புதன், 22 ஏப்ரல், 2015

கசக்கும் உண்மை!



வெண்பாவும் நானும் என்ற தலைப்பில் பிப்ரவரி 15 ஆம் நாளன்று எழுதிய பதிவில் இனி வரும் நாட்களில் குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா,நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, கலி வெண்பா ஆகியவைகளை எழுதிப் பார்க்கப் போவதாக எழுதியிருந்தேன்.

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

கடவுளின் நாடும் கடையடைப்பும்!


வங்கியில் என்னோடு பணிபுரிந்த நண்பர் ஒருவரின் மகளின் திருமணம் ஏப்ரல் 8 ஆம் நாள் (அதாவது நேற்று முன் தினம் ) கோழிக்கோட்டில் நடக்க இருந்ததால் அங்கு செல்லவேண்டியிருந்தது. நண்பர் முன்பே திருமண நாளை தொலைபேசியில் சொல்லியிருந்ததால், இரயிலில் போகவும் திரும்பி வரவும் பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்துவிட்டேன்.

திங்கள், 30 மார்ச், 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 26




நமது அண்டை மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட குழுமம் ஒரு நிதி நிறுவனத்தை நல்ல முறையில் நடத்தி வந்தது. அந்த நிதி நிறுவனத்தை அதனுடைய நிறுவனர்கள் பல ஆண்டுகள் சிறப்பாக நடத்தி வந்தனர்.கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் பங்குதாரர்களுக்கு தவறாமல் கணிசமான ஈவுத்தொகையை தந்து வந்தனர்.

புதன், 11 மார்ச், 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 25




பொதுமக்களிடமிருந்து பெறுகின்ற வைப்புகளுக்கு வட்டியை தருவதும் அந்த வைப்புகளில் குறிப்பிட்ட விழுக்காட்டை தேவையானவர்களுக்கு கடனாக கொடுத்து வட்டியைப் பெற்று இலாபம் ஈட்டுவதுமே வங்கிகளின் தலையாய பணி. சுருக்கமாக சொன்னால் சேமிக்க விரும்புவோரிடமிருந்து பணத்தைப் பெற்று, வேண்டுவோருக்கு அதை கடனாக கொடுப்பதுதான் வங்கிகளின் வேலை.

சனி, 28 பிப்ரவரி, 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 24



மக்களிடம் பணத்தை பெற்று ஏமாற்றுபவர்கள் செய்வது சரியென்பது போலவும், தவறு பொது மக்களிடம் தான் இருக்கிறது என்பதுபோலவும் சென்ற பதிவில் நான் எழுதியிருப்பதாக சிலர் தவறாக புரிந்துகொண்டு இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

வெண்பாவும் நானும்



இந்த ஆண்டு பொங்கலன்று எனது பொங்கல் வாழ்த்தை வெண்பா வடிவில் வெளியிடவேண்டுமென்று என்று எண்ணினேன். ஆனாலும் பள்ளி இறுதி ஆண்டில் கற்ற (?) வெண்பா எழுதும் இலக்கணம் மறந்து போனதால் யாராவது வெண்பா எழுதுவது பற்றி பதிவில் எழுதி உதவமாட்டார்களா என்று நம்பிக்கையுடன் காத்திருந்தேன்.

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 23



சென்ற பதிவில் ‘பிரமிட் திட்டம்’ என்றால் என்று அறியுமுன் சில திட்டங்கள் எப்படி பொன்ஃஜி திட்டங்கள் ஆயின என்பதை சொல்வதாக எழுதியிருந்தேன். உண்மையில் சிலர் (இங்கே நான் மிகச் சிலரை மட்டுமே குறிப்பிடுகிறேன்) தங்களது நிறுவனம் மூலம் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தும்போது மக்களை ஏமாற்றுவதற்காக அந்த திட்டத்தை ஆரம்பிப்பதில்லை.