தொலைபேசியில் அழைத்தாலும் அந்த நிறுவனத்தில்
யாரும் அதை எடுப்பதாகத் தெரியவில்லை.’ என்று எனது
அலுவலர் சொன்னதும், நான் நினைத்தது நடந்துவிட்டதோ
என்ற ஐயம் ஏற்பட்டது. .
எதற்கும் நாமும் முயற்சிக்கலாமே என அந்த
வாடிக்கையாளரின் நிறுவனத்தை தொடர்புகொண்டேன்.
சிறிது நேரம் கழித்து தொலைபேசியை எடுத்தார் ஊழியர்
ஒருவர். அவரிடம் ‘GR Form கொச்சியிலிருந்து
வந்துவிட்டதா? யார் கொண்டு வருகிறார்கள்?’
எனக் கேட்டேன்.
வாடிக்கையாளரின் நிறுவனத்தை தொடர்புகொண்டேன்.
சிறிது நேரம் கழித்து தொலைபேசியை எடுத்தார் ஊழியர்
ஒருவர். அவரிடம் ‘GR Form கொச்சியிலிருந்து
வந்துவிட்டதா? யார் கொண்டு வருகிறார்கள்?’
எனக் கேட்டேன்.
அதற்கு அவர் ‘தனக்கு அது பற்றி தெரியாது என்றும்,
முதலாளியிடம் தான் கேட்கவேண்டும்.’என்றும்
சொன்னார். ‘சரி.அப்படியானால் அவரிடம் ஃபோனைக் கொடுங்கள்.’என்றேன்.அதற்கு அவர் ‘சார், அவர் இன்று
காலையிலிருந்தே அலுவலகத்திற்கு வரவில்லை. நீங்கள்
வீட்டிற்கு ஃபோன் செய்து பாருங்கள்.’ என்றார்.

‘சரி’ என்று சொல்லிவிட்டு
அவரது வீட்டை தொடர்பு
கொண்டபோது, அவரது வீட்டிலிருந்தோர், ‘காலையில்
வெளியே போனவர் இன்னும் வீடு திரும்பவில்லை.'
என்று சொன்னார்கள்.
கொண்டபோது, அவரது வீட்டிலிருந்தோர், ‘காலையில்
வெளியே போனவர் இன்னும் வீடு திரும்பவில்லை.'
என்று சொன்னார்கள்.
இப்போது போல் அப்போது கைபேசி உபயோகத்திலில்லை.
அதனால் அவரை உடனே தொடர்பு கொள்ள
முடியவில்லை.அதற்குள் எனது அலுவலர்,’சார், மாலை
5 மணி வரை பார்ப்போம். ஒருவேளை அவர்தான் அதைக்
கொண்டு வர கொச்சிக்கு போயிருக்கிறாரோ
என்னவோ?’ என்றார்.
அதனால் அவரை உடனே தொடர்பு கொள்ள
முடியவில்லை.அதற்குள் எனது அலுவலர்,’சார், மாலை
5 மணி வரை பார்ப்போம். ஒருவேளை அவர்தான் அதைக்
கொண்டு வர கொச்சிக்கு போயிருக்கிறாரோ
என்னவோ?’ என்றார்.
அவர் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகப்
பட்டதால்,
மாலை 5 மணி வரை காத்திருந்தேன். மணி 5 ஆயிற்று.
6 ஆயிற்று. ஆளையே காணும். திரும்பவும்
நிறுவனத்தையும் வீட்டையும், தொடர்பு கொண்டபோது
பழைய ‘பல்லவியையே’ பாடினார்கள்.
மாலை 5 மணி வரை காத்திருந்தேன். மணி 5 ஆயிற்று.
6 ஆயிற்று. ஆளையே காணும். திரும்பவும்
நிறுவனத்தையும் வீட்டையும், தொடர்பு கொண்டபோது
பழைய ‘பல்லவியையே’ பாடினார்கள்.
எனக்கோ அந்த அன்னிய செலாவணி கிளையில்
பணிபுரிவது அதுவே முதல் தடவை. அது போன்ற
பணிபுரிவது அதுவே முதல் தடவை. அது போன்ற
வணிக நடவடிக்கைகளில் (Transactions) எனக்கு
முன் அனுபவம் இல்லாததால் மேற்கொண்டு
என் செய்வது என்பது பற்றி அதில் அனுபவம் உள்ள
அந்த அலுவலரிடமே கேட்டேன்.
அதற்கு அவர், ‘சார். GR Form இல்லாமல் Bill ஐ
நாம் Negotiate செய்யக்கூடாது. இப்போது நாம் அந்த
தவறை செய்து
விட்டோம். இனி அது வராமல்
இந்த Bill ஐ வெளி நாட்டுக்கும் அனுப்பமுடியாது.
காரணம். கப்பலில் ஏற்றப்பட்டுள்ள சரக்குகளை
சுங்கத்துறையினர் ஆய்ந்து சான்றிதழ் தந்ததும்,
21 நாட்களுக்குள் ஏற்றுமதியாளர்கள் GR form உடன்
Bill ஐ இரு படிகளில் (Duplicate) வங்கிகளுக்கு
சுங்கத்துறையினர் ஆய்ந்து சான்றிதழ் தந்ததும்,
21 நாட்களுக்குள் ஏற்றுமதியாளர்கள் GR form உடன்
Bill ஐ இரு படிகளில் (Duplicate) வங்கிகளுக்கு
கொடுத்து Negotiate செய்யவேண்டும். வங்கிகளும்
Negotiate
செய்தவுடன் அது பற்றி ரிசர்வ் வங்கிக்கு
குறிப்பிட்ட படிவத்தில் அந்த Transaction பற்றி
அறிக்கை தரவேண்டும்.
பின்பு வெளிநாட்டிலிருந்து பணம் வந்ததும், வங்கிகள்
திரும்பவும் ரிசர்வ் வங்கிக்கு குறிப்பிட்ட படிவத்தில்
அது பற்றிய அறிக்கையுடன் அந்த Bill இன் இரண்டாவது
படியையும் GR form யும் அனுப்பவேண்டும். இந்த நிலையில்
நாம் எதுவுமே செய்யமுடியாது. உடனே GR form பெற
முயற்சிப்போம். அதற்குள் நீங்கள் எதற்கும் நமது

வட்டார அலுவலகத்திற்கு
இது பற்றி
தெரிவித்துவிடுங்கள்.’என்றார்.
நான் உடனே எனது Boss ஆன துணைப் பொது மேலாளரை தொடர்புகொண்டு,’சார். நீங்கள் சொன்னது போலவே அந்த வாடிக்கையாளரின்
Bill க்கு பணத்தைக் கொடுத்துவிட்டேன்.
ஆனால் அவர் சொன்னபடி இன்று மதியம் 3 மணிக்கு
ஆனால் அவர் சொன்னபடி இன்று மதியம் 3 மணிக்கு
வந்து GR form ஐ தரவில்லை. என்ன செய்வது?’ என்றேன்.
(‘நீங்கள் தானே பணத்தைத் தர
சொன்னீர்கள். நீங்களே
அவரிடம் பேசி அதைக் கொடுக்க சொல்லுங்கள்.’ என்றா
சொல்லமுடியும். மேலதிகாரி ஆயிற்றே?)
அவரிடம் பேசி அதைக் கொடுக்க சொல்லுங்கள்.’ என்றா
சொல்லமுடியும். மேலதிகாரி ஆயிற்றே?)
ஆனால் அவர் கோபமாக, ‘அவர் தருவார்
என்றால் தருவார்.
நீங்கள் அனாவசியமாய் சந்தேகப்பட்டு குழப்பம்
உண்டாக்காதீர்கள்.’ என சொல்லிவிட்டு தொலைபேசியை
வைத்துவிட்டார்.
நீங்கள் அனாவசியமாய் சந்தேகப்பட்டு குழப்பம்
உண்டாக்காதீர்கள்.’ என சொல்லிவிட்டு தொலைபேசியை
வைத்துவிட்டார்.
அப்போதுதான் எனக்கே பயம் வர ஆரம்பித்தது. ஏனெனில்
காலையில் கட்டளையிடும் தொனியில் பேசியவர் இப்போது
கழுவுற மீனிலில் நழுவுற மீன் போல் நடந்துகொண்டதுதான்.
சரி. இனி நாமே இதை எதிர்நோக்கவேண்டியதுதான் என்று
நினைத்து அந்த அலுவலரிடம் ‘சரி. நீங்கள் வீட்டுக்குப்
போங்கள். நாளை பார்த்துக்கொள்ளலாம்.’ என்றேன்.

மறுநாள் காலையிலும் அந்த வாடிக்கையாளர் வராததால்,
திரும்பவும் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். நல்ல
வேளையாக அவரே பேசினார். ‘என்ன. நேற்று மதியம்
GR form கொண்டு வந்து தருகிறேன் என்றீர்கள்.சொன்னபடி
தரவும் இல்லை அதுபற்றி ஒன்றும் தெரிவிக்கவில்லையே?
எப்போது கொண்டு வருகிறீர்கள்?’ என்றேன்.

அதற்கு அவர்,‘சார் ஏன் வீணாக கவலைப்படுகிறீர்கள்?
கையொப்பமிடும் அலுவலர் நேற்று மாலை வரை
வரவில்லை. அதனால்தான் கொண்டு வந்து
தரமுடியவில்லை. இன்று சனிக்கிழமையாதலால், இனி
திங்கள் கிழமைதான் அவர் வருவார். வந்தவுடன் அவரிடம்
கையொப்பம் வாங்கி வந்து தருகிறேன்.’ என்றார்.
வரவில்லை. அதனால்தான் கொண்டு வந்து
தரமுடியவில்லை. இன்று சனிக்கிழமையாதலால், இனி
திங்கள் கிழமைதான் அவர் வருவார். வந்தவுடன் அவரிடம்
கையொப்பம் வாங்கி வந்து தருகிறேன்.’ என்றார்.
சரி.திங்கள் வரை காத்திருப்போம் என நினைத்திருந்தேன்.
அதற்குப் பிறகு பல திங்கள் கிழமைகள் வந்து போயின.
ஆனால் அவர்தான் வரவில்லை. தொலைபேசியில்
தொடர்பு கொண்டால் அவர் ஊரில் இல்லை
என பதில் வந்தது.
அதற்குப் பிறகு பல திங்கள் கிழமைகள் வந்து போயின.
ஆனால் அவர்தான் வரவில்லை. தொலைபேசியில்
தொடர்பு கொண்டால் அவர் ஊரில் இல்லை
என பதில் வந்தது.
நடந்ததை வட்டார அலுவலகத்திற்கு தெரிவிப்போம்
என நினைத்து விரிவான அறிக்கை ஒன்றை அனுப்பினேன்.
ஓரிரு நாட்களில் எங்களது திருவனந்தபுரம்
என நினைத்து விரிவான அறிக்கை ஒன்றை அனுப்பினேன்.
ஓரிரு நாட்களில் எங்களது திருவனந்தபுரம்
வட்டார அலுவலகத்திலிருந்து இருந்து
உதவிப் பொது மேலாளர் ஆய்வுக்கு வந்தார்.
அவர் நான் தமிழ் நாட்டுக் கிளை ஒன்றில்
மேலாளராக
இருக்கும்போது எனக்கு கோட்ட மேலாளராக இருந்தவர்.
என்னைப் பற்றி தெரியுமாதலால்,அந்த Bill பற்றி கேட்டார்.
நான் நடந்ததை சொன்னதும், ‘GR form இல்லாமல் நீங்கள்
Negotiate செய்திருக்கக்கூடாது. உடனே அதைப் பெற
முயலுங்கள். இல்லாவிடில் உங்களுக்கு கஷ்டம்தான்.’
என்று சொல்லி சென்றார்.

அவரது ஆய்வு முடிந்து சென்ற பிறகும், அந்த
வாடிக்கையாளர் வங்கிப் பக்கமே வரவில்லை.
கேட்கும்போதெல்லாம் ‘இதோ வருகிறேன்’ என்ற
பதிலையே சொல்லிக்கொண்டு இருந்தார்.
வாடிக்கையாளர் வங்கிப் பக்கமே வரவில்லை.
கேட்கும்போதெல்லாம் ‘இதோ வருகிறேன்’ என்ற
பதிலையே சொல்லிக்கொண்டு இருந்தார்.
ஒரு நாள் காலை கிளையில் இருக்கும்போது,
ஒருவர்
உள்ளே வந்தார். வந்தவரை உட்காரச்சொன்னபோது, அவர்
உட்கார்ந்து கொண்டே ‘நான் ரிசர்வ் வங்கி ஆய்வாளர்.
உங்கள் கிளையின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
வணிக நடவடிக்கைகள் பற்றி ஆய்வு நடத்த
உள்ளே வந்தார். வந்தவரை உட்காரச்சொன்னபோது, அவர்
உட்கார்ந்து கொண்டே ‘நான் ரிசர்வ் வங்கி ஆய்வாளர்.
உங்கள் கிளையின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
வணிக நடவடிக்கைகள் பற்றி ஆய்வு நடத்த
வந்திருக்கிறேன்.
இந்தாருங்கள். அதற்கான
ஒப்புச்சான்று (Authorisation) என்றார்.
என் மன நிலை எப்படி இருந்திருக்கும் என
நினைக்கிறீர்கள்?
சரியாப் போச்சி... இவரும் வந்துட்டாரா...? அப்போ இந்தப் பிரச்சனை முடிந்து விடும்...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
நீக்கு// அப்போதுதான் எனக்கே பயம் வர ஆரம்பித்தது. ஏனெனில்
பதிலளிநீக்குகாலையில் கட்டளையிடும் தொனியில் பேசியவர் இப்போது
கழுவுற மீனிலில் நழுவுற மீன் போல் நடந்துகொண்டதுதான்.//
நீங்கள் செய்த தப்பு, அந்த வாடிக்கையாளர் விஷயத்தில் உங்கள் மேலதிகாரியை நம்பியதுதான். அந்த வாடிக்கையாளருக்கும் அந்த மேலதிகாரிக்கும் நல்ல தொடர்பு இருந்திருக்கும்.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! நான் அந்த மேலதிகாரியை நம்பி அதை செய்யவில்லை. அவர் மேலதிகாரி என்பதால்,அவரது ஆணையை செயல்படுத்தியதின் விளைவுதான் அது. நீங்கள் யூகித்தது சரியே!
நீக்குvery very interesting Sir
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு இராதா மனோகரன் அவர்களே!
நீக்குமனம் படபடத்துப் போனது. என்ன நடந்திருக்கும்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திருமதி சசிகலா அவர்களே! அன்று மனம் படபடத்தது உண்மைதான்.ஆனால் அது சிறிது நேரமே. என்னவாயிற்று என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.
நீக்குஆஹா! இப்படி திடீர்னு நிறுத்திட்டீங்களே... Very interesting...!
பதிலளிநீக்குவருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திருமதி மாதங்கி அவர்களே!
நீக்குஅடுத் பதிவைக் காண ஆவல்.......!111
பதிலளிநீக்குவருகைக்கும்,தொடர்வதற்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!
நீக்குபொதுத்துறை நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் பொதுமக்கள் வசதிக்குத்தான் என்பார்கள் .ஆனால் கணக்குதனிக்கைக்கு வருபவர் இதையெல்லாம் பார்ப்பதில்லை.தொடருங்கள்
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திரு கவியாழி கண்ணதாசன் அவர்களே! விதிகளுக்கு கட்டுப்பட்டு செய்யும் எந்த செயலையும் தணிக்கையாளர்கள் குறை கூறுவதில்லை. ஆனால் இங்கு நான் குறிப்பிட்ட செயல் விதிக்குப் புறம்பானது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
நீக்குஎப்படிப்பட்ட இக்கட்டான ஒரு நேரம்!ஆனால் உங்கள் பாணியில் சமாளித்திருப்பீர்கள்;உங்கள் மேல் தவறில்லை என்பதையும் உணர்த்தியிருப்பீர்கள்!
பதிலளிநீக்குவருகாய்க்கும் கருத்துக்கும் நன்றி திரு குட்டன் அவர்களே! உனமைதான். எப்படி அந்த கட்டத்தை சமாளித்தேன் என்பது அடுத்த பதிவில்.
நீக்குவிதம் விதமான அனுபவங்கள்.நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படும் உதவிகள் இப்படி சிக்கலை ஏற்படுத்துவது கொடுமை.
பதிலளிநீக்குஎப்படி இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கண்டீர்கள் என ஆவலாக உள்ளேன்.
வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!
நீக்குதீர்வு ஏற்பட்டிருக்கும். எப்படி என்று தெரியக் காத்திருக்கிறோம்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! நீங்கள் நினைத்தது சரியே. என்ன நடந்தது என்பது அடுத்த பதிவில்.
நீக்குஉதவி செய்து உபத்திரவம் வாங்கி அல்லல்பட்டிருக்கிறீர்கள் ...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!
நீக்குI can only say, to err is human; But forgive is not the company policy. You are at the receiving end now. Let us see, how it unfolds.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! என்ன நடந்தது என்பது அடுத்த பதிவில்.
நீக்குநான் உங்கள் நிலையில் இருந்து நினைத்து பார்க்கிறேன். ஒரு பக்கம் சிக்க வைத்த மேல் அதிகாரி மறு பக்கம் ஏமாற்றிய வாடிக்கையாளர், வந்து இருபத்தோ ரிசர்வ் வங்கி தணிக்கை அதிகாரி. உங்களுக்கு அன்று BP எகிறியதோ இல்லையோ எங்களுக்கு இன்று BP அதிகமாகி விட்டது.
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு பொன்ராஜ் குமார் அவர்களே! நீங்கள் வங்கியில் பணிபுரிவதால், நான் இருந்த இக்கட்டான நிலையை புரிந்து கொண்டு இருக்கிறீர்கள்.
நீக்குSir. .Just wanted to remind you that your last post was posted 4 days ago.. So we are waiting for next one. :) I m unable to control my curiosity. I had similar experience with my current IT Employer last year. I handled it well, because I had his authorization in email. But in my case, problem created & solved by same manager. So I m not pity about him. I learnt a lesson without in document, we shouldn't believe anybody. If we believe, we shouldn't worry, if we loose in future. Anyway waiting for your post sir.
பதிலளிநீக்குஇந்த வார வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
பதிலளிநீக்குதிரு தமிழ் இளங்கோ அவர்களின் பதிவு பற்றி கருத்து சொல்லவேண்டுமா என்ன? ஒரே வரியில் சொன்னால். அருமை!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ராமுடு அவர்களே! அடுத்த பதிவு இன்று வெளிவரும். உங்களுடைய தகவல் தொழில் நுட்பத்துறையில் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் வங்கிகளில் பெரும்பாலான மேலதிகாரிகள் வாய்மொழி ஆணையே தருவார்கள். முடியாது என்று சொல்லமுடியாது. அப்படி சொன்னவர்கள் பட்ட பாடு சொல்லி முடியாது. சொல்லப்போனால் இது கத்தி மேல் நடக்கும் வித்தை போல. நீங்கள் சொல்வதுபோல யாரையும் நம்பக்கூடாது. அப்படி நம்பிய பிறகு அதன் விளைவுகள் பற்றி கவலைப்படக்கூடாது. தொடர்வதற்கு நன்றி!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குதங்கள் வலைக்கு வலைச்சரம் வழி காட்ட வந்து சேர்ந்தேன்.
இத்தனை நாளா இந்த வலைக்கு வராது எப்படி இருந்தேன் என என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
பொது நிறுவனங்களில் சிறு கிளைகளில் பொறுப்பு மேலதிகாரிகள் படும் பாட்டினை சுவையாக எழுதியிருக்கிறீர்கள்.
பொதுத் துறை நிறுவனங்களின் அதிகாரிகள் பலருக்கு ( நான் உட்பட) இதைப்போன்று பல்வேறு இக்கட்டான சூழ்னிலைக்கு
உட்படுத்தப்படுகிறோம் என்பது பொதுவான உண்மை. வாய் வார்த்தையாக தொலைபேசியில் வரும் கட்டளைகளை
செயல்படுத்தவேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு உட்படுத்தப்படுகிறோம் என்பதை விட நாமே நம்மை ஒரு வலைக்குள் சென்று
மாட்டிக்கொண்டு தவிக்கிறோம் என்பதே சரி என இப்பொழுது எண்ணிப்பார்த்தால் தோன்றுகிறது.
ஓய்வு பெற்று 15 ஆண்டுகள் கழித்து இப்படி செய்திருக்கலாமோ என்று தோன்றும் தைரியம் அப்பொழுது ஏன் தோன்றவில்லை ?
காரணங்களை நான் சொல்லவேண்டிய தேவையே இல்லை. வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிந்ததே.
எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
என்ற வள்ளுவன் கோட்பாடு பொதுத்துறை அதிகாரிகளுக்கு பொருந்துமா ?
டாப் பாஸ் சொல்லியாச்சுன்னா செஞ்சுதாண்டா தீரணும் அதுதாண்டா போடாத எழுதாத விதி.
அத ஒத்துக்க முடியாதுன்னா ஒன்ன யாரு க்ளாஸ் ஒண்ணுக்கு வரச்சொன்ன்னாக, க்ளாஸ் த்ரியாக எப்ப பார்த்தாலும்
கொடி புடிச்சுண்டு ஹாய்யா காத்து வாங்கிண்டு, ரிட்டன் ஆர்டர் கொடுத்தாதான் ஸார் இதெல்லாம் செய்யமுடியும்
அப்படின்னு தைரியமா சொல்லலாம் இல்லயா.... அப்படின்னு என்னுடைய பழைய நண்பர்கள் கேட்பார்கள்.
அவர்கள் அதே ஊரில் அதே இடத்தில் அதே வேலையில் ஓய்வு நாட்கள் வரும் வரை சுகமாக அப்பப்ப லீவ் ட்ராவல் போனார்கள்.
வேண்டும் என்ற பொழுதெல்லாம் லீவ் போட்டார்கள். அலுவலக நேரத்தில் அரசியல் பேசி மோதிக்கொண்டார்கள்.
அத்தனைக்கும் அவர்களது யூனியன் பாதுகாப்பாக இருக்கும் . இருந்தது.
அதிகாரிகள் யூனியனோ வெங்காய மூட்டை. அவிழ்த்தால் சிதறிப்போயிடும். ஒரு கான்ஃபரன்ஸிலே இப்படில்லாம் இவர் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுக்கிராரே என்றால், உன் கதை தேவலாம். இங்கே இன்னும் மோசம் என்பது போல பதில் வரும்.
அதனாலே தான், பப்ளிக் செக்டார்லே ஒருவன் மேலதிகாரி அப்படின்னு வ்ர்றதே முன் வினைப்பயன்.
துணிந்தபின் மனதே துயரம் கொள்ளாதே.... என்று பாட்டு கேட்டு இருக்கீகளா...
அதே கதை தான்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சூரி சிவா (சுப்பு தாத்தா) அவர்களே! நீங்கள் சொல்வது யாவும் நூற்றுக்கு நூறு சரியே. ‘பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் முருங்கை மரத்தில் குடியிருக்கவேண்டும்’ என்று சொல்வார்களே. அதுபோலத்தான் நம் கதையும். ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன். நான் மேலதிகாரியாக இருந்தபோது யாருக்கும் வாய்மொழி ஆணையிட்டது இல்லை.
நீக்கு