நான் பணி புரிந்த தேசிய
விதைக் கழகத்தில் (NSC) கூட சாதாரண
கடிதங்களில் Sir, என்றும் Demi Official கடிதங்களில் Dear Mr..... என ஆரம்பித்துத்தான் கடிதம் எழுதுவார்கள்.NSC யும் மைய அரசின்
நிறுவனமாக இருந்ததால் அங்கும் அரசின் அதே நடைமுறைகளே
கடைப் பிடிக்கப்பட்டன போலும்.
ஆனால் நான் பிறகு பணி புரிந்த வங்கியிலோ, சாதாரண
கடிதத்திற்கே Dear Sir என்றுதான் எழுதுவார்கள். மாநில
மற்றும்
மைய அரசின் துறைகளில்
ஊழியர்கள் (Subordinates) தங்கள் மேலதிகாரிகளுக்கு D.O கடிதம் எழுதும்போது உபயோகப்படுத்தும் சொற்பிரயோகம்,வங்கியில் சாதாரண கடிதம் எழுதும்போது
உபயோகப்படுத்தப்பட்டது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.
எல்லோரும் வழக்கத்தில் உள்ளதை அப்படியே பின் பற்றி
வந்ததால்,எது சரியான முறை
என்று சொல்ல யாருக்கும்
தெரிய வில்லை.
மேலும் வங்கிகளில் மேலாளரைத் தவிர மற்றவர்களுக்கு கடிதம்
எழுதும் வாய்ப்பு இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும்
அதுகூட காசோலைகளையும் (Cheques) வங்கி உண்டியல் (Hundis) களையும்
அனுப்புவதற்கான இணைப்புக் கடிதமாகத்தான் இருக்கும்.
ஊழியர்கள் வசதிக்காக அந்த வகை கடிதங்கள் கோடிட்ட
இடங்களுடன்.
அச்சிடப்பட்டே இருக்கும். காலியான இடங்களில் தேவையான விவரத்தை எழுதி அனுப்பினால் போதும். அதனால்
யாரும் கடிதம் எழுத நேரம் செலவிட வேண்டியதில்லை.எனவே
கடிதம் எழுதும் முறை பற்றி
யாரும் கவலைப்படுவதில்லை.
நானும் வங்கியில் மேலாளராக ஆனபோது,
எல்லோரும்
கடைப்பிடித்த முறையையே தொடர்ந்தேன். இருந்தாலும் சரியான
முறை என்னஎன்பதைப் பற்றி அறிய ஆவலோடு இருந்தேன்.
எனது ஆவல் நான் வங்கியில் சேர்ந்து 29 ஆண்டுகளுக்குப்
பிறகுதான்
அதாவது 1999 ல் தான் நிறைவேறியது. கோவையில்
எங்கள் வங்கியின் வட்டார மேலாளராகப் (Regional Manager) பணியாற்றிக்கொண்டு இருந்தபோது எங்கள் வங்கி, என்னை,
Business communication என்ற ஆறு நாட்கள் நடத்தப்பட்ட
பயிற்சிக்காக
1999 டிசம்பர் மாதம் ‘ஹைதராபாத்’ தில்
உள்ள
IDBI (Industrial Bank of India Ltd.,) ன் பயிற்சி
நிறுவனமான
Jawaharlal Nehru Institute for Development Banking (JNIDB) க்கு
அனுப்பியது.என்னைப்போல் எங்கள் வங்கியின் பணியாற்றிய
சில நண்பர்களும் பயிற்சி
பெற வந்திருந்தார்கள்.
உண்மையில் நான் பணியில் இருக்கும்போது எத்தனையோ
இடங்களில் பயிற்சியை
பெற்றிருந்தாலும் அங்கு (JNIDB) பெற்ற பயிற்சியை இன்னும்
என்னால் மறக்க இயலவில்லை.
ஆறு நாட்களும் வெவ்வேறு
துறைகளில் வல்லுனராக
இருந்தவர்கள் வந்து Process, Skills and Styles, Business Etiquette,
Executive Like Qualities, Business Writing போன்ற தலைப்புகளில் மிக அருமையான பேசி எங்களோடு கலந்துரையாடி நாங்கள்
அதுவரை அறிந்திராத பல புதிய கருத்துக்களை அறிந்து
கொள்ள உதவினார்கள்.
அங்குதான் Business Writing பற்றி எங்களுக்கு பயிற்சி தர ‘ஹைதராபாத்’தில் இருந்த Central Institute Of English And
Foreign Languages (CIEFL) என்ற மிக அருமையான
நிறுவனத்திலிருந்து Dr.Matthew
M Monipally என்ற பேராசிரியர்
வந்திருந்தார்.
(CIEFL பற்றி --- இந்த நிறுவனம் இந்தியாவின் முதல்
பிரதமர்
திரு ஜவஹர் லால் நேரு அவர்களின் எண்ணப்படி 1958 ல்
ஆங்கில பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கான பயிற்சி மையமாக தொடங்கப்பட்டது.
பின்னர் 1972 ஆங்கிலம் மட்டுமல்லாமல் மற்ற
வெளி நாட்டு மொழிகளை கற்றுத்தருவதற்கும் ஏதுவாக
Central Institute
Of English And Foreign Languages என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிறுவனம்
தருகின்ற உன்னத பயிற்சியின் காரணமாக 1973 ல் இந்த நிறுவனத்தை
UGC நிகர் நிலைப்
பல்கலைக் கழகமாக அங்கீகரித்துள்ளது.)
பேராசிரியர் முனைவர் மாத்யூ அவர்கள் சொன்னதிலிருந்து நான் கற்றுக்கொண்டது
பற்றி அடுத்த பதிவில்.
தொடரும்
நாங்களும் கற்றுக் கொள்கிறோம்!
பதிலளிநீக்குநன்று
வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
பதிலளிநீக்குமாத்யு அவர்கள் சொன்னதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
பதிலளிநீக்குவருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!
பதிலளிநீக்குநிறைய புதிய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறது சார்... நன்றி..
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
பதிலளிநீக்குஉங்கள் அனுபவ வாயிலாக நாமும் பல நல்ல விசயங்களை அறிந்து கொள்ள ஏதுவாக உள்ளது இப் பகிர்வுகள் .தொடர
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி அன்பு உள்ளம் அவர்களே!
பதிலளிநீக்குஅனுபவம் அறிவைத் தரும் என்பார்கள்..உங்கள் பதிவும் அதை மெய்ப்பித்தது
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு படைப்பாளி அவர்களே! பதிவர் சந்திப்பு அன்று உணவு இடைவேளையின் போது உங்களை சந்திக்க நினைத்தேன்.முடியவில்லை. பின்பு சந்திப்போம்.
பதிலளிநீக்குபயனுள்ள பகிர்வுகள்..
பதிலளிநீக்குகற்றுக்கொள்ள வேண்டிய பாடம்..
வருகைக்கு நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!
பதிலளிநீக்குவாசித்தேன் மிக்க நன்றி சகோதரா தங்கள் வரிகளிற்கு.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!
பதிலளிநீக்கு