திங்கள், 18 அக்டோபர், 2010

எனது ஓவியங்கள் 1

கீழே உள்ள படம் 1967 ல் கர்நாடக மாநிலம் (அப்போது மைசூர் மாநிலம் என அழைக்கப்பட்டது ) தார்வாரில், தேசிய விதைக் கழகத்தில் பணி புரிந்தபோது வரைந்தது.

18-09-1967 அன்று வெளிவந்த ஒரு செய்தித்தாளில் வெளியான ஒரு இந்தி படத்தின் விளம்பரத்தைப் பார்த்து வரைந்தேன்.








அந்த விளம்பரத்தில் அந்த குழந்தை அழுதுகொண்டே நடப்பதுபோல் வெளியான அப்படம் ஏனோ என்னைக்கவர்ந்தது. உடனே அதை வரையவேண்டும் என்ற எண்ணம் தோன்றியதால், கையில் கிடைத்த தாளில், Ball Point பேனா கொண்டு வரைந்தேன்.

இந்த படம் அழிப்பான் (Eraser) உபயோகப்படுத்தாமல் Free Hand ல் வரைந்தேன்.

வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

6 கருத்துகள்:

  1. Amazing that you could preserve the pic for nearly 43 years and 1 month.I think this was your maiden effort at free art. Was really good and appealing. Some how i could not help recalling the pic of a small naked girl running for her life.screaming with agony and fear writ large on her tender face when Vietnam was bombarded during the war. That particular pic went on to capture the imagination of the world and received several awards. Vasudevan

    பதிலளிநீக்கு
  2. இந்த படத்திற்கும் நீங்கள் குறிப்பிடும் புகைப்படத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் இதை பார்க்கும்போது வியட்நாம் யுத்தத்தின் போது ஓடி வந்த அந்த குழந்தை நினைவுக்கு வருவது உண்மையே. நான் விரும்பி வரைந்த படம் என்பதால் மிக பத்திரமாக வைத்திருந்தேன். நாற்பத்தி மூன்று ஆண்டுகள் போனது நீங்கள் சொன்னதும் தான் தெரிகிறது. வருகைக்கு நன்றி திரு வாசு அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் வரைந்ததைவிட, அதனை இத்தனை ஆண்டுகள் பாதுகாத்து வைத்தது நினைந்து வியக்கிறேன்.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் ,கருத்துக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! நான் வரைந்த படங்களில் இரண்டைத்தவிர அனைத்தையும் இன்னும் பாதுகாத்து வருகிறேன். இப்போது அவைகளை கணினியில் சேமித்தும் வைத்துவிட்டேன்.

      நீக்கு