ஞாயிறு, 27 ஜனவரி, 2013

வாடிக்கையாளர்களும் நானும் 27



ஒட்டுப்பலகை (Plywood) தயாரிப்பில் இருந்த இன்னொரு வாடிக்கையாளரால் அதே கிளையில் ஏற்பட்ட ஒரு 
இடியாப்பச் சிக்கலைப்பற்றி சொல்லுமுன், வேறொரு 
நிகழ்வை சொல்லலாமென எண்ணுகிறேன். இது 
தமிழ் நாட்டில் உள்ள ஒரு கிளையில் நான் 
மேலாளராக இருந்தபோது நடந்தது.

ஒரு நாள் காலை ஒருவர் அதிவேகமாக எனது 
அறைக்குள் நுழைந்தார். நுழைந்த வேகத்தில் என்னிடம்,
என்ன சார். உங்கள் வங்கியில் வாங்கிய 
கேட்பு காசோலைக்கு (Demand Draft) Counter ல் பணம் 
தரமாட்டீர்களா? அங்கு கேட்டால், தரமுடியாது. 
வேண்டுமானால் மேலாளரைப் பாருங்கள்.என்று   
சொல்கிறார்கள்.

என் பெயரில் உள்ள இந்த கேட்பு காசோலைக்கு 
பணம் தருமாறு கேட்கும்போது (on Demand) சட்டப்படி 
அதை நீங்கள் தந்தே ஆகவேண்டும். அப்படியிருக்கையில் 
எனக்கு தரமுடியாது என்று எப்படி சொல்லமுடியும். என 
பட பட வென பொரிந்தார்.

நான் அவரை அமர சொல்லி சாந்தப்படுத்திவிட்டு 
என்னவென்று விசாரித்தேன். வெளியூரிலிருந்த அவரது 
நண்பர் அவர் பெயரில் எங்கள் வங்கியின் கேட்பு காசோலை 
ஒன்றை எடுத்து அவருக்கு அனுப்பியுள்ளார். அது Cross 
செய்யப்படாத ஒன்று. அதனால் நேராக எங்கள் வங்கிக்கே 
வந்து Counter இல் கொடுத்து பணம் வாங்க 
நினைத்திருக்கிறார். அங்கே அவர்கள் தர மறுத்ததால் 
என்னிடம் வந்திருக்கிறார்.

நான் அவரிடம் உங்களுக்கு வேறு வங்கியில் கணக்கு 
இருக்கிறதா?’ என்று கேட்டேன். அவர் இருக்கிறது என்று 
சொன்னதும், அப்படியானால் நீங்கள் அங்கேயே கொடுத்து  
Clearing மூலம்  பணத்தைப் பெற்றிருக்கலாமே?’ என்றேன்.

அதற்கு அவர், Cross செய்திருந்தால்தானே வங்கி 
மூலம் அனுப்பவேண்டும். Open ஆக இருப்பதால் 
தான் நேரே வாங்க வந்தேன். ஆனால் உங்கள் கிளையில் 
தரமாட்டேன் என்கிறார்களே. என்றார்.  

என்ன காரணத்தாலோ அந்த கேட்பு காசோலையை அவருக்கு 
வேறு வங்கியில் கணக்கு இருந்தும், அங்கு கொடுத்து  
Clearing இல் அனுப்பாமல் எங்கள் கிளையில் நேரே 
பணம் பெற வந்திருக்கிறார் எனத் தெரிந்தது.

அவரிடம் பொறுமையாக, இது கேட்பு காசோலைதான். 
ஆனால் Cross செய்யப்படாமல் Open ஆக இருப்பதால் இதில் 
உள்ள தொகையை இது யாருக்காக வாங்கப்பட்டிருக்கிறதோ 
அவருக்கோ அல்லது அவரது ஆணை (Order) பெற்றவருக்கோ 
தான் தரமுடியும். இதில் குறிப்பிட்டுள்ளவர் நீங்கள் தான் 
என்று தெரிந்தால் தான் எங்களால் பணத்தைத் தரமுடியும்.
உங்களை எங்களுக்குத் தெரியாததால் தான், பணத்தை   
Counter இல் தர இயலாது என்று சொல்லியிருக்கிறார்கள்.

உங்களுக்குத் தெரிந்த எங்கள் வாடிக்கையாளர்கள் யாரேனும் 
உங்களை கண்டுணர்ந்தால் (Identify) நாங்கள் பணத்தைத் தர 
இயலும்.இல்லாவிடில் நீங்கள் கணக்கு வைத்துள்ள 
வங்கியில் கொடுத்தால் அவர்கள் உங்களுக்காக 
இதை Clearing இல் அனுப்பி பணத்தை வசூலித்து 
உங்கள் கணக்கில் சேர்த்து விடுவார்கள். என்றேன்.

கேட்புக் காசோலை வாங்கியவர்களுக்குத் தெரியும். 
அதில் On Demand Pay  .......... Or order என்றிருக்கும். 
(இப்போது  எல்லாமே On Line Payment என்று 
ஆகிவிட்டதால் இதனுடைய பயன்பாடு குறைந்துவிட்டது. 
அதனால் இது பற்றி இளைய வாடிக்கையாளர்களுக்கு 
தெரிய வாய்ப்பில்லை)  

யாருக்காக அந்த கேட்பு காசோலை வாங்கப்பட்டதோ 
அவர் பெயர் தான் On Demand Pay  க்கு பின் எழுதப்பட்டு 
இருக்கும். மேலும் அது Order காசோலை என்பதால் 
அவரோ அல்லது அவர் உத்திரவு பெற்றவரோ தான் அதில் 
உள்ள தொகையைப் பெறமுடியும். வங்கியைப் 
பொருத்தவரையில் கேட்பு காசோலையில் குறிப்பிட்டுள்ள 
நபருக்குத்தான் பணத்தைத் தர இயலும். அதற்கு முன் 
அந்த பணத்தைப் பெறுபவர் காசோலையில் 
குறிப்பிட்டுள்ள நபர் தான் என்பது கண்டிப்பாகத் 
தெரிந்திருக்கவேண்டும்.

அன்று வந்தவர் எங்கள் வாடிக்கையாளருமல்லர். எங்கள் 
வங்கிக்குத் தெரிந்தவருமல்ல. எங்களுக்குத்தெரிந்த யாரும் 
அவரை அறிமுகப்படுத்தாததால் அந்த தொகையைத் தர 
இயலவில்லை.

அவரிடம் எவ்வளவோ விளக்கிச் சொல்லியும் அவர் 
கேட்பதாக இல்லை. விடாப்பிடியாக நீங்கள் பணத்தை 
தந்தே ஆகவெண்டும். இல்லாவிடில் தரமுடியாது 
என்று எழுதிக்கொடுங்கள். என்றார்.

சரி என்று சொல்லிவிட்டு, நீங்கள் தயை செய்து 
வெளியே காத்திருங்கள். கடிதத்தை  தட்டச்சு செய்து 
கையொப்பமிட்டு தருகிறேன். என்றேன். அவர் வெளியே 
சென்று அமர்ந்ததும், சுருக்கெழுத்தாளரைக் கூப்பிட்டு 
கடிதத்தில் எழுதவேண்டியதை சொல்லி தட்டச்சு செய்து 
வரச் சொன்னேன்.

சுருக்கெழுத்தாளர் தட்டச்சு செய்து கொண்டு வந்த 
கடிதத்தில் கையொப்பமிட்டு, வெளியே கோபமாய் 
அமர்ந்திருந்தவரை கூப்பிட்டு கொடுத்தேன். அதை 
வாங்கிப் படித்த அவர் முகம் சுருங்கிப்போயிற்று.  
ஒன்றும் சொல்லாமல் வாங்கிக்கொண்டு போய்விட்டார்.

அவரது முகத்தை சுருங்கச் செய்யும்படி என்ன 
எழுதியிருந்தேன் என நினைக்கிறீர்கள்? 
வேறொன்றுமில்லை. கடிதத்தின் தலைப்பை  
 To Whomsoever it may concern என்று கொடுத்துவிட்டு, 
அதற்கு கீழே, அவர் கொண்டு வந்த கேட்பு 
காசோலையின் எண் மற்றும் தொகையைக் குறிப்பிட்டு 
அது ஒரு Order Instrument என்பதால், அதில் 
குறிப்பிட்டுள்ள பணம் பெறுபவர் (Payee) யாரெனத் 
தெரியாததால், அந்த காசோலையைக் கொண்டு
வந்தவரிடம் அதில் உள்ள தொகையை 
தரமுடியவில்லை என ஒரு சான்றிதழ்போல் 
எழுதியிருந்தேன்.

அதற்கு  கீழே  To என எழுதி, The Bearer of the above 
mentioned Demand Draft எனக் குறிப்பிட்டிருந்தேன். அந்த 
வரிதான் அவர் முகத்தை சுருங்க வைத்துவிட்டது. அவர் 
என்ன நினைத்திருப்பார் என்றால் நான் அந்த கடிதத்தை 
அந்த காசோலை யார் பெயரில் எடுக்கப்பட்டிருந்ததோ 
அவர் பெயருக்கு எழுதிக் கொடுப்பேன் என்று.

அப்படி எழுதி இருந்தால் அவர் வங்கி மேல் நீதிமன்ற 
நடவடிக்கை எடுத்திருக்கமுடியும். காரணம். 
காசோலையில் உள்ளவர் பெயரைக் குறிப்பிட்டு அவருக்கு 
தரமுடியாது என எழுதியிருந்தால், வங்கிக்கு அவர் 
யாரென தெரிந்ததால்தான் அவர் பெயருக்கு கடிதம் 
தந்திருக்கிறார்கள் என்றும் அவர் யாரெனத் தெரிந்தபிறகு 
வேண்டுமென்றே பணத்தைத் தரவில்லை என்றும் 
அவரது வழக்கறிஞர் வாதாடியிருப்பார். அப்படி 
செய்யமுடியாது என்பதால்தான் அவர் முகம் 
வாடிப்போயிற்று.

இது நடந்த மறுநாள் Clearing இல் அந்த கேட்பு காசோலை 
அவரது வங்கி மூலம் அனுப்பப்பட்டு அந்த தொகையை 
அவர் பெற்றுக்கொண்டார்.

இப்படி  சில வாடிக்கையாளர்கள் தடுக்குக்கு 
கீழே நுழைபவர்கள் போல் இருக்கும்போது, 
வங்கி மேலாளர்கள் கோலத்தின் கீழ் நுழைபவர்கள் 
ஆக இருந்தால்தானே சமாளிக்கமுடியும்!   


தொடரும்

34 கருத்துகள்:

  1. இவ்வளவு விஷயம் இருக்கிறதா?பல நடைமுறைகளை சொல்லுகிறீர்கள்.மிகவும் பயன் உள்ளது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!

      நீக்கு
  2. Thaangal pagirndhukollum thangalin nigaivukal indraiya pudhia தலைமுறை வஙகி adhikarikaluku mattumallathu anaivarukum migavum upayogamaga irrukum. Thangalin indha seeria panni thodarattum.

    Ponraj குமார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு பொன்ராஜ் குமார் அவர்களே!

      நீக்கு
  3. வங்கிப் பணியில் நாளும் ஒரு பாடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! வங்கிப்ப்ணியில் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பாடம்தான்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு குட்டன் அவர்களே!

      நீக்கு
  5. வங்கியின் நடைமுறை பற்றிய தெளிவான விளக்கம் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி புலவர் ஐயாஅவர்களே!

      நீக்கு
  6. பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  7. சாமர்த்தியமான தங்களின் நடவடிக்கை பாராட்டுக்கு உரியது ...வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

      நீக்கு
  8. தக்க பதில் அடி கொடுத்துள்ளீர்கள். இணையம் பக்கம் சில நாட்களாக வர இயலவில்லை அதனால தாமதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!

      நீக்கு
  9. Please see http://ennulagam.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BE.%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D

    Regards,
    Dondu N. Raghavan

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு டோண்டு N.இராகவன் அவர்களே! நீங்கள் கொடுத்துள்ள Link ஐ பார்க்க இயலவில்லை. திரும்பவும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

      நீக்கு
  10. சுதந்திரமாக இப்போதுதான் கருத்துகளையும் அனுபவங்களையும் பகிரமுடிகிறது என்று நினைக்கிறேன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு கவியாழி கண்ணதாசன் அவர்களே!

      நீக்கு
  11. Dear Sir,
    Experience is the main thing which we need to learn from other's. I used to read all your articles. Each & Every article (especially experience with BOSS), excellent ones. This article shows how we should be careful, while addressing somebody. Great. Thanks for sharing your experience Sir.

    Regards -Sriram.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்ந்து எனது பதிவுகளை படித்து வருவதற்கும் நன்றி திரு ஸ்ரீராம் அவர்களே!

      நீக்கு
  12. Mr Dondu sir's link :

    http://ennulagam.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BE.%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D

    is opening. May be you might have misses some letters. Just copy & paste it.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு டோண்டு அவர்கள் கொடுத்த இணைப்பை இப்போது திறந்து படிக்க முடிகிறது. திரு டோண்டு அவர்களுக்கும், உங்களுக்கும் நன்றி திரு ஸ்ரீராம் அவர்களே!

      நீக்கு
  13. அன்பின் நடன சபாபதி - அருமையான அணுகுமுறை - வங்கியில் இது மாதிரி வாடிக்கையாளர்கள் வருவது இயல்பான ஒன்று தான் - சரியான முறையில் அவரைச் சமாளித்த் விதம் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  14. பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வாசு அவர்களே!

      நீக்கு
  15. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சீனா அவர்களே!

    பதிலளிநீக்கு
  16. அன்பின் நடன சபாபதி - உண்மை தான் - அவரகள் தடுக்குக்குள் நுழைந்தால் நாம் கோலத்திற்குள் நுழைந்தே தீரவேண்டும் = நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சீனா அவர்களே!

      நீக்கு
  17. வருகைக்கு நன்றி திரு அனானி அவர்களே! வங்கிகளில் கணக்கைத் தொடங்க Proof of Identity மற்றும் Address Proof க்கு நிச்சயம் ஓட்டுனர் உரிமத்தை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் குறிப்பிட்டுள்ள நிகழ்வில் அவர் எந்த Proof யும் கொண்டுவரவில்லை. அப்படியே கொண்டு வந்திருந்தாலும் அவருக்கு அந்த காசோலையில் உள்ள பணத்தைத் தந்திருக்கமுடியாது. காரணம் அந்த காசோலை யாருக்காக எடுக்கப்பட்டதோ அந்த நபரும் அதை கொண்டு வருபவரும் ஒருவர்தான் என்று வங்கிக்குத் தெரியாதே. உதாரணத்திற்கு உங்கள் பெயரும் என் பெயரும் ஒன்றாய் இருந்து, உங்களுக்கு வந்த காசோலையை நான் எடுத்துக்கொண்டு போய் எனது Identity Card ஐ காட்டி பணத்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பு உண்டல்லவா?

    பதிலளிநீக்கு
  18. பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி ரகுநாதன் அவர்களே!

      நீக்கு