வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

மீண்டும் சந்தித்தோம்! 17



காவிரி ஆற்றைத் தாண்டி மறுபக்கம் சென்றால் Cini Falls பார்க்கலாம் என்றபோது அதற்கு ஏன் Cini Falls என்று பெயரிடப்பட்டிருக்கிறது என ஒருவரிடம் விசாரித்தபோது, அவர் சொன்ன விளக்கத்தைக் கேட்டவுடன், உடனே எனக்கு பள்ளியில் படித்த தமிழ் இலக்கணம் நினைவுக்கு வந்தது.


பெயர்களில் ஆகு பெயர், காரணப் பெயர் என இரண்டு வகைப்படும் என்றும், அதில் ஆகு பெயர் என்பது, ஒரு சொல் அதன் பொருளைக் குறிக்காமல் அச்சொல்லோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளைக் குறிப்பது என்றும், காரணப் பெயர் என்பது ஏதேனும் ஒரு காரணம் கருதி வழங்கி வருகின்ற பெயர் என்றும் படித்தது நினைவுக்கு வந்தது.

Cini Falls என அழைக்கப்படும் இடத்தில் பெரும்பான்மையான தமிழ் மற்றும் மற்ற மொழித் திரைப் படங்கள் எடுக்கப்பட்டதாம். அதுவும் சில படங்களின் உச்சக்கட்ட காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் அங்குதான் எடுக்கப் பட்டன என்றும் அதனால் அந்த இடம் Cini Falls என அழைக்கப்படுவதாக சொன்னார். எனவே அந்த பெயர் காரணப்பெயர் எனத் தெரிந்துகொண்டேன்.

பள்ளிப் படிப்பை முடித்து 54 ஆண்டுகள் ஆனாலும் எங்கள் தமிழ் ஆசிரியர் புலவர் குப்புசாமி அய்யா அவர்கள் சொல்லிக்கொடுத்த இலக்கணத்தை மறக்கமுடியுமா என்ன?

(விஜயபுரி வீரன், வல்லவன் ஒருவன், எல்லோரும் நல்லவரே போன்ற படங்களும் இங்கு எடுக்கப்பட்டவை தானாம். ரோஜா, இராவணன் போன்ற படங்களில் சில காட்சிகள் இங்கே எடுக்கப்பட்டவையாம்.)  

குளியல் துறைக்கு சற்று கிழக்கே செல்லும் பாதையில் சென்றால், இரண்டு சிறிய பாலங்களைக்  கடந்து, ஆற்றைக் கடக்க உதவும் தொங்கு பாலத்தை அடையலாம்.

தொங்கு பாலம் செல்லும் வழியில் உள்ள இரண்டாவது சிறிய பாலத்திலிருந்து நான் எடுத்த  புகைப்படங்கள் கீழே.





தொங்கு பாலம் மூலம் ஆற்றைக் கடக்க நுழைவுக் கட்டணம் ஆளுக்கு ஐந்து ரூபாய் வசூலிக்கிறார்கள். பணத்தைக் கொடுத்து இரசீதைப் பெற்றுக்கொண்டு 
தொங்கு பாலத்தின் மூலம் ஆற்றைக் கடந்து அக்கரைக்கு சென்றோம்.

நான் எடுத்த தொங்கு பாலத்தின்  புகைப்படம் கீழே. 


 தொங்கு பாலத்திலிருந்து நான் எடுத்த சில படங்கள் கீழே.






முதலாவது மற்றும் இரண்டாவது, படங்கள் அருவியிலிருந்து ஆர்ப்பரித்து விழும் காவிரியை பாலத்திலிருந்து மேற்கு திசையிலிருந்து எடுத்தது. மூன்றாவது படம் பூமித்தாயை அடைந்தவுடன், அமைதியாய் ஆர்ப்பாட்டம் இல்லாமல் செல்லும் காவிரியை பாலத்தின் கீழ்  திசையிலிருந்து எடுத்தது.  

இதே பாலத்திலிருந்து திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் அவர்கள் எடுத்த புகைப் படங்கள் கீழே. 










பாலத்திலிருந்து கீழே இறங்கியவுடன் கண்ட கண் கொள்ளா காட்சியை விவரிக்க நீங்கள் ஒரு கவிஞனாகவோ அல்லது எழுத்தாளனாகவோ 
இருந்தால் மட்டுமே முடியும்.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் நயாக்ரா அருவியைப் பார்த்துவிட்டு சொன்னாராம் அடடா. இது நீர் வீழ்ச்சியல்ல. நீர் எழுச்சி என்று! அது போல சொல்ல எனக்கும் ஆசைதான்.ஆனால் நான் கவிஞன் அல்லவே! எனவே
நான் கண்ட காட்சிகளை எனது புகைப்படக் கருவியில் பதிவு செய்து பதிவேற்றியிருக்கிறேன். அதோடு திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் அவர்கள் எடுத்த புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்துள்ளேன்.

Seeing is believing என்பார்கள். என்னதான் புகைப் படங்கள் மூலம் ஹொகனக்கல் அருவியியின் அழகை படம் பிடித்துத் தந்தாலும், 
அது நேரில் சென்று இரசிப்பது போல் ஆகாது!

என்னைக் கவர்ந்த, உங்களையும் கவர இருக்கின்ற அருவியின் படங்கள் 
அடுத்த பதிவில்.


தொடரும்

24 கருத்துகள்:

  1. படங்கள் அனைத்தும் அருமை... தங்களுக்கும், திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் அவர்களுக்கும் நன்றி... வாழ்த்துக்கள்...

    தமிழ் ஆசிரியர் புலவர் குப்புசாமி அய்யா அவர்கள் கற்பித்த விதம், எவ்வளவு சிறப்பு என்று புரிகிறது ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  2. மனங்கவரும் புகைப் படங்கள். மீண்டும் சென்று ஆசைதீர ரசிக்க ஆர்வத்தைக் கூட்டுகிறது. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!

      நீக்கு
  3. CINI FALLS - பற்றிய ரசிக்கும்படியான விவரங்கள், படங்கள். நீங்களும் ஒரு கவிஞர்தான். உங்களுக்குள்ளும் கவிதை உணர்வுகள் உள்ளன. கேமரா கவிதைகள படைக்கும் கேமரா கவிஞர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! உண்மையில் புகைப்படம் மூலம் கவிதை படைப்பவர் நீங்கள் தான்.

      நீக்கு
  4. இந்த படங்களை பார்த்தும் நானே நேரில் சென்ரு பார்த்த அனுப்வம். அத்தனை அருமையாக ஈருந்தன. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே!

      நீக்கு
  5. தமிழ் ஆசானின் அருமை பல இடங்களில் வெளிப்படுகிறது. இங்கு, அருவி என்றே தொடர்ந்து சொல்லி வருகிறீர்கள் [ பலரும் பயன்படுத்தும் நேரடி மொழிபெயர்ப்பான ’நீர்வீழ்ச்சி’ தவிர்த்து]. வளர்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சந்தர் அவர்களே! நம்மில் பலர் அருவியை ஏனோ இன்னும் நீர்வீழ்ச்சி என்றே குறிப்பிடுகிறார்கள். இது பற்றி நான் மீண்டும் சந்தித்தோம்!10 இல் இது பற்றியும் எழுதியுள்ளேன். (http://puthurvns.blogspot.com/2013/12/10.html)

      நீக்கு
  6. தமிழ் நாட்டிலுள்ள இந்த சுற்றுலா தளத்திற்கு இன்னும் விளம்பரம் செய்யலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. வருகைக்கும்,கருத்துக்கும், நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! சுற்றுலாத் தல விளம்பரத்தில் தாஜ்மகாலுக்கும்,மற்ற வட இந்திய நகரங்களுக்கும் தருகின்ற முக்கியத்துவத்தை மய்ய அரசு தமிழகத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்குத் தருவதில்லை என்பது வேதனைக்குரியதுதான். தமிழக அரசு இன்னும் அதிக விளம்பரம் செய்து சுற்றலாப் பயணிகளை ஈர்க்க முயற்சிக்கலாம்.

      நீக்கு
    2. கவிதைகளாய் புகைப்படங்கள். கமபிகள்தான் ஒரு திருஷ்டி. சுற்றுலாத்துறையினர்கள் கண்களில் இவைகள் படாமல் இருப்பதே நல்லது. இந்த இடங்களாது இயற்கையாக இருக்கட்டும். அல்லது பாலிதீன் குப்பைகளும், கோகோகோலா பாட்டில்களுமே இங்கு அழகாகக் காட்சியளிக்கும்.

      நீக்கு
    3. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! அந்த கம்பிகள் பாலத்தின் நடுவில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி போடப்பட்டிருக்கின்றன. மற்றபடி வேறு இடங்களில் இது போன்ற கம்பி வலைகள் இல்லை.

      நீக்கு
  7. வணக்கம்
    ஐயா.
    பதிவை படிக்கும் போது நாங்களும் இப்படியான சந்திப்பு வைத்தால் எப்படி இருக்கும் என்ற சிந்தனை ஓடுகிறது... படங்கள் அனைத்தும் மிக அழகு பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும்,கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு ரூபன் அவர்களே! நம்மோடு படித்த நண்பர்களை சந்திப்பதே ஒரு மகிழ்வூட்டும் நிகழ்ச்சிதான். நீங்களும் உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்கள் சந்திப்புக்கு முயலுங்களேன்.

      நீக்கு
  8. தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. அன்பு வாழ்த்துகள். மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள இணைப்பைச் சொடுக்கவும் நன்றி. வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_15.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும்,என்னை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி திருமதி மஞ்சுபாஷினி சம்பத்குமார் அவர்களே!

      நீக்கு
  9. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைசரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. நீங்கள் பார்த்து ரசித்த இயற்கை அழகை நாங்களும் பார்க்கத் தந்தமைக்கு நன்றி.அழகோ அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

      நீக்கு
  11. மிகச் சிறப்பான படங்கள்..... ரசித்தேன்..... ஆனாலும் நீங்கள் சொன்னது போல [என்னதான் புகைப் படங்கள் மூலம் ஹொகனக்கல் அருவியியின் அழகை படம் பிடித்துத் தந்தாலும், அது நேரில் சென்று இரசிப்பது போல் ஆகாது!] நேரில் சென்று காணவும் ஆசை..... விரைவில் செல்ல நினைத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! ஹொகனக்கல் அருவியியின் அழகை தங்களின் புகைப்படங்களின் மூலம் திரும்பவும் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

      நீக்கு