வியாழன், 17 நவம்பர், 2016

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 4

தஞ்சை இரயில் சந்திப்பு நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் வெளியே எங்களை வரவேற்க நின்றுகொண்டிருந்த நண்பர் இக்பாலைப் பார்த்ததும் ஆச்சரியத்தோடு பார்த்து ‘நான் தான் வேண்டாம் என்று சொல்லியிருந்தேனே. எதற்கு இந்த வேளையில் சிரமப்பட்டு வந்தீர்கள்?‘ என கேட்டேன்.





அதற்கு அவர் ’அதெல்லாம் ஒரு சிரமமும் இல்லை சார். என்னிடம் உங்களுடைய வீட்டு தொலைபேசி எண் தான் இருந்தது. கைப்பேசி எண் இல்லாததால் உங்களைத் தொடர்பு கொண்டு நான் இங்கு வருவதையும் காத்திருப்பதையும் சொல்ல முடியவில்லை.’ என்றார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, பின்னர் என் துணைவியாரையும் நண்பர்களையும் அவருக்கு அறிமுகப்படுத்தினேன்.

தஞ்சை நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த Hotel ABI’s INN க்கு என்னை அழைத்துப் போக தனது காரை கொண்டு வந்திருந்தார். அவரது காரில் 5 பேர்தான் அமர முடியுமென்பதால் அவரது காரில், அவருடன் நான், எனது துணைவியார் மற்றும் திருமதி ஹரிராமன் ஆகியோர் பயணிப்பது என்றும் நண்பர்கள் ஹரிராமன் மற்றும் சேதுராமன் ஆகியோர் பயணிக்க ஒரு வாடகைக்காரை ஏற்பாடு செய்வதென்றும் முடிவெடுத்தோம். நண்பர் இக்பால் வாடகைக் காரை ஏற்பாடு செய்ததும் இரயில் சந்திப்பிலிருந்து புறப்பட்டோம்.

காலை வேளையாக இருந்ததால் சாலையில் போக்குவரத்து அனேகமாக இல்லை என்றே சொல்லலாம். காரில் செல்லும்போது நண்பர் இக்பால் அவர் தாளாளாராக இருந்து நடத்தி வரும் Crescent nursery and Primary school பற்றி சொன்னார்.

தஞ்சையில் அவரது பள்ளியின் தரவரிசை என்னவென்று கேட்டதற்கு அது மூன்றாவது இடத்தில் உள்ளது என்றும் முதல் இரண்டு இடங்களில் The Sacred Heart Girls Higher Secondary School இம் St Joseph's Girls Higher Secondary School இம் உள்ளன என்றார். வங்கியாளர் ஒருவர் அதுவும் வேளாண் அறிவியல் படித்தவர் கல்வித்துறையில் சிறப்பாக சேவை செய்கிறார் என்பதை கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

The Sacred Heart Girls Higher Secondary School வழியாக காரில் செல்லும்போது அந்த அதிகாலை வேளையிலும் ஒரு Sister வெளியே வந்து எதையோ ஆய்வு செய்துகொண்டு இருந்தார்கள். அவர் யாரென நண்பரிடம் கேட்டதற்கு அவர்தான் பள்ளியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் என்றும், அந்த பள்ளியை கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொள்வதில் அவருக்கு நிகர் அவரே என்றும் நண்பர் இக்பால் சொன்னார்.

என்னிடம் பேசிக்கொண்டே அவர் காரை ஒட்டியதால் நாங்கள் செல்லவேண்டிய ஓட்டலைத் தாண்டி சிறிது தூரம் சென்றுவிட்டோம். பிறகு திரும்பி ஓட்டலுக்கு வந்தபோது மணி காலை 6.

ஓட்டலுக்கு வெளியே வைத்திருந்த எங்களின் சந்திப்பு பற்றிய பதாகை எங்களின் சந்திப்பு  நடைபெறப் போவதை சொல்லிக் கொண்டிருந்ததை கண்டேன்.



ஓட்டலின் நுழை வாயில்



வைக்கப்பட்டிருந்த பதாகை



பதாகையின் அண்மைக்காட்சி



தங்கியிருந்த ஓட்டலின் தோற்றம்

காரிலிருந்து இறங்கி வரவேற்பு முகப்பிற்கு (Reception Counter) சென்றோம். நண்பர் இக்பால் நாங்கள் Annamalai Agri 66 சந்திப்பிப்பிற்காக வந்திருக்கிறோம் என்று அங்கிருந்த வரவேற்பாளரிடம் சொன்னதுமே, அவர் எங்களது பெயரைக் கேட்டுவிட்டு தன் கையில் தயாராக வைத்திருந்த பட்டியலில் எங்களது பெயரை சரி பார்த்துவிட்டு எங்களிடம் வழக்கமாக பெறும் கையொப்பத்தைப் பெற்றுக்கொண்டு எங்களுக்கு முன் பதிவு செய்யபட்டிருந்த அறைகளுக்கான சாவிகளைக் கொடுத்தார்.

எங்களது தங்கும் வசதி சிறப்பாக இருக்கவும் எங்களுக்கு எந்த வித வசதிக்குறைவும் ஏற்படக்கூடாது என்பதற்காக எங்களது தஞ்சை நண்பர்கள் துல்லியமாக திட்டமிட்டு ஏற்பாடு செய்திருந்தமைக்கு நன்றியை இந்த இடத்தில் நான் சொல்லியாக வேண்டும்.

தஞ்சையில் நாங்கள் தங்கவேண்டிய இடம் மற்றும் எங்களது சந்திப்பு நடக்கு இடம் இரண்டும் ஒரே இடத்தில் இருப்பது அனைவருக்கும் சௌகரியம் என்பதால் அது பற்றி தஞ்சையில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்தாலோசித்து பின்னர் பங்குபெற்ற நண்பர்களின் ஒருமித்த கருத்துப்படி Hotel ABI’s INN இல் கூட்டத்தை நடத்துவது என்றும் சந்திப்பில் பங்கு கொள்வோர் தங்க அந்த ஓட்டலிலேயே அறைகளை முன் பதிவு செய்வதென்றும் முடிவு செய்திருந்தார்கள்.

அந்த ஓட்டலில் காலியாக இருந்த 7 Golden suit மற்றும் 8 Silver suit களில் 30 பேர்கள்தான் தங்கமுடியும் என்பதால். சந்திப்பில் பங்கேற்பதை முதலில் உறுதி செய்வோரை அந்த ஓட்டலில் தங்கவைப்பது என்றும் பின்னர் தெரிவிப்போருக்கு அருகில் உள்ள Philomena Hotel and Apartment இல் தங்க வைப்பதென்றும் முடிவு செய்திருந்தார்கள்.

நான் முன்பே எனது வருகை பற்றி நண்பர் பாலுவிற்கு தெரிவித்து எனக்கு Golden suit இல் அறை வேண்டும் என்று சொல்லியிருந்ததால் எனக்கு அந்த ஓட்டலிலேயே அறை கிடைத்தது.

நண்பர்கள் ஹரிராமனுக்கும் சேதுராமனுக்கும் அவர்கள் கேட்டுக்கொண்டபடியே அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. எங்களுக்கு சாவிகளை வாங்கிக் கொடுத்தபின் நண்பர் இக்பால் தனக்கு வேலை இருப்பதாக சொல்லி எங்களிடமிருந்து விடை பெற்றுக்கொண்டார்.

இரண்டாவது தளத்தில் எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தவுடன் கைப்பேசியில் மணி ஒலித்தது.


தொடரும்









25 கருத்துகள்:

  1. ஆவலுடன் செல்கின்றது தொடர் ஹோட்டல் விஐபிகள் தங்குவது போல்தான் இருக்கின்றது கைப்பேசியில் அழைத்த நண்பர் யாரென்று அறிய ஆவலுடன் தொடர்கிறேன்....
    த.ம.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் தொடர்வதற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! நாங்கள் தங்கியிருந்த ஓட்டல் அனைவரும் தங்கக்கூடிய ஒட்டல்தான்.

      நீக்கு
  2. காட்டியுள்ள படங்களே மிக அழகாக உள்ளன. தங்குமிடங்களில் வசதிகள் எப்படி இருந்திருக்கும் என உணர முடிகிறது.

    தங்குமிடமும் கூட்டமும் ஒரே வளாகத்தில் என்ற திட்டமிட்ட செயல் பாராட்டப்பட வேண்டியதாகும். இதனால் வீண் அலைச்சலும் டென்ஷனும் இல்லாமல் இருக்கக்கூடும்.

    //The Sacred Heart Girls Higher Secondary School வழியாக காரில் செல்லும்போது அந்த அதிகாலை வேளையிலும் ஒரு Sister வெளியே வந்து எதையோ ஆய்வு செய்துகொண்டு இருந்தார்கள். அவர் யாரென நண்பரிடம் கேட்டதற்கு அவர்தான் பள்ளியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் என்றும், அந்த பள்ளியை கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொள்வதில் அவருக்கு நிகர் அவரே என்றும் நண்பர் இக்பால் சொன்னார். //

    சூப்பர் ! தர வரிசையில் முதலிடம் பெற்றுள்ளதில் ஆச்சர்யமே இல்லைதான்.

    தொடரட்டும் தங்களின் இந்த இனிய சந்திப்புத் தொடர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! நீங்கள் சொல்லியதுபோல் தங்குமிடமும் சந்திப்பு நடந்த இடமும் ஒரே இடத்தில் இருந்தது மிகவும் சௌகரியமாக இருந்தது.

      நீக்கு
  3. பதில்கள்
    1. வருகைக்கும் காத்திருப்பதற்கும் நன்றி திரு L.N.கோவிந்தராஜன் அவர்களே!

      நீக்கு
  4. பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  5. வணக்கம்
    ஐயா
    அழகாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உதிரத்தில் வளர்ந்த மொழி:
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கவிஞர் திரு த.ரூபன் அவர்களே!

      நீக்கு
  6. எந்த செயலும் நன்கு திட்டமிடப்பட்டால் சிறப்பாகவே இருக்கும் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! நீங்கள் சொல்வது சரி. சரியாக திட்டமிடாவிட்டால் எந்த செயலும் சிறப்பாக இருக்காது. நாம் தான் அதை தினம் பார்த்துக்கொண்டு இருக்கிறோமே.

      நீக்கு
  7. உங்களின் சந்திப்பை எங்களாலும் மறக்க முடியாது போலிருக்கே :)

    பதிலளிநீக்கு
  8. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு பகவான்ஜி அவர்களே! எங்களின் சந்திப்பை மறக்க இயலாததுதான்.

      நீக்கு
  9. இதுபோன்ற பொன்விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது. கிடைத்தவர்கள் பாக்கியம் செய்தவர்கள்தான். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! உண்மையில் எங்களின் பொன் விழா சந்திப்பில் பங்கேற்றவர்கள், தாங்கள் கூறியதுபோல் பாக்கியம் செய்தவர்களே! இந்த நட்பு 50 ஆண்டுகளுக்கு மேலும் நீடித்து நிற்பதை பார்த்து, மகிழ இறைவன் கொடுத்த வரம் இது.

      நீக்கு
  10. நீங்கள் பகிரும் பாணி நாங்கள் உங்களைத் தொடரும்படி வைக்கிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

      நீக்கு
  11. இந்தப் பகுதியிலும் திரு. இக்பால். அந்த அதிகாலை வேளை எந்த சிரமத்தையும் பெரிதாக நினைக்காமல், சொன்னது சொன்னபடி இரயில் சந்திப்பு வாசலில் நிற்க வேண்டுமானல் நட்புக்கு எவ்வலவு பெரும் மதிப்பு கொடுப்பவர் அவர் என்று வியந்து என் மனசில் அவர் நிற்பதாக நெகிழ்ச்சியுடன் சொன்னேன். தங்குமிடத்திற்கு நண்பர்களை அழைத்துச் செல்ல அவர் காருடன் வந்திருந்தார் என்று இந்தப் பதிவில் தெரிந்து அவர் பால் இன்னும் பெரும் மதிப்பு கூடியது. தன்னையே தரும் திரு. இக்பால் போலவான நண்பர்கள் தாம் நட்புக்கே இலக்கணம் வகுக்கிறார்கள். அவர் தாளாளராக இருக்கும் பள்ளியின் நேர்த்தி பற்றியும் சொல்ல வேண்டியதில்லை என்று தெரிகிறது.
    அவருக்கு என் அன்பான ஆசிகள். வாழ்க வளமுடன்!..

    கைப்பேசியில் அடுத்த நண்பர் அழைக்கிறார் போலும். விறுவிறுப்பு கூடுகிறது. அடுத்த பதிவை எதிர்பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! திரு இக்பால் அவர்கள் இவ்வாறு எல்லோரிடமும் நற்பேறு பெறுவார் என்பதால் தான் அவரது பெற்றோர்கள் அவருக்கு இக்பால் என பெயரிட்டார்கள் போலும் ( இக்பால் என்பதற்கு நற்பேறு என்ற பொருள் தங்களுக்கு தெரியாதது அல்ல.) அவருக்கு தங்களது வாழ்த்துகளையும் ஆசிகளையும் நிச்சயம் சொல்வேன்.

      அடுத்து அழைத்த நண்பர் யாரென அடுத்த பதிவில் தெரிவிப்பேன். தொடர்வதற்கு நன்றி!

      நீக்கு
  12. சந்திப்பு பற்றி வெகு சிறப்பாக தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது கண்டு மகிழ்ச்சி. அடுத்த பகுதிக்கும் இதோ இப்போதே படிக்கச் செல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

      நீக்கு
  13. இன்றுதான் விட்டுப்போன இந்த பதிவை படித்தேன். தொடர்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு