சனி, 16 ஜூன், 2012

Boss கள் பலவிதம்! 23

அந்த கிளையின் மேலாளர் என்னிடம் சொந்த ஊர் எது என்றும்,என்ன படித்திருக்கிறேன் என்றும், மற்றும் இதற்கு முன் பணி புரிந்த இடம் எது என்றும் எல்லோரும் வழக்கமாக கேட்கும்
விவரங்களை கேட்டார்.   

நான் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி முடித்ததும்,‘ஓ.கே.
நேரடியாக அலுவலர் ஆக பணி புரியத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள
நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்.ஆனால் பயிற்சியை ஒழுங்காக
முடித்தால் மட்டுமே ஆறுமாதங்களுக்குப் பிறகு நீங்கள் நிரந்தர
அலுவலராக ஆகலாம். இல்லாவிடில் பயிற்சி காலம் நீட்டிக்கப்படும்.
இங்கு மூன்று மாத காலம் தான் பயிற்சி பெறப்போகிறீர்கள்.

னவே ஒழுங்காக எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளுங்கள்.
நீங்கள் பயிற்சியின்போது சிரத்தையாக எல்லாவற்றையும்
கற்றுக்கொண்டால் மட்டுமே  Probationary Junior Officer  ஆகமுடியும்
என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனக் கூறிவிட்டு, நீங்கள்
போய் SB (சேமிப்பு கணக்குகள்) Counter ல் அமர்ந்து எழுத்தர்
பணியைக் கற்றுக்கொள்ளுங்கள். என்றார்.

உடனே நான், சார். நான் ஏற்கனவே பெங்களூரு ஜெயமஹால்
கிளையில் இந்த பயிற்சியை முடித்துவிட்டேன்.என்னை
களப் பணிக்கு (Field Work) தேர்வு செய்து இருப்பதால் இங்குள்ள வேளாண்மை அலுவலரின்  கீழ் பயிற்சி பெற அனுமதியுங்கள். இல்லாவிடில் மேற்பார்வையாளர் பயிற்சியையாவது பெற அனுமதியுங்கள். என்றேன்.

அதற்கு அவர் நான் ஒன்றும் செய்யமுடியாது.தலைமை
அலுவலகத்திலிருந்து வந்த அஞ்சலில்,உங்களுக்கு எழுத்தருக்கான பயிற்சிதான் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள்.எனவே நான்
சொன்னபடி SB Counter ல் போய் அமர்ந்து வேலையைப் பாருங்கள்.
என்றார்.

ஒவ்வொரு மாதமும், அவர் தான் எனது பயிற்சி பற்றியும் அதில்
நான் காட்டும் ஆர்வம் பற்றியும் மற்றும் எனது பொது நடவடிக்கை பற்றிய   அறிக்கையை தலைமை அலுவகத்திற்கு கொடுக்கவேண்டும் என்பதால்,அவரிடம் வீணாக தர்க்கமிட்டு எனது பயிற்சியை நீட்டிக்க
விரும்பாததால் வேறு வழியின்றி அவர் சொன்னபடி  SB Counter ல்
போய் அமர்ந்தேன்.ஏற்கனவே பெங்களூருவில் இரண்டரை மாதங்கள்
அந்த பணியை செய்து இருந்ததால் யாருடைய உதவி இல்லாமலும் வேலைபார்க்கத் தொடங்கினேன். அருகில் இருந்த நண்பர்களிடம்
கூட பேசாமல் எனது வேலையிலேயே கவனமாக இருந்தேன்.

முதல் நாளே அந்த கிளையில் பணியாற்றும் நண்பர்கள் சிலரை
திரு மாத்யூஸ் அறிமுகம் செய்து வைத்திருந்ததால் எனக்கு அது
புதிய இடமாகத் தெரியவில்லை.ஆனாலும் அந்த கிளையில் பணிபுரிபவர்களில் பெரும்பான்மையோர் ஏதோ ஒரு இறுக்கமான சூழ்நிலையில் இருப்பது போன்ற உணர்வு எனக்கு தெரிந்தது. 

அந்தக் கிளையின் வாடிக்கையாளர்களுக்கான வங்கி அலுவல்
நேரம் (Business Hours) காலை 10 மணியிலிருந்து மதியம் 2 மணி
வரை தான். மதியம் 2 மணியிலிருந்து 3 மணி வரை உணவு இடைவேளைக்கான நேரம். மதியம் 3 மணியிலிருந்து மாலை
மணி 5.30 வரை வங்கிப் பணிக்கான அலுவல் நேரம்.

உணவு இடைவேளையின்போது நண்பர்  மாத்யூஸ் அவர்களுடன்
அருகில் இருந்த உணவகத்துக்கு சென்றேன். அப்போது அவரிடம்,
இந்த கிளையின் மேலாளர் எப்படி?’ என்றேன். அதற்கு அவர்
நேரடியாக பதில் சொல்லாமல், இன்று தானே நீங்கள்
வந்திருக்கிறீர்கள். நீங்களே தெரிந்துகொள்வீர்கள். என்றார்.

மதிய உணவு சாப்பிட்டுவிட்டு திரும்ப கிளைக்கு வந்தபோது,
கண்ட  காட்சி எனக்கு வியப்பைத் தந்தது.


தொடரும்

16 கருத்துகள்:

  1. பயிற்சி பெற்ற பணியிலேயே மீண்டு பயிற்சி என்பது வித்தியாசமான அனுபவம். சற்றுக் கொடுமையான விஷயமும் கூட. உங்களுக்கு ஏற்பட்ட வியப்பின் காரணத்தை அறிந்து கொள்ளும் ஆர்வமுடன்...

    பதிலளிநீக்கு
  2. சுவையாக உள்ளது. தொடரத் தொடர்வேன்

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கு நன்றி திரு கணேஷ் அவர்களே! நீங்கள் கூறுவது சரிதான்.பெற்ற பயிற்சியை திரும்பவும் பெறுவது என்பது பயிற்சி காலம் நீட்டிக்க வாய்ப்பு தரும் என்பதால் கொடுமையான விஷயம் தான்.அதுபோல் எனது பயிற்சி காலம் யாரோ செய்த தவறால் நீட்டிக்கப்பட்டது என்பது தான் வேதனை.

    பதிலளிநீக்கு
  4. தொடர்வதற்கும், வருகைக்கும் நன்றி புலவர் திரு சா.இராமாநுசம் அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. சஸ்பென்ஸ் கொடுத்து ஆர்வத்தைத் தூண்டுகிறீர்களே?

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கு நன்றி திரு பழனி கந்தசாமி அவர்களே!‘சஸ்பென்ஸ்’ இருந்தால்தானே சுவாரஸ்யம் இருக்கும்.கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  7. நேர்மையானவர்கள் கண்டிப்பு வாய்ந்தவர்களாக இருந்தால் நல்லதே.அவ்வாறல்லதவர்கள்?”பேய் அரசு செய்தால் பிணம்தின்னும் சாத்திரங்கள்!”

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! நீங்கள் சொல்வது சரி. கண்டிப்பாக இருப்பவர்களில் சிலர் நேர்மையாக இருப்பதில்லை என்பது துரதிர்ஷ்டமே.

    பதிலளிநீக்கு
  9. அரசு துறைகளில் நடப்பவற்றை அப்படியே படம் பிடித்துக் காட்டி இருக்கிறீர்கள்.பெரும்பாலான உயர் அலுவலர்கள் இப்படித்தான் இருகிறார்கள். மடத்தனமான செயலாக இருந்தாலும் எந்தவித கேள்வியும் கேட்காமல் செய்யவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  11. முதல் வருகைக்கும்,பதிவை இரசித்தமைக்கும், தொடர இருப்பதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! நீங்கள் சொன்னதுபோல் Email Subscription Widget வைக்கிறேன். தங்களின் யோசனைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  12. ...மதிய உணவு சாப்பிட்டுவிட்டு திரும்ப கிளைக்கு வந்தபோது,
    கண்ட காட்சி எனக்கு வியப்பைத் தந்தது..''
    என்னவாக இருக்கும்? சாதகமா பாதகமா!
    அல்லது உங்கள் பயிற்சியை ஏற்றுக் கொண்டு
    நீங்கள் எதிர்பார்த்தபடியே பணி கிடைத்ததா?
    ஆவல் மீறுகிறது. நல்வாழ்த்து...
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  13. வருகைக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே! என்ன கண்டேன் என்பது அடுத்த பதிவில்! தொடர்வதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  14. புதிய பயிற்சிகள் எடுத்துக்கொள்ள வாய்ப்பளிக்காமல், ஏற்கனவே பார்த்துள்ள வேலைகளிலேயே மீண்டும் பயிற்சி கொடுக்கப்போவதும், அதற்குச் சொல்லும் அல்ப காரணங்களும், விசித்திரமாகவே உள்ளன.

    ஒருவேளை ஏற்கனவே SB A/c Counter இல் வேலை பார்த்தவர் லாங் லீவில் போய் இருப்பாரோ என்னவோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

    இந்த பாஸ் எப்படிப்பட்டவரோ .... பார்ப்போம்.

    இதுபோன்ற சமயங்களில் நம்மாளும் ஓரளவுக்கு மேல் நம் விருப்பத்தினை அவர்கள் மேல் திணிக்கவும் முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! அந்த கிளையில் வழக்கமான பணிகளை தெரிந்துகொண்டதோடு ஒரு Boss எப்படி இருக்கக்கூடாது என்பதையும் கற்றுக்கொண்டேன்!

      நீக்கு