ஞாயிறு, 24 அக்டோபர், 2010

எனது ஓவியங்கள் 3

புது தில்லியில் பணி புரிந்தபோது , 'பால்கி' என்ற இந்தி
திரைப்பட விளம்பரத்தைப்பார்த்து,27-08-1968 அன்று
வரைந்தது கீழே உள்ள படம்.
(இந்த திரைப்படத்தில் வஹிதா ரஹ்மானும்,
ராஜேந்திர குமாரும் நடித்தாக நினைவு.)
இந்த படத்தை Ball Point பேனாவால்
மாலை 5 மணிக்கு வரைந்தேன்
கீழே உள்ள படங்கள் 02-10-1968 தேதியிட்ட ஆந்திர பிரபா இதழில் வந்த படத்தைப்பார்த்து,01 -10-1968 அன்று, Ball Point பேனாவால், வரைந்தது.
நேரம் இரவு பத்து மணி.
கீழே உள்ள படம் திரு கருணாநிதி அவர்கள்,
அண்ணா மறைவுக்குப்பின் முதல்வர் ஆனபிறகு
அவரைப்பற்றி Film Fare இதழில் வந்த
கட்டுரையின் கூட வந்த போட்டோவைப்பார்த்து ,
15 -o4 -1969 அன்று, பெங்களூருவில் பணி புரிந்தபோது,
Ball Point பேனாவால், வரைந்தது. நேரம் இரவு 10.30


இந்த படங்களும், அழிப்பான் (Eraser) உபயோகப்படுத்தாமல் Free Hand ல் வரைந்ததுதான் .

வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

8 கருத்துகள்:

 1. நீங்கள் எப்போதுமே செய்வன திருந்தச் செய்ய வேண்டும் என (எங்களை மாதிரி திரும்பச் செய்ய அல்ல!)எண்ணுபவர்.உங்கள் படைப்புகளின் மீது நீங்கள் கொண்டுள்ள காதல் அவற்றை இத்துணை ஆண்டுகள் பாதுகாத்து வைத்திருந்ததிலிருந்து தெரிகிறது.வங்கிப் பணி ஒரு வளர வேண்டிய ஒவியரை விழுங்கி விட்டதோ?
  இப்போதுதான் நேரமிருக்கிறதே! விட்ட இடத்திலிருந்து தொடரலாமே!
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. Amazing talent... unfortunately artistic journey seems to have abandoned midway.... by the way Mr.Karunanidhi's picture was not visible... Vasudevan

  பதிலளிநீக்கு
 3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! வங்கிப்பணி ஓவியம் வரைவதை தடை செய்தது உண்மைதான். தங்களது ஆலோசனைப்படி திரும்பவும் ஓவியம் வரைவதை தொடர எண்ணம்.

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! திரு கருணாநிதி அவர்களின் படம் நன்றாகத்தெரிகிறதே.

  பதிலளிநீக்கு
 5. உங்களுடைய அனைத்து படங்களையும் பார்க்கும் போது உங்களுள் ஒரு ஓவியன் ஒளிந்திருப்பதை உணரமுடிகிறது.

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு இனியவன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 7. எந்தத் துறையாயினும் அதில் திறம்படச் செயலாற்ற முடியும் என்பதைத் தங்கள் ஓவியத் திறமை காட்டுகிறது.

  வாழ்த்துக்கள்.

  தொடர்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், வாழ்த்துக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே!

   நீக்கு