சனி, 21 ஏப்ரல், 2012

Boss கள் பல விதம்! 7


RDO என்னைப்பார்த்து, ‘ஏன் Security Deposit கட்டவில்லை. என்றதற்கு
நான் சொன்ன பதிலைப் பார்க்குமுன், பிணைத்தொகை என்றால்
என்ன என்பதைப் பார்க்கலாம்.

நான் முன்பே எழுதி இருந்தது போல் வேளாண் விரிவாக்க
அலுவலர்களின்(AEO) கீழ், வேளாண் இடுபொருள் கிட்டங்கிகள்
இருந்ததால், அந்தகிட்டங்கியில் உள்ள இடுபொருட்களின் மதிப்புக்கு பிணையாக, பணியில் சேரும் ஒவ்வொறு AEO வும் ரூபாய் 500 ஐ பிணைத்தொகையாக கட்டவேண்டும் அல்லது அந்த தொகைக்கு
சமமாக மெய்பற்று பத்திரம் (Fidelity Bond) தரவேண்டும்.

இந்த பத்திரங்களை ஒரு சிறிய தொகையை Premium ஆக செலுத்தினால்,
பொது காப்பீட்டு நிறுவனங்கள்(General Insurance Companies) நமக்காக
Fidelity Bond ஐ வழங்குவார்கள். அதை பணி செய்யும் இடத்தில்
கொடுத்தால் போதும்.

பணியில் சேரும்போது AEO க்களுக்கு மாத சம்பளமே ரூபாய் 303 தான்
என்பதால் பணியில் சேரும் புதியவர்களை சிரமப்படுத்தவேண்டாம்
என்று அரசே இந்த சலுகையை அளித்திருந்தது. ஆனால் எங்கள்
DAO மாத்திரம் அவரின் கீழ் பணியில் சேரும் AEO க்கள் பணத்தைத்தான் பிணையாக கட்டவேண்டும் என்று வற்புறுத்தி வந்திருக்கிறார். .

புதிதாக பணியில் சேருபவர்கள் எப்படி ரூபாய் 500 ஐ கட்டமுடியும் என்றெல்லாம் அவர் கவலைப்படவில்லை.அந்த அளவுக்கு கொடூர மனப்போக்கு (Sadistic Mentality) கொண்டவராய் இருந்தார் என்பது அவர் பணத்தைக் கட்ட AEO க்களை வற்புறுத்தியதே சான்று.

நான் பணியில் சேர்ந்த அன்றே, ஒன்றிய ஆணையர் ரூபாய் 500 ஐ பிணைத்தொகையாக கட்டவேண்டும் எனச் சொல்லி இருந்தார்.

இது குறித்து நான் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் நோய் தீர்ப்பியலில் முது நிலை பட்டப்படிப்பு (M.V.Scபடித்துக்கொண்டு இருந்த
என் அண்ணன் டாக்டர் ஞானப்பிரகாசத்திற்கு கடிதம் எழுதி இருந்தேன்.

அவர் கால் நடைத்துறையில் கால் நடை மருத்துவராக 7 வருடங்கள்
பணி புரிந்திருந்ததாலும், ஒவ்வொரு அரசு ஊழியரும், Departmental
Examination எனப்படும் அரசின் நடைமுறை பற்றிய சட்டதிட்டங்கள்
பற்றிய தேர்வை கட்டாயம் எழுதி வெற்றி பெறவேண்டும் என்ற
விதிகளின் படி என்ற அவர் எழுதி வெற்றி பெற்று இருந்ததாலும்.
அவருக்கு இந்த விதி பற்றி தெரிந்திருக்கும் என்பதால் இது பற்றி
கேட்டு இருந்தேன்.

அவர் உடனே எனக்கு பணம் கட்டத்தேவையில்லை Madras Financial Code
படி ரூபாய் 500 க்கான Fidelity Bond கொடுத்தால் போதும் என எழுதி
இருந்தார்.அதனால் நான் பணம் கட்டாமல் Fidelity Bond தர இருந்தேன்.

ஏன் பிணைத்தொகை கட்டவில்லை என RDO கேட்டதும்,நான்,'சார்.
Madras Financial Code படி பணம் கட்டுவது கட்டாயமில்லாததால்
கட்டவில்லை.அதற்கு பதில் Fidelity Bond தர இருக்கிறேன்.என்றேன்.

உடனே DAO காட்டமாக என்னிடம் 'புதிதாய் பணியில் சேர்ந்த நீங்கள் எங்களுக்கு Madras Financial Code பற்றி சொல்கிறீரா?’ என்றார். RDO வும்
அவர் சொல்வதை ஆமோதிப்பது போல். 'நீங்கள் உடனே பணத்தைக் கட்டிவிடுங்கள். என்று கூறிவிட்டு ஒன்றிய ஆணையரைப் பார்த்து,
'இவர் பிணைத்தொகையை கட்டாவிட்டால் இந்த மாத சம்பளத்தை
பிடித்து வைத்துக்கொள்ளுங்கள். என்றார்.

உண்மையில் அந்த கூட்டத்தில்,நான் கட்டவேண்டிய பிணைத்
தொகையைப் பற்றி பேசவேண்டிய அவசியமே இல்லை.
எதைப்பற்றி (உரம்) பேசவேண்டுமோ அதைப்பற்றி பேசாமல்
என்னுடைய விஷயம் பற்றி பேசியதான் காரணம் என் மேல்
DAO க்கு ஏற்பட்ட தனிப்பட்ட வெறுப்புதான் என நினைக்கிறேன்.

கூட்டம் முடிந்து வெளியே வந்ததும் எங்கள் ஆணையர் ஜீப் தலைஞாயிறுதான் போகிறது நீங்களும் வரலாம் என்று என்னையும்
நண்பர் வீராசாமியையும் அழைத்தார்.அவருடன் ஜீப்பில் போகும்போது, என்னைப்பார்த்து, ‘நடனசபாபதி, நீங்கள் RDO சொன்னபடி நாளையே
ரூபாய் 500 ஐ கட்டிவிடுங்கள். இல்லாவிடில் நான் இந்த மாத
சம்பளத்தை பிடித்து வைக்கவேண்டி இருக்கும். என்றார்.

அதற்கு நான், ‘சார். நான் பணத்தைக் கட்டப்போவதில்லை. Fidelity Bond
தான் தரப் போகிறேன். முடிந்தால் என் சம்பளத்தை நிறுத்திப்பாருங்கள். என்றேன்.

உடனே அவர், ‘என்ன இப்படி பேசுகிறீகள்?. நான் RDO 
சொன்னதைத்தானே சொல்கிறேன். நீங்கள் பணத்தைத்தான் கட்டவேண்டும். இல்லாவிடில்நான் RDO சொன்னபடி
நடக்கவேண்டி இருக்கும். என்றார்.

சார். உங்களுக்கு எனது சம்பளத்தை பிடிக்கும் அதிகாரம் இல்லை.
காரணம் எனது சம்பளம் வேளாண்மைத் துறையால் வழங்கப்படுகிறது.
ஊரக வளர்ச்சித் துறையால் அல்ல. நீங்கள் வெறும் சம்பளம் பட்டுவாடா (Salary Disbursement) அதிகாரி மட்டுமே. எங்கள் துறை எனக்குத் தரும் சம்பளத்தை பிடிக்க உங்களுக்கு அதிகாரம் கிடையாது. அப்படி சம்பளத்தை நிறுத்தினால் உங்களுக்குத்தான் தொந்தரவு. பார்த்துக்கொள்ளுங்கள். என்றேன்.

கூட என்னோடு பயணித்தவர்களுக்கு, (ஜீப் ஓட்டுனர் உட்பட) எனது பதில் ஆச்சரியத்தை கொடுத்திருக்கக் கூடும். என்னடா இது பணியில் சேர்ந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. இவ்வாறு சட்டம் பேசுகிறானே என நினைத்திருக்கக் கூடும்.

ஆணையர் மேற்கொண்டு அதைப்பற்றிய பேச்சை வளர்த்த விரும்பவில்லை. மற்ற அலுவலர்கள் முன்பு மேலும் பேசினால் தனக்கு இருக்கின்ற கொஞ்ச நஞ்ச அதிகார மரியாதையும் போய்விடுமோ என்ற பயமாகவும் இருந்திருக்கலாம்.

பிறகு தலைஞாயிறும் திரும்பும் வரை நாங்கள் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.

தொடரும்

17 கருத்துகள்:

 1. எனக்கு உங்கள் துணிச்சல் பிடித்திருக்கு. அடுத்து என்ன? ஆவல். வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 2. எனக்கு உங்கள் துணிச்சல் பிடித்திருக்கு. அடுத்து என்ன? ஆவல். வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

  பதிலளிநீக்கு
 4. நேர்மையாக நியாயத்தை (நம் பக்கம் இருக்கும் போது) பேசுவதில் என்ன தவறு? நீங்கள் சரியாகத்தான் பேசியிருக்கிறீர்கள், ஆனால் இந்தப் பொல்லாத உலகம் இப்படிப் பேசினால் திமிர் பிடித்தவன் எனறு பட்டம் சூட்டி தொல்லை கொடுக்குமே... உயர் அதிகாரிகள் பிறகு எதுவும் தொந்தரவு தந்தனரா... அறிய ஆவலுடன் நான்!

  பதிலளிநீக்கு
 5. அதற்கு நான், ‘சார். நான் பணத்தைக் கட்டப்போவதில்லை. Fidelity Bond
  தான் தரப் போகிறேன். முடிந்தால் என் சம்பளத்தை நிறுத்திப்பாருங்கள்.’ என்றேன். // ஆமாங்க குட்ட குட்ட குனிய முடிமா உங்க துணிச்சல் வரவேற்க்கத்தக்கது.

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கு நன்றி திரு கணேஷ் அவர்களே! நீங்கள் கூறுவது சரியே.
  நம் பக்க நியாயத்தை துணிச்சலாக சொல்வது அனேகருக்குப் பிடிப்பதில்லை. எப்படி அந்த அதிகாரிகளின் பிடியிலிருந்து தப்பினேன் என்பது வரும் பதிவுகளில்..!!

  பதிலளிநீக்கு
 7. வருகைக்கு நன்றி திருமதி சசிகலா அவர்களே! அப்படி பேச துணிச்சலைத் தந்தது எனது இயல்பான குணமும், என் அண்ணனின் கடிதமும் தான்.

  பதிலளிநீக்கு
 8. ரொம்ப வித்தயாசமா உங்கள் அலுவலக வாழ்க்கை ஆரம்பித்திருக்கிறது. ஆனாலும் பிற்காலத்தில் நல்லபடியாய் அமைந்தாருக்கிறது. என் வாழ்க்கையும் அப்படித்தான்.

  தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கும்.....

  பதிலளிநீக்கு
 9. வருகைக்கு நன்றி Dr. பழனி கந்தசாமி அவர்களே!. நீங்கள் கூறியதுபோல் ஆரம்பம் நன்றாக இல்லை என்றாலும், பின்னால் நான் தேர்ந்தெடுத்த துறையில் சிறப்பாக பணிசெய்து, மன நிறைவோடு பணி நிறைவு செய்தேன் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 10. துணிந்து நின்று வென்றதற்கு பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 11. பாராட்டுக்கு நன்றி
  திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

  பதிலளிநீக்கு
 12. தனக்கு கீழ் உள்ள பணியாளர்களை மிரட்டுவது,மட்டமாக நடத்துவது சில உயர் அலுவலர்களின் வாடிக்கை.
  உங்கள் உறுதி பாராட்டத் தக்கது.

  பதிலளிநீக்கு
 13. உங்கள் துணிச்சல் வியந்து பாராட்ட வைக்கிறது.உயர் அதிகாரிகளுக்கு ஒரு அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 14. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T.N.MURALIDHARAN அவர்களே!
  தனக்கு கீழ் பணி புரிவோரை அடிமைபோல் நினைத்து இன்றும் சில அதிகாரிகள் நடந்துகொள்கிறார்கள் என்பது வெட்கக்கேடான விஷயம்.

  பதிலளிநீக்கு
 15. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
  நாம் செய்வது சரி என்று படும்போது துணிச்சல் தானாக வரும் என நினைக்கிறேன்.ஆனால் என் அண்ணன் தந்த சான்று எனக்கு உதவியாக இருந்தது உண்மை.

  பதிலளிநீக்கு
 16. உங்கள் தரப்பினில் நியாயம் உள்ளது. Fidelity Guarantee Bond கொடுத்தாலே போதுமானது. வேண்டுமென்ற உங்களைப் பழிவாங்க நினைத்து, வெறுப்பினில் ஏதேதோ தொந்தரவுகள் கொடுக்க நினைத்துள்ளார்கள். தாங்கள், அதுவும் பணியில் சேர்ந்த புதிதில், எப்படித்தான் துணிச்சலுடன் இவற்றையெல்லாம் சமாளித்தீர்களோ. வியப்பாக உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! பெரும்பாலான தமிழக அரசு மேலதிகாரிகள் பிறரை மனவேதனைக்கு உள்ளாக்கி அதில் மகிழ்ச்சி காண்பவர்கள். (Sadists) ‘இளங்கன்று பயமறியாது’ என்ற பழமொழிக் கொப்ப அப்போது நான் செயல்பட்டேன். மேலும் எனது நிலைப்பாட்டில் நியாயம் இருந்தததால் துணிவாக அப்படி சொன்னேன்.

   நீக்கு