வியாழன், 14 அக்டோபர், 2010

எனது ஓவியங்கள்

ஓவியம் வரையும் ஆர்வம் எப்படி எனக்கு ஏற்பட்டது எனத்தெரியவில்லை.அரியலூர் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்போது மாணவர்களுக்காக ஒரு ஓவிய போட்டி வைத்திருந்தார்கள். ஏதோ ஒரு ஆர்வத்தில் எந்தவித பயிற்சியும் இல்லாமலே அதில் கலந்துகொண்டேன்.

எங்களை ஒரு இயற்கை காட்சியை வரையச்சொன்னார்கள். ஒரு ஆறும், அதில்
ஒரு படகும், அருகில் ஒரு தென்னை மரமும் , மற்றும் எதிர் கரையில் ஒரு மலையும் உள்ளது போல் படம் வரைந்தேன். பரிசு கிடைக்கவில்லை.
ஆனால் பலபேருக்கு நடுவில் தரையில் அமர்ந்து படம்
போட்ட ஒரு இனிய அனுபவத்தை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.

அரியலூர் மற்றும் பெண்ணாடம் பள்ளிகளில் ஓவிய
வகுப்பு இல்லாததால் என்னால் ஓவியம் வரையும் முயற்சியை தொடர முடியவில்லை. ஆனால் விருத்தாசலம் பள்ளியில்எங்களுக்கு ஓவிய வகுப்பு இருந்தது. எங்கள் ஓவிய ஆசிரியர் திரு ஜெயராமன் அவர்கள் மூன்று வருடங்களும் சொல்லிக்கொடுத்த முறை எனக்கு ஓவியம் வரைவதில் ஒரு விருப்பத்தை உண்டாக்கியது.

அதுவும் அவர் கரும்பலகையில் பூக்களின் Design ஐ
பாதியாக வரைந்து. அதைப்பார்த்து எங்களது ஓவிய
நோட்டு புத்தகத்தில் முழு Design யும் வரையச்சொல்லி
பழக்கியது, பின்னால் ஒரு படத்தைப்பார்த்து Free Hand
முறையில் படம் வரைய உதவியது.

பத்தாம் வகுப்பில்'தண்டலை மயில்கள் ஆட" என்ற
கம்ப இராமாயண பாடலுக்கு படம் வரைந்து பார்த்ததும்,
நண்பர்களிடம் காட்டி மகிழ்ந்ததும் இன்னும் நினைவில் இருக்கிறது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் துறையில், இளம் அறிவியல்
பட்ட படிப்பில் சேர்ந்தபோது தான்ஓவியம் வரையத்தெரிவது எவ்வளவு
முக்கியம் எனத் தெரிந்துகொண்டேன்.

காரணம் விலங்கியல், தாவரவியல்,பூச்சிஇயல் போன்ற பாடங்களில் செய்முறை வகுப்புகளில் குறிப்பிட்ட
செடியையோ அல்லது விலங்கு அல்லது பூச்சியை படம்
வரைந்தோ தான் விளக்குவார்கள்.

அதோடல்லாமல் ஒவ்வொரு மாணவருக்கும்
தாவரகுடும்பத்தில்ஒவ்வோவோன்றிலிருந்தும் ஒரு செடியை பூக்களோடு கொடுத்து அதைப்பார்த்துவரையச்சொல்வார்கள். எனவே அவைகளை எங்களது Record Note களில்வரைந்து ஆசிரியர்களிடம் காட்டி கையொப்பம் பெறவேண்டும்.அப்படி பெற்றால் தான் செய்முறை தேர்வில் மதிப்பெண்கள் பெறமுடியும்.

எனக்கு பள்ளியில் கற்ற அனுபவத்தால் எந்த ஒரு
Specimen யும் பார்த்துவரைவது சுலபமாக இருந்தது. நான் சுலபமாக படம் போடுவதை பார்த்தஎனது வகுப்பு தோழர்கள் அவர்களது Record லும் என்னை வரையச்சொல்லி கேட்டபோது,தயங்காமல் வரைந்துகொடுத்தேன். அது பின்னால் தேர்வில் அந்த படங்களை சுலபமாக வரைய எனக்கு உதவியது.

எங்களது துறையின் ஆண்டுமலருக்கு
தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களது உருவத்தை
Indian Ink ல் நான் வரைந்து தந்ததும் அந்த படம் ஆண்டு
மலரில் வெளியானதும் நேற்றுதான் நடந்தது போல் இருக்கிறது.

கல்லூரியை விட்டு வந்தபிறகு ஓவியம் வரைவதை
மறந்தேவிட்டேன். 1967 ல் கர்நாடகாவில் உள்ள தார்வார்
என்ற ஊரில் பணி செய்தபோது,தனிமை என்னை
வாட்டியபோது அதை மறக்க ஓவியம் வரைந்தாலென்ன
என யோசித்து வரையத்தொடங்கினேன்.

அப்படி வரைந்த சில படங்களை இந்த பதிவில் வெளியிட இருக்கிறேன்.

அவைகள் அடுத்த பதிவில் ......

4 கருத்துகள்:

  1. வருகைக்கு நன்றி திரு வாசு அவர்களே! எனது ஓவியங்கள் அடுத்த பதிவில்.

    பதிலளிநீக்கு
  2. பொறுமையும், முயற்சியும், பயிற்சியும் வேண்டிய துறை இது.

    இதிலும் கால்பதித்தீர்களா?

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் ,கருத்துக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! உண்மையில் படங்கள் வரைய அசாத்திய பொறுமை வேண்டும். நான் வரைந்த தஞ்சாவூர் தட்டு படத்தை எனது ஓவியங்கள் 11 இல் பார்க்கலாம். அதை வரைய நான் 4 மணி நேரம் எடுத்துக்கொண்டேன். துரதிர்ஷ்டவசமாக வங்கிப் பணி காரணமாக் என்னால் ஓவியத்தில் கவனம் செலுத்த இயலவில்லை.

      நீக்கு