இந்த பதிவை எழுதும்போது Boss என்பதை தமிழில்
குறிப்பிடவேண்டும் என்று நினைத்து Boss என்பதற்கு
சரியான தமிழாக்கம் என்ன என்று பார்த்தேன்.
தலைவர் என்றும் முதலாளி என்றும் மேலதிகாரி
என்றும் பல் வேறு சொற்கள் கிடைத்தாலும்,
ஒவ்வொரு சொல்லும், வெவ்வேறு குழுவுக்கு
பொருந்துவதால் ஒன்றை குறிப்பிட்டால் அது
எல்லோருக்கும் பொருந்தாது என்பதால்
எல்லோருக்கும் பொதுவான சொல்லை குறிப்பிட
நினைத்தேன்.
அப்படி பார்க்கும்போது Boss என்பதை மொழிமாற்றம்
செய்வதைவிட,அப்படியே சொல்வதே சொல்வதே
சரியெனப் பட்டது எனக்கு.
சில ஆங்கில சொற்களை தமிழாக்கம் செய்வதை விட
அவற்றை அப்படியே தமிழில் எழுதலாம்.
எடுத்துக்காட்டாக Mayor என்பதற்கு நகரத்தந்தை என
சொன்னாலும், Mayor என்ற சொல்லும்போது
இருக்கின்ற அந்த வீச்சு மொழிமாற்றம் செய்யும்போது
இல்லை என்பது எனது கருத்து.
இதே போல்தான் தமிழில் உள்ள சில சொற்களுக்கு
இணையான ஆங்கில சொற்கள், சரியான
பொருளை/அழுத்தத்தைத் தருவதில்லை என்பது
உண்மை.
Boss கள் பற்றி எழுத எண்ணியபோது நினைவுக்கு
வந்தது அக்டோபர் 16 ஆம் தேதி. ஏன் ஏனெனில்
அன்றைய தினம் தான் Boss கள் தினமாம்!
நம் நாட்டில் இது இன்னும் பிரபலமாக வில்லை
என்றாலும் வரும் ஆண்டுகளில், இந்த நாளும்
‘எல்லோராலும்’ கொண்டாடப்படுவது நிச்சயம்.
மகளிர் தினம்,குழந்தைகள் தினம்,அன்னையர் தினம்,
தந்தையர் தினம், காதலர் தினம்,மூத்த குடிமக்கள்
தினம், என குறிப்பிட்டு ஏற்கனவே பல தினங்கள்
இருக்கும்போது இதுபோன்று இனி வரும் காலங்களில்
ஆண்டு முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒரு
பிரிவினருக்கு ஒரு தினம் என கொண்டாட
ஆரம்பித்து விடுவார்களோ என பயமாக இருக்கிறது.
வெளி நாட்டில் ஆரம்பித்த இந்த ‘வியாதி’
சமீபகாலமாக நம்மையும் தொற்றிக்கொண்டது
என்பதுதான் வருந்தக்கூடிய விஷயம்.
பல நிறுவனங்கள் தங்கள் பொருட்களை
நுகர்வோர் ‘தலையில் கட்ட’ இந்த சமயத்தைப்
பயன்படுத்திக்கொண்டு விளம்பரப்படுத்தி இலாபம்
சம்பாதிப்பது தான் அதைவிட கொடுமை.
ஒரு குறிப்பிட்ட நாளில் இந்த தினத்துக்கு
உரியவர்களை மரியாதை செய்து விட்டு மற்ற
நாளில் மறப்பதை விட இந்த நாட்களை
கொண்டாடாமல் இருப்பதே மேல்.
எடுத்துக்காட்டாக,அன்னையையும்,தந்தையையும்
தினம் போற்றி வந்தால்,ஆண்டில் ஒரு நாள் மட்டும்
கொண்டாடவேண்டிய அவசியம்தான் என்ன?
காலஞ்சென்ற எழுத்தாளர் புதுமைப்பித்தன் அவர்கள்
உயிரோடு இருக்கையில் அவர் கஷ்டப்பட்டபோது,
உதவாதவர்கள் தான் இறந்தபின் சிலை திறந்து,
விழா நடத்தி கொண்டாடவேண்டாம் என்பதை
வேளூர் வெ.கந்தசாமிப் பிள்ளை என்ற புனைபெயரில்
எழுதியிருந்த கவிதை இப்போது என் நினைவுக்கு
வருகிறது.
இத்தனைக்கும் மேலே இனி ஒன்று
ஐயா நான் செத்ததற்கும் பின்னால் நிதிகள் திரட்டாதீர்
நினைவை விளிம்புகட்டி கல்லில் வடித்து வையாதீர்
வானத்து அமரன் வந்தான் காண்
வந்தது போல் போனான் காண் என்று புலம்பாதீர்
அத்தனையும் வேண்டாம் -
அடியேனை விட்டு விடும்
எனவே விழா கொண்டாடி ‘அன்பை’ தெரிவிப்பதை
விட அவர்கள் நம்மோடு இருக்கும் காலங்களில்
காட்டவேண்டிய அன்பையும் பரிவையும் பாசத்தையும்
காட்டினால் இந்த தினங்கள் தேவையில்லை என்பது
என் கருத்து.
இனி தலைப்புக்கு வருவோம்.Boss கள் ஒவ்வொருவர்
கணிப்பிலும் வெவ்வேறு விதமாகத் தோன்றினாலும்
அவர்கள் அனைவரும் நான்கு பிரிவின் கீழ் வருவதாக
மனித வள ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
தொடரும்
நான்கு பிரிவா?சீக்கிரம் சொல்லுங்க!
பதிலளிநீக்குநம்ம சினிமாவில் எல்லாம் பாஸ் என்றால் அது ஐந்தாவது பிரிவு!
வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! அந்த நான்கு பிரிவுகள் பற்றி அறிய அடுத்த பதிவு வரை பொறுத்திருக்கவும்.
பதிலளிநீக்குஇத்தனைக்கும் மேலே இனி ஒன்று
பதிலளிநீக்குஐயா நான் செத்ததற்கும் பின்னால் நிதிகள் திரட்டாதீர்
நினைவை விளிம்புகட்டி கல்லில் வடித்து வையாதீர்
வானத்து அமரன் வந்தான் காண்
வந்தது போல் போனான் காண் என்று புலம்பாதீர்
அத்தனையும் வேண்டாம் -
அடியேனை விட்டு விடும் //
நான்கோ , ஐந்தோ கவிதை வரிகளின் உண்மை நிலை குறித்து வருத்தமே மிஞ்சுகிறது .
வருகைக்கு நன்றி திருமதி சசிகலா அவர்களே!
பதிலளிநீக்குஅந்த கவிதை வரிகள் படிப்போர் மனதில் இனம் புரியாத சோகத்தை உண்டாக்குவது உண்மைதான்.
ஹும்... எனக்கும் செ.பி. சொன்னது போல ‘பாஸ்’ என்றால் பழைய எம்.ஜி.ஆர். படம்தான் நினைவுக்கு வருது. இவங்களுக்கெல்லாம் ஒரு தினமா? கொடுமைடா சாமி! இப்படியே போனா 365 நாளும் விசேஷ ‘தினம்’களா கொண்டாடப்படும் போல!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கணேஷ் அவர்களே! உண்மைதான். வரும் நாட்களில் ஒரே நாளில் இரண்டு ‘தினம்’ கொண்டாடினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை!
பதிலளிநீக்குSuperb introduction. As rightly pointed out by you we admire anything that is is western and take immense pride in aping any thing even remotely associated with them and celebrating days of different kinds is no exception. Again as rightly pointed out showing concern and love during ones lifetime is what is required. Vasudevan
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!
பதிலளிநீக்குஅன்பின் நடன சபாபதி - என்னுடைய பிறந்த நாள் 16.10.1950. நான் Boss ஆ - தெரியவில்லை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சீனா அவர்களே! Boss கள் தினத்தில் பிறந்த நீங்கள் Boss தான். பணியில் இருக்கும்போது நிச்சயம் நல்ல Boss ஆக இருந்திருப்பீர்கள்.
நீக்குஇந்தத்தொடரின் ஆரம்ப முதல் பகுதியே அமர்க்களமாகத் துவங்கியுள்ளது. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குமேலும் அடுத்தடுத்த பகுதிகளைப் படிக்க இப்போதே ஆயத்தமாகி விட்டேன். தினமும் 2-3 பகுதிகளாகப் படித்து முடித்து விடுவேன்.
BOSS, MAYOR போன்ற சில சொற்கள் ஆங்கிலத்தில் இருப்பது போன்ற ஒரு கம்பீரம் தமிழாக்கம் செய்யும் போது வருவது இல்லை என்பது உண்மையே.
வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும், தொடரை படிக்க இருப்பதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!
நீக்கு