ஞாயிறு, 5 ஜனவரி, 2020

தொடரும் சந்திப்பு 18


நண்பர் நாச்சியப்பன் புதிர் போட்டி நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்தபோது  போட்டியில் சிறுவர் சிறுமியர் மற்றும் மகளிர் மட்டும் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்றும் ஒருவேளை அவர்களால் பதில் அளிக்க இயலவில்லை என்றால் எங்களுக்கு  பதில் அளிக்க வாய்ப்பு தரப்படும் என்றும், சரியான  பதிலை சொல்வோருக்கு ரூபாய் 100 பரிசாகத் தரப்படும் என அவர் அறிவித்தார் என சொல்லியிருந்தேன்.

திங்கள், 16 டிசம்பர், 2019

தொடரும் சந்திப்பு 17


மேலும் சில நண்பர்கள் அந்த இடத்தில் வந்து குழுமியதும் புகைப்படம் எடுத்துக்கொண்டும் அலுக்காமல் பழைய நிகழ்வுகளை  பகிர்ந்துகொண்டும் சில மணித்துணிகளை செலவிட்டோம்.

வெள்ளி, 6 டிசம்பர், 2019

தொடரும் சந்திப்பு 16





புல்வெளியை அடைந்தபோது ஏற்கனவே பல நண்பர்கள் குடும்பத்தினருடன் அங்கே குழுமியிருந்தனர். 2016 ஆம் ஆண்டு  தஞ்சையில் நடந்த சந்திப்புக்கு பிறகு சந்திப்பதால், எல்லோரும் மகிழ்ச்சியாக ஒருவருக்கொருவர்  நலம் விசாரித்துக்கொணடும். புகைப்படம் எடுத்துக்கொண்டும் இருந்தார்கள்.  

நானும்  அவர்களுடன் சேர்ந்து கொண்டதும், எல்லோரும் கேட்ட ஒரே கேள்வி நான் ஏன் என மனைவியை அழைத்து வரவில்லை என்பதுதான். 

சனி, 30 நவம்பர், 2019

தொடரும் சந்திப்பு 15



பெட்டிகளை  எடுத்துக்கொண்டு வரவேற்பு அறை சென்றபோது, அங்கே அந்த ஓய்வக மேலாளர்  திரு செல்வம்  அவர்களுடன்  தஞ்சை நண்பர் R பாலசுப்பிரமணியனும் இருந்தார்.  வரும் நண்பர்களுக்கு அறை ஒதுக்குவதற்கு உதவி செய்து கொண்டு இருந்தார். 

நண்பர் பாலுவின் ஆலோசனைப்படி எனது PAN அட்டையின்  நகலை முன்பே திரு செல்வம் அவர்களுக்கு அனுப்பிவிட்டபடியால், எனக்கான  அறை ஒதுக்கப்படிருந்தது.  அறை சாவியையும் WIFI க்கான கடவு சொல்லையும் தந்த திரு செல்வம், ஓய்வ‌க ஊழியர் ஒருவரை எனது அறையை காண்பிக்க அனுப்பினார். 

வரவேற்பு கட்டிடத்திலிருந்து வெளியே வந்ததும் கண்ட காட்சிகள் கண்ணுக்கு இனியவைகளாக இருந்தன, வரிசையாய் இருந்த குடில்களும் அழகான நீச்சல் குளமும், அதற்கு அருகே இருந்த பெரிய குளமும் சுற்றி இருந்த தங்கும் விடுதிகளும் தென்னை மரங்களும் என்னை ஏதோ ஒரு புதிய உலகிற்கு அழைத்து சென்றது போல் இருந்தது.











அவைகளைப் பார்த்து இரசித்துக் கொண்டே, அந்த ஓய்வக ஊழியரை பின் தொடர்ந்தேன். எனக்காக ஒதுக்கப்பட்ட அறையைத் திறந்து காட்டிவிட்டு ஏதேனும் தேவையெனில் தொலைபேசியில் அழைக்குமாறு கேட்டுக்கொண்டு திரும்பிவிட்டார். 

உள்ளே நுழைந்ததும் வரவேற்பு அறையும் அடுத்து படுக்கை அறையும் எல்லா வித  வசதிகளோடும் இருந்தன. இரண்டு அறைகளிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளும் இரண்டு குளியல் அறைகளும் இருந்தன.  








அறைக்கு வெளியே இருந்த குளத்தை அமர்ந்து பார்த்து இரசிக்க ஒரு அமைப்பும் இருந்தது.



அனைவரும் ஓய்வெடுத்துவிட்டு சுமார் 4 மணிக்கு நீச்சல் குளம் அருகே உள்ள புல்வெளியில் கூடவேண்டும் என நண்பர் பாலு  கேட்டுக் கொண்டதால் சிறிது நேரம் ஓய்வெடுத்தேன்.

பின்னர் குளித்து உடை மாற்றிக்கொண்டு 4 மணிக்கு நீச்சல் குளம் அருகே உள்ள புல்வெளியை அடைந்தேன். 


தொடரும்

வெள்ளி, 22 நவம்பர், 2019

சாமானியனும் சர்க்கரை நோயும்






சர்க்கரை நோய் என எல்லோராலும் அழைக்கப்படுகின்ற நீரிழிவு நோய்  (Diabetes) பற்றி நம்மில் பலருக்கு, ஏன் அனேகருக்கு சரியான புரிதல் இல்லை என்றே சொல்லலாம்.

வியாழன், 24 அக்டோபர், 2019

தொடரும் சந்திப்பு 14


ரத்னா ஸ்கொயர் விடுதி நோக்கி நடக்கும்போது, 1970 ஆம் ஆண்டு மே திங்கள் முதல் 1973 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் வரை பொள்ளாச்சியில் பணிபுரிந்தபோது நடந்த பழைய நிகழ்வுகள் மனதில் அலைமோதின.

திங்கள், 14 அக்டோபர், 2019

‘பெருமை’ பெயரிலும் வணிகக் குறியிலும் இருந்தால் மட்டும் போதுமா?





ஒரு நிறுவனம் நிலைத்து நிற்க வாடிக்கையாளர்கள் (ஆதரவு) தேவை. வாடிக்கையாளர்கள் இல்லாத நிறுவனம் ஆணிவேர் இல்லாத செடிக்கு ஒப்பாகும். ஏனெனில் ஆணிவேர் இல்லாத செடி நிலைத்து நிற்க முடியாது. அதுபோல் வாடிக்கையாளர்களின் ஆதரவு இல்லாத எந்த நிறுவனமும் நிலைத்து நிற்கமுடியாது.