அழைப்பு மணி ஒலி கேட்டு கதவைத் திறந்து பார்த்ததும்,
அங்கே நிற்பவரை கண்டு கோபமும், ஆச்சரியமும் ஏற்பட்டதன் காரணம் G.R Form தராமல் என்னை சிக்கலில் மாட்டிவிட்ட அதே வாடிக்கையாளர் அங்கே நின்று
கொண்டிருந்ததுதான்.
நான் பணியில் இருந்தபோது எந்த வாடிக்கையாளரையும்
எனது வீட்டிற்கு வரவழைத்து பேசியதில்லை. அவர்கள் எனது வீட்டிற்கு வருவதையும்
விரும்பியதில்லை.
இவர் எதற்காக வந்திருக்கிறார் என யோசித்துக்கொண்டே, வந்தவரை திருப்பி அனுப்பாமல் ‘உள்ளே வாருங்கள். உட்காருங்கள்.’ எனக் கூறிவிட்டு, ‘என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள்? இன்னும் 1 மணி நேரத்தில் கிளையில் இருந்திருப்பேனே. அங்கு வந்திருக்கலாமே.’ என்றேன்.
அவர் சிறிது நேரம் பேசாமல் உட்கார்ந்திருந்தார்.
எனக்கோ சீக்கிரம் குளித்துவிட்டு. காலை சிற்றுண்டியை உணவகத்தில் முடித்துவிட்டு
அலுவலகம் செல்லவேண்டுமே என்ற பரபரப்பு.
அடுத்த நகரிலிருந்து சில அலுவலர்கள் காலை 8
மணி இரயிலில் வருவார்கள். நான் தனியாக இருந்ததால், வங்கியின் வெளிக்கதவின் சாவிகளை வாங்கி வைத்திருந்தேன்.
அதனால் சீக்கிரமே வீட்டை விட்டு கிளம்பி காலை 8 மணிக்குள் அவர்கள்
வருவதற்குள் கிளைக்கு சென்றுவிடுவேன்.
என்னிடம் சாவிகள் இருந்ததால் சீக்கிரம்
செல்லவேண்டுமே என நினைத்துக்கொண்டு, ‘எதற்காக வீடு தேடி வந்தீர்கள்? என்ன வேண்டும் என சீக்கிரம் சொல்லுங்கள்.நான் குளித்து முடித்து வங்கிக்கு கிளம்பவேண்டும்.’ என்றேன்.
அவர் தயங்கித் தயங்கி, ‘சார்.
ஒருவருக்கு 25,000 ரூபாய்க்கு காசோலை
கொடுத்திருக்கிறேன். இன்று அது Clearing இல் வரும்.
தொழில் ஏற்பட்ட மந்த நிலை காரணமாக வணிகத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் எனது
கணக்கில் பணம் இல்லை. நீங்கள் அந்த காசோலையை திருப்பி அனுப்பாமல் Pass செய்து தற்காலிக மிகைப்பற்று (Overdraft) தந்தால் கண்டிப்பாக ஒரு வாரத்திற்குள் அதை
கட்டி நேர் செய்துவிடுவேன்.’ என்றார்.
எனக்கு வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, ‘உங்களுக்கு
உதவி செய்து
நான் பட்ட மன கஷ்டம் போதும். அதனால் இந்த முறை உங்களுக்கு உதவுவதாக இல்லை. ஏனெனில் நீங்கள்
சொன்ன சொல்லை காப்பாற்றுகிறவர் அல்லர். உங்கள் வேலை முடிந்ததும் வங்கியை
மறந்துவிடுவீர்கள். எனவே நீங்கள் போகலாம்.’ என்றேன்.
அவர் திரும்பவும் அழாக்குறையாக, ‘சார்.
நீங்கள் இந்த தடவை உதவி செய்யாவிட்டால் எனக்கு இந்த ஊரில் உள்ள மரியாதையே
போய்விடும். அப்புறம் நான் தெருவில் தான் நிற்கவேண்டி இருக்கும். எனவே பழையதை
நினைக்காமல் எனது மானத்தைக் காப்பாற்றுங்கள். நான் நிச்சயம் இந்த தடவை, ஒரே வாரம் என்று சொன்னாலும் சொன்னபடி அதற்குள் கட்டிவிடுவேன்.’என்றார்.
‘ஐயா. நான் உதவி செய்யாவிட்டால்
நீங்கள் தெருவில் நிற்கவேண்டும் என சொல்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு உதவி செய்தால்
நான் வெளியே போகவேண்டியிருக்கும். எனவே என்னால் உதவி செய்யமுடியாது. நீங்கள்
போகலாம்.’ என்றேன் கண்டிப்பான குரலில்.
நான் அப்படி பேசியும் அவர் சிறிதும்
கலங்காமல், ‘சார் வேண்டுமானால் திருவனந்தபுரத்தில் உள்ள உங்கள் Boss இடம் இது பற்றி பேசி உங்களிடம் பேச சொல்லட்டுமா?’ என்றார்.
உடனே நான் கோபத்தோடு, ‘உங்கள
கணக்கில் தற்காலிக மிகைப்பற்று தருவதென்பது எனது விருப்புரிமை (Discretion). அது உங்களது கடந்தகால
வணிக நடவடிக்கைகளைப் பார்த்து அனுமதிப்பது. நீங்கள் எங்கள் வங்கியின் சேர்மன் உட்பட யாரிடம் பேசினாலும் இந்த தடவை நான்
கேட்பதாக இல்லை. நீங்கள் போகலாம்.‘ எனக் கூறி வெளியே அனுப்பிவிட்டேன்.
நான் வங்கிக்கு வழக்கம் போல் 8 மணிக்கு
சென்றுவிட்டேன். காலை 10 மணிக்கு எனக்கு திருவனந்தபுரம் அலுவலகத்தில்
இருந்து தொலை பேசி அழைப்பு வந்தது. ஆனால் இந்த முறை பேசியவர் உதவிப் பொது மேலாளர். அவர் என்னிடம், அந்த வாடிக்கையாளர் பற்றிய விவரம் கேட்டார்.
நான் நடந்ததை சொன்னதும் அவர், அந்த வாடிக்கையாளர் தனக்கு தற்காலிக மிகைப்பற்று தர எனக்கு அறிவுரை சொல்லுமாறு அவரிடம்
தொலைபேசியில் பேசியதாகவும் அதற்கு அவர் ‘நான் ஒன்றும் செய்யமுடியாது. சபாபதி தான் முடிவெடுக்கவேண்டும் எனவே அவரிடமே
பேசிக்கொள்ளுங்கள்.’ என கூறிவிட்டதாகவும் சொல்லிவிட்டு, ‘நீங்கள் எது உசிதமோ அதை செய்யுங்கள்.’ எனக்கூறி தொலைபேசியை வைத்துவிட்டார்.
நான் அப்படி கண்டிப்பாக பேசியும், அந்த வாடிக்கையாளர் துணைப் பொது மேலாளரை தொடர்பு கொண்டிருக்கிறார். அன்றைய தினம்
துணைப்போதுமேலாளர் ஊரில் இல்லாததால் வேறு வழியின்றி உதவிப் பொது மேலாளரை தொடர்பு
கொண்டு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் என
பின்னர் அறிந்துகொண்டேன்.
நான் அன்று Clearing இல் வந்த அந்த காசோலையை திருப்பி அனுப்ப சொல்லிவிட்டேன். அதற்குப்பிறகு அந்தக்
வாடிக்கையாளர் வங்கிக்கு வரவேயில்லை. சரி தொல்லை விட்டது என எண்ணிக் கொண்டிருந்தபோது திரும்பவும் அந்த வாடிக்கையாளர் என்னிடம்
வந்தார். நேரடியாக அல்ல.
தொடரும்
என்ன சார்...? அடுத்து மிரட்டலா...? (கும்பலுடன்)
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! ஆனால் நீங்கள் நினைப்பதுபோல் நடக்கவில்லை.
நீக்குஎல்லா இடங்களிலும் இந்த உள்ளூர் பெரிய மனிதர்கள் சிலர் தரும் நெருக்கடிகள் கொஞ்ச நஞ்சமல்ல. நமது தலையில்தான் விடியும்படி செய்வார்கள்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! ஆனால் இந்த பெரிய மனிதர் நெருக்கடி கொடுத்தும், நான் மசியாததால் வேறு வழியைத் தேர்ந்தெடுத்தார்.
நீக்குஆட்டோ வரலையே?
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி முனைவர் பழனி கந்தசாமி அவர்களே! ஆட்டோ கலாசாரம் அந்த ஊரில் இல்லை. அது தமிழ் நாட்டுக்கே உண்டான ‘வீர விளயாட்டு’ அல்லவா?
நீக்குமுதல் தடவை ஒழுங்கா நடந்திருந்தா அவருக்கு உதவி உதவி செய்திருக்கலாம். நீங்கள் காட்டிய கண்டிப்பு சரியானது.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே! நீங்கள் சொன்னது சரியே.
நீக்குகொடுத்தவாக்கையும் காபாற்றாது
பதிலளிநீக்குமீண்டும் மீண்டும் தொல்லை தருகிறாரே..!
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!
நீக்குபொதுத்துறை பணியில் இவ்வாறெல்லாம் இருக்கத்தான் செய்யுமோ?
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திரு கவியாழி கண்ணதாசன் அவர்களே! பொதுத்துறை மட்டுமல்ல தனியார் துறையிலும் இதுபோல் நடக்க வாய்ப்புண்டு.
நீக்குVery interesting.... very eager to know hw he met with u again...
பதிலளிநீக்குவருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திருமதி மாதங்கி அவர்களே!
நீக்குவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சக்திதாசன் அவர்களே! தாங்கள் கூறியபடி தமிழ் களஞ்சியம் தளத்தில் பதிவு செய்கிறேன்.
பதிலளிநீக்குVery interesting.. also eager to know how he met with u again. Also the incident makes me wonder how essential it is to establish a personal integrity while dealing with such persistent people..
பதிலளிநீக்குPs. Sorry if the comment appeared multiple times. Using a tablet.. so bit tricky..
வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திருமதி மாதங்கி அவர்களே! நீங்கள் கூறுவது சரியே.
பதிலளிநீக்குஎன் சித்தப்பா கூட்டுறவு வங்கி மேலாளராக இருந்தார். ஜப்தி சமயத்தில் சிலர் வீட்டுக்கு வந்து அழுது புலம்பி காரியம் சாதிப்பார்கள் என் சித்தப்பா மனம் இரங்கி உதவி செய்து பின்னர் மாட்டிக் கொண்டதுண்டு. தங்கள் அனுபவம் திகில் தொடர் போல் உள்ளது.
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு சிவகுமாரன் அவர்களே!
நீக்குதிரும்பவும் சஸ்பென்சா?சீக்கிரம் சொல்லுங்க சார்
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! பொறுத்திருங்கள் அடுத்த பதிவு வரை!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
உங்களின் வலைப்பக்கம் வருவது முதல் தடவை வந்து பார்த்த போதுதான் அறிவுக்கு விருந்தாக நல்ல படைப்புக்கள் குவிந்துள்ளது கட்டாயம் வசித்து அறிந்திடுவேன் ஐயா கடந்த வாரம் வலைச்சரப் பொறுப்பு ஏற்றது மிக சந்தோசமாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன-
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு ரூபன் அவர்களே!
நீக்கு