செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 35

அனைவரும் மதிய உணவு முடித்த பின் கூட்டம் தொடங்க இருக்கும்போது கோவையில் உள்ள நண்பர்கள் மீனாட்சிசுந்தரமும், T.N பாலசுப்ரமணியனும் என்னிடம் வந்து ‘நடனம். இந்த முறை நாங்கள் கோவையில் சந்திப்பை நடத்தும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.’ என்று சொன்னார்கள்.




அதற்கு காரணம் காலையில் சிற்றுண்டி அருந்த வரிசையில் நின்றபோது சில நண்பர்கள் அடுத்த சந்திப்பு சென்னையில் வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். அதுபற்றி நண்பர் செல்லையாவிடம், அவரது கருத்தைக் கேட்டுக்கொண்டு இருந்தபோது நண்பர் மீனாட்சிசுந்தரம் அருகில் இருந்தார். அதனால் அவர் கோவை நண்பர்களிடம் கலந்தாலோசித்துவிட்டு வந்து தாங்கள் அடுத்த சந்திப்பை நடத்தும் பொறுப்பை ஏற்பதாக சொன்னார்.

கூட்டத்தில் கோவை நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அடுத்த சந்திப்பை கோவையில் 2018 ஆம் ஆண்டு வைத்துக்கொள்வது என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. தஞ்சை நண்பர்கள் தாங்களும் தேவையான உதவிகளை செய்வதாக சொன்னார்கள்.

பின்னர் நண்பர் அய்யம்பெருமாள்,காலையில் பேருந்துப் பயணத்தின்போது திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் அழைத்தது போலவே, ,அனைவரையும் கனடா வருமாறு அழைத்தார். கனடா திரும்பிய பிறகு நண்பர் பாலுவிற்கு பயணத்திற்கான பயண நிரல் (Itinerary) அனுப்பவதாகவும், 2017 ஜூலை திங்களில் வருவது உசிதமாக இருக்கும் என்றும் சொன்னார்.

(சொன்னதுபோலவே அவரும் பயண நிரலை அனுப்பியிருந்தார். ஆனால் நாங்கள் இந்த ஆண்டு ஜூலைத் திங்களில் கனடா செல்ல முடியவில்லை. அதற்கான காரணத்தை இந்த தொடரின் முடிவில் சொல்லுவேன்.)

பின்னர் இந்த முத்துப்பேட்டை காயல் பயணத்தை சிறப்பாக திட்டமிட்டு, படகுப் பயணம், உணவு உபசரிப்பு உட்பட எதிலும் எந்த குறையும் இல்லாமல் செய்து முடிக்கக் காரணமாக இருந்த நண்பர் நாகராஜனின் மகன் திரு சாமிநாதன் மற்றும் அவரது துணைவியாருக்கு நினைவுப் பரிசு அளித்து எங்களது மனநிறைவை, மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டோம். நண்பர் பாலு எங்கள் சார்பாக திருமதி மற்றும் திரு சாமிநாதனுக்கு பரிசை வழங்கினார்.



மேலேயுள்ள படத்தில் இடமிருந்து வலமாக நண்பர் பாலு, திருமதி சாமிநாதன், திரு சாமிநாதன், நண்பர் நாகராஜன், திரு சாமிநாதன் (இவர் திரு சாமிநாதனின் சகலர். இவரும் இன்னொரு சகலரும் எங்களின் பயணம் சிறப்பாக நடைபெற உதவினார்கள். கீழே அமர்ந்திருப்பது நண்பர் நாகராஜனின் பெயர்த்தி)

உண்மையில் இந்த முத்துபேட்டை காயல் பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டதே நண்பர் நாகராஜன் தான். தஞ்சை நண்பர்கள் சார்பில் இந்த பயணத்திற்கு அவரே பொறுப்பேற்று தனது மகன் மற்றும் மருமகள் மற்றும் உறவினர்கள் மூலம் சிறப்பாக ஏற்பாடுகளை செய்து, முத்துப்பேட்டை காயல் பயணத்தை மறக்கமுடியாத நிகழ்வாக எங்களுடைய மனதில் பதிய வைத்துவிட்டார். அவருக்கு மனமார்ந்த நன்றிகள்!

எங்களுக்கு இடம் கொடுத்து உதவிய அந்த வீட்டின் உரிமையாளருக்கு நன்றி சொல்லி கௌரவித்துவிட்டு, அனைவரும் 3.30 மணிக்கு அங்கிருந்து வேறொரு இடத்திற்கு புறப்பட்டோம்.

தொடரும்




24 கருத்துகள்:

  1. 2018 ல் அடுத்த சந்திப்பு கோவையில் நடக்கும் என்று எதிர் பார்க்கலாம் வேறொரு இடம் எது என்பதை காண ஆவலுடன் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! நாங்கள் அடித்து சென்ற வேறொரு இடம் எது என்பது இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தெரியும்

      நீக்கு
  2. பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு நாகேந்திர பாரதி அவர்களே!

      நீக்கு
  3. இப்படிப் பட்ட அருமையான நண்பர்களைப் பெற்றிருக்கும் நீங்கள் கனடா கூட சென்று வரலாம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு பகவான்ஜி அவர்களே! தாங்கள் கூறியது உண்மை தான். இது போன்ற நண்பர்கள் இருக்கும்போது எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம்.

      நீக்கு
  4. இத்தனை பேருக்கும் பயண ஏற்பாடுகள் செய்வது பெரிய விஷயம் தான். அவர்களுக்கு பாராட்டுகள்.

    அடுத்த இடம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! நாங்கள் சென்ற அடுத்த இடம் பற்றி அறிய காத்திருப்பதற்கும் நன்றி!

      நீக்கு
  5. அருமையான பயண்மும் திட்டமிடல்களும். அனைவரும் ஒன்றிணைந்து பயணம் செய்வதும் சந்திப்பதுமாய் வாசிக்கும் போது நாமும் அங்கே இருக்க மாட்டோமா எனும் ஏக்கத்தினை தருகின்றது. வாழ்த்துகள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி திருமதி நிஷா அவர்களே! எங்களது தஞ்சை வாழ் நண்பர்கள் தீவிரமாக சிந்தித்து சிறப்பாக திட்டமிட்டதால் தான் எங்களது பயணம் இனிமையாய் இருந்தது.

      நீக்கு

  6. திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் 29-08-2017 அன்று மின்னஞ்சலில் அனுப்பிய கருத்து:

    //கோவையில் உள்ள நண்பர்கள் மீனாட்சிசுந்தரமும், T.N பாலசுப்ரமணியனும் என்னிடம் வந்து ‘நடனம்.//

    முதலில் மேலோட்டமாகப் படித்தபோது, ஆண்களாகிய அவர்கள் இருவரும், ஆணாகிய உங்களுடன் இந்த வயதில் ஏன் நடனமாட வேண்டும் என நான் நினைத்து பயந்து போனேன். :)))))

    பிறகு அடுத்த வரிகளைப் படித்ததும் தான் புரிந்தது அவர்கள் உங்கள் பெயரை சுருக்கமாக ‘நடனம்’ எனச் சொல்லியுள்ளார்கள் என்று.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! எனது பெயரில் முன் பாதியை சுருக்கி நடனம் என்று கல்லூரியில் படிக்கும் வரை கூப்பிட்டார்கள். பணியில் சேர்ந்த பிறகு நான் சபாபதி என பின் பாதிப் பெயரால் அழைக்கப்பட்டேன். இன்றைக்கும் உறவினர்களுக்கும் வகுப்புத்தோழர்களுக்கும் நான்
      நடனம் தான். மற்றவர்களுக்கு சபாபதி.

      எனது பெயர் பற்றி என் பெயர் பட்ட பாடு என்ற தலைப்பில் ஜனவரி 2012 ஆம் ஆண்டு ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறேன்.

      நீக்கு
  7. திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் 29-08-2017 அன்று மின்னஞ்சலில் அனுப்பிய கருத்து:



    தங்களுக்குக் கனடா செல்லும் வாய்ப்பு விரைவில் கிடைக்கட்டும்.

    தொடரும் படங்களும் வழக்கம் போல சுவாரஸ்யமாக இருந்தது.

    மேலும் தொடர வாழ்த்துகள்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், பாராட்டுக்கும் கனடா செல்ல வாழ்த்தியமைக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  8. உங்களுக்குக் கிடைத்த நண்பர்ளே இவ்வாறான நிகழ்வு சிறப்பாக அமையக் காரணம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

      நீக்கு
  9. பதிவுலக நண்பர்களை விட எண்ணிக்கையில் குறைந்த நண்பர்கள் சந்திப்பு எளிதாக இருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!

    பதிலளிநீக்கு
  11. கட்டுரைத் தொடர் இறுதிப் பகுதிகளை நெருங்குவதாகத் தெரிகிறது.

    நண்பர் நாகராஜன் மறக்க முடியாதவர் தான். தான் நினைப்பதை நினைத்தவாறு முடித்து எல்லோரின் மகிழ்ச்சியிலும் பங்கு கொள்வது என்பது அரிய செயல்.

    இந்த தொடரில் நிறைய நல்ல மனத்தினர் அறிமுகம் ஆயினர்.
    இக்பால் இந்த சமயத்தில் நினைவுக்கு வருகிறார்.

    தொடர்ந்து வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், நண்பர்கள் நாகராஜன், இக்பால் மற்றும் உதவி செய்த நண்பர்களையும் பாராட்டியதற்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜீவி அவர்களே!! நீங்கள் கணித்தது சரியே! இந்த தொடர் இன்னும் மூன்று பதிவுகளுடன் நிறைவடைய இருக்கிறது.

      நீக்கு
  12. அடுத்த பொன்விழா சந்திப்பை, எங்கே வைத்துக் கொள்வது என்றவுடன், சென்னை நண்பர்களும், கோவை நண்பர்களும் முன் வந்ததையும், கோவைக்கு வாய்ப்பு கிட்டியதையும் படித்தவுடன், நமது வலைப்பதிவர்கள் சந்திப்பு, புதுக்கோட்டைக்குப் பிறகு அப்படியே நின்று விட்டதை நினைத்து வருத்தம் மேலிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.இளங்கோ அவர்களே! பதிவர் சந்திப்பு புதுக்கோட்டை சந்திப்பிற்கு பின் நடக்கவில்லையே என்ற வருத்தம் உங்களைப் போலவே எனக்கும் உண்டு.
      எங்களது வகுப்புத் தோழர்கள் முன்வந்து கோவையில் அடுத்த சந்திப்பை நடத்த ஒத்துக்கொண்ட காரணம், நான்கு ஆண்டுகள் ஒன்றாய் தங்கி படித்ததால் ஏற்பட்ட பிணைப்பும் எங்களுக்குள் இருந்த தொடர்பும் தான்.ஆனால் பதிவர்களின் குழு அப்படியல்லவே. அதனால் அந்த ஒருங்கிணைப்பு சாத்தியப்படவில்லை.

      நீக்கு

  13. வருகைக்கும், தொடர்வதற்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!

    பதிலளிநீக்கு