வியாழன், 29 டிசம்பர், 2016

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 7


சிற்றுண்டியை சாப்பிட்டுவிட்டு அரங்க அறைக்கு செல்வதற்கு வந்த வழியே திரும்பும்போது. இடையில் இருந்த அறையில் பொன் விழா சந்திப்புக்கு வந்த நண்பர்கள் தங்களின் வருகையை பதிவு செய்துகொண்டு (Registration) இருப்பதைப் பார்த்து நானும் பதிவு செய்ய அங்கு சென்றேன்.


ஞாயிறு, 11 டிசம்பர், 2016

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 6

அரங்கினுள் நுழைந்தபோது அங்கே இருந்த மேடையின் பின்னே உள்ள திரையில் எங்களது சந்திப்பு பற்றிய இன்னொரு பதாகை மிளிர்ந்துகொண்டு இருக்க, அந்த மேடையில் அமர்ந்து தஞ்சையைச் சேர்ந்த இசைக்கலைஞர் திரு S.K. வேதய்யன் அவர்கள் தன் குழுவினருடன் வீணையை மீட்டி, வருவோருக்கு செவிக்கு விருந்து அளித்துக்கொண்டு இருப்பதைக் கண்டேன்.


வெள்ளி, 25 நவம்பர், 2016

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 5

இப்போதுதான் அறைக்குள் நுழைகிறோம் அதற்குள் கைப்பேசியில் கூப்பிடுவது யாரென்று பார்த்தால் நண்பர் பாலு அவர்கள் தான் இணைப்பில் இருந்தார். நாங்கள் வந்துவிட்டதை அறிந்து எங்களை வரவேற்றுவிட்டு வேறு யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என விசாரித்தார்.

வியாழன், 17 நவம்பர், 2016

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 4

தஞ்சை இரயில் சந்திப்பு நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் வெளியே எங்களை வரவேற்க நின்றுகொண்டிருந்த நண்பர் இக்பாலைப் பார்த்ததும் ஆச்சரியத்தோடு பார்த்து ‘நான் தான் வேண்டாம் என்று சொல்லியிருந்தேனே. எதற்கு இந்த வேளையில் சிரமப்பட்டு வந்தீர்கள்?‘ என கேட்டேன்.


ஞாயிறு, 6 நவம்பர், 2016

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 3

தஞ்சையில் நடக்க இருக்கும் பொன் விழா சங்கமத்திற்காக காத்திருக்கும்போது ஆகஸ்ட் கடைசி வாரத்தில் ஓரு நாள் சென்னையில் இருக்கும் நண்பர் ஹரிராமன் தொடர்புகொண்டு செப்டம்பர் 10 ஆம் நாளன்று தஞ்சை செல்ல நான் எந்த இரயிலில் முன்பதிவு செய்திருக்கிறேன் என விசாரித்தார். ஏனெனில் அவரும் அதே இரயிலில் முன்பதிவு செய்தால் அவர் தம் துணைவியாரோடு எங்களோடு வரலாமே என்பதற்காக.

புதன், 26 அக்டோபர், 2016

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 2

2013 ஆம் ஆண்டு தஞ்சையில் சந்திக்க முடிவெடுத்ததுமே அந்த சந்திப்பை சிறப்பாக நடத்த தஞ்சை நண்பர்கள் உடனே செயலில் இறங்கிவிட்டார்கள் என்று சொல்லியிருந்தேனல்லவா? அந்த சந்திப்புக்காக இரவு பகல் பாராது அதைப் பற்றியே சிந்தித்து பொன் விழா சந்திப்பை சிறப்பாக நடத்த முக்கிய பங்காற்றியவர் நண்பர் R.பாலசுப்ரமணியம்.

செவ்வாய், 18 அக்டோபர், 2016

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 1

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியல் பட்டப் படிப்பை
1962-1966 இல் படித்த வகுப்புத் தோழர்களாகிய நாங்கள், பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் 1967 ஆம் ஆண்டு சந்தித்த பிறகு, முதன் முறையாக புதுவையில் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 22, மற்றும் 23 நாட்களிலும், இரண்டாவது முறையாக கோடைக்கானலில் 2008 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 9,10, மற்றும் 11 ஆம் நாட்களிலும் சந்தித்தோம்.