அப்போதெல்லாம்
எங்கள் வங்கியில் கள அலுவலர்கள் குறைவாக 
இருந்ததால், ஒரு அலுவலரே ஒன்றுக்கு மேற்பட்ட
கிளைகளில் 
உள்ள
வேளாண்மைக்கடன் அலுவல்களை பார்த்துக்கொள்ளப் 
பணிப்பது வழக்கம்.
அதுபோல எனக்கும், நான் வேலை பார்த்த கிளையிலிருந்து 
29 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த
எங்களது வங்கியின் 
இன்னொரு கிளையில்
உள்ள வேளாண்மைக் கடன்களையும் 
பார்த்துக்கொள்ள
பணிக்கப்பட்டிருந்தது. 
எனக்காவது
பரவாயில்லை.கூடுதலாக ஒருகிளைதான் 
ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனால் கர்நாடகாவில் உள்ள தென் கன்னட 
மாவட்டத்தில் பணி
ஆற்றிய என் போன்ற கள அலுவலர்களுக்கு  
5 முதல் 6 கிளைகள் தரப்பட்டிருந்தன. 
நான் எனது
பணித்தலைமையிடத்தில் (Head Quarters) 
வார நாட்களில் செவ்வாய்க்கிழமை
தவிர மற்ற நாட்களில் 
கிளைக்கு வரும் விவசாயிகளுக்கு
கடன் தரும் பணியைக் கவனித்துக்கொண்டும்,செவ்வாய்க்கிழமை
மட்டும் இன்னொரு 
கிளைக்கு சென்று அங்கு வரும் விவசாயிகளுக்கு கடன் தரும் 
பணியை
செய்து கொண்டு இருந்தேன். 
அப்படி ஒரு நாள் அடுத்த
கிளைக்கு  சென்றபோது, அங்கு 
எனக்காக காத்துக்கொண்டு இருந்த
இளைஞரை சந்தித்தேன்.
அவரை அந்த கிளையின் மேலாளர் அவரை ஒரு இளம் 
வழக்கறிஞர் என்றும்  அதே நேரத்தில்  வேளாண்மையும் 
செய்பவர்  என்றும் அறிமுகப்படுத்தினார்.  
அவருக்கு கரும்பு
பயிரிட கடன் வேண்டும் என்றும், 
அதற்காக அவரதுபண்ணையை பார்வை இட
வேண்டும் 
எனக் கேட்டுக்கொண்டார். என்னென்ன ஆவணங்கள்
கொண்டுவரவேண்டும் என முன்பே வந்து மேலாளரிடம் 
கேட்டு சென்றிருந்ததால் அவைகளைக் கொண்டு வந்திருந்தார். 
அவரிடம் தேவையான
விவரங்களை கேட்டறிந்து விட்டு, 
அவரோடுஅவரது பண்ணையைப்
பார்வையிட மேலாளருடன் 
சென்றேன். அந்த பண்ணைக்கு
சென்றபோது வயலில் முன்பு 
பயிரிட்டு இருந்த கரும்பு வெட்டப்பட்டு அடிக்கட்டையில் 
புதுத் தளிர் விட்டிருந்தது. 
அவர் கடன் கேட்டது
மறுதாம்பு (Ratoon) பயிருக்கு. (கரும்பை 
வெட்டும்போது, திரும்பவும் புதிதாய் கரும்புப்
புள்ளுகளை
(Sugarcane setts)  நடவு செய்வதால் ஏற்படும் செலவைக் 
குறைப்பதற்கு அடியில்
கொஞ்சம் விட்டு வெட்டுவார்கள். 
அதில் துளிர்த்து வரும்
பயிரைத்தான் மறுதாம்பு என்பார்கள்.
அது பற்றி எழுதி உங்களை சலிப்பூட்ட
விரும்பவில்லை. )
மொத்தம் எவ்வளவு
ஏக்கரில் மறுதாம்பு இருக்கிறது என்பதை 
உறுதி செய்து
கொண்டு திரும்பும்போது, அந்த
வயலில் வெட்டிய 
கரும்பை சர்க்கரை
ஆலைக்கு அனுப்பாமல் அங்கேயே பாகு 
காய்ச்சி அச்சு வெல்லம் தயார்
செய்துகொண்டு இருந்ததைப் 
பார்த்தேன்.
‘ஏன்
சர்க்கரை ஆலைக்கு அனுப்பாமல் வெல்லம் தயாரிக்கிறீகள்?’ 
எனக் கேட்டதற்கு அப்போது
வெல்லத்திற்கு கூடுதல் விலை 
கிடைத்ததால்
சர்க்கரை ஆலையில் கரும்பைத் தர பதிவு 
செய்யவில்லை என்று
சொன்னார். 
என்னோடு வந்த அந்த
கிளை மேலாளர் அச்சுவெல்லம் தயாரிப்பதை அதுவரை
பார்த்ததில்லையாம்.ஆதலால் அதைப்பார்த்து 
ஆச்சரியப்பட்டு அதிக நேரம் அது
பற்றி விசாரித்துக்கொண்டு 
இருந்தார். 
கிளைக்கு
திரும்பும்போது, அந்த
வழக்கறிஞர்/விவசாயி ‘கடன் 
எப்போதுகிடைக்கும்?’ எனக் கேட்டார்.அதற்கு நான் ‘பொங்கல் விடுமுறைக்குஊருக்கு போக
இருப்பதால் இன்றே எனது 
பரிந்துரையை மேலாளரிடம் கொடுத்துவிடுவேன்.
அவரது 
பரிந்துரையுடன் தலைமை அலுவலகம் அனுப்பினால்
இன்னும் 
ஒரு வாரத்தில் ஒப்பளிப்பு (Sanction)
வந்துவிடும்.’என்றேன். 
அவரும் சரி என்று
திரும்பிவிட்டார்.எனது பரிந்துரையை எழுதி 
மேலாளரிடம்
கொடுத்துவிட்டு, நானும் எனது
தலைமையகம் 
திரும்பிவிட்டேன்.மறு
நாள் மதியம் எனது பணியிடத்தில் 
அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டு
இருந்தபோது அந்த 
வழக்கறிஞர் வந்தார். 
எனக்கு ஒரே
ஆச்சரியம். அவரது கடன்
விண்ணப்பத்திற்கான 
எனதுபரிந்துரையை, ஆய்வு செய்த அன்றே
கொடுத்துவிட்டதால் திரும்பவும்எதற்காக வருகிறார்
என்று எனக்கு புரியவைல்லை. 
அவரைப் பார்த்ததும்.’ ஏது சார் இந்த பக்கம்? நான் நேற்றே எனது 
ஆய்வு அறிக்கையைக்
கொடுத்துவிட்டேனே.வேறு ஏதாவது பிரச்சினையா?’என்று கேட்டேன். 
அதற்கு அவர் ‘இல்லை சார். அதெல்லாம் ஒன்றுமில்லை.
இங்குள்ள நீதிமனறத்தில் ஒரு
வழக்குக்காக வாதாட வந்தேன்.
அப்படியே உங்களையும் பார்த்துப் போகலாம்
என வந்தேன்.’ 
என்றார். 
சிறிது நேரம் பேசிக்கொண்டு
இருந்துவிட்டு ‘பொங்கல் 
விடுமுறைக்காகஉங்கள் ஊருக்கு பேருந்தில்எங்கள்
ஊர் 
வழியாகத்தானே செல்லவேண்டும். நீங்கள் எப்போது எந்த 
பேருந்தில் செல்வதாக இருக்கிறீர்கள்?’ என்றார்.
‘எதற்காக
கேட்கிறீர்கள்?’ எனக் கேட்டதற்கு நீங்கள் வரும் 
சமயம் தெரிந்தால் உங்களை
எங்கள் ஊர் பேருந்து 
நிறுத்தத்தில் சந்திக்கலாம் என்பதற்காகத்தான் கேட்டேன்.’ 
என்றார்.
‘இங்குதான்
பார்த்துவிட்டீர்களே.அங்கு எதற்குப் 
பார்க்கவேண்டும்?’
என்றேன்.
தொடரும் 
மறுதாம்பு பலரும் அறிந்து கொள்வார்கள்...
பதிலளிநீக்குமுடிவில்...
சம்திங் சம்திங்... விசயமாக இருக்குமோ...? தொடர்கிறேன்...
நன்றி...tm1
வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
நீக்குஅதானே... அங்கு தனியாகச் சந்தித்து என்ன செய்யப் போகிறார்? எதேனும் பொங்கல் பரிசு கொடுக்க எண்ணியிருப்பாரோ... வாடிக்கையாளர்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒரு விதம். இவர் எப்படியோ பார்க்கலாம்...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திரு பால கணேஷ் அவர்களே! என்ன நடந்தது என்பதை அறிய காத்திருங்கள்.
நீக்குதனியாக கவனிக்க எண்ணினாரோ?நல்லா வாங்கிக்கட்டிட்டிருப்பாரே!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
நீக்குநிறைய விஷயங்கள் அறிந்துகொள்ள முடிந்தது...நன்றி..
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!
நீக்குமாநில அரசு களஅலுவலரிடம் பேசவே பயப்படும் ஜனங்கள் வங்கி களஅலுவலரிடம் மட்டும் கேள்வி மேல் கேள்வி கேட்பார்கள். காரணம் அரசு அலுவலர்களுக்கு இருக்கும் அதிகாரம்.
பதிலளிநீக்குசுவார்ஸமாக அனுபவங்களைச் சொல்லியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குரசித்துப் படித்தேன்
முதல் வருகைக்கும், பதிவை இரசித்துப் படித்தமைக்கும் நன்றி மருத்துவர் M.K.முருகானந்தம் அவர்களே! பின்னூட்டம் இடாவிட்டாலும் தங்களது பதிவுகளை தொடர்ந்து படிப்பவன் நான். அதுவும் நீரிழிவு நோய் பற்றிய பதிவு அருமை.
நீக்குமனிதர்கள் பல விதம் அதிலே இவரும் ஒருவர்!அடுத்த பதிவில் பார்போம்!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!
நீக்குஅன்பின் நடன சபாபதி - வாடிக்கையாளர்கள் பல்வேறு காரணங்களீனால் சந்திக்க விரும்புவார்கள் - மறுமொழி இட்டவர்கள் சம்திங்க்கிற்காகத்தான் சந்திக்க விரும்புகிறார் என நினைக்கிறார்களே ! அவர் ஒரு வழக்கறிஞரும் கூட. ம்ம்ம்ம்ம்ம் - நமது மனது ஏன் இப்படி தவறான கண்ணோட்டத்திலேயே சிந்திக்கிறது ..... ந்ல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சீனா அவர்களே!
பதிலளிநீக்கு