ஞாயிறு, 6 டிசம்பர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.13


எங்களது பல்கலைக்கழக வரலாற்றில் யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல், முகம் தெரியா நண்பர்கள் வெளியிட்ட துண்டறிக்கையை படித்துவிட்டு 27-01-1965 நாளன்று கூடிய கூட்டம் அதுவாகத்தான் இருக்கமுடியும் என நினைக்கிறேன். யாரும் யாரிடமும் பேசிக்கொள்ளாமல் தாங்களே முடிவெடுத்து தன்னிச்சையாக அந்த கண்டனப் போராட்ட ஊர்வலத்தில் மாணவர்கள் கலந்துகொண்டதால் அதை ஒரு மௌனப் புரட்சி என்றே சொல்வேன்.

புதன், 25 நவம்பர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.12



1965 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 25 ஆம் நாள் மதுரையில் இந்தி திணிப்பை எதிர்த்து ஊர்வலம் நடத்திய மாணவர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து, 27 ஆம் நாள் தமிழகம் முழுதும் நடக்க இருக்கும் கண்டனப் போராட்டம் போல் எங்கள் பல்கலைக் கழக மாணவர்களும் நடத்தபோகிறாமோ இல்லையா என்று தெரியாமல் அன்றிரவு உறங்க சென்றோம்.

வியாழன், 12 நவம்பர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.11

எங்களது விடுதியில் நாள் தோறும் காலையும் மாலையும் திருச்சி வானொலியின் மாநிலச் செய்திகளை பொது ஒலிபெருக்கி மூலம் கேட்க வசதி செய்திருப்பார்கள். தமிழகம் முழுதும் மாணவர்கள் நடத்திய இந்தி திணிப்பு போராட்டம் பற்றி செய்தி நிச்சயம் மாநிலச் செய்திகளில் இருக்கும் என்பதால், அன்று மாலை அதாவது 1965 ஆண்டு 25 ஆம் நாள் மாலை 6.30 மணிக்கு எல்லோரும் ஆவலுடன் அந்த செய்திக்காக காத்திருந்தோம்.

வெள்ளி, 6 நவம்பர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.10

1965 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 25 ஆம் நாள் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களாகியாக நாங்கள் இந்தி திணிப்பு எதிர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டக் குரல் முழங்கி அமைதியான முறையில் ஊர்வலத்தை சிதம்பரத்தில் நடத்திவிட்டு பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் கூடினோம்.

வியாழன், 22 அக்டோபர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.9


1965 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 26 ஆம் நாளன்று, தென்னக மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியை முதன்மை அலுவலக மொழியாக கொண்டு வர, மய்ய அரசு முயற்சியைத் தொடங்கியவுடன் தி.மு.க முதலில் சனவரி 26 ஆம் நாளை துக்க நாளாக கொண்டாட இருப்பதாக அறிவித்து பின்னர் அதை சனவரி 25 ஆம் நாளுக்கு மாற்றிக்கொண்டது..

புதன், 14 அக்டோபர், 2015

சென்னை பித்தனின் ‘சாக்லேட் பெண்கள்’ கதைக்கான முடிவு.


அடையார் அஜீத் என்று வலையுலகில் அறியப்பட்டவரும், சமீபத்தில் ‘தமிழ் இந்து’ நாளிதழால் ‘பதிவர்களில் கபாலி’ என்று பட்டம் சூட்டப்பட்டவரும், பிரபல வலைப்பதிவருமான சென்னை பித்தன் அவர்கள் அவரது ‘நான் பேச நினைப்பதெல்லாம்’ என்ற வலைப்பதிவில் ஒரு சிறுகதை தொடரை எழுதியிருந்தார்.

செவ்வாய், 6 அக்டோபர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.8


அரசியல் அமைப்பின் பகுதி XVII இல் குறிப்பிட்டுள்ளபடி இந்தியை முதன்மை அலுவலக மொழியாக மாற்றும் நாள் (1965 ஆம் ஆண்டு சனவரி திங்கள் 26 ஆம் நாள் ) நெருங்கிக் கொண்டிருந்தபோது, தமிழ் நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்போரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி போராட்ட சூழலும் உருவாகிவிட்டது. .