ஞாயிறு, 15 ஜனவரி, 2023


பொங்கல் வாழ்த்து


தமிழர் திருநாளாம் பொங்கல் பெருநாளில்  

அல்லவை நீங்கிட நல்லவை சேர்ந்திட 

யாவர் மனதிலும் அன்பு பெருகிட

அன்புடன் வாழ்த்தும் வழுத்து


அன்பன்

வே.நடனசபாபதி


பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு மற்றும்  பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்! 





வெள்ளி, 14 ஜனவரி, 2022

பொங்கல் வாழ்த்து



உழுதொழில் செய்து உலகத்தை உய்விக்கும

உழவர் பெருமக்களை உள்ளன்புடன் வாழ்த்தி

ஓமிக்ரான் தொற்றும் கொரானா நுணங்கியும்

முன்வரும் நாட்களில் முற்றும் ஒழியவும்

துன்பங்கள் யாவும் தொலைந்து போகவும்

இனிவரும் காலம் இனிதாய் இருக்கவும்

எங்கும் நிறைந்த இறைவனை வேண்டி

தமிழர் திருநாளாம் பொங்கல் பெருநாளில்

வாழ்கவென வாழ்த்துவேன் நான்

 

 

அன்பன்

வே.நடனசபாபதி



வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நாள் வாழ்த்துகள்!



வியாழன், 14 ஜனவரி, 2021

பொங்கல் வாழ்த்து

உழுதொழில் செய்து உணவை அளிக்கும்

உழவர் குலத்தை உளமாற வாழ்த்தி

கொரானா நுணங்கி கொடுமை ஒழிந்து 

இனிவரும் நாட்கள் இனிதாய் இருக்கவும்

இன்பமும் ஈகையும் இவ்வுலகில் தங்கவும்

துன்மையும் துன்பமும் விட்டு விலகவும்

நன்மைகள் யாவையும் நாட்டவர் பெற்று

நலமுடன் வாழ இறைவனை வேண்டி

தைத்திங்கள் நன்னாளாம் பொங்கல் பெருநாளில் 

வாழ்கவென வாழ்த்துவேன் நான் 


அன்பன் 


வே,நடனசபாபதி 


பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்!


திங்கள், 26 அக்டோபர், 2020

எது சிறந்தது ? 8

 

எடுத்தூண்முறையில் அநேகமாக நின்றுகொண்டுதான் சாப்பிடவேண்டியிருக்கும்.அப்படி நின்று கொண்டு சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது பற்றி அறிவியலார்கள் சொல்லும் கருத்துக்கள் இதோ.

புதன், 23 செப்டம்பர், 2020

எது சிறந்தது ? 7


எடுத்தூண் முறையில் நாமே உணவு வகைகள்  வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு சென்று எடுத்து சாப்பிடவேண்டும் என்பதால், விருந்துக்கு வருவோர் விரைவில் சாப்பிட்டுவிட்டு திரும்பவேண்டும் என்று ஒரு ஒழுங்கைக் கடைப்பிடிக்காமல் கும்பலாக சென்று உணவை எடுக்க முயல்வதுண்டு. 

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

எது சிறந்தது ? 6







எடுத்தூண் (Buffet) முறையில் செலவு குறையும் என்பது உண்மையல்ல.  பந்தியில் பரிமாற ஆகும் செலவை விட இந்த முறையில் உணவுக்கு செலவு கூட வாய்ப்புண்டு.விருந்து அளிப்போர் மற்றும் விருந்தினர்கள் ஆகியோரே அதற்கு காரணம்.

சனி, 8 ஆகஸ்ட், 2020

எது சிறந்தது ? 5


திருமண விழாக்களிலும், மற்ற விழாக்களிலும் நடைபெறும் விருந்தில், விருந்தினர்கள் அமர்ந்து, பிறர் பரிமாறி சாப்பிடும் முறை மாறி, பலவித உணவு வகைகளை எல்லோருக்கும் பொதுவாக ஓரிடத்தில் வைத்து, விருந்தினர்கள் தாங்களே உணவைத் தேர்ந்தெடுத்து தட்டில் எடுத்துக்கொண்டு நின்றுகொண்டு சாப்பிடும் எடுத்தூண் (Buffet) என்ற முறை தற்போது வழக்கத்திற்கு வந்துள்ளது.