சனி, 19 மே, 2012

Boss கள் பல விதம்! 15


புதிய அலுவலக கட்டிடத்தில் பணிகளைத் தொடங்கிய அன்று
காலை  நான் எனது அறைக்கு வந்தபோது அங்கு மூலையில்
ஒரு Hold All ம், பெட்டியும் இருக்கக் கண்டேன்.

அவை யாருடையவை என விசாரித்தபோது, புதிதாய் பணியில்
சேர ஒருவர் வந்திருப்பதாகவும்,காலை உணவு அருந்த வெளியே சென்றிருப்பதாகவும் சொன்னார்கள்.

சரியாக 9 மணிக்கு எனது அறைக்கு ஒருவர் வந்தார்.அவரைப்
பார்த்ததுமே அவர் வட இந்தியாவிலிருந்து வருகிறார்  எனத்தெரிந்துகொண்டேன்.

அவர் இந்தியில் பேச ஆரம்பிக்கு முன்னரே நான் அவரை
வரவேற்று உட்காரவைத்துப் பின் ஆங்கிலத்தில்,
'என்ன வேண்டும்? யாரைப்பார்க்க வேண்டும்?என்று கேட்டேன்.

அவர், தான் புதிதாக வேலையில் அமர்த்தப்பட்ட Seed Production
Assistant (SPA) என்றும் தார்வார் வட்டார அலுவலகத்தில் சேர
தனக்கு ஆணை வந்திருப்பதாகவும் சொல்லி, எங்கள் தலைமை
அலுவலகத்தால் அவருக்கு அனுப்பட்ட அஞ்சலையும்
காண்பித்தார்.

அவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது அவர் உத்திர
பிரதேசத்தைசேர்ந்தவர் என்றும் தெரிந்துகொண்டேன்.அவர்
காலையில் தான் வந்ததாகவும் நேரே அலுவலகம் வந்து பெட்டி படுக்கைகளை வைத்துவிட்டு வெளியே சென்று வந்ததாகவும் 
கூறினார்.

நான் அவரிடம் RM ஐ (வட்டார மேலாளரை) பார்த்து விட்டீர்களா?’
என்றேன். திரு மோகன் அவர்கள் அந்த அலுவலகக் கட்டிடத்தின்
முதல் மாடியில் தான் தங்கியிருந்தார். ஒருவேளை அவரைப் பார்த்திருப்பாரோ என்ற யூகத்தால் அவ்வாறு கேட்டேன்.

அதற்கு அவர், இல்லை.இல்லை காலையில் ஒரு SPA ஐ த்தான்
பார்த்தேன்..என்றார்.ஒருவேளைவெளியூரிலிருந்து பணி நிமித்தம்
வந்த SPA ஐ பார்த்திருக்கக்கூடும் என நினைத்துக்கொண்டேன்.

சரி நீங்கள் சென்று RM ஐ பார்த்துவிட்டு வாருங்கள். அதன் பிறகு
உங்களது Joining Report ஐ தரலாம் என்று சொல்லிவிட்டு,
உள் தொலைபேசி (Intercom) மூலம் திரு மோகன் அவர்களிடம்,
புதிதாய் ஒருவர் SPA ஆக சேர வந்திருக்கிறார். உங்களைப்பார்க்க
வர சொல்லட்டுமா?’ என்றேன்.

அவரும்,’சரி.உள்ளே அனுப்புங்கள். என்றதும் அந்த நண்பரைப்
பார்த்துஉள்ளே உள்ள இரண்டாவது அறையில் RM இருக்கிறார்.
அவரைப் பார்த்து வாருங்கள். என்றேன்.

உள்ளே சென்ற வேகத்தில் அவர் திரும்பி வந்து, அரே. யார்!
அந்தஅறையில் ஒரு SPA தான் இருக்கிறார். RM இல்லை.என்றார்.

எனக்கு ஒரே சந்தேகம். திரு மோகன் அவர்கள் அறையில் வேறு
யார் இருக்கமுடியும் என எண்ணி,நான் அவரை அழைத்துக்
கொண்டு RM அவர்களது அறைக்கு சென்றேன்.

உள்ளே சென்றதும் திரு மோகன் அவர்கள் நிமிர்ந்து பார்த்து,
யெஸ்.சபாபதி. என்றார். என் பின்னால் இருந்த நண்பரை
சுட்டிக்காட்டி சார்.இவர்தான் புதிதாய் சேர வந்திருக்கும் 
SPA.' என்பதற்குள்,அந்தநண்பர் என்னிடம் இவர்தான் நான் 
காலையில் பார்த்த SPA.,இவரைப்போய் RM என்கிறீர்களே?’ 
என்றார்.

எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அதற்குள் திரு மோகன்
அவர்கள் சிரித்துக்கொண்டே.அரே பாய், நான் தான் மோகன்.
காலையில் சும்மா உங்களிடம் SPA என சொன்னேன். என்று சொல்லிவிட்டு.சபாபதி.இவரை காலையிலேயே நான் பார்த்துவிட்டேன்.நீங்கள் போகலாம்.இவரிடம் சிறிது நேரம்
பேசிக்கொண்டு இருந்துவிட்டு உங்களிடம் அனுப்பிவைக்கிறேன்.
என்றார்.

அந்த நண்பரின் முகத்தில் ஆச்சரியத்தை விட பயத்தைத்தான்
அப்போது பார்த்தேன்.

ஒன்றும் புரியாமல் எனது இடத்திற்கு திரும்பி வந்து அமர்ந்தேன்.
சிறிது நேரம் கழித்து அந்த நண்பர் வந்தபோது முகம்
பேயறைந்ததுபோல்இருந்தது. என்னவென்று விசாரித்தபோது
அவர் சொன்னதைக்கேட்டவுடன்  வாய் விட்டு சிரித்தேன்.

தொடரும்


8 கருத்துகள்:

  1. நல்ல நகைச்சுவை உணர்வுள்ள பாஸ்!பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
  2. சுவாரஸ்யமான கட்டத்தில் " தொடரும் " என்பதை பார்த்தவுடன் ஆவல் அதிகம் ஆயிற்று ..மொழி தெரியாமல் அல்லது புரியாமல் அந்த வட இந்திய SPA குழம்பி இருக்ககூடும் என்றே எண்ணுகிறேன் ..வாசு

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!என்ன நடந்திருக்கும் என்பதை சரியாக யூகித்துவிட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கு நன்றி திரு வாசு அவர்களே! அந்த SPA குழம்பியதன்/பயந்ததன் காரணம் அடுத்த பதிவில்.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா22 மே, 2012 அன்று 1:40 AM

    என்ன சொல்லியிருப்பார் ஏன் சிரிப்பு? ஆவல்ல்...ல்..ல்......
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும், ஆவலோடு காத்திருப்பதற்கு நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. அன்றொரு நாள் உங்களிடம் விளையாடியது போலவே RM அவர்கள் புது SPA யிடமும் விளையாடியுள்ளார் எனப்புரிகிறது.

    இந்த நிகழ்ச்சிகள் தங்களின் எழுத்துக்களில் மேலும் நல்ல நகைச்சுவையாகவும் மெருகூட்டப்பட்டு உள்ளன. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும், கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! இப்போது நினைத்தாலும் திரு ராம் பட்டபாடு என்னை வாய்விட்டு சிரிக்கத் தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு