ரிசர்வ் வங்கியின் ஆய்வாளர்
எனது கிளையின் ஏற்றுமதி
மற்றும் இறக்குமதி வணிக நடவடிக்கைகள் பற்றி ஆய்வு
நடத்த வந்திருக்கிறேன் என்று சொன்னதும் அப்போது
எனக்கு ஏற்பட்டது அதிர்ச்சியா
அல்லது மன அழுத்தமா
என சொல்லத் தெரியவில்லை. எது நடக்கக்கூடாது
என நினைத்தேனோ அது
நடந்துவிட்டது.
எனக்குள் ஏற்பட்ட உணர்ச்சிகளை வெளியே
காட்டிக்கொள்ளாமல், அவரை
வரவேற்று சாதாரணமாக
பேச ஆரம்பித்தேன். என் பெயரையும் எனது பேச்சையும்
கேட்டதும்
அவருக்குத் தெரிந்துவிட்டது நான் அந்த
மாநிலத்தைச் சேர்ந்தவன் இல்லையென்று.
காலமாக இங்கு இருக்கிறீர்கள்?’ என விசாரித்தார்.‘ஆமாம்.
இங்கு வந்து 6 மாத காலம் தான் ஆகிறது,’
என்றேன்.
பிறகு நான் அவரிடம் கேரளாவில் எந்த இடத்தைச்
சேர்ந்தவர் எனக் கேட்டேன். (அவர் பெயரிலிருந்தே அவர்
மலையாளி என அறிந்துகொண்டேன்.) அவர் ‘நான்
இந்த
ஊரைச் சேர்ந்தவன் தான்.’என்றார்.
சரி. அப்படியானால் அவருக்கு எங்களது
வாடிக்கையாளரைத்
தெரிந்திருக்கும் என
நினைத்துக்கொண்டேன்.
ஆய்வை ஆரம்பிக்கு முன் அவர் ‘எந்த விதமான அந்நிய
செலாவணி வணிக
நடவடிக்கைகள் உள்ளன?’ என
விசாரித்தார். அவரிடம் இறக்குமதியில்
ஒரே ஒரு
வாடிக்கையாளர்தான் என்றும் அந்த வாடிக்கையாளரும்
கேரள அரசு நிறுவனம் என்றும், அன்றைய
நாளில்
அவர்களது கணக்கு நேர் செய்யப்பட்டுவிட்டது என்றும்
சொன்னேன்.
ஏற்றுமதி பற்றி அவர் ஆய்வு செய்து தவறை
கண்டுபிடிப்பதை
விட, நாமே நடந்ததை சொல்லிவிடுவது
நல்லது என
நினைத்ததால், ‘சார். ஏற்றுமதி வணிக
நடவடிக்கையில் மட்டும் ஒரு கணக்கில் ஒரு தவறு
நடந்துவிட்டது.’ என்று சொன்னேன்.
அவர் என்னை வினோதமாக பார்த்தார். என்ன இவர்
நாம் கேட்காமலே சொல்கிறாரே என்று நினைத்திருக்கலாம்.
என்ன தவறு என்று அவர் கேட்கு
முன்னரே நடந்ததை
விரிவாக எடுத்து சொன்னேன்.
அவர் உடனே கேட்ட கேள்விகள் ‘எப்படி G.R. Form
பெறாமல் அந்த Bill ஐ Negotiate செய்தீர்கள்? அன்னிய
செலாவணி
நடைமுறைகள் உங்களுக்குத் தெரியாதா?’
என்பதுதான்.அதற்கு நான் ‘இதுவரை அந்நிய செலாவணி
வணிக நடவடிக்கைகள் உள்ள கிளைகளில்
பணியாற்றியதில்லை.
இதுதான் முதல் அனுபவம்.’
என்றேன்.
‘இருக்கலாம். ஆனால் அதில் பணியாற்றி
அனுபவம்
உள்ள அலுவலர்கள் இங்கு இருப்பார்களே
அவர்களிடம்
கேட்டிருக்கலாம். இல்லாவிடில் உங்களது மண்டல
அலுவலகத்தை தொடர்புகொண்டு
இப்படி செய்யலாமா
என்று கேட்டிருக்கலாமே? என்றார்.
‘நான் மண்டல அலுவலகத்தை தொடர்புகொண்டு
கேட்கு முன்பே, எனது துணைப் பொதுமேலாளர்தான்
அந்த
வாடிக்கையாளர் G.R. Form ஐ கொடுத்துவிடுவார்.
நீங்கள் Negotiate செய்யுங்கள்.என்றார்.
மேலும் அந்த
வாடிக்கையாளர் Bill Of Lading கொடுத்ததால் அவ்வாறு
செய்தேன்.’ என்று சொன்னேன்.
அதற்கு அவர் ‘Bill Of Lading இருந்ததால் Negotiate
செய்ததாக என்று
சொல்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு
Bill Of Lading வேண்டும்?
சரக்குகளை அனுப்பாமலேயே
அதற்கான Bill Of Lading ஐ தர பலபேர் தயாராக
இருக்கிறார்கள்
என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்நிய
செலாவணி வணிக
நடவடிக்கைகளில் இதுபோன்று
சரக்கை அனுப்பாமலேயே பணம் பெறுவோர் உண்டு.
நீங்கள் தான்
கவனமாக இருந்திருக்கவேண்டும்.
மேலும்உங்கள் Boss எழுத்து மூலம் ஆணை
கொடுத்தாரா? நிச்சயம் கொடுத்திருக்கமாட்டார்.
அப்படியே கொடுத்தாலும் விதிமுறைக்கு
மாறான
ஆணைகளை நீங்கள் நிறைவேற்றத் தேவையில்லை.
சரி. அவர் தான் சொன்னார் என்பதற்கு
என்ன
ஆதாரம்?’ என்றார்.
நான் உடனே அந்த நிகழ்வன்று தயாரித்த
ஆவணங்களைக்
கொண்டு வர சொன்னேன். அவைகளில்
முக்கியமானது அந்த Bill ஐ Negotiate செய்யும்போது
தயாரித்த பற்று (Debit) மற்றும் வரவு (Credit)
சீட்டுகள் (Slips). அந்த Debit Slip இல் கையொப்பமிடும்போது
பின்பக்கம் துணைப் பொது மேலாளரின் தொலைபேசி
ஆணைப்படி
அந்த Bill க்கான பணம் தரப்படுவதாக
எழுதி நேரத்தையும்
தேதியையும் குறிப்பிட்டு
கையொப்பமிட்டிருந்தேன்.
(முன்பு ஒரு காரியம் செய்தேன் என்று
சொல்லியிருந்தேனல்லவா
அதுதான் இது)
அதைப் பார்த்தவுடன், ‘சரி. இதைப்
பார்க்கும்போது
நீங்கள் இந்த தவறை தானாக செய்யவில்லை எனத்
தெரிகிறது. இருந்தாலும் இதை
செய்தது நீங்கள் தான்
என்பதால் இந்த தவறுக்கு நீங்கள்தான் பொறுப்பு.
உங்களை காப்பாற்றிக்கொள்ள நீங்கள் உடனே அந்த
வாடிக்கையாளரை சந்தித்து சரக்குகளை அனுப்ப
ஏற்பாடு செய்யுங்கள். பின்பு புதிய Bill Of Lading மற்றும்
G.R. Form ஐ பெற்று உடனே வெளி நாட்டு வங்கிக்கு
ஆவணங்களை அனுப்புங்கள். இவை யாவும் அந்த
Letter of Credit இல் கொடுத்துள்ள நிபந்தனைகள் படி
இருக்கவேண்டும். வெளி நாட்டிலிருந்து Credit வந்தவுடன்
எங்களுக்கு G.R. Form ஐ அனுப்பவேண்டிய முறைப்படி
அனுப்பிவிடுங்கள்.
நான் எனது அலுவலகம் சென்றவுடன் இது குறித்து
அறிக்கை எனது Boss க்கு தருவேன். நிச்சயம்
உங்களிடமிருந்து விளக்கம்
கேட்டு கடிதம் வரும்.
நடந்ததை அப்படியே எழுதுங்கள். அதற்குள் நான்
சொன்னதை செய்து முடிக்கப்பாருங்கள்.’ என்றார்.
நான் எதிர்பார்த்ததை விட அவர் மிகவும்
மென்மையாகவும்
அனுசரணையாகவும்
நடந்துகொண்டது எனக்கு நம்பிக்கையைக்
கொடுத்தது.
நடந்துகொண்டது எனக்கு நம்பிக்கையைக்
கொடுத்தது.
பின்பு அவர் மற்ற வணிக நடவடிக்கைகளை
ஆராய்ந்துவிட்டு கிளம்பிவிட்டார். அவர் சென்ற
உடனேயே எனது மேலாளருடன் சென்று அந்த
வாடிக்கையாளரைப் பார்த்தேன்.
நல்ல வேளையாக அவர் அவரது தொழிற்சாலையில்
தான் இருந்தார். அங்கு ஏற்றுமதிக்காக
ஒட்டுப் பலகைகள் தயாராகிக்கொண்டு இருந்தன.
எங்களைப் பார்த்ததும் அவர் எந்த வித கூச்சமும்
இல்லாமல் ‘சார். உங்கள் வேலைதான்(!)
நடந்துகொண்டு இருக்கிறது. இன்னும் ஓரிரு
நாட்களில் ஆவணங்களோடு வந்து பார்க்கிறேன்’
ஒட்டுப் பலகைகள் தயாராகிக்கொண்டு இருந்தன.
எங்களைப் பார்த்ததும் அவர் எந்த வித கூச்சமும்
இல்லாமல் ‘சார். உங்கள் வேலைதான்(!)
நடந்துகொண்டு இருக்கிறது. இன்னும் ஓரிரு
நாட்களில் ஆவணங்களோடு வந்து பார்க்கிறேன்’
என்றார்.
வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு ‘ரிசர்வ் வங்கி
ஆய்வில் நீங்கள் G.R. Form தராமல் இருப்பதை குறித்துக்
கொண்டு சென்றுள்ளார்கள்.உங்கள் ஏற்றுமதி பாதிக்காமல் இருக்கவேண்டுமென்றால். உடனே ஆவன செய்யுங்கள்.
இல்லாவிடில்
நீங்கள் ஏற்றுமதியே செய்யமுடியாது.’
எனக்கூறி வந்துவிட்டேன்.
தினம் ரிசர்வ் வங்கியின் கடிதத்தை
எதிர்நோக்கி
காத்திருந்தேன்.
தொடரும்
முன்பே நல்லதொரு காரியம் செய்து இருந்திருக்கிறீர்கள்...
பதிலளிநீக்குநானும் காத்திருக்கிறேன்...
வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
நீக்குஅந்த Debit Slip இல் கையொப்பமிடும்போது
பதிலளிநீக்குபின்பக்கம் துணைப் பொது மேலாளரின் தொலைபேசி
ஆணைப்படி அந்த Bill க்கான பணம் தரப்படுவதாக
எழுதி நேரத்தையும் தேதியையும் குறிப்பிட்டு
கையொப்பமிட்டிருந்தேன்.
முன் எச்சரிக்கை நடவடிக்கைக்கு சிறப்பான பாராட்டுகள்..
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!
நீக்குI like your way of approach & job .
பதிலளிநீக்குI like very much about your way of approach sir
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு இராதா மனோகரன் அவர்களே!
நீக்குநான் எதிர்பார்த்ததை விட அவர் மிகவும்
பதிலளிநீக்குமென்மையாகவும் அனுசரணையாகவும்
நடந்துகொண்டது எனக்கு நம்பிக்கையைக்
கொடுத்தது.
நல்ல மனிதர் போல தங்கள் முன்னெச்சரிக்கை தக்க பலன் கொடுத்தது.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே! நீங்கள் சொல்வது சரியே! அவர் நல்ல மனிதர் தான்.
நீக்குA little presence of mind is all that it takes at times to solve complex problems! Writing the note behind the slip was a great idea... Still- waiting to know what happened with the customer...
பதிலளிநீக்குவருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திருமதி மாதங்கி அவர்களே!
நீக்குநிங்கள் அன்றே ஒரு அலுவலக்குறிப்பு தயார் செய்திருப்பீர்கள் என்றே நினைத்தேன்;சரிதான்!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திரு குட்டன் அவர்களே! உங்களின் யூகத்திற்கு பாராட்டுக்கள்!
நீக்குபழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பார்கள். அது இதுதான் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!
நீக்குஆஹா, சஸ்பென்ஸ் தொடர்கிறது!!!!!!!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! சஸ்பென்ஸ் எப்போதும் தொடர்கதை தான்!
நீக்குஎச்சரிக்கை,புத்திசாலித்தனம் நேர்மை உங்கள் பக்கம் இருக்கிறது. உங்கள் அனுபவம் அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் ஒரு பாடம்தான்.
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!
நீக்குதினம் ரிசர்வ் வங்கியின் கடிதத்தை எதிர்நோக்கி
பதிலளிநீக்குகாத்திருந்தேன்
நீங்கள் மட்டுமா நாங்களும் காத்திருக்கிறோம் படிக்க!
வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!
நீக்குசிறப்பான பாராட்டுகள்..
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு கவியாழி கண்ணதாசன் அவர்களே
நீக்கு