1997 டிசம்பர் முதல் 2000 மே திங்கள் வரை
சிண்டிகேட் வங்கியின் தலைவர்
மற்றும் மேலாண்மை
இயக்குனராக இருந்த திரு K.V.கிருஷ்ணமூர்த்தி என்கிற
கும்பகோணம் வெங்கடேசன்
கிருஷ்ணமூர்த்தி அவர்கள்
நேற்று இரவு மும்பையில் காலமானார் என்று
அறிந்தபோது மிகவும் வருத்தப்பட்டேன்.
குறைந்த காலமே (மாதங்கள்) அவர் எங்கள் வங்கியை வழி
நடத்தி சென்றிருந்தாலும், அவரது அதிரடி நடவடிக்கைகளால்,
சரிந்து கிடந்த எங்கள்
வங்கியின் செல்வாக்கு உயர்ந்தது
என்பதும், வங்கி நல்ல முன்னேற்றத்தைக் கண்டது என்பதை
வங்கியில் பணியாற்றிவர்களும், வங்கியோடு
சம்பந்தப்பட்டவர்களும்
அறிவார்கள்.
அவர் இன்னும் சிறிது காலம்
இருந்திருந்தால் எங்கள் வங்கி
இன்னும் பல ஏற்றங்களை
கண்டிருக்கும் என்பதில்
ஐயமில்லை.
அவரது காலத்தில்தான் எங்கள்
வங்கி பொதுமக்களுக்கு
வங்கியின் பங்குகளை முகவிலையில்
(Face Value)
வெளியிட்டது என்பதும்,அப்போதிருந்த மந்தமான
வணிகச் சூழ்நிலையிலும்,அந்த பங்கு வெளியீடு அனைத்து
தரப்பினரின் ஆதரவை பெற்று,அமோக வெற்றியடைந்தது
என்பதும்,வரலாற்று
உண்மை.
வாடிக்கையாளர்கள்
கடன் வசதி பெற தாமதம் ஏற்படுவதைக்
கருதி கிளை மேலாளர் முதல் நிர்வாகத் தலைமையில்
இருந்த எல்லா நிலையில் உள்ள அலுவலர்களுக்கும்
கடன் தரும் விருப்புரிமை அதிகார (Discretion Powers)
வரம்பை அதிகரித்ததும் அவர் தான். அதனால் எங்களால்
கருதி கிளை மேலாளர் முதல் நிர்வாகத் தலைமையில்
இருந்த எல்லா நிலையில் உள்ள அலுவலர்களுக்கும்
கடன் தரும் விருப்புரிமை அதிகார (Discretion Powers)
வரம்பை அதிகரித்ததும் அவர் தான். அதனால் எங்களால்
உள்ள
வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளவும்,
புதிய
வாடிக்கையாளர்களை கவரவும் முடிந்தது.
அவர்
சொல்லுவார். ‘தலைவர் எல்லா
இடத்திலும்
இருக்கமுடியாது.
ஆனால் அவர் இருப்பதை ஊழியர்கள்
உணரவேண்டும்.
(His presence should be felt) அப்போதுதான்
யாரும் எந்த
தவறும் செய்யாமல் மக்களுக்கு சேவை
செய்யமுடியும்
என்று. இந்த தாரக மந்திரத்தை நானும்
பின்னால் கடைபிடித்தேன் என்பதை இங்கே
சொல்லிக்கொள்கிறேன்.
ஊழியர்கள்
வாடிக்கையாளர்களுக்கு நல்ல சேவையைத்
தந்து தங்கள் கடமையை ஒழுங்காக செய்யவேண்டும்
என்பதில் கண்டிப்பாக இருந்தாலும்,அவர்களது நலனையும்
அவர் கவனிக்காமல் இல்லை.ஆண்/பெண் ஊழியர்கள் சொந்த
வேலை காரணமாக நீண்ட நாள் விடுப்பு எடுக்க நினைத்தால்
ஓய்வு விடுப்பு (Sabbatical Leave) என்ற வசதியை முதன் முதல் வங்கிகளில் அறிமுகப்படுத்தியதும் அவர் தான்.
தந்து தங்கள் கடமையை ஒழுங்காக செய்யவேண்டும்
என்பதில் கண்டிப்பாக இருந்தாலும்,அவர்களது நலனையும்
அவர் கவனிக்காமல் இல்லை.ஆண்/பெண் ஊழியர்கள் சொந்த
வேலை காரணமாக நீண்ட நாள் விடுப்பு எடுக்க நினைத்தால்
ஓய்வு விடுப்பு (Sabbatical Leave) என்ற வசதியை முதன் முதல் வங்கிகளில் அறிமுகப்படுத்தியதும் அவர் தான்.
பணியில்
இருக்கும்போது இறக்கும் ஊழியர்களின்
குடும்பத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நிவாரணமாக
தர ஆணை பிறப்பித்ததும் அவர்தான்.
அவர் காலத்தில் தான் பல ஆண்டு காலங்கள் பதவி உயர்வு
பெறாமல் எல்லா மட்டத்திலும் இருந்தவர்கள் பதவி உயர்வு
பெற்றனர்.
குடும்பத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நிவாரணமாக
தர ஆணை பிறப்பித்ததும் அவர்தான்.
அவர் காலத்தில் தான் பல ஆண்டு காலங்கள் பதவி உயர்வு
பெறாமல் எல்லா மட்டத்திலும் இருந்தவர்கள் பதவி உயர்வு
பெற்றனர்.
எங்களில்
பலருக்கு, அவர் ஒரு முன்மாதிரி (Role Model)
என்று சொல்லிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.
என்று சொல்லிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.
அவர் இப்போது
எங்களுடனே இல்லையென்றாலும் அவர்
இருப்பதை நாங்கள் உணர்கின்றோம்.அவரது பூத உடல்
மறைந்தாலும் அவரது புகழ் என்றும் மறையாது.
இருப்பதை நாங்கள் உணர்கின்றோம்.அவரது பூத உடல்
மறைந்தாலும் அவரது புகழ் என்றும் மறையாது.
அவரது
குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லி, அவரது
ஆத்மா சாந்தி
அடைய பிரார்த்திக்கிறேன்.
(கூகிளார்க்கு
நன்றி படம் தந்தமைக்கு)
தாங்கள் பணிபுரிந்த சிண்டிகேட் வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக இருந்த திரு K.V.கிருஷ்ணமூர்த்தி அவர்களது மறைவுக்கு எனது கண்ணீர் அஞ்சலி!
பதிலளிநீக்குவருகைக்கும், கண்ணீர் அஞ்சலியில் கலந்துகொண்டதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!
நீக்குமறக்க முடியாத மாமனிதருக்கு அஞ்சலி!
பதிலளிநீக்குகண்ணீர் அஞ்சலியில் கலந்துகொண்டதற்கு நன்றி திரு குட்டன் அவர்களே!
நீக்குஅன்னாரின் சிறப்புகளை நீங்கள் சொல்ல அறிந்து கொண்டேன். அந்த மாமனிதருக்காய் நானும் என் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த நல்லாத்மா இறைவனிடம் அமைதி பெறட்டும்.
பதிலளிநீக்குகண்ணீர் அஞ்சலியில் கலந்துகொண்டதற்கு நன்றி திரு பால கணேஷ் அவர்களே!
நீக்குதங்கள் அஞ்சலியில் நானும் பங்கு கொள்கிறேன்!
கண்ணீர் அஞ்சலியில் கலந்துகொண்டதற்கு நன்றி புலவர் ஐயா அவர்களே!
நீக்குHe is only CMD of Syndicate Bank, a decade ago, but entire Syndicate family is sad to hear the demise of KVK. Sir, in the face book people from all walk of the life are joining the Syndicate family to convey their condolences to the bereaved family. This itself is clear indication, who is KVK and his contribution to the Bank. What we are today (Rs.3 lacs crore business)is the foundation laid by this great man. May God place his soul in Eternal Peace. Ponraj kumar
பதிலளிநீக்குHe is CMD of Syndicate Bank about a decade ago. However, the entire syndicate family is sad to hear the sudden demise of KVK, this itself is clear indication of his contribution to the Bank and its employees. On behalf of entire syndicate family, we pray the God to place his soul in Eternal peace.
பதிலளிநீக்குகண்ணீர் அஞ்சலியில் கலந்துகொண்டதற்கு நன்றி திரு பொன்ராஜ் குமார் அவர்களே!
நீக்குநீங்கள் கூறுவது முற்றிலும் சரியே.’இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்’ என்ற வரிகள் இவருக்கே பொருந்தும். சிண்டிகேட் வங்கி உள்ளவரை இவர் பெயர் சொல்லப்படும்.
நல்ல மனிதர்.
பதிலளிநீக்குகண்ணீர் அஞ்சலியில் கலந்துகொண்டதற்கு நன்றி திரு பழனி கந்தசாமி அவர்களே!
நீக்குஉங்களுடன் சேர்ந்து என் கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறேன் .நிர்வாகத்திறன் என்பதை வங்கியில் உணரவைத்தவர் .வியக்கவைத்தவர்
பதிலளிநீக்குபாலசுப்ரமணியன் s v
உண்மைதான். உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன். கண்ணீர் அஞ்சலியில் கலந்துகொண்டதற்கு நன்றி திரு S.V.பாலசுப்ரமணியன் அவர்களே!
நீக்குஅவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லி, அவரது
பதிலளிநீக்குஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.
கண்ணீர் அஞ்சலியில் கலந்துகொண்டதற்கு நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!
நீக்குI was in Bangalore the day he passed away. As an ex Syndicate-an I felt genuinely a tinge of pain in my heart. He was a role model / a good administrator who recognized and encouraged talented people / one who could not be swayed by sycophancy and one who instilled fear of God in the minds of non performers. Many of his contributions have been recalled in this blog. I would like to add one.. Union leaders who were having a free run earlier and were a law unto themselves were tamed in a masterly way which is worthy of emulation.Leaders who thought they were privileged and who thought that to remain glued in the place of their choice for eternity were made to eat the humble pie.
பதிலளிநீக்குA real genius who was impartial who created a level playing field for all irrespective of the region they belonged to . I can go on and on ..
RIP KVK.
Vasudevan
வருகைக்கும் தங்களது உணர்வுகளையும் பகிர்ந்தமைக்கு நன்றி திரு வாசு அவர்களே! திரு K.V.K அவர்களைப் பற்றி சொல்லவேண்டுமென்றால் சொல்லிக்கொண்டே போகலாம். அதற்கு பல பதிவுகள் இட வேண்டியிருக்கும். அவர் வங்கியை விட்டு சென்று 13 ஆண்டுகள் ஆகியும் நாம் அவரைப்பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்றால், அவர் ஏற்படுத்திய மாற்றங்களும் அதனால் வங்கி அடைந்த ஏற்றங்களும் தான் காரணம் என்பதில் இருவேறு கருத்து இருக்கமுடியாது. இனி அவர் போல ஒரு தலைவர் வருவாரா என்பதே ஐயம் தான்.
நீக்கு