1986 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் எதுவும் பெரிதாக தமிழகத்தில் நடைபெறவில்லை. அந்த சமயத்தில் மய்ய அரசின் ஆட்சிப்பொறுப்பில் இருந்த காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகள் மெதுவாக, அதே நேரம் நிதானமாக ஆரவாரமில்லாமல் இந்தியை அரசுப் பணிகளில் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டன.
2014 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த பாரதீய ஜனதா கட்சி இந்தியை திணிக்கும் முயற்சியை வெளிப்படையாக மேற்கொள்ள தொடங்கியது.
திரு மோடி அவர்கள் பிரதமராக பதவி ஏற்ற மறு நாள் அதாவது மே 27 ஆம் நாள் உள்துறை அமைச்சகம் பிறப்பித்த ஆணை கீழ்க்கண்டவாறு இருந்தது.
"It is ordered that government employees and officials of all ministries, departments, corporations or banks, who have made official accounts on Twitter, Facebook, Google, YouTube or blogs should use Hindi, or both Hindi and English but give priority to Hindi’’
அதாவது அரசின் அனைத்துத்துறை, பொதுத்துறை நிறுவனங்கள், மற்றும் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள், சமூக வலைத்தளங்களில் (Social Networking Sites ) இந்தி அல்லது இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டையும் பயன்படுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பாக இந்திக்கு முன்னுரிமை தரவேண்டும் என சொல்லப்பட்டது.
உடனே தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் அதை ஒரே குரலில் எதிர்த்தன. (யார் அந்த ஆணையை எதிர்த்திருக்கமாட்டார்கள் என சொல்லத் தேவையில்லை )
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள், ‘இந்தியை திணிக்கும் இந்த நடவடிக்கை, அலுவலக மொழிகள் சட்டத்திற்கு புறம்பானது என்றும் இந்த வழிகாட்டுதல், தங்கள் மொழியியல் பாரம்பரியத்தின் மேல் பெருமை கொண்டுள்ள தமிழ் நாட்டு மக்களுக்கு மன உளைச்சலைத் தரும். எனவே அந்த ஆணையில் தகுந்த மாற்றம் செய்து சமூக வலைத்தளங்களில் ஆங்கிலமே தொடர்பு மொழியாக இருக்க உறுதி செய்யவேண்டும் என இந்திய பிரதமரைக் கேட்டுக்கொண்டார்.
முக்கிய எதிர்கட்சியான காங்கிரசும், இது போன்ற வழிகாட்டும் ஆணைகள் இந்தி பேசாத மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் எதிர்வினையைத் தரும் என்றும் எனவே மய்ய அரசு விவேகத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்படவேண்டும் என அறிவுறுத்தியது.
.முன்னாள் முதல்வர் திரு கருணாநிதி அவர்கள் ‘அரசு அலுவலர்கள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டுமென்று ஆணையிட உள்துறை அமைச்சகம் முதன் முறையாக முடிவெடுத்துள்ளது, இது ஒருவரது விருப்பத்திற்கு மாறாக, அவர் மீது அரசாணையின் மூலம் இந்தி மொழியைத் திணிப்பதற்கான செய்கையின் ஆரம்பம்தான் என்பதை யாரும் மறுத்து விட முடியாது’ என்றார்.
மதிமுக பொதுசெயலாளர் திரு வை.கோ அவர்களும் ‘இந்தி மொழியை மய்ய அரசு ஆட்சிமுறையிலும், மாநிலத்திலும் திணிக்க முற்படுவது, இந்திய ஒருமைப்பாட்டுக் கேடாக முடியும்.’ என எதிர்த்து அறிக்கை வெளியிட்டார். பா.ம.கவும் தனது எதிர்ப்பை தெரிவித்தது.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் திரு ஓமர் அப்துல்லா அவர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் திருமதி பிருந்தா காரத் அவர்களும் அரசின் இந்த ஆணையை எதிர்த்தனர்.
அதே நேரத்தில் ஓடிஷா சட்டசபையில் இந்தியில் கேள்வி கேட்க முயன்ற ஒரு உறுப்பினருக்கு அவைத்தலைவர் அனுமதி தரவில்லை.
மய்ய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புகள் அநேகம் தோன்றியதால், ஜூன் 20 ஆம் நாள் பிரதமர் அலுவலகத்திலிருந்து (PMO) ஒரு விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மய்ய அரசுக்கு இந்தி பேசாத மாநிலங்களின் மேல் இந்தியை திணிக்கும் நோக்கம் இல்லையென்றும், அரசு வெளியிட்ட ஆணை நிலுவையில் உள்ள அரசின் கொள்கைப்படி இந்தி கட்டாயமாக உள்ள இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே பொருந்தும் என்று கூறப்பட்டிருந்தது.
அதோடு இந்த சச்சரவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதா என்றால் அது தான் இல்லை.
தொடரும்
தமிழ் அதன் அழகை இழந்துகொண்டே வருகிறது. தமிழ் பல்கலைக்கழகம் போன்ற அரசாங்க முயற்சிகள் இருந்தால்தான் தமிழைக் சிறிதளவாவது தக்க வைத்துக்கொள்ளமுடியும். தமிழ் நாட்டில் எத்தனைபேரின் சந்ததியர்கள் தமிழ் மீடியத்தில் படிக்கிறார்கள் என்று பார்த்தாலே போதும், தமிழின் எதிர்காலத்தைக் கணிக்க முடியும். தமிழ் படித்தால் வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என்றபட்சத்தில் யாருக்கும் தமிழ் மீடியத்தில் படிக்க விருப்பம் இருக்காது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்துவதைவிட தமிழ வளர்ப்பு போராட்டம்தான் இனி நடத்த வேண்டும். இனி இந்தி எதிர்ப்பை வேறு மாநிலங்கள் பார்த்துக்கொள்ளும், பார்த்துக்கொள்ளட்டும்.
பதிலளிநீக்கு
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொல்வது உண்மை. தமிழகத்தில் தமிழ் வழிக்கல்வியில் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருகிறது. அரசு தமிழ் வழிக்கல்வியை படிப்பவர்களை ஊக்குவிக்கவேண்டும். இந்தி திணிப்பை எதிர்க்குமுன் நம்மை பலப்படுத்திக்கொள்வது நல்லது. இல்லையேல் நீங்கள் சொல்வது போல் தமிழ் வளர்ப்புப் போராட்டம் நடத்தவேண்டி வரலாம்.
தொடர்கிறேன்.
பதிலளிநீக்குவருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!
நீக்குதொடர்கிறேன்.
பதிலளிநீக்குவருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!
நீக்குஎதிர்ப்புகள் இல்லையெனில் நிலைமி இன்னும் மோசமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு டி என்.முரளிதரன்அவர்களே! உண்மைதான். எதிர்ப்புகள் இல்லையென்றால் நிலைமை வேறு மாதிரியாகத்தான் இருந்திருக்கும்.
நீக்கு1986 ஆம் ஆண்டிற்கு பிறகு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகள் மெதுவாக, அதே நேரம் நிதானமாக ஆரவாரமில்லாமல் இந்தியை அரசுப் பணிகளில் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டன என்று கூறியுள்ளீர்கள். அக்காலகட்டத்தில் அதற்கு முன்பு இருந்தவாறு தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு காட்டப்படவில்லையா?
பதிலளிநீக்கு
நீக்குவருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! 1986 ஆம் ஆண்டிற்குப் பிறகு பெரிய அளவில் எந்த போராட்டமும் நடக்கவில்லை. இந்தியை வங்கியில் திணிக்கிறார்கள் என்ற ஏதேனும் செய்தி வந்தால் சில கட்சிகள் உடனே உள்ளூரில் உள்ள ஏதேனும் ஒரு வங்கியின் முன் சில மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தும் அவ்வளவே! அதற்குப் பிறகு யாரும் எதுவும் செய்யமாட்டார்கள்.
மய்ய அரசு இப்போதும் சில விளம்பரங்களை தமிழக தொலைக்காட்சிகள் இந்தியில் வெளிடுவதை அந்த நிறுவனங்கள் வருமானம் வருகிறதே என்பதற்காக ஒளிபரப்பு செய்கின்றனவே அது பற்றி யாரும் வாய் திறப்பதில்லை. இதுதான் இன்றைய நிலைப்பாடு!
நண்பர் திரு. பக்கிரிசாமி அவர்களின் கருத்தை முழுமையாக ஆதரிக்கின்றேன்.
பதிலளிநீக்குதொடர்கிறேன் நண்பரே
தமிழ் மணம் 5
வருகைக்கும், கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!
நீக்குஇந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது ஏதோ தி.மு.க.வின் அரசியல் நிலைப்பாடு என்று மட்டுமே சிலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
பதிலளிநீக்கு
நீக்குவருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு தி தமிழ் இளங்கோ அவர்களே! இந்த தொடர் ஆரம்பிக்கும் போதே இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் 2 இல் 1938 ஆம் ஆண்டு மே திங்கள் 28 ஆம் நாள் மாநிலம் முழுதும் உள்ள தமிழ் பற்றாளர்கள் (கவனிக்கவும். எந்த அரசியல் கட்சியினரும் அல்லர்.) ஒன்று கூடி நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்களைக் கொண்ட இந்தி திணிப்பு எதிர்ப்பு இயக்கம் ஒன்றை தொடங்கினார்கள். அதே ஆண்டு ஜூன் திங்கள் 3 ஆம் நாள் சென்னை கோடம்பாக்கத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டை தமிழ் அறிஞர் மறைமலை அடிகளார் தலைமை தாங்கி நடத்தினார்கள். என்று சொல்லியிருந்தேன். ஆனால் இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது தமிழர்களின் நிலைப்பாடு என்பதை மறந்து துரதிருஷ்டவசமாக எல்லோரும் இது ஏதோ தி.மு.க வின் நிலைப்பாடு என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்தி வருமானத்துக்கு வழி வகுக்கிறது என்றால் அதை எதிர்ப்பவரை விட ஆதரவாளர்களே அதிக இருப்பர் தொலைக்காட்சிகளில் மத்திய அரசின் விளம்பரங்கள் இந்தியில் வருவதை அது தொடர்பான தொலைக் காட்சிகள் தடுக்கலாமே என்ற என் ஆதங்கம் சம்பந்தப் பட்டவர் கண்களில் பட்டிருக்கும் போல் இருக்கிறது. சில நாட்களாக மத்திய அரசின் செயலாற்றல்கள் இப்போதெல்லாம் காண்பதில்லை. எத்தனை நாட்களுக்கு என்று பார்ப்போம்
பதிலளிநீக்கு
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! ‘நாய் விற்ற காசு குரைக்காது’ என்ற எண்ணம் கொண்டவர்கள் இருக்கும் வரையில் தமிழக தொலைக்காட்சியில் மற்றும் தமிழ் நாளிதழ்களில் இந்தியில் விளம்பரங்கள் வருவது தொடர்ந்துகொண்டு தான் இருக்கும்.
//மய்ய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புகள் அநேகம் தோன்றியதால், ஜூன் 20 ஆம் நாள் பிரதமர் அலுவலகத்திலிருந்து (PMO) ஒரு விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மய்ய அரசுக்கு இந்தி பேசாத மாநிலங்களின் மேல் இந்தியை திணிக்கும் நோக்கம் இல்லையென்றும், அரசு வெளியிட்ட ஆணை நிலுவையில் உள்ள அரசின் கொள்கைப்படி இந்தி கட்டாயமாக உள்ள இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே பொருந்தும் என்று கூறப்பட்டிருந்தது.//
பதிலளிநீக்குஇதனைக் கேட்க சற்றே நிம்மதியாக உள்ளது.
//அதோடு இந்த சச்சரவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதா என்றால் அது தான் இல்லை. //
அடடா ..... அப்புறம் என்ன ஆச்சு? என எதிர்நோக்கித் தொடர்கிறேன்.
{ கடந்த ஒருவாரமாக என் கம்ப்யூட்டர் சுத்தமாக அவுட். புதிதாக வாங்கி முழுசா மூன்று வருடங்கள்கூட ஆகவில்லை. அதற்குள் இப்போது ஏராளமான செலவும் வைத்துவிட்டது. அதனால் என் வருகையில் தாமதமாகிவிட்டது.}
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! மேலும் என்ன நடந்தது என்ன என்பதை வரு பதிவுகளில் காணலாம்.
நீக்கு(இப்போதெல்லாம் கணினியோ அல்லது தொலைக்காட்சிப் பெட்டியோ எதுவானாலும் மூன்று ஆண்டுகள் உழைப்பதே அபூர்வமாகிவிட்டது தங்களின் கணினி சரியானது அறிந்து மகிழ்ச்சி)