ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

Boss கள் பலவிதம்! 39


எங்கள் வங்கியின் தலைமையகம்  அனுப்பும்  சுற்றறிக்கைகளில், 
ஊழியர் துறை சார்ந்த சுற்றறிக்கைகள் மட்டுமே அனைவரும் 
படிப்பார்கள். துறை சார்ந்தவர்கள் அவர்கள் துறையைப்பற்றிய சுற்றறிக்கைகளை மட்டும் படிப்பார்கள். மற்றவைகளை யாரும் படிப்பதில்லை என்று நான் முன்பே Boss கள் பலவிதம்! 29 ல் எழுதியிருக்கிறேன்.

ஏன் அவைகளை படிக்கவில்லை?’ என்று கேட்டால் நேரம் இல்லை. என்ற பதிலே எல்லோரிடமிருந்தும் கிடைக்கும்.

வங்கியின் மற்ற சுற்றறிக்கைகளை படிக்காததால்,வங்கி கொண்டு 
வரும் புதிய வைப்புகள் மற்றும் கடன்கள்  திட்டங்களைப் பற்றி கிளையில் உள்ள அனைவருக்கும் தெரிய வாய்ப்பிருக்காது. உதாரணத்திற்கு வைப்புகள் பார்க்கும் அலுவலர்களுக்கு கடன்கள் 
பற்றிய விவரங்கள் தெரியாது.
  
ஆனால் வங்கியில் நடத்தப்படும் பதவி உயர்வுத் தேர்வுகளுக்கு 
முக்கால் சதம் கேள்விகள் இந்த சுற்றறிக்கைகளிலிருந்தே கேட்கப்படும் என்பதால் அந்த தேர்வு பற்றி அறிவிப்பு வந்தவுடன் தான் எல்லோரும் அவைகளைத் தேடிப்பிடித்து படிக்க ஆரம்பிப்பார்கள்.

வங்கிக் கிளையில் ஒவ்வொரு சுற்றறிக்கையிலும் இரண்டு படிகள் தான் இருக்கும் என்பதால் தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குள்ளும் 
அலுவலக நேரம் முடிந்த பிறகு ஒரே நேரத்தில் படிக்க போட்டா போட்டி இருக்கும்.

இதை தவிர்ப்பதற்கும், வங்கிக்கிளையில்  பணிபுரியும் எல்லோருக்கும் எல்லா துறைகள் பற்றிய சமீபத்திய விதிமுறைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவும் நான் பணியாற்றிய ஒரு கிளையில் ஒரு புதிய ஏற்பாட்டை கொண்டு வந்தேன். ஒவ்வொரு சனிக்கிழமையும் மதியம் 
3 மணிக்கு  சுற்றறிக்கை வாசித்தல் கூட்டம் (Circular Reading Meeting) 
என்ற திட்டத்தைக் கொண்டுவந்தேன். 

சனிக்கிழமை அரை நாள் தான் வங்கிப்பணி என்பதால் வாடிக்கையாளர்களுக்கு இடையூறு இருக்காது என்பதால் அந்த ஏற்பாடு. அந்த சுற்றறிக்கை வாசித்தல் கூட்டத்தில் கலந்துகொள்வது கட்டாயம் இல்லை என்றும் விருப்பட்டவர்கள் எந்த பணிநிலைப்
(Cadre) இருந்தாலும் வந்து கலந்து கொள்ளலாம் எனவும் 
எல்லோரிடமும் சொன்னேன்.

அந்த கூட்டத்தில் அந்த வாரம் முழுதும் வந்த அனைத்து சுற்றறிக்கைகளையும் படித்து சந்தேகம் இருப்பின் விளக்கங்கள் கொடுத்தேன். அந்த சுற்றறிக்கைகளை நானே படிக்காமல் அந்தந்த 
துறை சார்ந்த அலுவலர்களை படிக்க சொன்னேன். அது  
One man show வாக இருக்கக்கூடாது என்பதால் எல்லோரையும் 
பங்கேற்க செய்தேன். 

முதலில் கூட்டம் ஆரம்பித்தபோது அவ்வளவாக யாரும் அக்கறை காட்டவில்லை. பிறகு வாரங்கள் செல்ல செல்ல கூட்டத்திற்கு 
வருவோர் எண்ணிக்கை கூட ஆரம்பித்தது. சோம்பல் காரணமாக 
படிக்க முடியாதவர்களும் பிறர் படிக்க சொல்லிக் கேட்டு அறிந்துகொள்வது சுலபமாக இருந்ததால் வர ஆரம்பித்தார்கள். 

கூட்டத்திற்கு வருவது கட்டாயம் இல்லை என்பதாலும்,எப்போது வேண்டுமானாலும் இடையிலே வரலாம் அல்லது போகலாம் என்பதாலும் அந்த சுற்றறிக்கை வாசித்தல் கூட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. பதவி உயர்வுக்கு உதவும் என்பதால் கடைநிலை ஊழியர்கள் கூட வந்து கலந்துகொண்டார்கள்.

வருடாந்திர பதவி உயர்வுக்கான தேர்வு பற்றிய அறிக்கை வந்தவுடன்
தேர்வு எழுதும்  ஊழியர்களுக்கு உதவ  பயிற்சி வகுப்புக்களையும் சனிக்கிழமைகளில் நடத்த ஏற்பாடு செய்தேன். என்னோடு வங்கியில்
இருந்த மூத்த மற்றும் Technical அலுவலர்களும் அந்த பயிற்சியில்
பங்கேற்று வகுப்புகள் எடுத்தார்கள்.

கேரளாவில் பணியாற்றியபோது இதே போன்று  சுற்றறிக்கை வாசித்தல் கூட்டம் மற்றும் பதவி உயர்வு தேர்வுக்கான வகுப்புகளை 
நடத்தியபோது 30 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் இருந்த எங்கள் கிளைகளில் இருந்தும் பலர் வந்து கலந்து கொண்டார்கள்.

தேர்வு முடிந்து முடிவுகள் வந்தபோது, அந்த கூட்டங்கள் மற்றும் பயிற்சிக்கு வந்த நண்பர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

எனது அந்த திட்டம்  பலர்  பதவி உயர்வு பெற காரணமாக இருந்தது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

அலுவலகத்தில் என்ன நடக்கிறது என்பதை உடன் பணியாற்றும் நண்பர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கோவையில் 
வட்டார மேலாளராக பணியாற்றிய போது ஒரு வழக்கத்தைக் கடைபிடித்தேன்.

தினம் காலையில் தலைமை அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகம் ஆகிய இடங்களிலிருந்து வரும் அஞ்சல்களைப் பிரித்தவுடன் 
அவைகளை நேரே அந்தந்த பிரிவு அலுவலகர்களுக்கு அனுப்பமாட்டேன். பிரிவு அலுவலர்கள் அனைவரையும் எனது அறைக்கு வரச்சொல்லி 
அந்த கடிதங்களைப் படித்து என்ன  செய்யவேண்டும் எனக் கூறிவிட்டு கொடுத்துவிடுவேன். 

இந்த முறையால் காலையில் அரை மணி நேரம் இதற்காக கழிந்தாலும் எல்லோருக்கும் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது உண்மை.  


தொடரும்

12 கருத்துகள்:

  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

    பதிலளிநீக்கு
  4. நல்ல வழக்க முறைகள். தொடருங்கள்
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    பதிலளிநீக்கு
  6. நல்ல திட்டங்களை நடைமுறைப் படுத்தி பலருக்கும் நன்மை செய்திருக்கிறீர்கள்.தனித்துவத்தை நிரூபித்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  8. சேனம் கட்டிய குதிரைகள் போல, தான் உண்டு தன் வேலை உண்டு என இல்லாமல். எல்லோருமே, தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பது எல்லாவற்றையும் பற்றி கொஞ்சமாவது தெரிந்துகொள்ளத்தான் வேண்டும்.

    GOOD HOUSE KEEPING உடன் WHAT IS WHAT & WHERE IS WHAT ? என அனைவரும் தெரிந்துகொள்வது மிக மிக அவசியமாகும்.

    புதுமையான பயனுள்ள பல ஏற்பாடுகளைத் தாங்கள் செய்துள்ளீர்கள். அதனால் பயனடைந்தவர்கள் அதனை என்றும் மறக்க மாட்டார்கள்.

    இதனால் தங்களின் தனித்தன்மையும், தனித்திறமைகளும், பொதுநல நோக்கும் பளிச்செனத் தெரிகிறது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு