செவ்வாய், 22 மே, 2012

Boss கள் பல விதம்! 16


அந்த நண்பர் சொன்னதைக் கேட்டவுடன்  நான் வாய் விட்டு
சிரித்ததன் காரணம் இதுதான்.

அந்த நண்பர் காலையில் ‘Tonga’ வில் வந்து பெட்டி
படுக்கைகளோடு இறங்கியபோது  அலுவலகத்திற்கு வெளியே
இருந்த பெஞ்சில்’திரு மோகன் அமர்ந்திருந்திருக்கிறார்.

(Tonga என்பது இரண்டு பக்கமும் உட்காரக்கூடிய குதிரை வண்டி.
அதைப் பார்த்திராதவர்களுக்காக அதனுடைய படம் கீழே –
நன்றி கூகிளுக்கு!)

அவரைப் பார்த்ததும் திரு மோகன், அவர் யார் என்று
விசாரித்தபோது அந்த நண்பர் தன் பெயர் R.D.Ram என்றும்
தான்உத்திர பிரதேசத்திலிருந்து, NSC யில் சேர வந்திருப்பதைக்
கூறிவிட்டு திரு மோகனைப்பார்த்து, நீங்கள் யார்?’ என்று கேட்டு
இருக்கிறார்.

அவரிடம் திரு மோகன் தான் யார் என்று சொல்லாமல்,
தானும் ஒரு SPA தான் என்று இந்தியில் சொல்லியிருக்கிறார்.

வந்த நண்பருக்கு ஒரே சந்தோஷம். வந்த இடத்தில் நம் மொழி
பேசும் நபர் இருக்கிறாரே என்ற குஷியில், திரு மோகனிடம்
கேட்டிருக்கிறார்.இங்கு இருக்கும் Regional Manager எப்படி?’
நல்லவரா? என்று.

அதற்கு திரு மோகன் இந்த RM சுத்த மோசமான ஆள். என்று
சொன்னதும், திரு ராமும், ஆமாம். புது தில்லியில் கூட நான்
கிளம்புபோது அப்படித்தான் சொன்னார்கள். என்று
சொல்லியிருக்கிறார்.

உடனே மோகன் வேறு என்ன சொன்னார்கள்?’ என்று கேட்டபோது
பணியில் சேர வந்த திரு ராம்,‘நான் தில்லியிலிருந்து கிளம்பு முன்
தார்வருக்கு எப்படி செல்வது எனக் கேட்பதற்காக தலைமை
அலுவலகம் சென்று இருந்தேன்.

அங்கு இருந்த ஒருவர்,‘தார்வாருக்கா செல்கிறீர்கள்? உங்கள்
துரதிர்ஷ்டம் அங்கு செல்கிறீர்கள். அங்கிருக்கும் RM சரியானவர்
இல்லை. சரியான சிடுமூஞ்சி. தான் தான் நிறுவனத்திற்காக
ஏதோ உண்மையாக வேலை செய்வது போலவும் மற்றவர்கள் அனைவரும்வேலை செய்யாமல் சம்பளம் வாங்குபவர்கள் என நினைப்பவர்.அதனால் தன் கீழ் வேலை பார்க்கும் எல்லோரையும் எந்தநேரமும்வேலை செய்யவேண்டும் என எதிர்பார்ப்பார்.
அவரிடம் நல்ல பெயர் வாங்குவது கடினம்.எதற்கும்
ஜாக்கிரதையாக இருங்கள். என்றார்.அதனால் வரும்போதே பயந்துகொண்டுதான் வந்திருக்கிறேன்.உங்களைப் பார்த்ததும்
தான் கொஞ்சம் நிம்மதி. என்றுசொல்லியிருக்கிறார்.

அதற்கு திரு மோகன், கவலை வேண்டாம்.நான் இருக்கிறேன்
அல்லவாபார்த்துக் கொள்ளலாம். என்று சொல்லிவிட்டு,’காலை
சிற்றுண்டி சாப்பிடவில்லையென்றால் அருகில் உள்ள உணவு
விடுதியில் சாப்பிட்டு வாருங்கள். எனக் கூறி இருக்கிறார்.

வெளியில் போய் சாப்பிட்டு வந்து என்னை பார்த்துவிட்டு
RM ஐ பார்க்கப்போனதும், அவர்தான் காலையில் தன்னிடம்
SPA என்று சொன்னவர் என்பது தெரிந்ததும்,திரு ராமுக்கு
உதறல் எடுத்திருக்கிறது.

யாரெனத்தெரியாமல் அவரைப்பற்றிக் கேள்விப்பட்ட செய்திகளை
அவரிடமே சொல்லிவிட்டோமே என்ற பயத்தில்.சார். நீங்கள் தான்
RM எனத்தெரியாமல், ஏதேதோ சொல்லிவிட்டேன்.தயை செய்து மன்னியுங்கள். என்று சொன்னதும், திரு மோகன், உங்கள் பேரில்
எந்த குற்றமும் இல்லை. யாரோ சொன்னதைத்தானே
சொல்லியிருக்கிறீர்கள். என்னைப்பற்றி எப்படி சொல்வார்கள்
என எனக்குத்தெரியும்.அவர்கள் சொன்னதில் பாதி சரி. நான்
எல்லோரும் ஒழுங்காக வேலை செய்யவேண்டும் என
எதிர்பார்ப்பவன். அவ்வளவுதான். நீங்கள் ஒழுங்காக வேலை
செய்தால் எந்த தொந்தரவும் இருக்காது. எனவே நீங்கள் என்னிடம் சொன்னதை மறந்து விட்டு போய் சபாபதியைப் பாருங்கள். அவர்
நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்வார். 
என்றிருக்கிறார்.

இதை அவர் வந்து சொன்னதும் நான் என்னை மறந்து சிரித்தேன்.
நான் சிரிப்பதைப் பார்த்து அவர், நானோ வந்த முதல் நாளே
இவ்வாறு சொல்லி RM ன் கோபத்துக்கு ஆளாகிவிட்டோமே என வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் சிரிக்கிறீர்களே?’ 
என்றார்.

நான் அவரிடம்.. கவலை வேண்டாம் ராம்.நமது RM 
கண்டிப்பானவரேதவிர பிறரை துன்புறுத்தி இரசிப்பவர் (Sadist) 
அல்லர். நாம் நமதுவேலையை சரியாக செய்தாலே போதும்.
நன்றாக வேலைசெய்பவர்களுக்கு அவர் எப்போதும் ஆதரவாக
இருப்பார். என்று சொல்லி சமாதானப்படுத்தினேன்.

பிறகு நான் தில்லியிலிருந்து மாற்றலாகி வந்திருந்த நண்பர்  அரங்கநாதனிடம் ஏன். தலைமையகத்தில் நமது RM பற்றி
தவறானஎண்ணம் கொண்டு உள்ளார்கள்?” என கேட்டதற்கு
அவர் சொன்னார்.திரு மோகன் எதையுமே வெளிப்படையாக
பேசுபவர்.அவருக்குமேல் உள்ள பொது மேலாளரிடம் கூட
மனதில் பட்டதைசொல்லிவிடுவார்.அதனால் தான் அவர்
unpopular ஆகஇருக்கிறார். அவருடைய வெளிப்படையான
பேச்சுதான்அவருக்கு எதிரியும் கூட. என்றார்.

.இதேபோல் நடந்த இன்னொரு நிகழ்வும் திரு மோகன் அவர்கள்
மற்றவர்களிலிருந்து வேறுபட்டவர் என்பதை உறுதிப்படுத்தியது.


தொடரும்

12 கருத்துகள்:

 1. போன பகுதியைத் தவற விட்டு விட்டேன் இபபோது சேர்த்துப் படித்ததும் நல்லதாக்ப் போயிற்று. தான் RM என்று சொல்லாமல் அவர் பேசியதும். அவரை அந்த சீட்டில் பார்த்து இவர் ஙே என விழித்ததும் வெகு சுவாரஸ்யம். பணியில் சரியாக இருக்க வேண்டுமென்று நினைப்பதும் தான் சரி என்கிற பட்சத்தில் அழுத்தமாகப் பேசுபதும் தவறா என்ன, அதற்கு இப்படியொரு விமர்சனமா? நானும் அந்த வகை ஆசாமிதான்.

  பதிலளிநீக்கு
 2. உண்மையிலேயே வித்தியாசமான ஒரு பாஸ்தான்.படிக்கும்போது நானும் ரசித்துச் சிரித்தேன்!

  பதிலளிநீக்கு
 3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கணேஷ் அவர்களே!
  'ஆடையில்லா ஊரில் ஆடை கட்டியவன் பைத்தியக்காரன்’ என்பதுபோல் பணி செய்யாமல் இருப்போர் மத்தியில் பணி செய்ய விரும்புவோர் வேண்டாதவர்கள் தானே!

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 5. நன்றாக உள்ளது. ரசித்தேன். நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கும் இரசித்ததற்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

  பதிலளிநீக்கு
 7. வருகைக்கும், பதிவைத் தொடர்வதற்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 8. திரு. ராம் அவர்களின் அன்றைய சூழ்நிலையில் யார் இருந்தாலும் உதறல் எடுத்திருக்கும் என்பதே உண்மை.

  இந்தப்பகுதியும் மிகவும் நகைச்சுவையாக உள்ளது.

  //‘திரு மோகன் எதையுமே வெளிப்படையாக பேசுபவர். அவருக்குமேல் உள்ள பொது மேலாளரிடம் கூட மனதில் பட்டதைசொல்லிவிடுவார். அதனால் தான் அவர் unpopular ஆக இருக்கிறார். அவருடைய வெளிப்படையான பேச்சுதான் அவருக்கு எதிரியும் கூட.’ //

  அவரின் பலமும் பலகீனமும் அதுவாகவே இருந்திருக்கக்கூடும் என நினைக்கிறேன்.

  >>>>>

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! நீங்கள் சொன்னது சரிதான். அவரது பலமே பலவீனமாகிவிட்டது அவர் மனதில் பட்டதை வெளிப்படையாக சொன்னதால் அவருக்கு எதிர்ப்பு கூடியது உண்மை.

   நீக்கு
 9. //‘உங்கள் பேரில் எந்த குற்றமும் இல்லை. யாரோ சொன்னதைத்தானே சொல்லியிருக்கிறீர்கள். என்னைப்பற்றி எப்படி சொல்வார்கள் என எனக்குத்தெரியும்.அவர்கள் சொன்னதில் பாதி சரி. நான் எல்லோரும் ஒழுங்காக வேலை செய்யவேண்டும் என
  எதிர்பார்ப்பவன். அவ்வளவுதான். நீங்கள் ஒழுங்காக வேலை
  செய்தால் எந்த தொந்தரவும் இருக்காது. எனவே நீங்கள் என்னிடம் சொன்னதை மறந்து விட்டு.....//

  இந்தக் கனிவான பதிலால் திரு. மோஹன் அவர்கள் என் மனதில் மிக உயர்ந்த இடத்தினைப் பெறுகிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! என்னைப் பொருத்தவரையில் அவர் பலாப் பழத்தைப் போன்றவர். பார்ப்பதற்கு அச்சமூட்டினாலும் உண்மையில் மென்மையானவர்.

   நீக்கு