ஞாயிறு, 5 மே, 2013

வாடிக்கையாளர்களும் நானும் 46



புகார் கொடுத்த அந்த வாடிக்கையாளரின் கடை மெயின் ரோடில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் உள்ளே வரிசையாய் கட்டப்பட்டிருந்த வணிக வளாகத்தில் இருந்தது.

நாங்கள் அங்கு சென்றபோது, அந்த வாடிக்கையாளர் அவரது கடையில் இருந்தார். அங்கு சென்று பார்த்தபோது, அவர் மின் சாதனங்கள் விற்பனையையும், பழைய சாதனங்களில் பழுது நீக்கும் பணியையும் செய்பவர் எனத் தெரிந்துகொண்டேன்.

கிளையின் மேலாளர் என்னோடு வந்ததால், நாங்கள் வங்கியிலிருந்து தான் வருகிறோம் என அவர் அறிந்து கொண்டாலும், அந்த சிறிய கடையில் யாரும் இல்லாதபோலும் எங்களை கவனிக்காதவர் போல் ஏதோ பணி செய்து கொண்டு இருந்தார் அல்லது செய்வதுபோல் காட்டிக்கொண்டு இருந்தார்.  

நான் கடைக்கு வெளியே நின்றுகொண்டு இருக்க, மேலாளர் உள்ளே சென்று அவரிடம், நீங்கள் கொடுத்த புகார் பற்றி விசாரிக்க எங்களது RM (Regional Manager) வந்திருக்கிறார்.என்று சொன்னார்.

அப்போது கூட அவர் எங்களை இன்முகத்தோடு வரவேற்கவில்லை. யாரோ ஒரு எதிரியைப் பார்ப்பதுபோல்தான் எங்களை பார்த்தார். அவர் உள்ளே வாருங்கள் என்று கூப்பிடவில்லையானாலும், நான் உள்ளே சென்றேன். அப்போது கூட அவர் அவருக்கு எதிரே இருந்த இருக்கையில் என்னையோ அல்லது கிளை மேலாளரையோ அமர சொல்லவில்லை.

நான் அதை பொருட்படுத்தாமல், நீங்கள் எங்களது தலைமையகத்திற்கு எழுதிய புகார் பற்றி விசாரிக்க வந்திருக்கிறேன். உங்களது புகார் பற்றி விரிவாக சொல்லுங்கள். என்றேன்.

அதற்கு அவர், நான் சொல்லவேண்டியதையெல்லாம் விவரமாக எழுதிக் கொடுத்திட்டேன். இனி நான் சொல்ல என்ன இருக்கிறது. நான் கட்டிய பணம் ரூபாய் 2000 த்தை எனது கணக்கில் வரவு வைக்கவேண்டும். அவ்வளவுதான். என்றார்.

நான் அதுபற்றி விசாரிக்கத்தான், வங்கி சார்பாக வந்திருக்கிறேன். பணம் கட்டினேன் என்கிறீர்களே? யாரிடம் பணத்தைக் கொடுத்தீர்கள்? காசாளரிடம் தானே கொடுத்தீர்கள்?’ என்றேன்.

இல்லை.இல்லை. நான் பணம் கட்ட கிளைக்கு சென்றபோது வங்கியில் கூட்டம் அதிகமாக  இருந்ததால், நேரமாகும் என்பதால் வங்கியில் எனக்குத் தெரிந்த அந்த ஊழியரிடம் பணத்தை கொடுத்து கட்ட சொல்லிவிட்டு திரும்பிவிட்டேன்.

அவர்தான் பணம் கட்டியதற்கான இரசீதை கொடுத்தார். ஆனால் அடுத்தமுறை வங்கிக்கு சென்றபோது, அந்த பணம் எனது கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. அது பற்றி கேட்டதற்கு உங்கள் மேலாளர் நான் பணம் கட்டவில்லை என்கிறார். அதனால்தான் புகார் கொடுத்தேன். என்றார்.

வங்கியில் காசாளரிடம் தான் பணத்தைசெலுத்தவேண்டும் என உங்களுக்கு தெரியாதா? நீங்கள் அந்த ஊழியரிடம் தான் கொடுத்தீர்கள் என்பதற்கு என்ன அத்தாட்சி?’ என்றேன். 

என்னிடம் தான் உங்கள் வங்கியின் ஊழியர் தந்த அடிச்சீட்டு இருக்கிறதே. என்றார் அவர்.

அதற்கு நான்,’வங்கியில் காசாளரின் ஒப்பத்தோடு வங்கி முத்திரை உள்ள அடிச்சீட்டு இருந்தால் தான் வங்கியில் நீங்கள் பணம் கட்டியதாக எடுத்துக் கொள்ளப்படும். அது சரி. நீங்கள் மேலாளரை சந்தித்தபோது நீங்கள் பணமே கட்டவில்லை என்று சொன்னார் என்கிறீர்கள். அப்போது பணம் கொடுத்ததாக சொல்லப்படும் அந்த ஊழியரிடம் அது பற்றி நீங்கள் கேட்டீர்களா?’ என்றேன்.

உடனே அவர் கோபத்தோடு,’நீங்கள் தான் அதுபற்றி விசாரிக்கவேண்டும். அதற்குத்தான் புகார் கொடுத்துள்ளேன். என்று சொல்லிவிட்டு. எனக்கு வேறு வேலை இருக்கிறது. என்றார். அதாவது என்னோடு மேற்கொண்டு பேச விருப்பம் இல்லை என்பதை அவ்வாறு சொன்னார்.

இந்த உரையாடல் நடந்த அந்த 10 அல்லது 15 மணித்துணிகள் நான் நின்றுகொண்டு இருக்க, அவர் உட்கார்ந்து பதில் சொல்லிக்கொண்டு இருந்தார். அப்போது இதைக்கண்டு பொறுக்காத என்னோடு வந்த எங்கள் வட்டார அலுவலக அலுவலர், ஏதோ சொல்ல வாயெடுத்தார். அவரை கண்ணால் சைகை செய்து நிறுத்திவிட்டு, சரிங்க. நாங்கள் வருகிறோம். என்று கூறி திரும்பினேன்.

அங்கிருந்து காரில் திரும்பும்போது கிளை மேலாளரிடம், இந்த வாடிக்கையாளருக்கும் நமது கிளையின் கடைநிலை ஊழியருக்கும் என்ன தொடர்பு?’ எனக் கேட்டேன்.

அதற்கு அவர். நமது ஊழியர் இந்த மெயின் ரோடு அருகில்தான் குடி இருக்கிறார். தினம் கிளைக்கு வர இந்த பேருந்து நிறுத்தம் வந்து தான் பேருந்து ஏறவேண்டு.அப்போது இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டிருக்கவேண்டும். எனக்கென்னவோ அவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் இருக்கும் போல் தெரிகிறது. நான் கேட்டால் அதெல்லாம் இல்லை என்கிறார். நீங்கள் கேளுங்கள் சார். என்றார்.

சரி. அது பற்றி விசாரிப்போம். என சொல்லி கிளைக்கு வந்தேன்.


தொடரும்

16 கருத்துகள்:

  1. One needs patience and an attitude like water on lotus leaf- when dealing with such people... Awaiting to know what happened next...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதங்கி மாலி அவர்களே! தொடர்வதற்கும் நன்றி!

      நீக்கு
  2. "கொடுக்கல் வாங்கல்" விசாரணை அறிய ஆவலுடன் உள்ளேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  3. சொந்தப் பகையை விசாரணை புகார் என்று திருப்பிவிட்டாரோ..!!??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே! பொறுத்திருங்கள் உங்கள் யூகம் சரிதானா என் அறிய.

      நீக்கு
  4. In any organisation human problem is the most difficult one to solve. Technical problems can have some definite solutions. But in human, not everyone can be pleased at the same time. Waiting to see the outcome.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! உங்கள் கூற்று நூற்றுக்கு நூறு சரியே!

      நீக்கு
  5. விசாரணை தொடரட்டும், காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  6. கணேஷ் வசந்த் பாணியில் துப்பறியனும் போல இருக்கே. உங்களுக்கு சிக்கல் எங்களுக்கு சுவாரசியம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே! பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  7. இருக்கிற பிரச்சினை போதாது என்று இது மாதிரி வேறு தலைவலி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், நிலைமையை புரிந்துகொண்டதற்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

      நீக்கு
  8. மின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார் மக்களே; கருத்துக்களை பதிவு செய்ய உள்ள வாய்ப்பை பயன்படுத்துங்கள்


    தங்களுக்கு ஒரு வேண்டுகோள்
    அத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com
    அதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தகவலை பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றி திரு பால சுப்ரமணியன் அவர்களே!

      நீக்கு