நேற்று(நவம்பர் திங்கள் 14 ஆம் நாள்) நாடே
‘குழந்தைகள் நாள்’ கொண்டாடும் நேரத்தில்,
தானும் தொடர் பதிவிட்டு என்னையும் பதிவைத்
தொடர பணித்த நண்பர் திரு சென்னை பித்தன்
அவர்கட்கு நன்றி.
எப்போது முதல் ‘குழந்தைகள் நாள்’ கொண்டாட
ஆரம்பித்தோமென வராலாற்றை திருப்பிப்பார்த்தால்,
முதன் முதலாக 1954 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள்
சபை தீர்மானித்தபடி அக்டோபர் மாதம்
கொண்டாடப்பட்டதாம்.
குழந்தைகள் நல உரிமைக்கான பிரகடனம்
ஐக்கிய நாடுகள் சபையில்,1959 ஆம் ஆண்டு
நவம்பர் திங்கள் 20 ஆம் நாள் நிறைவேற்றப்
பட்டதால்,பின் அந்த ஆண்டு முதல் உலகம்
முழுதும் நவம்பர் 20 ஆம் நாளையே ‘குழந்தைகள்
நாள்’ ஆக கொண்டாடப்பட்டு வருகிறது.
நம் நாட்டைப் பொருத்தவரை 1964 ஆம் ஆண்டு
முதல், சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை
அமைச்சரும், குழந்தைகளால் சாச்சா (மாமா) நேரு
என அன்புடன் அழைக்கப்பட்டவருமான
திரு ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான
நவம்பர் திங்கள் 14 ஆம் நாளையே ‘குழந்தைகள்
நாள்’ ஆக கொண்டாடி வருகிறோம்.
குழந்தைகள் பால் அவர் கொண்டிருந்த பாசம்
காரணமாகவும்.அவரே இந்தியாவின் முதல்
குழந்தை போன்றவர் என்பதாலும், அவரது பிறந்த
நாளை ‘குழந்தைகள் நாள்’ எனக் கொண்டாடுவது
சாலப் பொருத்தமே.
ஆனால் எனக்குள் சில கேள்விகள் இந்த நேரத்தில்
எழுகின்றன.
வருடா வருடம் நவம்பர் மாதத்தில் மட்டும் பள்
ளிகளில் சில குழந்தைகளுடன் இந்த நாளை
கொண்டாடிவிட்டு, மற்ற நாட்களில் பல இலட்சம்
குழந்தைகள் பசியாலும் பட்டினியாலும் வாட
விடுவது சரியா?
குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு சட்டம்
இருந்தும் அது சரியாக அமல் படுத்தப்படுகிறதா?
சிவகாசியில் பட்டாசுத் தொழிலிலும், மும்பை,
அகமதாபாத் போன்ற நகரங்களில் மிட்டாய் தயாரிக்கும்
தொழிலிலும்,நாடு முழுதும் செங்கல் சூளையிலும்
சிறு குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் வேலை
செய்கிறார்களே,அது அரசுக்கு தெரியாதா?
‘எதிர்கால இந்தியா இக்கால குழந்தைகள் கையில்
உள்ளது’ என பண்டித நேரு கூறியது உண்மையானால்,
எல்லாக் குழந்தைகளும் இளமையில் கல்வி
கற்றாலல்லவா, இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக
இருக்கமுடியும்.
அதற்காக நாம் என்ன செய்திருக்கிறோம் அல்லது
என்ன செய்யப்போகிறோம்?
இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்கும் வரை,
எப்படி மழலைகள் உலகம் மகத்தானது என
சொல்லமுடியும்? என்னைப்பொறுத்தவரை இந்த
விழாக்கள் வெறும் சம்பிரதாயமானவைதான்.
அனைவருக்கும் இதில் இரு வேறு கருத்து
இருக்கமுடியாது என நினைக்கிறேன்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

உங்கள் கருத்தே என் கருத்தும். தொடர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குகருத்துக்கும், பதிவிடத் தூண்டியமைக்கும் நன்றி
பதிலளிநீக்குதிரு சென்னை பித்தன் அவர்களே!
ஆம்.. தீப்பெட்டித் தொழிலிலும், பட்டாசுத் தொழிலிலும், ஓட்டல்களிலும் இன்னும் பல இடங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். வருத்தம் தரும் விஷயம். இதற்கு என்ன தீர்வென்பது தான் புரியவில்லை. மீண்டும் கிடைக்காத இளமைக்காலம் வசந்தகாலமாக அவர்களுக்கு அமைய வேண்டுமென்பதே என் ஆதங்கமும். அழகாக கருத்துக்களை வெளியிட்டுள்ளீர்கள். நன்று.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கணேஷ் அவர்களே!
பதிலளிநீக்கு"சிவகாசியில் பட்டாசுத் தொழிலிலும், மும்பை,
பதிலளிநீக்குஅகமதாபாத் போன்ற நகரங்களில் மிட்டாய் தயாரிக்கும்
தொழிலிலும்,நாடு முழுதும் செங்கல் சூளையிலும்
சிறு குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் வேலை
செய்கிறார்களே,அது அரசுக்கு தெரியாதா?"
சென்னை பித்தனின் அழைப்பை ஏற்று அருமையான ஒரு பதிவினை அளித்துள்ளீர்கள் .. சாட்டையடி போன்ற கேள்விகள் ? பல சட்டங்கள் ஏட்டினிலே இருந்தாலும் அதனை அமுல் படுத்த அதிகாரிகள் முயலுவதில்லை சுய நலம் காரணமாக .....கொத்தடிமைத்தனத்தை இன்னும் ஒழிக்க இயலவில்லை . பல பிரபலமான உணவு விடுதிகளில் சிறுவர்கள் பணி புரிவதை பார்க்க முடிகிறதே .. பெரிய நகரங்களில் அதிகாரிகள் இதனை பார்த்திருக்க மாட்டர்களா என்ன ? பல நேரங்களில் பெற்றோர்களே இதற்கு காரணமாக இருப்பது வேதனைக்கு உரியது .( ஏழ்மை தான் காரணம்)
மிக நீண்ட பயணம் காத்திருக்கிறது ...... வாசுதேவன்
வருகைக்கும்,எனது கருத்தை ஆமோதித்தற்கும்,நன்றி திரு வாசு அவர்களே!
பதிலளிநீக்குஅன்பின் நடன சபாபதி - அருமையான் சிந்தனை - குழந்தைகள் தின விழாவினைப் பற்றிஅய் பல தகவல்கள் - பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளன்று அவரை நினைவுகூறும் வண்ணம் அவருக்குப் பிடித்த குழந்தைகள் நாளாகக் கொண்டாடுவது சரியான செயல்தான். அதே நேரத்தில் குழந்தைக்ளைப் பற்றிய நினைவும் அவர்களுக்குச் செய்ய வேண்டியவைகளும் பதிவில் குறிப்பீட்டிருப்பதும் நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சீனா அவர்களே!
நீக்கு