செவ்வாய், 23 டிசம்பர், 2014

வங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை 8நகைச்சுவையை விரும்பாதார் யார் உளர்? ஆனால் அது பிறர்  
மனதை புண்படுத்தாமல்  இருக்கவேண்டும்.மேலும் 
படிப்போருக்கும், கேட்பொருக்கும் அது  சிரிப்பை அல்லது 
புன் சிரிப்பை உண்டாக்குமானால் உண்மையில் அது 
நகைச்சுவைதான். 

நான் வங்கித்துறையைச் சேர்ந்தவன் என்பதால் நான் படித்த,  
கேட்ட, மின் அஞ்சலில் வந்த, எனது வங்கி பயிற்சி 
கல்லூரியில் சொன்ன வங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை  துணுக்குகளை இதுவரை 7 பதிவுகளில் வெளியிட்டிருக்கிறேன். அவைகளை இதுவரை படிக்காதவர்கள் கீழே தந்துள்ள 
இணைப்புகளை சொடுக்கிப் படிக்கலாம்/இரசிக்கலாம்.

வங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை 1   2  3  4  5  6  7

நான் படித்த, எனக்குப் பிடித்த வங்கியாளர்கள் 
சம்பந்தப்பட்ட வேறு சில நகைச்சுவை துணுக்குக்கள் 
இதோ.
  
1.வாடிக்கையாளர்: உங்க பேங்க்ல கால்நடைக்கு கடன் 
கொடுப்பீங்களா?'’

வங்கி மேலாளர் "கண்டிப்பா!

வாடிக்கையாளர்:அப்படின்னா நான் பக்கத்து ஊர்ல இருந்து 
கால்நடையா 18 கிலோமீட்டர் நடந்தே வந்திருக்கேன் எனக்கு 
உடனே கடன் கொடுங்க.’

வங்கி மேலாளர்: ???????


2.வங்கி மேலாளர் : “என்னை ஏங்க கட்டிப் பிடிக்கிறீங்க?’

வங்கிக்கு வந்தவர்: உங்களைப் பிடிச்சா கிடைக்கும்னு 
சொன்னாங்க. அதான்.

வங்கி மேலாளர்: ???????

  
3.வங்கிக்கு வந்தவர்: 'என் மனைவி சமையல் வாயில் 

வைக்க முடியாது சார். அவ பேச ஆரம்பித்தா பைத்தியமே 
பிடித்துவிடும் சார்.'

வங்கி அலுவலர்: 'இதை ஏங்க வங்கியில் வந்து சொல்றீங்க?

வந்தவர்: நம்ம கஷ்டத்தை சொன்னால் வங்கியில் கடன் 
கிடைக்கும்னு சொன்னாங்க. அதான்.'

வங்கி அலுவலர்:???????


4.ஒரு பெண் வேகமாக வங்கி மேலாளர் அறைக்கு வந்து,
'சார். என் கணவரை விவாகரத்து செய்ய இருக்கிறேன். 
அதற்கு கடன் தரமுடியுமா? என்கிறார்.

மேலாளர் : 'அம்மா, விவகாரத்திற்கெல்லாம் நாங்கள் கடன் 
தருவதில்லை. தொழில் செய்ய, கார், ஸ்கூட்டர் வாங்க, 
வீடு கட்ட, வீட்டை மேம்படுத்த போன்றவைகளுக்குத்தான் 
கடன் தருகிறோம். எனவே உதவி செய்ய இயலாது.'

அந்த பெண் : 'விவாக ரத்தும் வீட்டை மேம்படுத்தும் 
திட்டத்தின் கீழே தானே வருகிறது. எனவே நீங்கள் 
தரலாமே?)

மேலாளர் : ???????


வங்கியாளர்கள் பற்றிய துணுக்குகள்

1. Give a man a gun and he can rob a bank.  Give a man a bank and he 
can rob the world.

2. A banker is a fellow who lends you an umbrella when the weather is 
good, but wants it back the minute it begins to rain.
 
3. உங்களுக்கு வங்கியில் 10 இலட்ச ரூபாய் கடன் இருந்து, 
உங்களால் திருப்பி கட்ட முடியாவிட்டால் அது உங்களுக்கு 
பிரச்சினை. அதுவே உங்களுக்கு வங்கியில் 1000 கோடி 
ரூபாய் கடன் இருந்து உங்களால் திருப்பி கட்ட 
முடியாவிட்டால் அது வங்கிக்கு பிரச்சினை!

  

நகைச்சுவை துணுக்குகள் தொடரும்

31 கருத்துகள்:

 1. king fisherஐ நினைத்துக் கொண்டேன்.
  "அதுவே உங்களுக்கு வங்கியில் 1000 கோடி
  ரூபாய் கடன் இருந்து உங்களால் திருப்பி கட்ட
  முடியாவிட்டால் அது வங்கிக்கு பிரச்சினை!"


  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜெயக்குமார் அவர்களே! எல்லோரும் நினைப்பதை சொல்லிவிட்டீர்கள்.

   நீக்கு
 2. எல்லாமே நல்ல நகைச்சுவைகள் தொடருங்கள் வாழ்த்துகள்

  நண்பரே எனது புதிய பதிவு இன்றைய MONEYதர்கள் காண்க..
  த.ம. 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

   நீக்கு
 3. ஏழு துணுக்குகளில் ஏழாவது பிரமாதம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

   நீக்கு
 4. முதன் முதல் உங்கள் வலைத்தளம் எனக்கு அறிமுகம் ஆனபோது, உங்கள் பதிவுகள் அனைத்தையும் ஆரம்பம் முதல் அன்றைய தேதி வரை இரண்டு நாட்கள் (நேரம் கிடைக்கும் போது) படித்தேன். அப்போது தங்களது இந்த பழைய நகைச்சுவைப் பதிவுகளை படித்து இருக்கிறேன். இன்றைய நகைச்சுவையையும் ரசித்தேன்.
  த.ம.2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! நீங்களும் வங்கியாளர் அல்லவா? நிச்சயம் நகைச்சுவையை இரசித்திருப்பீர்கள் என அறிவேன்.

   நீக்கு
 5. அனைத்தும் அருமையான நகைச்சுவை கதம்பம்.
  அதிலும் 1,3 - சூப்பர்.

  கடைசி நகைச்சுவை - சுடும் உண்மை. ஏழைகளால் கடனை திருப்பித்தர முடியவில்லையென்றால், அவர்களை கொடுமைப்படுத்தி அவர்களின் சொத்துக்களை ஏலத்துக்கு விடும் வங்கிகள், பணக்காரர்கள் கடனை திருப்பித்தரவில்லையென்றால் சும்மா இருப்பது எந்த விதத்தில் நியாயம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் ஆதங்கத்தோடு சொன்ன கருத்துக்கு பதில் தங்களின் நகைச்சுவை 2-ல் தெரிந்து கொண்டேன்.

   நீக்கு

  2. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே! மற்ற பதிவுகளையும் படித்து நகைச்சுவையை இரசித்தமைக்கும் நன்றி!

   நீக்கு
 6. பதில்கள்
  1. வருகைக்கும், நகைச்சுவையை இரசித்தமைக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 7. பதில்கள்
  1. வருகைக்கும், நகைச்சுவையை இரசித்தமைக்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே! தமிழ்மணத்தில் வாக்களித்தமைக்கும் நன்றி!

   நீக்கு
 8. எட்டு நகைச்சுவைப் பதிவுகளையும் ஒரே மூச்சாகப் படித்து முடித்தேன். ரசித்தேன் சிரித்தேன்,. தொகுத்துத் தந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், நகைச்சுவையை இரசித்தமைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!

   நீக்கு
 9. அனைத்து நகைச்சுவைகளும் அருமை. எனக்குப் பிடித்தது கால்நடை நகைச்சுவை.

  பதிலளிநீக்கு
 10. வருகைக்கும், பாராட்டுக்கும், நகைச்சுவையை இரசித்தமைக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

  பதிலளிநீக்கு
 11. பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

   நீக்கு
 12. நகையை விரும்பாதவர்கள் உண்டு!
  நகைச் சுவையை விரும்பாதவர்கள் உண்டா அய்யா?
  இல்லை என்பேன் நான்!
  நல்ல சுவையான பதிவு!
  இனிய நகைச் சுவை பதிவு!
  நன்றி!
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், நகைச்சுவை இரசித்தமைக்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே!

   நீக்கு
 13. Collection of good jokes about Bankers. Bankers would definitely enjoy ( on the lines of Sardarji jokes). The one about a lady seeking loan for divorce is the best of the lot in this edition. Let me share a similar joke that I read sometime back. A man frantically calls the receptionist of the Hotel and says "my wife is threatening to jump out of the window after having some argument with me" . There was panic in his voice. The receptionist tries to calm him saying this is an domestic issue sir and we cannot interfere in this. The man shouts back " Damn it, the window is not opening and this is a maintenance issue"

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும்,நகைச்சுவையை இரசித்தமைக்கும் நன்றி! தாங்கள் பகிர்ந்துகொண்ட நகைச்சுவையையும் இரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

   நீக்கு
 14. வாழ்த்துக்கு நன்றி! தங்களுக்கு தங்கள் குடும்பத்தார்க்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 15. பதில்கள்
  1. வருகைக்கும் விசாரிப்புக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! நலமே. புத்தாண்டு வாழ்த்துக்கள்!

   நீக்கு
 16. தமிழ் நகைச்சுவைகளுக்கு https://valaithamizhjokes.blogspot.in/

  பதிலளிநீக்கு
 17. வருகைக்கு நன்றி திரு ஜெயசீலன் சாமுவேல் அவர்களே! நிச்சயம் தங்களது ‘தமிழ் நகைச்சுவைகள்’ வலைப்பதிவை படிப்பேன்.

  பதிலளிநீக்கு