வியாழன், 12 ஏப்ரல், 2012

Boss கள் பல விதம்! 5


கூட்டம் நடைபெற இருந்த அரங்கில் Senior கள் எல்லோரும்
முன் வரிசையில் உட்கார்ந்திருக்க என்னைப் போல் புதிதாய்
பணியில் சேர்ந்தோர், பின் வரிசையில் உட்கார்ந்தோம்.

எல்லோரும் அமர்ந்ததும், என் அருகில் இருந்த நண்பர்
என்னைப்பற்றி விசாரித்தார். நான் என்னை அறிமுகம்
செய்துகொண்டு, D.A.O வை சந்தித்த அனுபவத்தையும்
சொன்னேன்.

அதற்கு அவர், இந்த D.A.O மகா தற்பெருமைக்காரர்.இவர்
B.Sc., படித்துவிட்டு B.Sc(Agriculture) படித்தவராம். அதனால்
அடிக்கடி தான் ஒரு Double Graduate என சொல்லிக்கொள்வார்.
மேலும் தனக்கு நாலு இலக்க சம்பளம் (Four figure Salary )
வருவதாக அடிக்கடி சொல்லிக்கொண்டு இருப்பார்.எனவே
இவர் சொன்னதையெல்லாம் சீரியசாக எடுத்துக்
கொள்ளாதீர்கள். என்றார்.

(நான் முன்பே எழுதியிருந்தபடி அப்போது AEO களுக்கு
மாத சம்பளம், ரூபாய் 303 தான். இவர் பணியில் அதிக வருடம் இருந்ததாலும்,பதவி உயர்வு பெற்றதாலும் ரூபாய் 1000 க்கு
மேல் சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்தார்.அவ்வளவுதான்.)

சிறிது நேரத்தில் மாவட்ட வேளாண் அலுவலர் அரங்கத்திற்கு வர,
அவருடன் இரண்டு பேர் வந்து அவரோடு மேடையில் அமர்ந்தனர்.
ஒருவர் தஞ்சையில் இருந்த துணை வேளாண் இயக்குனர்
அலுவலகத்தில் பணி செய்யும் Subject Matter Specialist எனப்படும்
குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுனர். இன்னொருவர் மாவட்ட
புள்ளியியல் அலுவலர் (District Statistical Officer).

அன்றைக்கு வந்த துறை வல்லுனர் எண்ணை வித்துக்களில்
(Oil Seeds) வல்லுனர். அவரும்  அவரோடு வந்த மாவட்ட
புள்ளியியல் அலுவலரும் எங்கள் மாவட்ட வேளாண் அலுவலரின்
கீழ் உள்ள பகுதியில் சாகுபடி செய்யபட்டுள்ள எண்ணை
வித்துக்களின் பரப்பளவு பற்றியும் உத்தேச விளைச்சல் பற்றியும்
ஆய்வு செய்ய வந்ததால் தான், அந்த கூட்டத்திற்கு ஏற்பாடு
செய்யப்பட்டு இருந்தது

முதலில் எண்ணை வித்துக்கள் வல்லுனர், அந்த ஆய்வின்
நோக்கத்தை விளக்கிய பின், எங்கள் DAO ஒவ்வொரு ஊராட்சி
ஒன்றியத்திலும்  பணி செய்யும் வேளாண் விரிவாக்க
அலுவலர்களின் பகுதியில் உள்ள எண்ணை வித்துக்கள்
குறிப்பாக எள் பயிரிட்டப்பட்டுள்ள பரப்பளவு, உத்தேச மகசூல்
போன்ற விவரங்களை கேட்க ஆரம்பித்தார்.

முதல் வரிசையில் இருந்த Senior கள் பேசும்போது கையில்
உள்ள சிறிய நோட்டு புத்தகத்தை வாயின் முன் வைத்து
மறைத்துக்கொண்டு பவ்யமாக பதில் சொல்ல ஆரம்பித்தார்கள்.

அது பற்றி கேட்டதற்கு அருகில் இருந்த நண்பர் சொன்னார். மேலதிகாரிகளிடம் பேசும்போது இவ்வாறு தான் பேசவேண்டும்.
அதுதான் எல்லோரும் பின்பற்றும் முறை என்று.

அவர்கள் அவ்வாறு பேசுவது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஏனெனில் அவர்களில் பெரும்பாலோர் 13 அல்லது 14
வருடங்களுக்கு மேல் பணி முடித்தவர்கள்.எந்த நேரமும் பதவி
உயர்வு பெற்று அந்த DAO வுக்கு சமமாக பதவியில்
அமரக்கூடியவர்கள். அவர்கள் மட்டுமல்ல வெறுயாருமே  
இவ்வாறு பேசவேண்டிய அவசியமில்லை.  

அதோடு மேலும் ஒரு வினோத பழக்கத்தையும்  கண்டேன்.
ஒரு சீனியரிடம், நீங்கள் எப்போது தஞ்சை சென்று, நான் கேட்ட விவரங்களை சேகரிக்கப் போகிறீர்கள்? என DAO கேட்டதற்கு,
அவர், பவ்யமாக DAO சொன்னால் நாளையே போகிறேன்.என்றார்.
எனக்கு ஒரு சந்தேகம். என்ன இவர் DAO விடமே, DAO சொன்னால் போகிறேன் என்கிறாரே இவர் அப்படியானால் DAO இல்லையா
எனக் குழம்பிப் போய், திரும்பவும் அது பற்றி நண்பரிடம்
விசாரித்தேன்.

அதற்கு அவர், மேலதிகாரிகளிடம் பேசும்போது, நீங்கள் சொன்னால்
என்று சொல்லக்கூடாது அவரது பதவியின் பெயரை சொல்லித்தான் சொல்லவேண்டும். என்றார்! என்ன வேடிக்கையான பழக்கம்!

(இந்த பழக்கம் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது எண்ணுகிறேன்.வங்கியில் பணி செய்யும்போது மாவட்ட ஆட்சியர்
கூட்டும் வங்கியாளர்கள் கூட்டத்திற்கு சென்றுஇருக்கிறேன்.அங்கு
வரும் அரசு அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரிடம் ஏதேனும்
சொல்லும்போது, கலெக்டர் சொல்வதுபோல் என்றுதான்
சொல்கிறார்களே தவிர  நீங்கள் சொல்வதுபோல் என
சொல்வதில்லை.யார் இந்த வேடிக்கையான நடைமுறைகளைக்
கொண்டு வந்தார்கள் எனத்தெரியவில்லை.)

எள் பயிரிடப்பட்டுள்ள உண்மையான பரப்பளவை ஒரு சிலரைத்
தவிர, மற்றவர்கள் வாய்க்கு வந்த எண்ணிக்கையைத்தான் எள்
பயிரிடப்பட்ட ஏக்கராக சொன்னார்கள். மாவட்ட புள்ளியியல்
அலுவலரும் அந்த விவரங்களைக் குறித்துக்கொண்டார்.

மாவட்டத்தின் எண்ணை உற்பத்தியையும், தேவையையும் பற்றாக்குறையையும் இந்த தகவல்களை வைத்துத்தான்
புள்ளிவிவரங்களாக அரசு வெளியிடுகிறது என்று தெரிந்தபோது
எனக்கு வேளாண் புள்ளியியல் பாடம் படிக்கும்போது எங்கள்
ஆசிரியர் வேடிக்கையாக சொன்னது நினைவுக்கு வந்தது.பொய்களில்
மூன்று வகை உண்டு. அவை பொய்கள், மட்டற்ற பொய்கள், புள்ளி விவரங்கள்("Lies, Damned lies, and Statistics")என்று!

என் முறை வந்தபோது நான் எழுந்து நின்றேன்.

தொடரும்

30 கருத்துகள்:

  1. ஆரம்பமே பொய் பின் திட்டங்களை எங்கே தேடுவது .

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. தமிழ் நாடு மின் வாரியத்திலும் நீங்கள் குறிப்பிட்டது போன்ற பழக்கம் இருப்பதை பார்த்திருக்கிறேன்.எஸ்ஸி சொன்னால் என்றும் டிஇ சொன்னீங்க என்றும் சம்பந்தபட்டவரிடமே பேசி பார்த்திருக்கிறேன்.எல்லாமே அடிமைப்புத்தியின் தொடர்ச்சிதானே தவிற வேறொன்றுமில்லை.
    வில்லவன்கோதை

    பதிலளிநீக்கு
  4. ‘மன்னர் சொன்னால செய்கிறேன்’ ‘மன்னரின் விருப்பப்படி’ என்று அரசர் காலத்து நடைமுறையேதானே அது. அரசர் கால வழக்கத்தை அரசு அலுவலகங்களில் கொண்டு வந்த புண்ணியவான் எவனோ? அடுத்த பகுதிக்கு ஆவலுடன் வெயிட்டிங்!

    பதிலளிநீக்கு
  5. மேலதிகாரிகளிடம் பேசும்போது, நீங்கள் சொன்னால்
    என்று சொல்லக்கூடாது அவரது பதவியின் பெயரை சொல்லித்தான் சொல்லவேண்டும்.’ என்றார்! என்ன வேடிக்கையான பழக்கம்!

    பொய்யிலே பூத்த எள் !!

    பதிலளிநீக்கு
  6. நல்ல பதிவு. இது போன்ற அரசாங்க நடைமுறையின் அபத்தங்களை நிறைய எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  7. நல்ல பதிவு. இது போன்ற அரசாங்க நடைமுறையின் அபத்தங்களை நிறைய எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  8. நல்ல பதிவு. இது போன்ற அரசாங்க நடைமுறையின் அபத்தங்களை நிறைய எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  9. எழுந்து நின்று எங்களைக் காக்க வைத்து விட்டீர்கள்.!சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  10. இடத்திற்கிடம் விசித்திர பழக்கங்களை உணர முடிகிறது. இன்ரறெஸ்ரிங்.....
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  11. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வில்லவன்கோதை அவர்களே!. நீங்கள் சொல்வது உண்மை. இவையெல்லாம் அடிமைத்தனத்தின் தொடர்ச்சி தான்.

    பதிலளிநீக்கு
  12. வருகைக்கு நன்றி திரு கணேஷ் அவர்களே!. நானே அந்த கூட்டம் ஒரு அரசர் தர்பார் நடத்துவதைப்போல் இருந்தது என எழுத இருந்தேன். காத்திருப்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே! மேலதிகாரிகளிடம் இவ்வாறு பேசும் இந்த பழக்கம் இன்னும் மாறவில்லை என்பது வருத்தமே.

    பதிலளிநீக்கு
  14. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு அமர பாரதி அவர்களே! அரசில் பணியாற்றுவோர் பின்பற்றும் நடைமுறை பற்,றி எனது 'நினைவோட்டம்' தொடரில், எனது அரசுப் பணிபற்றி எழுதும்போது எழுத இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! காக்க வைத்ததற்கு மன்னிக்க.

    பதிலளிநீக்கு
  16. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    பதிலளிநீக்கு
  17. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  18. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வைரை சதீஷ் அவர்களே!

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துக்கு நன்றி திருமதி சசிகலா அவர்களே! தங்களுக்கும் எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  20. இனிய புதஇதாண்டு வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  21. வாழ்த்துக்கு நன்றி. தங்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    பதிலளிநீக்கு
  22. Very informative especially for the new entrants.Probably addressing superiors in this way a legacy of British Customs . Even judges are addressed not directly but in an indirect manner...As for as your observation on statistical skull druggery is concerned it is well how statistics are fudged for various purposes. Waiting for more such interesting tid bits ... Vasudevan

    பதிலளிநீக்கு
  23. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!

    புள்ளி விவரங்கள் அன்று முதல் இன்று வரை உண்மையாக இல்லை என்பதற்கு நேற்றைய தினத்தாளில் வந்த செய்தியே சான்று.

    சென்ற ஆண்டு சர்க்கரை உற்பத்தி 59.09 இலட்சம் டன்கள் என்பதை 134.08 டன்கள் என்று தவறாக, நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத்துறை புள்ளி விவரம் கொடுத்ததால், தொழில் சார்ந்த உற்பத்தியின் வளர்ச்சியை 1.1% க்கு பதிலாக 6.8 % என்று தவறாக புள்ளியால் துறை தவறாக கணக்கிட்டுள்ளது என்பது அரசுக்கு பெரிய தர்ம சங்கடத்தை உண்டாக்கியுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

    என்று இந்த நிலை மாறுமோ?

    பதிலளிநீக்கு
  24. This is in continuation of my earlier remarks. I chanced upon a new item in today TOI (16.4.12) under the heading CITY LIGHTS with the caption reading : TREATED LIKE AIRHEADS'.
    One of the school official says in disgust " We can ask whether DEO madam is there" even if we are calling her mobile.
    "Bad behaviour,one would think" This is how the new item is summarized by the paper. vasu

    பதிலளிநீக்கு
  25. கருத்துக்கு நன்றி திரு வாசு அவர்களே!.இளைய தலைமுறையினர் இந்த அடிமை வழக்கத்தை மாற்றினாலோழிய இந்த வழக்கம் மறைவது கடினம்.

    பதிலளிநீக்கு
  26. //‘மேலதிகாரிகளிடம் பேசும்போது, நீங்கள் சொன்னால்
    என்று சொல்லக்கூடாது அவரது பதவியின் பெயரை சொல்லித்தான் சொல்லவேண்டும்.’//

    இதுபோன்ற பழக்கம் இன்றும் சில இடங்களில் மட்டும் சிலரால் செய்யப்பட்டுதான் வருகிறது.

    1975-1980 காலக்கட்டத்தில் என்னுடன் ராமசுப்ரமணியன் என்றொருவர் ஸ்டெனோவாக இருந்தார். BHEL இல் யாரிடமுமே இல்லாதிருந்த இந்த வழக்கம் அவரிடம் மட்டுமே இருக்கக்கண்டு நான் வியந்து போனதும் உண்டு.

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! பதவியின் பெயரை சொல்லி பேசும் வழக்கம் நம் தமிழ் நாட்டில் உள்ள அரசுப் பணியாளர்களிடம் மட்டும் தான் உண்டு என நினைக்கிறேன். இன்றைய தலைமுறையினர் இந்த பழக்கத்தை விட்டோழித்தல் நல்லது.

      நீக்கு
  27. மேலே //பொய்யிலே பூத்த எள் !!// என மிகப்பொருத்தமாகப் பின்னூட்டமிட்டுள்ளவரை நினைத்துக் கண் கலங்கிப்போனேன். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு, நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! நீங்கள் குறிப்பிட்ட அந்த பின்னூட்டத்தை இட்ட திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் நம்மிடையே இன்று இல்லையே என நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.

      நீக்கு