வியாழன், 26 மார்ச், 2020

தொடரும் சந்திப்பு 24





எங்களது ஒவ்வொரு  சந்திப்பின்  முடிவிலும் அந்த சந்திப்பை சிறப்பாக நடத்தி முடித்த நண்பர்களை சிறப்பிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த சந்திப்பை மிகச் சிறப்பாக நடத்திய கோவை நண்பர்களான மீனாட்சிசுந்தரம், T.N.பாலசுப்பிரமணியன், செல்லப்பா ஆகியோருக்கு நினைவுப் பரிசு தந்து சிறப்பித்தோம்.

வெள்ளி, 20 மார்ச், 2020

தொடரும் சந்திப்பு 23


அந்த ஓய்வகத்தில் அறையை விட்டு வெளியேறும் நேரம் (Check Out Time) பகல் 12 மணி என்பதால், காலை சிற்றுண்டிக்குப் பின் அனைவரும் 10 மணி அளவில் அரங்கத்தில் கூடவேண்டும் என்றும், வரும்போதே அறையை காலி செய்துவிட்டு உடைமகளை எடுத்து வந்தால் அவைகளை அரங்கக்தில் வைத்துவிடலாம் என்றும் நண்பர் பாலு  சொல்லியிருந்தார். 

வியாழன், 12 மார்ச், 2020

தொடரும் சந்திப்பு 22







இரவு  நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு, சந்திப்பு நடந்த அரங்கிற்கு   அடுத்து இருந்த உணவு அருந்தும் இடத்திற்கு அனைவரும் சென்றோம். அங்கே எடுத்தூண் (Buffet) முறையில் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சனி, 29 பிப்ரவரி, 2020

தொடரும் சந்திப்பு 21

Great Mount ‘COCO LAGOON’  ஓய்வகத்தின் உரிமையாளர் திரு T.சேதுபதி  அவர்கள் சிறப்புரையாற்றிவிட்டு சென்ற பின், ஓய்வகத்தின் கலைப் பிரிவு ஊழியர்கள் நடன நிகழ்ச்சிகளை நடத்தி எங்களை உற்சாகப்படுத்தினார்கள்.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

தொடரும் சந்திப்பு 20





நண்பர் நாச்சியப்பன் நடத்திய புதிர்போட்டிக்கு பிறகு இதுவரை நடைபெற்ற சந்திப்புகளில் வராமல் முதல் தடவையாக வந்தவர்களின் அறிமுகம் நடைபெற்றது. நண்பர் மீனாட்சிசுந்தரத்தின் துணைவியார் வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

தொடரும் சந்திப்பு 19





எங்களது பொள்ளாச்சி சந்திப்பில் நண்பர் நாச்சியப்பன் புதிர் போட்டி நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் என்றும், அந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளையும் தந்திருந்தேன். அந்த கேள்விகளுக்கான பதில்களையும் அந்த முதற்கேள்வி எதற்காக கேட்கப்பட்டது என்பது பற்றியும் அடுத்த பதிவில் தருவதாக சொல்லியிருந்தேன். 

புதன், 15 ஜனவரி, 2020

பொங்கல் வாழ்த்து





பொங்கல் வாழ்த்து


பொங்கல் விழாவாம் தமிழர் திருநாளில்
எங்கும் நிறைந்த இறைவன் அருளினால்
பொங்கட்டும் பால்போல பாசமும் நேசமும் 
தங்கட்டும் எங்கும் அமைதியும் நல்லுறவும் 
நீங்கட்டும் நாட்டில் துயரமும் துன்மையுமென 
அன்புடன் வாழ்த்தும் வழுத்து

அன்பன் 
வே.நடனசபாபதி