திங்கள், 2 பிப்ரவரி, 2009

நம்பிக்கை

படித்துக்கொண்டு இருக்கிறேன்
வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை

உண்மையாய் உழைக்கிறேன்
உயர்வேன் என்ற நம்பிக்கை

விழுந்தாலும் முயற்சிக்கிறேன்
எழுவேன் என்ற நம்பிக்கை

எல்லோருக்கும் முடிந்தவரை உதவுகிறேன்
என்னைப்போல் இருப்பார்கள் என்ற நம்பிக்கை

தவறாது வாக்கு அளிக்கிறேன்
தருவார்கள் நல்லாட்சி என்ற நம்பிக்கை

எழுதிக்கொண்டிருக்கிறேன்
யாரேனும் படிப்பார்கள் என்ற நம்பிக்கை

படுக்க செல்கிறேன்
விழிப்பேன் என்ற நம்பிக்கை

நம்பிக்கைதான் வாழ்க்கை
வாழ்க்கைதான் நம்பிக்கை

பின் குறிப்பு: ஒரு போட்டிக்காக எழுதப்பட்ட கவிதை. ஒரு சில காரணங்களால் அனுப்ப இயலவில்லை. அதனால் இங்கே தந்திருக்கிறேன்.

வே.நடனசபாபதி

18 கருத்துகள்:

 1. அருமையாக எழுதியுள்ளீர்கள்.. தொடருங்கள்.. வரவேற்கிறேன்...

  பதிலளிநீக்கு
 2. நன்றி திரு ராம் அவர்களே.
  உங்களின் பாராட்டு எனக்கு மேலும் எழுதும் துணிவைத்தருகிறது.

  பதிலளிநீக்கு
 3. Thangalin kanni muyarchi ennul kadalai thoondi vittadu.Aasai piranduvittadu ennul.valaithalam thuvanga...karuvil irukkum aasai jananippathu eppothu...thangal kail ullathu... ungalukkku oruvar.. enakku neengal..aasaiyai pirasavikka udavungal...vasudevan

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துக்கு நன்றி திரு வாசு அவர்களே!
  தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தும் வலைப்பதிவு வர என்னுடைய உதவி எப்போதும் உண்டு.

  பதிலளிநீக்கு
 5. //நம்பிக்கைதான் வாழ்க்கை
  வாழ்க்கைதான் நம்பிக்கை//
  சரியாகச் சொன்னீ்ர்கள். வாழ்க்கையே நம்பிக்கையில்தானே ஓடுகிறது?ஷெல்லி அழகாக்ச் சொன்னான் --”blow,the trumpet of a prophecy!if winter comes can spring be far behind" என்று.

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! தங்களின் மேலான கருத்துக்களை இனி எழுத இருக்கின்ற பதிவுகளில் எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. ''..நம்பிக்கைதான் வாழ்க்கை
  வாழ்க்கைதான் நம்பிக்கை..''

  நம்பிக்கையே தும்பிக்கையாக. நல்ல கருத்துகள் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் சகோதரா!
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
 8. வாழ்த்துக்கு நன்றி சகோதரி திருமதி வேதா. இலங்காதிலகம் அவர்களே! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளம் கனிந்த தீபாவளி நாள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 9. தங்கள் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருகை தருமாறு அன்போடு அழைக்கிறேன் .

  பதிலளிநீக்கு
 10. எனது பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பெருமைப் படுத்தியமைக்கு நன்றி திருமதி சசிகலா அவர்களே!

  பதிலளிநீக்கு
 11. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு அருள் அவர்களே!

  பதிலளிநீக்கு
 12. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Different தமிழ் அவர்களே!

  பதிலளிநீக்கு
 13. அன்பின் நடன சபாபதி - நம்பிக்கை பற்றிய பதிவு அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சீனா அவர்களே!

   நீக்கு
 14. வணக்கம்.

  கவிதைக்கான முயற்சி கனிகிறது.
  தாங்கள் எழுதுவதை நிச்சயம் படிப்பார்கள்.

  எனக்கும் நம்பிக்கை உண்டு.

  தொடர்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! தங்களைப் போன்றோர் தரும் ஊக்கம் என்னை உற்சாகப்படுத்தி மென்மேலும் எழுத தூண்டுகிறது.அதற்கு நன்றி!

   நீக்கு