செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

எனக்குப்பிடித்த கதைகள்

பிரபல எழுத்தாளர் ஓ ஹென்றி அவர்கள் எழுதிய கதைகள் யாவுமே வித்தியாசமானவை. அவரது கதையின் முடிவில் தான் முக்கியமான திருப்பம் அல்லது முடிச்சை வைத்திருப்பார்.

அந்த பாணியில் எழுதப்பட்ட, நான் படித்த சிறுகதையின் சுருக்கம் இதோ!

ஒரு கல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் கல்லூரியின் கடைசி நாளின்போது ஒரு தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். அதாவது 25 ஆண்டுகளுக்குப்பின் அனைவரும் அதே கல்லூரியின் உணவு விடுதியின் முன் அவசியம் கூடவேண்டும் என்பதாகும்.
ஆனால் 25 ஆண்டுகளுக்குப்பின் மூவர் மட்டுமே அந்த இடத்தில் சந்திக்கின்றனர். அதில் ஒருவர் பெண். அனைவரும் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள். மாலைவரை வேறு யாரும் வராததால் மாலை தேநீர் அருந்திவிட்டு பிரிந்து செல்கின்றனர். ஒருவேளை தாங்கள் சென்ற பிறகு யாராவது வந்தால் அவர்களுக்கு தாங்கள் வந்ததை தெரிவிக்கவேண்டுமே என நினைக்கும்போது அங்கு ஒரு பிச்சைக்காரர் மட்டும் இருப்பதைப்பார்க்கின்றனர். அவரிடன் சென்று தங்களது பெயர்களைக்கூறி தங்களது வகுப்பு நண்பர்கள் வந்தால் அவர்களிடம் இதுவரை காத்திருந்ததை சொல்லுமாறு கேட்டுகொள்கின்றனர். அவரும் 'சரி' என்கிறார்.
அவர்கள் சென்ற பிறகு அவர் தனக்குத்தானே சொல்லிகொள்கிறார்."நல்லவேளை அவர்களுக்கு என்னைத்தெரியவில்லை நானும் அவர்களது வகுப்புத்தோழன் என்று"

10 கருத்துகள்:

  1. கதைகளைப் படித்து ரசிப்பது ஒரு சுகம்;ரசித்ததை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது இன்னொரு சுகம்.ஓ ஹென்றியின் எல்லாக் கதைகளுமே ரசிக்கத்தக்கவைதான். இதே மாதிரித் தமி்ழிலும் முயற்சிகள் உண்டு.அந்தக் காலத்தில்,நான் சிறுவனாக இருந்தபோது,சசி என்று ஒருவர்,குட்டிக் கதைகள் எழுதுவார். தீபம் பத்திரிகையில் வே.கோவிந்தராஜன் என்பவர் இது போல் சில கதைகள் எழுதினார் என நினைக்கிறேன்.சுஜாதாவின் தூண்டில் கதைகளும் இது போலத்தானே?

    இது போல் நிறைய எதிர்பார்க்கிறேன்.

    வாழ்த்துகள்

    pl.remove word verification.
    you may also go in for comment moderation to avoid publishing comments which you do not like.

    பதிலளிநீக்கு
  2. நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! தங்களின் மேலான கருத்துக்கு நன்றி. நீங்கள் சொல்வது சரி. இது போல் பதிவுகள் எழுத முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. ரசிக்கவைத்த சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் பதிவை இரசித்தமைக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் நண்பரே தங்களது பதிவினை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியிருக்கிறேன்.நன்றி
    http://blogintamil.blogspot.in/2012/03/blog-post.html

    பதிலளிநீக்கு
  6. வலைச்சரத்தில் எனது பதிவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி திருமதி தென்காசித் தமிழ்ப் பைங்கிளி அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. நிச்சயம் எதிர்பாராத முடிவுதான் இது! ஓ ஹென்றியின் வெற்றியே இந்த டெய்ல் ட்விஸ்டில்தான் இருக்கிறது. அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு பால கணேஷ் அவர்களே!

      நீக்கு
  8. வணக்கம்.

    படித்த கதையென்றாலும் நீங்கள் அதைச் சுருக்கித் தந்த விதம் அருமை

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே!

      நீக்கு