திங்கள், 25 பிப்ரவரி, 2013

வாடிக்கையாளர்களும் நானும் 33ரிசர்வ் வங்கியின் கடிதத்தை எதிர்நோக்கி காத்திருந்த 
நேரத்தில்,நானும்  சும்மா இருக்கவில்லை. தினம் 
அந்த வாடிக்கையாளராய் தொடர்புகொண்டு 
ஏற்றுமதிக்கான தயாரிப்புகள் எந்த நிலையில் 
இருக்கிறது என விசாரித்து கொண்டிருந்தேன்.

ஏன் அந்த வாடிக்கையாளர் ஏற்றுமதி செய்யாமல் 
Bill ஐ கொடுத்தார் என விசாரித்தபோது, அவர் 
Packing Credit வசதியில் பெற்ற பணத்தை 
மூலப்பொருளான மரக் கட்டைகள் வாங்காமல் 
வேறு சொந்த செலவினங்களுக்கு 
உபயோகப்படுத்தியிருக்கிறார்.

பின்பு வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்யவேண்டிய 
நாள் நெருங்கிக்கொண்டு இருந்தததால், கையில் 
பணம் இல்லாததால் இது போன்ற Bill ஐ கொடுத்து
 Negotiate செய்தால், Packing Credit வசதியில் எடுத்த 
பணம் போக, கையில் கொஞ்சம் பணம் வரும். 
அத்துடன் வெளியே கடன் வாங்கியும், 
மூலப்பொருளை வாங்கி ஒட்டுப்பலகை செய்து 
ஏற்றுமதி செய்துவிடலாம் என நினைத்திருக்கிறார். 
எது எப்படியோ எனக்கு மன உளைச்சலைக் 
கொடுத்துவிட்டார்.

தினம் நான் கொடுத்த தொந்தரவின் காரணத்தால் 
ஒருவழியாக ஒட்டுப்லகையை தயார் செய்து சரக்குக் 
கப்பலில் ஏற்றுமுன் G.R Form பெற்று, புதிய 
 Bill of Lading மற்றும் Bill களைக் கொண்டு வந்து 
கொடுத்தார். அன்றுதான் நிம்மதியாக உறங்கினேன்.

உடனே அந்த Bill ஐ ஆவணங்களுடன் வெளிநாட்டு 
வங்கிக்கு அனுப்ப ஏற்பாடு செய்தேன். 

எதிர்பார்த்தது போலவே ஒரு நாள் ரிசர்வ் 
வங்கியிலிருந்து ஓலை வந்தது. அதில் குறிப்பிட்ட 
 BillG.R Form இல்லாமல் எப்படி Negotiate  
செய்தீர்கள் என்பதற்கான விளக்கத்தை  குறிப்பிட்ட 
நாட்களுக்குள் அளிக்குமாறு  கேட்டிருந்தார்கள்.

அந்த கடிதத்திற்கு பதில் எழுத நான் யாரையும் 
கலந்து ஆலோசிக்கவில்லை. நடந்தை அப்படியே 
எழுதி, அந்நிய செலாவணி நடைமுறைகளில் 
எனக்கு அனுபவம் இல்லாததாலும், அந்த Bill ஐ 
தந்தவர் நீண்ட நாள் வாடிக்கையாளர் என்பதாலும், 
மேலும் எனது மேலதிகாரி சொன்னதாலும் 
அது தவறு எனத் தெரியாததால் அப்படி 
செய்ததாக பதில் எழுதினேன்.

மேலும் அதுதான் முதல் தவறு என்பதால் அந்த 
தவறை மன்னித்துவிடும்படி கேட்டிருந்தேன். 
அதோடு கூட அந்த வாடிக்கயாளர் G.R Form, 
புதிய Bill of Lading மற்றும் Bill களைக் கொண்டு 
வந்து கொடுத்துவிட்டதாகவும் எழுதியிருந்தேன். 
விரிவான பதிலை அனுப்பிவிட்டு தண்டனைக்குக் 
காத்திருக்கும் குற்றவாளி போல், மிகவும் 
கவலையோடு ரிசர்வ் வங்கியின் பதிலுக்காக 
காத்திருந்தேன்.

சில நாட்கள் கழித்து ரிசர்வ் வங்கியிலிருந்து 
கடிதம் வந்தது. அந்த அஞ்சலைப் பரபரப்போடு 
பிரித்து, அதில் எழுதியிருந்ததை படித்து 
முடித்ததும் தான், அதுவரை இருந்த பதட்டம் 
குறைந்து நிம்மதி வந்தது.

அந்த வாடிக்கையாளரிடமிருந்து G.R Form 
பெற்றுவிட்டதாலும், எனது செயல் தவறு 
என்றாலும்,அது முதல் தடவை என்பதால், 
ஒரு எச்சரிக்கையோடு அந்த விஷயத்தை 
முடித்து வைப்பதாக எழுதியிருந்தார்கள்.

நிச்சயம் ஆய்வுக்கு வந்த அந்த அலுவலர்தான் 
எனக்கு அந்த உதவி செய்திருக்கக்கூடும் என 
நினைத்துக்கொண்டேன். நாம் மனதறிந்து, 
சுய இலாபத்திற்காக ஒரு செயலை 
செய்யவில்லை என்பதை ஆய்வுக்கு வருவோர் 
தெரிந்துகொண்டால் தவறு செய்திருந்தாலும் 
நிச்சயம் உதவுவார்கள் என்பதை உணர்த்தியது 
அந்த நிகழ்வு. அதற்குப் பிறகு ஒரு தடவைக்கு 
பல தடவைகள் ஆராயாமல் எதையும் 
செய்ததில்லை.

எனக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சியை சக 
அலுவலர்களோடு பகிர்ந்துகொண்டேன், அதற்கு 
பிறகு அந்த வாடிக்கையாளர் எந்த ஏற்றுமதியையும் 
செய்யவில்லை. அதனால் வங்கிக்கும் 
வருவதில்லை. 

ஒருநாள் காலை தங்கியிருந்த வீட்டில் 
குளிக்கத் தயாராகிக் கொண்டு இருந்தேன். 
(அப்போது அந்த ஊரில் நான் மட்டும் தனியாக 
இருந்தேன், எனது குடும்பம் சென்னையில்
இருந்தது.)

யாரோ அவசரமாக அழைப்பு மணியை 
அழுத்தும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தேன். 
வெளியே நிற்பவரைப் பார்த்ததும் கோபமும், 
ஆச்சரியமும் ஏற்பட்டது.

ஏனெனில் G.R Form தராமல் என்னை சிக்கலில் 
மாட்டிவிட்ட அதே வாடிக்கையாளர் 
அங்கே நின்று கொண்டிருந்தார்! 


தொடரும்


14 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 2. நிச்சயம் ஆய்வுக்கு வந்த அந்த அலுவலர்தான்
  எனக்கு அந்த உதவி செய்திருக்கக்கூடும் என
  நினைத்துக்கொண்டேன். //

  சரியான சமயத்தில் கிடைத்த அரிய உதவி ..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

   நீக்கு
 3. பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமிஅவர்களே!

   நீக்கு
 4. // நிச்சயம் ஆய்வுக்கு வந்த அந்த அலுவலர்தான் எனக்கு அந்த உதவி செய்திருக்கக்கூடும் என நினைத்துக்கொண்டேன். நாம் மனதறிந்து, சுய இலாபத்திற்காக ஒரு செயலை செய்யவில்லை என்பதை ஆய்வுக்கு வருவோர் தெரிந்துகொண்டால் தவறு செய்திருந்தாலும் நிச்சயம் உதவுவார்கள் என்பதை உணர்த்தியது . அந்த நிகழ்வு. அதற்குப் பிறகு ஒரு தடவைக்கு பல தடவைகள் ஆராயாமல் எதையும் செய்ததில்லை. //

  வாடிக்கையாளரால் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் , உங்கள் வங்கியில் மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாய் அமைந்து இருக்கும்.  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு தமிழ் இளங்கோ அவர்களே! நீங்கள் சொன்னது சரிதான்.

   நீக்கு
 5. மறுபடியும் எதுக்கு வந்தார்?தலை வலிதானா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு குட்டன் அவர்களே! தலைவலி வராமல் தடுத்துவிட்டேன் ஏற்கனவே பெற்ற அனுபவத்தால்.

   நீக்கு
 6. பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திருமதி மாதங்கி அவர்களே! தொடர்வதற்கு நன்றி!

   நீக்கு
 7. சூடு கண்ட பூனைதான் ஞாபகத்துக்கு வருகிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! உங்கள் எடுத்துக்காட்டு சரியே!

   நீக்கு