சனி, 12 மே, 2012

Boss கள் பல விதம்! 13


மதிய உணவுக்குப் பின், வட்டார மேலாளர் திரு மோகன் அவர்களது அறைக்கு சென்றதும்,அவர் என்னை உட்காரச் சொல்லிவிட்டு,
எப்போது நீங்கள் பணிபுரியும் இடத்திற்கு (அதாவது கதக்கிற்கு) திரும்புகிறீர்கள்?’ என்றார்.

அதற்கு நான், ‘நீங்கள் பார்க்க சொன்னதால் தான் இருக்கிறேன். இல்லாவிடில் கூட்டம் முடிந்ததும் உடனே கிளம்பியிருப்பேன்.
என்றேன்.

உடனே, ‘நல்லது. அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். இங்கு வந்த
வேலை முடிந்ததும் உங்களது Head Quarters க்கு திரும்பினால்தான்,
விதை சான்றளிப்பு (Seed Certification) பணிகளை விரைவில்
முடிக்கலாம்.என்றார்.

இதைசொல்லவா கூப்பிட்டார் என எண்ணியபோது, ‘சபாபதி,
கோயம்புத்தூரில் உங்கள் அண்ணன் பணியில் இருக்கிறார்
அல்லவா?’ என்றார்.

(என்னை முழுப்பெயரில் கூப்பிடாமல் பாதி பெயரில் அப்போது
அவர் கூப்பிட ஆரம்பித்து வைத்தது, மற்றவர்களாலும்
பின்பற்றப்பட்டது.யாரும் எனது முழுப்பெயரை சொல்லி வங்கியில்
நான் பணி நிறைவு செய்யும் வரை அழைத்தது இல்லை!)

நான், ‘ஆமாம்.என்றேன்.

(அப்போது கோவை வேளாண்மைக் கல்லூரியில்  என் அண்ணன்
முனைவர் சிவசுப்ரமணியன்அவர்கள் வேளாண் மரபியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்கள்.அப்போது அந்த கல்லூரி 
வேளாண்மைப் பல்கலைக் கழகமாக மாற்றப்படவில்லை.1971 ல் தான் பல்கலைக்கழகமாக மாறியது.)
 .
அதற்கு அவர், ‘இங்கு புறப்பட்டு வருமுன் கோயம்புத்தூரில்
வேளாண்மைக் கல்லூரிக்கு சென்றேன்.எனது நண்பர் ஒருவர் உங்கள் அண்ணனை அறிமுகப் படுத்தியபோது, நான் இங்கு (தார்வார்) பணிபுரிய வருகிறேன் என்று தெரிந்ததும்.என் தம்பி கூட அங்குதான்
NSC யில் பணியில் இருக்கிறான்என்றார். நான் என்ன உங்கள்
தம்பிக்கு கோயம்புத்தூருக்கு இடமாற்றம் செய்யவேண்டுமாஎனக்கேட்டேன்.

அதற்கு அவர் இல்லை.இல்லை.அவன் அங்கேயே பணி செய்யட்டும். வேலையை நன்றாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். மேலும் அங்கிருந்தால் தான் வெளி உலகமும் தெரியும்.
என்றார்.

எல்லோரும் தங்கள் உறவினர்களுக்கு இட மாற்றல் தர வேண்டும் என்றுதான் வேண்டுகோள் விடுப்பார்கள். ஆனால் உங்கள்
அண்ணனோ அதற்கு நேர்மாறாக சொன்னது எனக்கு வியப்பாக இருந்தது.அவரிடம். கவலை வேண்டாம் உங்கள் தம்பியை நான் பார்த்துக்கொள்கிறேன். என்று சொல்லி வந்திருக்கிறேன்.

அதனால்தான், காலையில் நான் யாரென்று சொல்லாமல்
கோயம்புத்தூரில் நமது நிறுவனத்தின் கிளை உள்ளதே. நீங்கள் அங்கு மாற்றலாகிப்போக விரும்பவில்லையா?’ எனக்கேட்டேன்.

நீங்களும் . இல்லை. இல்லை.இங்கே நான் சந்தோஷமாகஇருக்கிறேன்.
தற்சமயம் அங்கு செல்ல விருப்பம் இல்லை. என சொல்லி உங்கள்
அண்ணன் கருத்தை பிரதிபலித்தது எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது.
அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்.என்றார்.

அப்பாடா இதைசொல்லத்தான் கூப்பிட்டாரா நாம் வேறு எதையோ எண்ணி பயந்தோமே என் எண்ணியபோது, அவர் All the Best. போய்வாருங்கள். தேவைப்படும்போது உங்கள் இருப்பிடத்திற்கு வருகிறேன். என்றார்.

அவருக்கு நன்றி சொல்லிவிட்டு எனது இருப்பிடமான கதக் கிற்கு கிளம்பி வந்துவிட்டேன்.

ஒரு மாதத்திற்குப் பிறகு ஒரு நாள் தார்வார் வட்டார அலுவலகத்தில்
இருந்து திரு பாட்டீல் என்ற அலுவலர் கணக்குகளை ஆய்வு செய்ய எனது இருப்பிடத்திற்கு வந்திருந்தார்.

கணக்குகளை சரிபார்த்து விட்டு செல்லும்போது, மற்ற எல்லா
Area in Charge களை விட நீங்கள் தான் ஆவணங்களை (Records) சரியாக வைத்திருக்கிறீர்கள். அதுவும் எந்த வித உதவியாளர் இல்லாமலும்.
நிச்சயம் இதை வட்டாரமேலாளர் கவனத்திற்கு கொண்டு செல்வேன்
எனக்கூறி சென்றுவிட்டார்.

அவர் ஆய்வு செய்ததின் பலன் சில நாட்களுக்குப் பிறகு எனக்கு வட்டார அலுவலகத்திலிருந்து வந்த அஞ்சல் மூலம் தெரிந்தது! புதிதாய் பணியில் சேர்ந்திருந்த கோலார் மாவட்டத்தை சேர்ந்த திரு சுப்ரமணியம்
என்பவரையும் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த திரு நேமிசந்த் 
என்பவரையும் 'கதக் கில் பணி நியமனம் செய்து இருப்பதாக அந்த 
அஞ்சல் சொன்னது.

அப்படியானால் எனது நிலை என்ன என்று யோசித்துக்கொண்டு இருந்தபோது தார்வாரில் இருந்து திரு மோகன் அவர்கள் என்னை தொலைபேசியில் கூப்பிடுவதாக எனது அலுவலகம் இருந்த Gadag Cotton Sales Society அலுவலகத்திலிருந்து வந்து சொன்னார்கள்.
(எனது அலுவலகத்திற்கு அப்போதுதொலைபேசி இணைப்பு இல்லை)

வட்டார மேலாளர் என்ன சொல்லப்போகிறாரோ என்று
நினைத்துக்கொண்டுஅந்த அலுவலகம் சென்று
தொலை பேசியை எடுத்தேன்.தொடரும்

18 கருத்துகள்:

 1. ஐயா வணக்கம். எப்படியிருக்கிறீர்கள்?.தொடரை தவற விட்டுவிட்டேன்.இனி கட்டாயம் தொடருகிறேன்..

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் கவிஞர் மதுமதி அவர்களே! நலமே. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 3. ''..வட்டார மேலாளர் என்ன சொல்லப்போகிறாரோ என்று
  நினைத்துக்கொண்டுஅந்த அலுவலகம் சென்று
  தொலை பேசியை எடுத்தேன்...''
  அடுத்தது என்ன? ஆவல்!!!!
  நல்வாழ்த்து.
  வேதா. இலஙகாதிலகம்.

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

  பதிலளிநீக்கு
 5. கிணற்றுத் தவளையாய் நம் ஊரிலேயே நம்முடனேயே தம்பி இருக்க வேண்டும் என எண்ணாமல், நன்றாக வேலை கற்றுக் கொள்ளட்டும் என்ற உங்கள் அண்ணனின் பரந்த மனம் பாராட்டுக்குரியது. வட்டார மேலாளர் சொன்னதை அறிய ஆவலுடன் வெயிட்டிங்! (பிரமோஷன்?)

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கு நன்றி திரு கணேஷ் அவர்களே!.உங்களது யூகம் உண்மையா என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 7. உங்கள் தமையனாரும் சரி,நீங்களும் சரி அபுர்வமான மனிதர்கள்தான்.அனைவரும் தங்கள் ஊர்ப்பக்கம் மாறுதல் எனில்உடனடியாக சம்மதித்து விடுவார்கள்.மிக சுவாரஸ்யமான பகிர்வு

  பதிலளிநீக்கு
 8. ‘All the Best.

  சிறப்பான மலரும் நினைவுகள்.. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 9. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!என் அண்ணன் அபூர்வமானவர் என்பது சரியே!

  பதிலளிநீக்கு
 10. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!.

  இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 11. வந்தேன், செல்கிறேன். வாழ்க வளமுடன்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 12. திரும்பவும் வருகை தந்தமைக்கு நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

  பதிலளிநீக்கு
 13. Exceptional attitude in not desiring a transfer to ones' one place. Thank god your name was not further truncated from sabapathy to pathy !.

  Vasudevan

  பதிலளிநீக்கு
 14. வருகைக்கு நன்றி திரு வாசு அவர்களே!.
  தலைஞாயிறு அனுபவத்தால் நம் ஊர் பக்கம் மாற்றலில் வர நான் விரும்பவில்லை என்பதே உண்மை.

  பதிலளிநீக்கு
 15. தங்களின் அண்ணாரும் தாங்களும் எடுத்துள்ள ஒரே மாதிரியான முடிவுகள் மிகவும் வியப்பளிப்பதாக உள்ளன. பொதுவாக தமிழ் நாட்டுக்காரர்கள் தமிழ்நாட்டில் வேலை செய்யவே விரும்புவார்கள்.

  அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக இருந்தும் தாங்கள் இருவருமே வேண்டாம் எனச் சொல்லியுள்ளது பாராட்டத்தக்கது.

  >>>>>

  பதிலளிநீக்கு
 16. திரு. பாட்டீல் அவர்கள் உங்களைப்பற்றியும், உங்களின் சிறப்பான செயல்பாடுகள் பற்றியும் மேலிடத்திற்கு தெரிவித்திருப்பார். அதன் அடிப்படையில் இருவரை உங்களுக்கு உதவியாளர்களாகவோ அல்லது உங்களிடம் பயிற்சி பெறவோ அனுப்பியிருப்பார்கள் என நான் நினைக்கிறேன்.

  தொலைபேசித் தகவல் அறிய இதன் அடுத்த பகுதிக்கு இப்போது நான் செல்கிறேன். All the Best !

  பதிலளிநீக்கு
 17. வருகைக்கும், கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! நீங்கள் நினைத்தது சரிதான். திரு பாட்டீல் என்னைப்பற்றி நல்லபடியாகத்தான் சொல்லியிருந்தார்.

  பதிலளிநீக்கு