அன்று மதியம் கள அலுவலருடன் அந்த
வாடிக்கையாளர்கள் கொடுத்திருந்த முகவரிக்கு சென்றேன். நகரின் மய்யப்பகுதியில்
நெருக்கடியான தெருவில் இருந்த அந்த முகவரி உள்ள வீட்டைக் கண்டுபிடித்தோம்.அவர்கள்
சொன்ன அந்த அச்சகம் அவர்களது வீட்டின்
முதல் தளத்திலேயே இருந்தது.
நாங்கள் சென்றபோது வீட்டில் ஒரு பெரியவர்
இருந்தார். அவர் எங்களைப் பார்த்து, ‘என்ன
வேண்டும்?’ என்று கேட்டதும் நாங்கள் அந்த
வாடிக்கையாளரின் பெயரைச் சொல்லி, ‘அவர்
இருக்கிறாரா? அவரைப் பார்க்கவேண்டும்.’
என்றேன்.
அவர் உடனே ‘அமருங்கள்.’ என சொல்லிவிட்டு உள்ளே
சென்றார். சிறிது நேரத்தில் முதல் நாள்
சந்தித்த வாடிக்கையாளர்கள் இருவரும் அவருடன் வந்தனர். எங்களைப் பார்த்ததும்
அவர்கள் முகத்தில் திகைப்பு. காலையில் வங்கிக்கு வந்து கடன் கேட்டவுடன் அன்றே
நாங்கள் ஆய்வுக்கு வருவோம் என எதிர்பார்க்கவில்லை போலும்.
உடனே திகைப்பை மறைத்துக்கொண்டு புன்முறுவலோடு, ‘வாருங்கள்
சார். நீங்கள் உடனே வருவீர்கள் என எதிர்பார்க்கவில்லை. அதான் உங்களைப் பார்த்ததும்
திகைத்து நின்றுவிட்டோம்.’ எனக் கூறிவிட்டு அருகில் இருந்த
பெரியவரை தங்கள் தந்தை என்றும், ஓய்வுபெற்ற தமிழாசிரியர்
என்றும் அவர்தான் தாங்கள் வெளியே செல்லும்போது அச்சகத்தை பார்த்துக்கொள்வதாக கூறி அறிமுகப்படுத்தினார்கள்.அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு ‘என்ன அச்சகத்தை பார்வையிடலாமா?’ என்றேன்.
உடனே இருவரும் அவசரமாக ‘நீங்கள் வருவீர்கள் என எதிர்பார்க்காததால்
அச்சகத்தில் எல்லாம் போட்டது போட்டபடி இருக்கிறது. சிறிது நேரம் அவகாசம்
கொடுங்கள். சீர் படுத்திவிட்டு கூப்பிடுகிறோம். அப்போது பார்வையிடலாம்.’ என்றனர்.
அதற்கு நான், ‘அதனாலென்ன. அச்சகம் என்றால் அப்படி
இப்படித்தான் இருக்கும். பரவாயில்லை நாங்களும் அச்சு வேலை நடப்பதை பார்த்துவிட்டு போகிறோம்.
நாங்களும் வேறு இடத்திற்கு செல்லவேண்டும்.’ என்றேன்.
அவர்களில் மூத்தவர், ‘சரி சார்.
நீங்கள் முதன் முதல் வந்திருக்கிறீர்கள். காபி சாப்பிட்டுவிட்டு பார்வையிடலாமே?’ என
சொல்லிவிட்டு தன் தம்பியைப் பார்த்தார். அவர் உடனே காபி வாங்க வெளியே சென்றார்.
பிறகு அவர் சார். தயவு செய்து பொறுங்கள் இதோ
வருகிறேன்.’ எனக் கூறிவிட்டு
மேலே சென்றார். அவர் சென்ற சிறிது
நேரத்தில் மேலே கேட்ட அச்சு இயந்திரத்தின் ஓசை நின்றுவிட்டது. சரி. சுத்தம்
செய்வதற்காக நிறுத்திவிட்டார்கள் போல என நினைத்தாலும், என்
உள்மனது ஏதோ ஒன்று சரியில்லை என சொல்லியது.
சிறிது நேரத்தில் இளையவர் உணவகத்தில்
இருந்து இனிப்பு, காரம்
காபியுடன் வந்துவிட்டார். வேண்டாம் என சொல்லியும் வற்புறுத்தி எங்களை சாப்பிட
சொல்லி பேசிக்கொண்டே நேரத்தை ஓட்டினார். அவர் செய்ததைப் பார்த்தால் நாங்கள் மேலே
செல்வதை சிறிது நேரத்திற்கு ஒத்திப் போடுவதுபோல் தெரிந்தது..
சுமார் அரை மணி கழிந்து மேலிருந்து அவரது
அண்ணன் வந்து ‘வாருங்கள்
சார். அச்சகத்தைப் பார்க்கலாம்.’ என அழைத்து சென்றார். முதல்
தளத்தை அடைந்ததும் எல்லாம் துடைக்கப்பட்டு சுத்தமாக இருந்தது. அதுவே எனக்கு
அசாதாரணமாகப் பட்டது.
அவர் என் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை
பார்த்து,’சார். நீங்கள்
வரும்போது இடம் சுத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் மேலே வந்து ஆட்களை
விட்டு சுத்தம் செய்ய சொல்லி விட்டு உங்களை அழைத்து வந்தேன்.உங்களை
காக்க வைத்தத்தற்கு மன்னிக்கவும்.’ என்றார்.
‘பரவாயில்லை.’ என
சொல்லிவிட்டு அங்கிருந்த இயந்திரங்களையும், அங்கு அச்சடிக்கப்பட்டிருந்த
காகிதப் பைகளையும் பார்த்துவிட்டு, அவர்களது வந்திருந்த ‘ஆர்டர்’களையும் பார்த்தோம்.
பிறகு இதுவரை தினசரி இயக்கத்திற்காக (Daily Operation) ஏதாவதொரு வங்கியில் நடப்புக் கணக்கு (Current Account) இருக்குமல்லவா? அந்த வங்கிக் கணக்கின் இருப்புக் கையேடு (Pass Book) காட்டுங்கள் என்றேன்.’
உடனே அவசர அவசரமாக ‘சார். நாங்கள் உங்கள் வங்கியில் உள்ள
தினசரி சேமிப்புக் கணக்கைத் தவிர வேறு எந்த வங்கியிலும் கணக்கை வைத்திருக்கவில்லை.’ என்றார் அவர்.
அதற்கு நான், ‘எப்படி வங்கி கணக்கு இல்லாமல்
இருக்கிறீர்கள்? உங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து காசோலை
மூலம் பணம் வந்தால் என்ன செய்கிறீர்கள்?’ என்றேன். அதற்கு அவர், ’உங்களிடம்
சொல்வதற்கென்ன. நாங்கள் காசோலையாக பணம் பெறுவதில்லை. எல்லாமே ரொக்க
நடவடிக்கைகள்தான் (Cash Transactions).‘ என்றார்.
அவர் சொன்ன பதில் நம்பும்படியாக இல்லாததால், நான் அவரிடம் ‘நாளை வங்கிக்கு உங்கள் தணிக்கையாளர்
(Auditor) கொடுத்துள்ள சான்றிதழுடன்
வாருங்கள்.’ எனக் கூறிவிட்டு திரும்பினேன்.
திரும்பி வரும்போது கள அலுவலர் கேட்டார்.’ஏன். சார். Unit பார்ப்பதற்கு
நன்றாகத்தானே போய்க்கொண்டு இருப்பதுபோல் தெரிகிறது. ஆனால் உங்கள் முகத்தைப்
பார்த்தால் அதிருப்தியாய் இருப்பதுபோல் தெரிகிறதே?’ என்று.
அதற்கு நான் சொன்னேன். ‘ஆமாம். ஏனோ அவர்களது நடவடிக்கை மேல் எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏதோ ஒன்றை
இவர்கள் மறைக்கிறார்கள் என நினைக்கிறேன். எனவே தீவிரமாக ஆராயாமல், அதைக் கண்டுபிடிக்காமல் இவர்களுக்கு கடன் தர விரும்பவில்லை.’ என்றேன்.
அன்று மாலை வங்கியாளர்கள் மன்றம் (Bankers Club) சென்றபோது அந்த வாடிக்கையாளர் பற்றி நான் சந்தேகப்பட்டது சரிதான் எனத் தெரிந்தது.
அன்று மாலை வங்கியாளர்கள் மன்றம் (Bankers Club) சென்றபோது அந்த வாடிக்கையாளர் பற்றி நான் சந்தேகப்பட்டது சரிதான் எனத் தெரிந்தது.
தொடரும்
உஙகள் அனுபவத்தால் எப்படியோ கண்டுபிடித்து விட்டீர்கள்.
பதிலளிநீக்குசஸ்பென்ஸை தெரிந்து கொள்ள ஆவல்
தொடர்வதற்கு நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!
நீக்குஅடுத்து நீங்கள் என்ன இனிப்பு காரம் காபி கொடுத்தீர்கள்...?
பதிலளிநீக்குஆவலுடன் காத்திருக்கிறேன்...
வருகைக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! நான் இனிப்பு கொடுத்தேனா அல்லது காரம் கொடுத்தேனா என்பது அடுத்த பதிவில்!
பதிலளிநீக்குஉங்கள் பதில் இனிப்பா காராமா? அறிய ஆவல்!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி ஐயா! பொறுத்திருங்கள் முடிவை அறிய!
நீக்குI thought that some accredited assessor, in that field would evaluate and check for loan purposes. I never thought that the bankers have to valuate on their own. How one can have proficiency in all the fields?
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! இன்றும் வங்கியாளர்களே கடன் வாங்குவோரை பற்றி அறிந்துகொண்டே கடன் விண்ணப்பங்களை பரிசீலித்து முடிவெடுக்கிறார்கள். இது வெளிநாட்டில் உள்ள நடைமுறைகளோடு ஒப்பிடுகையில் வினோதமாகத் தெரியலாம். வெளியாட்களிடம் பணியை ஒப்படைத்து (Out sourcing) பணியை முடிப்பது எல்லோராலும் இங்கு கடைபிடிக்கப்படுவதில்லை. காலங்காலமாக இந்த பணியை வங்கியாளர்களே செய்து வருவதால் இது ஒன்றும் கடினமாகத் தெரிவதில்லை.
நீக்குwaiting to know what you found out about them!
பதிலளிநீக்குவருகைக்கும் காத்திருப்பதற்கும் நன்றி மாதங்கி மாலி அவர்களே!
நீக்குஉங்கள் உள்ளுணர்வுதான் தப்பாகாதே!
பதிலளிநீக்குகாத்திருக்கிறேன்
வருகைக்கு நன்றி திரு குட்டன் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. என் உள்ளுணர்வுதான் என்னை பல முறை காப்பாற்றியிருக்கிறது.
நீக்குஅட.. அப்படி என்னதான் மறைத்தார்கள் அந்த நபர்கள்? தெரிந்து கொள்ள ஆவல் மேலிடுகிறது. அவ்சியம் தொடர்கிறேன் நான்!
பதிலளிநீக்குவருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு பால கணேஷ் அவர்களே! பொறுத்திருங்கள் அடுத்த பதிவு வரும் வரை.
நீக்குநல்ல சஸ்பென்ஸ் சார். அவர்கள் வேறு ஒரு வங்கியில் கடன் வாங்கியிருந்தார்களா?
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு அமர பாரதி அவர்களே! அடுத்த பதிவில் தெரிந்துவிடும் நீங்கள் யூகித்தது சரியா என்று!
நீக்குஉள்ளுணர்வுகள் ஒரு போதும் பொய்ய்ப்பதில்லை
பதிலளிநீக்குஎன்பதே மறுக்கமுடியாத உண்மை ..!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவார்களே! உண்மைதான்.உள்ளுணர்வுகள் ஒரு போதும் பொய்ப்பதில்லை.
நீக்குஎன்னதான் நடக்கும் நடக்கட்டுமே>
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி முனைவர் பழனி. கந்தசாமி அவர்களே! எல்லாம் தன்னாலே வெளிவரும். பொறுத்திருங்கள்!
நீக்குஇதற்கு முந்தியதை வாசித்திட்டு இதை வாசித்ததால் சுவையை அனுபவிக்க முடியவில்லை. பரவாயில்லை மனதுள் தொகுத்து எடுத்தேன். நல்ல அனுபவம். சத்திய சோதனைகள் தான்.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!
நீக்கு