திங்கள், 13 ஏப்ரல், 2020

தொடரும் சந்திப்பு 25

காலை நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு அனைவரும்  குழுவாக புகைப்படம் எடுத்துக்கொள்ள குடில்களுக்கும் தென்னந் தோப்புகளுக்கும் இடையே  அமைந்திருந்த அடுக்கு இருக்கை கொண்ட வட்டரங்கத்திற்கு (Amphitheatre) சென்றோம்.





அங்கே முதலில் நண்பர்கள் மட்டும் தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டு பின்னர் சந்திப்பிற்கு வந்திருந்த குடும்பத்தினருடனும்  புகைப்படம் எடுத்துக்கொண்டோம். 






புகைப்படம் எடுத்து முடிந்தவுடன் மதிய உணவை சாப்பிட திரும்ப அரங்கிற்கே வந்தோம். அங்கே எடுத்தூண் முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய உணவில்,  வடிசாறு (Soup), காய்கறிக் கலவை (Salad), பழக்கலவை (Fruit Chat), மொரமொரப்பான பொறித்த காய்கறி (Crispy Fried Vegetable), வெண்ணெயுடன் பாலடைக்கட்டி (Panneer Makhani), வெள்ளைப் பூண்டுடன் பருப்பு (Dal Lasooni), சாதா ரொட்டி, வெண்ணெய் ரொட்டி, காய்கறி நூலடை (Vegetable Hakka Noodles) காரைக்குடி பிரியாணி, எண்ணை கத்தரிக்காய், சுடச்சுட சோறு, எலுமிச்சை ரசம், தயிர், அப்பளம், ஊறுகாய், வடகம், மோர் மிளகாய், தயிர் பச்சடி, அடைப் பிரதமன், பனிக்கூழ் (Ice Cream), Fruit Trifle மற்றும் அசைவப் பிரியர்களுக்காக  கோழிக் கறி, மீன் மஞ்சூரியன், போன்றவைகளை வைத்திருந்தார்கள்.








அனைவரும் அவரவர்களுக்கு பிடித்ததை  எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டே சாப்பிட்டோம். 

மதியம்  இரண்டு மணிக்கு அங்கிருந்து புறப்படவேண்டும் என்று திட்டமிட்டிருந்தாலும் எல்லோரும் புறப்படும்போது மதியம் 2.30 மணி ஆகிவிட்டது. 

எல்லோரையும் ஒன்றாக அழைத்து செல்ல திட்டமிருந்ததால் இந்த முறை கூடுந்து (Van) ஏற்பாடு செய்யாமல் பேருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள் கோவை நண்பர்கள். 

அந்த ஓய்வகத்தை பிரிய மனமில்லாமல் எல்லோரும் அங்கிருந்து 10 கி.மீ தொலைவில் ஆனைமலை என்ற ஊரில்இருக்கும் மாசாணி அம்மன் கோவிலை நோக்கி புறப்பட்டோம். 

தொடரும்








21 கருத்துகள்:

  1. படங்கள் அருமையாக இருக்கிறது நண்பரே

    நன்று மாசாணி அம்மன் கோவில் நிகழ்வுகளை அறிய ஆவலுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பதிவை பாராட்டியமைக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே! மாசாணி அம்மன் கோவில் பற்றி அறிய காத்திருப்பற்கு நன்றி!

      நீக்கு
  2. இனிய சந்திப்பு. எடுத்தூண் முறையில் பகிர்ந்த உணவுப் பொருட்கள் கவர்கின்றன. எல்லாவற்றையும் தமிழில் சொல்லியிருப்பது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், உணவு வகைகளை தமிழில் சொல்லியதை பாராட்டியமைக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

      நீக்கு
  3. அம்மாடி! எம்மாம் பெரிய குழு - குடும்ப சந்திப்பு?.. வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சூழ்நிலைகளில் வாழ்க்கை அமைந்திருக்கும் நண்பர்கள் குழாம் ஒன்று கூடி மனத்திற்கினிய நிகச்சிகலில் பங்கு பெறுவது என்றால்?.. அது வியக்கத்தக்க நிகழ்வாகத் தான் அமையும் என்பது நிச்சயம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும். கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! தஞ்சை சந்திப்பில் கூடிய நண்பர்களின் எண்ணிக்கையை விட இந்த சந்திப்பில் கூடிய நண்பர்களின் எண்ணிக்கை சற்று குறைவுதான். இருப்பினும் தாங்கள் கூறியது போல். வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சூழ்நிலைகளில் வாழ்க்கை அமைந்திருக்கும் நண்பர்கள் குழாம் ஒன்று கூடி மனத்திற்கினிய நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவது என்பது மகிழ்ச்சி தரும் ஒரு நிகழ்வு என்றே சொல்லலாம்.

      நீக்கு
  4. நண்பரே! இந்தக் கட்டுரைத் தொடர் நிறைவுற்றதும், இங்கு நீங்கள் புழக்கத்தில் கொண்டு வந்திருக்கும் பல ஆங்கிலச்
    சொற்களுக்கான தமிழ் வடிவை ஓர் அட்டவணை மாதிரி தனியாக ஒரு பதிவில் தொகுத்துக் குறிப்பபிட்டீர்கள் என்றால் அது தமிழ் வளர்ச்சிக்கும் எங்கள் உபயோகத்திற்கும் மிகவும் உதவியாக இருக்கும். தங்கள் தமிழ் மொழி ஆர்வத்திற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீள் வருகைக்கும். கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! தங்களின் விருப்பப்படி இந்த தொடர் முடிந்தவுடன் நான் எனது பதிவுகளில் (இந்த பதிவு மட்டுமல்ல) தந்துள்ள ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை தொகுத்து தருவேன்.

      நீக்கு
  5. இம்மாதிரி ஒரு குடும்ப சந்திப்பை படிக்கவே அருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சொக்கன் சுப்பிரமணியன் அவர்களே!

      நீக்கு
  6. என்னவொரு இனிமையான நிகழ்வு ஐயா... மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பதிவை இரசித்து பாராட்டியமைக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  7. வழக்கம்போல ரசித்துப் படித்தேன் ஐயா. உங்களின் நினைவாற்றலும், மொழியாற்றலும் வியக்கவைக்கின்றன.
    மாசாணியம்மன் கோயிலுக்கு உங்களைத் தொடர்ந்து வருகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டியமைக்கும்,தொடர்வதற்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

      நீக்கு
  8. தமிழ் வலையுலகை மீண்டும் மணக்கச் செய்யும் ஒரு எண்ணம்...!

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி...!!

    தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய நடவடிக்கை...!!!

    உருவாகியது புதிய வலைத்திரட்டி: வலை ஓலை

    நமது, வலை ஓலை வலைத்திரட்டியில் பரீட்சார்த்தமாக 29 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    30ஆவது வலைத்தளம்: நினைத்துப் பார்க்கிறேன்

    அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம்.

    இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

    மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

    தமிழில் புதிய சொற்களை அறிமுகப்படுத்த ஓர் வலை அகராதி: சொல்

    ஒரே பார்வையில் எமது தளங்கள்:
    1. வலை ஓலை
    2. எழுத்தாணி
    3. சொல்

    தங்கள் பதிவு - எமது திரட்டியில்: தொடரும் சந்திப்பு 25

    முக்கிய அறிவித்தல் : தயவு செய்து எமது வலைத் திரட்டியின் மெனுவில் இணைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தல்களின் அடிப்படையில் தங்கள் வலைத்தளத்தில் குறிச் சொற்களை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனை பின்பற்றுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறேன். காரணம், பதிவுகள் தானாக இணையும் வகையில், வலை ஓலை வலைத்திரட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்தந்த பதிவுகள் உரிய மெனுவில் இணையும் வகையிலும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

    நீங்கள் சரியான மெனுவுக்கான குறிச்சொல்லை தங்கள் பதிவில் இணைத்தால் மட்டுமே தங்கள் பதிவைத் தேடி, எமது வலைத் திரட்டிக்கு வரும் வாசகர்களுக்கு அதனை அடையாளம் காட்டும். ஆகவே, தங்களுக்குப் பிடித்த குறிச்சொற்களை இணைத்துக் கொள்வதோடு நின்று விடாமல், சிரமம் பாராது, எமது மெனுவில் உள்ள குறிச் சொற்களை அவதானித்து அதனையும் உங்கள் பதிவில் இணைத்துக் கொள்ளுங்கள்.

    அனைவருக்கும் நன்றி!

    -வலை ஓலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கியுள்ள தங்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும் திரு சிகரம் பாரதி அவர்களே!

      தங்களுடைய இந்த முயற்சிக்கு எனது முழு ஆதரவும் உண்டு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

      தங்களது ‘வலை ஓலை’யின் வலைத்திரட்டியில் எனது வலைத்தளத்தையும் இணைத்தமைக்கு நன்றி!

      நீக்கு
  9. இயற்கை எழில் கொஞ்சும் அந்த முதல் படம் சூப்பர் ... தொடர்ந்து உணவுப் பொருட்களை பட்டியல் போட்டு எங்களுக்கும் பசியெடுக்க வைத்து விட்டீர்கள் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கும்,பாராட்டியமைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு ஜட்ஜ்மென்ட் சிவா அவர்களே! இந்த ஓய்வகத்தின் மற்ற எழில் கொஞ்சும் இடங்களைப் பார்க்க தொடரும் சந்திப்பு 15 என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவைப் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக .... "தொடரும் சந்திப்பு 15" ஐ படித்துவிட்டு என்னுடைய கருத்துக்களை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் நண்பரே ! நன்றி !!... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

      நீக்கு
    2. நன்றி திரு ஜட்ஜ்மென்ட் சிவா அவர்களே!

      நீக்கு