எங்களது ஆறாவது சந்திப்பு பொள்ளாச்சியில் உள்ள Great Mount ‘COCO LAGOON’ இல் (ஓய்வகத்தில்) 31-08-2018 அன்று தொடங்குவதாக இருந்தபோது, நான் 30-008-2018 அன்றே கோவைக்கு பயணப்பட்டதற்கு காரணம் ஒன்று உண்டு.
சனி, 23 பிப்ரவரி, 2019
சனி, 16 பிப்ரவரி, 2019
தொடரும் சந்திப்பு 3
நண்பர் பாலு அனுப்பியிருந்த
சுற்றறிக்கையில் பொள்ளாச்சியில் எங்களது ஆறாவது சந்திப்பு நடைபெறும் Great
Mount ‘COCO LAGOON’ இல் (ஓய்வகத்தில்)
ஆயுர்வேத சிகிச்சை மய்யம் உண்டென்றும் அதை பயன்படுத்துவோர் தனியாக கட்டணம் செலுத்த
வேண்டும் என்றும், அதுபோல அங்குள்ள நீச்சல் குளத்தில்
நீந்த விரும்புவோர் அதற்கான கட்டணத்தை செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும்
தெரிவித்திருந்தார்.
லேபிள்கள்:
சுற்றுலா
வெள்ளி, 8 பிப்ரவரி, 2019
தொடரும் சந்திப்பு 2
எங்களது அடுத்த சந்திப்பு பொள்ளாச்சியில் என்று கேள்விப்பட்டதுமே எனது மனம் கால
இயந்திரத்தில் ஏறி 47 ஆண்டுகள்
பின்னோக்கி சென்றுவிட்டது. 1970 ஆம் ஆண்டு. ஏப்ரல் திங்கள். மணிப்பாலில் இருந்த எங்களது வங்கியின்
தலைமையத்தில் இருந்த அலுவலர்கள் பயிற்சிக் கல்லூரியில் 45 நாட்கள் பயிற்சி முடிந்த
பின் மேற்கொண்டு எந்த கிளைக்கு கள பயிற்சிக்கு
செல்லவேண்டுமோ என்று நினைத்துக்கொண்டு இருந்தபோது, பொள்ளாச்சியில் உள்ள எங்கள்
கிளையில் செய்முறை பயிற்சி பெற எனக்கு ஆணை தரப்பட்டது.
லேபிள்கள்:
சுற்றுலா
வெள்ளி, 1 பிப்ரவரி, 2019
தொடரும் சந்திப்பு 1
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியல் பட்டப்
படிப்பை 1962-1966 இல் படித்த வகுப்புத் தோழர்களாகிய நாங்கள், பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் 1967 ஆம் ஆண்டு சந்தித்த பிறகு, முதன் முறையாக புதுவையில் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 22, மற்றும் 23 நாட்களிலும், இரண்டாவது முறையாக கோடைக்கானலில் 2008 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 9,10, மற்றும் 11 ஆம் நாட்களிலும் சந்தித்தோம்.
படிப்பை 1962-1966 இல் படித்த வகுப்புத் தோழர்களாகிய நாங்கள், பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் 1967 ஆம் ஆண்டு சந்தித்த பிறகு, முதன் முறையாக புதுவையில் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 22, மற்றும் 23 நாட்களிலும், இரண்டாவது முறையாக கோடைக்கானலில் 2008 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 9,10, மற்றும் 11 ஆம் நாட்களிலும் சந்தித்தோம்.
லேபிள்கள்:
சுற்றுலா
செவ்வாய், 15 ஜனவரி, 2019
பொங்கல் வாழ்த்து!
பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது
உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துகள்!
பொங்கல் வாழ்த்து
உண்ண உணவும் உடுக்க உடையும்
இருக்க இடமும் இயற்கையின் சீற்றத்தால்
இல்லாமல் போனாலும் நல்லதே நாளை
நடக்குமென நம்பிக்கை கொண்டதனை
எதிர்நோக்கும்
தஞ்சைப் படுகை தரணிவாழ் மக்களின்
துன்பமும் துன்மையும் விட்டு விலகவும்
நன்மைகள் யாவும் இனிதே நடக்கவும்
நம்மால் இயன்ற உதவியை செய்து
உழவர்தம் வாழ்க்கை சிறப்பாய் உயர்ந்திட
எங்கும் நிறைந்த இறைவனைத் வேண்டி
தமிழர் திருநாளாம் புத்தாண்டு
நன்னாளில்
வாழ்கவென வாழ்த்துவேன் நான்
அன்புடன்
வே.நடனசபாபதி
எங்கள் வீட்டின் முன் போடப்பட்ட
கோலங்கள் கீழே.
பி.கு ஓராண்டுக்குப் பிறகு வலையில் பதிவிட வந்திருக்கிறேன். சில முக்கிய பணி
காரணமாக கடந்த 12 திங்களாக பதிவிட இயலவில்லை. இனி உங்கள் அனைவரின் ஆதரவுடன் பதிவிட
இருக்கிறேன்
லேபிள்கள்:
வாழ்த்து
ஞாயிறு, 14 ஜனவரி, 2018
பொங்கல் வாழ்த்து
பதிவுலக நண்பர்கள்
அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துகள்!
பொங்கல் வாழ்த்து
வானமே பொய்த்தாலும் பூமியே
காய்ந்தாலும்
வையத்தில் வாழ்வோர் வயிறார
உண்ண
வேளாண்மை செய்து
விளைச்சலைத் தந்த
உழவர் குலத்தை உளமாற வாழ்த்தி
இனிவரும் நாட்கள் இனிதாய்
இருக்க
தனக்குவமை இல்லா இறைவனை
வேண்டி
தரணியில் வாழும் தமிழர்கள்
யாவரையும்
தைத்திங்கள் நன்னாளாம்
பொங்கல் பெருநாளில்
வாழ்கவென வாழ்த்துவேன் நான்
அன்புடன்
வே.நடனசபாபதி
எங்கள் வீட்டின் முன்
போடப்பட்ட கோலங்கள் கீழே.
லேபிள்கள்:
வாழ்த்து
சனி, 13 ஜனவரி, 2018
திரும்பவும் வந்துவிட்டேன்.
வலையுலக நண்பர்களுக்கு புத்தாண்டு
மற்றும் போகி நாள் நல் வாழ்த்துக்கள்!
கடந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம்
நாளுக்குப் பிறகு நான் வலையுலகத்திற்கே வர இயலவில்லை. அதற்கு பல காரணங்கள். அதில் முதன்மையானது
எனது மடிக்கணினியில் ஏற்பட்ட சிக்கல். நன்றாக செயலாற்றிக்கொண்டு இருந்த மடிக்கணினி
திடீரென மக்கர் செய்து செயலிழந்துவிட்டது. பிறகுதான் தெரிந்துகொண்டேன்.
அதற்கு வயதாகிவிட்டது என்று! 2009 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் வாங்கிய அது 8 ஆண்டுகள்
உழைத்து ஓய்ந்துவிட்டது.
லேபிள்கள்:
பொது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




