... ஆவலுடன் காத்திருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், காத்திருப்பதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 2. நேரத்துக்கு உங்களுக்கு பணத்தை அனுப்பாமல் இருந்திருப்பாங்கன்னு நெனைக்கிறேன். வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வரதராஜுலு.பூ அவர்களே!

   நீக்கு
 3. பதில்கள்
  1. வருகைக்கு நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! BP மாத்திரைகள் போட வைத்தற்கு மன்னிக்கவும்.

   நீக்கு
 4. என்ன வருத்தப்படும் நிகழ்வோ ? அறிய ஆவலில்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!

   நீக்கு
 5. சஸ்பென்ஸ் வைச்சிட்டீங்களே! அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், காத்திருப்பதற்கும் நன்றி திரு S.சுரேஷ் அவர்களே!

   நீக்கு
 6. உங்கள அனுபவங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான படங்களாக உள்ளன.
  என்னதான் நடந்திருக்கும்? ஊகிக்க முடியவில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே! என்ன நடந்தது என அறிய காத்திருங்கள்.

   நீக்கு
 7. We Indians always try look for loop holes in all the rules. May be because, we are tuned to be in survival mode. We never try to live. Wait, to see how they try to manipulate the system.
  Packirisamy N

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! பொறுத்திருங்கள் என்ன நடந்தது என அறிய!

   நீக்கு
 8. சில நேரங்களில் சில மனிதர்கள் உண்மையோ?

  பதிலளிநீக்கு
 9. கஷ்டப்படப்போவது தெரியாமல்!..

  சுமுகமாக நடந்திருந்தால் பத்தோடு பதினொன்றாக இங்கே பதியும் அளவுக்கு சுவாரஸ்யமான நிகழ்வாக இருந்திருக்காதே ...

  கஷ்ட்டப்பட்டதால் தானே நினைவில் நிற்கிறது ..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே! தாங்கள் கூறுவது சரிதான். கஷ்டப்பட்டதால் தான் அநேக நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன!

   நீக்கு
 10. சஸ்பென்ஸ் தாங்கவில்லை!அடுத்த பதிவு உடன் தேவை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு குட்டன் அவர்களே! பொறுங்கள் ஓரிரு நாட்களில் ‘சஸ்பென்ஸ்’ என்ன என்பது தெரிந்துவிடும்.

   நீக்கு
 11. வரப் போவது தெரியாமல் ஒத்துக்கொண்ட அனுபவம்...
  பின்னதை வாசித்து இதை வாசித்தென் .
  பாராட்டுகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

   நீக்கு