புதன், 21 டிசம்பர், 2011

படித்தால் மட்டும் போதுமா? 11

சென்ற பதிவில் Gole Market பேருந்து
நிறுத்தலிருந்து கன்னோட் பிளேஸ் வரை,
ஃபட் ஃபட் ஊர்தியில் பயணித்தது குறித்து
எழுதியிருந்தேன். அந்த பதிவிற்கு
பின்னூட்டம் இட்டிருந்த நண்பர்
திரு வாசுதேவன் அவர்கள்,ஃபட் ஃபட்
ஊர்தியின் படத்தை, பதிவுலக நண்பர்களும்
தெரிந்துகொள்ளும் விதமாக பதிவில்
வெளியிடலாமே என யோசனை
சொல்லியிருந்தார்.

அவரது யோசனைப்படி நானும் படங்களை
வெளியிட இருந்தேன். பின் நண்பர் வாசுதேவனே
ஒரு புகைப்படத்தையும் அனுப்பியிருந்தார்.
அவர் அனுப்பியிருந்த படம் கீழே.






நான் வெளியிட இருந்த படங்கள் கீழே.








உச்சநீதி மன்ற ஆணைப்படி, இந்த ஊர்திகள்
வெளியிடும் புகை, சுற்றுப்புறத்தை அதிகம்
மாசு படுத்தியதால்,1988 முதல் தடை தில்லியில்
செய்யப்பட்டுவிட்டன. எனவே இவைகளை
புகைப்படத்தில் மட்டுமே பார்க்க முடியும்.

நான் ‘கரோல் பாக்’ சென்ற பின், நடந்த
நிகழ்வுகள் அடுத்த பதிவில்.


தொடரும்

13 கருத்துகள்:

  1. ரொம்பச் சின்னப் பதிவாக்கி விட்டீங்க!படங்கள் அருமை.த.ம.1

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! படங்கள் இருந்ததாலும் இது முந்தைய பதிவின் இணைப்பு என்பதாலும் அதிகம் எழுதவில்லை. அடுத்த பதிவு வழக்கம்போல் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. சுற்று சூழலுக்கு நல்லாதான் இரு்க்கும் ஆனா இன்றைய வேக யுகத்தில் சாத்தியமில்லை...

    படங்கள் நன்று

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    திரு கவிதை வீதி ...//சௌந்தர்// அவர்களே1

    பதிலளிநீக்கு
  5. இதைப் பார்த்தாலே வேகமாப் போனா கவுந்துடுமோன்னு பயமாத்தான் இருக்கு... நல்ல படங்கள்.

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கு நன்றி திரு கணேஷ் அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. படங்கள் நன்றாக உள்ளன .கால சக்கரம் வேகமாக சுழலும்போது பல மறைந்து விடுகின்றன . Transistor/Typewriter/radio/gramophone
    ஆகியவற்றை இன்று நினைத்தாலும் இனம் புரியா பரவசம் ஏற்படுகின்றது . ஃபட் ஃபட் வாகனத்தில் பயணித்தவர்கள் அந்த அனுபவத்தை எளிதில் மறக்க மாட்டார்கள் ...வாசு

    பதிலளிநீக்கு
  8. கருத்துக்கும், தாங்கள் அனுப்பிய புகைப் படத்திற்கும் நன்றி திரு வாசு அவர்களே! ஃபட் ஃபட் பயணத்தை நீங்கள் சொல்வது போல் என்னால் இன்னும் மறக்க இயலவில்லை. அது ஒரு சுகானுபவம்!

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கு நன்றி திரு இரத்தினவேல் அவர்களே!

    பதிலளிநீக்கு
  10. மோட்டார் வண்டியுடன் இணைத்த ஊர்தி நன்றாக உள்ளது வாழ்த்துகள் சகோதரா. பிந்திய நத்தார் வாழ்த்துகளும், இனிய புத்தாண்டு வாழ்த்துகளும் உரித்தாகுக.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  11. மோட்டார் வண்டியுடன் இணைத்த ஊர்தி நன்றாக உள்ளது வாழ்த்துகள் சகோதரா. பிந்திய நத்தார் வாழ்த்துகளும், இனிய புத்தாண்டு வாழ்த்துகளும் உரித்தாகுக.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  12. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    தங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு