வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

வாடிக்கையாளர்களும் நானும் 28


போன பதிவில் சொல்லியிருந்தது போல, கேரளாவில் 
இருந்தபோது ஒட்டுப்பலகை (Plywood) தயாரிப்பாளரான 
ஒரு வாடிக்கையாளரால் ஏற்பட்ட சிக்கல் 
மறக்கமுடியாத ஒன்று.

அந்த வாடிக்கையாளர்  தனது தயாரிப்புகளை 
வெளி நாடுகளுக்கு குறிப்பாக மத்தியத் தரைக் கடல் 
நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகொண்டு இருந்தார். 
எங்களது வங்கியின் நீண்ட கால வாடிக்கையாளராதலால், 
அவருக்கு எங்கள் வங்கியில் ஏற்றுமதிக்கான 
கடன் வசதிகளும் இருந்தன.

நான் முதன் முதல் அந்த கிளைக்கு பதவி உயர்வு 
பெற்று முதன்மை மேலாளராக சேர்ந்த அன்று மதியம், 
அவர் என்னைப் பார்த்து வாழ்த்தி வரவேற்க வந்தார். 
வங்கி கிளைகளில் புதிய மேலாளர் வரும்போது அதை 
தெரிந்துகொண்டு வாடிக்கையாளர்கள் வந்து தங்களை 
அறிமுகம் செய்து போவது வழக்கம்.

அந்த வகையில் வந்த அவரை, எனது மேலாளர் 
அழைத்து வந்து அவரது நிறுவனம் பல ஆண்டுகளாக 
எங்கள் வங்கியில் வணிகம் செய்வதாகவும், வங்கியில் 
உள்ள ஏற்றுமதி வாடிக்கையாளரில் அவர் 
முதன்மையானவர் என்று அறிமுகப்படுத்தினார்.

அவரை வரவேற்று அமரவைத்து அவரது நிறுவனம் 
பற்றியும் அவரது தயாரிப்புகள் பற்றியும் விசாரித்தேன். 
அப்போது அவர், சார். நீங்கள் தயார் என்றால் 
இப்போதே வந்து எனது தொழிற்சாலையைப் 
பார்வையிடலாம். அது இந்த ஊரின் எல்லையில் தான் 
உள்ளது. அங்கு உங்களை நானே அழைத்துப் 
போகிறேன். என்றார்.

நான் பதில் சொல்லுமுன் எனது மேலாளர்,‘சார். 
நாளையிலிருந்து  முக்கியமான வாடிக்கையாளர்களை 
நீங்கள் சந்திக்க திட்டம் ஒன்று தயாரித்து இருந்தேன்.
அதில் இவரது தொழிற்சாலையும் அடக்கம்.எனவே 
நாளை செல்வதை விட இன்று மாலை 4 மணிக்கு 
சென்று வரலாமே?’என்றார். நானும் சரி. என்றதும், 
அவர் நான் வந்து உங்களை 4 மணிக்கு அழைத்து 
செல்கிறேன். எனக்கூறி சென்றுவிட்டார்.

அவர் சென்றதும் அவரது நிறுவனத்தின் கோப்புகளை 
கொண்டு வர சொல்லி அவரது நிறுவனத்திற்கு 
அளிக்கப்பட்டுள்ள வசதிகள் பற்றி அறிந்து கொண்டேன்.
சொன்னபடியே மாலை 4 மணிக்கு வந்து என்னை 
அழைத்து சென்றார்.என்னுடன் எனது மேலாளரும் 
வந்தார்.

அவருடன் சென்று அவரது தொழிற்சாலையைப் 
பார்த்துவிட்டு, திரும்பி எனது கிளைக்கு வந்ததும், 
அந்த வாடிக்கையாளர் கிளம்பு முன் கேட்டார்.’சார். 
இன்று மாலை உங்களது பரிபாடி என்ன என்று?’

 எனக்கு அவர் என்ன கேட்கிறார் எனத் தெரியவில்லை. 
உடனே மேலாளர் சார்.இன்று மாலை உங்களுக்கு 
என்ன Programme என்று அவர் கேட்கிறார்?’ அன்று 
அந்த மலையாள சொல்லை மொழிபெயர்த்து 
சொன்னார்.

நான் ஒன்றுமில்லை. இரவு இரயிலில் சரியான 
தூக்கம் இல்லை. எனவே தங்கியிருக்கும் அறைக்கு 
சென்று ஓய்வு எடுக்க இருக்கிறேன். 
ஏன் கேட்கிறீர்கள்?’ என்றேன்.

அவர் தாங்கள் விரும்பினால், மாலை உங்களுக்கு 
ஒரு Treat  Bar இல்  தரலாமேன் நினைத்தேன்.
அதற்காகத்தான் கேட்டேன். என்றார். அதற்கு நான், 
மன்னிக்கவும் நான் ஒரு Teetotaler. எனினும் தங்கள் 
அழைப்பிற்கு நன்றி. என்றேன்.

அவர், என்ன மதுவை தொடவே மாட்டீர்களா? 
என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.

ஆமாம். என்று சொன்னவுடன். அப்படி என்றால் 
இந்த ஊரில் உங்களையும் சேர்த்து மூன்று பேர் தான் 
குடிக்காதவர்கள். என்றார் நமட்டுச் சிரிப்புடன்.

மற்ற இரண்டு பேரும் யார் எனக் கேட்டதற்கு 
அவர் சொன்ன பதிலைக் கேட்டு சிரித்துவிட்டேன்.

தொடரும்














22 கருத்துகள்:

  1. சார்... நலமா...?

    மீதம் இரண்டு பேர் "நேற்று பிறந்த குழந்தையும், இன்று பிறக்கப் போகிற குழந்தையும்" என்று சொன்னாரா...?

    பதிவின் மூலம் சந்தித்து சில மாதங்கள் ஆகி விட்டது... நேரம் கிடைக்கும் போது முந்தைய பதிவுகளையும் படிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! நலமே. நீங்கள் எப்போது திரும்பவும் பதிவிட இருக்கிறீர்கள்? உங்கள் யூகம் சரியா என சரிபார்க்க அடுத்த பதிவைப் பாருங்கள்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி Diary A to Z.com நண்பரே! தொடர இருப்பதற்கும் நன்றி!

      நீக்கு
  3. பதில்கள்
    1. வருகைக்கும், காத்துக்கொண்டு இருப்பதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  4. வருகைக்கும் கேள்விக்கும் நன்றி திரு குட்டன் அவர்களே! பொறுத்திருங்கள் உங்கள் இரட்டைக் கேள்விக்கான பதிலை அறிய!

    பதிலளிநீக்கு
  5. சார், ippadi சஸ்பென்ஸ் aaga niruthuvadhu nyayama?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு பொன்ராஜ் குமார் அவர்களே! இப்படி முடித்தால் தானே நீங்கள் இது போன்ற பின்னூட்டங்களை இட முடியும்!

      நீக்கு
  6. பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு கவியாழி கண்ணதாசன் அவர்களே! யார் அவர்கள் என்பது அடுத்த பதிவில்!

      நீக்கு
  7. வங்கி அனுபவங்கள் வியக்கவைக்கின்றன ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

      நீக்கு
  8. Many of the managers' fall into such traps, which look so innocuous , unwittingly to regret later any yield to the pressures of customers and extend favours that they may or may not deserve.
    Being a teetotaler was a factor that helped you to avoid the trap.
    WHO ARE THE OTHER TWO. ONE MAY BE THE CUSTOMER HIMSELF ..

    VASUDEVAN

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!
      இந்த நேரத்தில் எனக்கு ஒரு திரைப்பட பாடல் நினைவுக்கு வருகிறது.

      எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே - உன்னை
      இடர வைத்து தள்ளப் பார்க்கும் குழியிலே
      அத்தனையும் தாண்டி காலை முன்வையடா - நீ
      அஞ்சாமல் கடமையிலே கண் வையடா
      சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா, செல்லடா.


      எனவே நமது கடமையில் கண்ணாக இருந்தால் கவலைப்படத்தேவையில்லை என்பது என் கருத்து.
      அந்த இன்னொரு நபர் வாடிக்கையாளர் அல்லர். ஏனென்றால் அவர் தானே விருந்துக்கு அழைத்தார். பொறுங்கள் யாரெனத் தெரிந்துவிடும்

      நீக்கு
  9. Your reply to my observations was very apt. Despite all the temptations and hurdles faced if one focus on goals with all sincerity and honesty and perseverance , one is likely to succeed in ones' mission. The CONTENTS OF THE song from " NEELA MALAI THIRUDAN " SUNG BEAUTIFULLY BY TMS IS RELEVANT FOR ALL TIMES TO COME. VASUDEVAN

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது பதிலுக்கு பின்னூட்டமிட்டதற்கு நன்றி திரு வாசு அவர்களே! தாங்கள் கூறுவது சரியே!

      நீக்கு
  10. The other two non drinkers could be the pub's owner & his employee.

    Packirisamy N

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கணிப்பிற்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே!. ஆனால் அவர் சொன்னது வேறு!

      நீக்கு
  11. ஸார் இப்படி சஸ்பென்சை வளர்க்கக் கூடாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொறுங்கள் திரு பொன்ராஜ் குமார் அவர்களே! இன்று அல்லது நாளைக்குள் வெளியிட இருக்கிறேன்.

      நீக்கு