வங்கிக்கு செல்ல ஆயத்தமானபோது வந்த
அஞ்சல் அட்டையில்
இருந்த செய்தி இதுதான்.
‘அன்பு நண்பர் சபாபதிக்கு, மேலாளர் பற்றி நீங்கள் தலைமை அலுவலகத்திற்கு எழுதியிருக்கிறீர்கள் என்பது அவர்
இங்கு வந்தபோது தெரிந்துவிட்டது. அவர் கோபத்தோடு திரும்பி வந்துகொண்டு
இருக்கிறார். எதற்கும் இனி நீங்கள் ஜாக்கிரதையாய் இருக்கவும்.’
அந்த அஞ்சலை எழுதியிருந்தவர், நான் பயிற்சிக்காக சேர வந்தபோது
அந்த
கிளையில் எழுத்தராக இருந்து, பின்பு பதவி உயர்வு பெற்று
தலைமை அலுவகத்தில் அப்போது அலுவலர்
பயிற்சிக் கல்லூரியில்
பயிற்சி பெற்றுக்கொண்டு இருந்தவர்.
என்னோடு குறுகிய காலமே
பழகியிருந்தாலும் என் மேல் உள்ள அக்கறையால் அந்த அஞ்சலை எழுதியிருந்தார். அந்த
அஞ்சல் எங்கே தபாலில் போடப்பட்டது எனப் பார்த்தபோது அதில் மங்களூர் RMS என முத்திரை இடப் பட்டிருந்ததைக்
கண்டேன்.
எங்கள் வங்கியின் தலைமையகமான
மணிப்பாலில் அவர்
இருக்கும்போது, ஏன் மங்களூர் இரயில் நிலையம்
வந்து அந்த
அஞ்சல் அட்டையைத் தபாலில் சேர்த்தார் எனப் புரியவில்லை.
அப்புறம்தான் தெரிந்தது அந்த அஞ்சல், மேலாளர் கிளைக்கு
வருமுன் எனக்கு கிடைத்து நான் எச்சரிக்கையாய் இருக்க
வேண்டுமென்பதற்காக அவ்வாறு செய்திருக்கிறார் என்று.
தலைமை அலுவலகம் என்னுடைய கடிதத்தின்
பேரில் நடவடிக்கை எடுப்பார்கள் என நினைத்தால்,அவ்வாறு செய்யாமல் அவரிடமே
இது பற்றி சொல்லிவிட்டார்களே என்று
வங்கியின் மேல் கோபம்
கோபமாக வந்தது.தகுதி காண் பருவத்தில்
(Probation
Period) நான்
இருந்ததால் என்னால் எதுவும்
செய்யமுடியாது என்று எனக்கு
அப்போதுதான் புரிந்தது.
உரலில் தலையை விட்டுவிட்டு
உலக்கைக்குப் பயப்பட்டால் எப்படி என்பதுபோல், வந்தது வரட்டும் பிரச்சினையை சந்திப்போம் என
வங்கிக்கு சென்றேன்.
சரியாக 10 மணிக்கு மேலாளர் கிளைக்கு
வந்தார். உள்ளே
நுழையும்போதே என்னைப்
பார்த்துக்கொண்டே அவரது அறைக்குக்குள் நுழைந்தார்.அவரது இருக்கையில் அமர்ந்த பின்
உடனே என்னைக் கூப்பிட்டு அனுப்பினார்.
நான் உள்ளே நுழைந்து ‘வணக்கம்’ என்று சொன்னதைக்கூட காதில் வாங்கிக்கொள்ளாமல்,அவர் என்னை நேருக்குநேர் பார்த்தார்.
அந்த பார்வையில் உக்கிரம் தெரிந்தது.அவருக்கு மட்டும் எரிக்கும் சக்தி இருந்திருந்தால்
என்னை சாம்பலாக்கியிருப்பார்!
பின்பு கோபத்தோடு என்னிடம் ‘தலைமை அலுவலகத்திற்கு என்ன எழுதினீர்கள்?’என்றார்.
நான் அமைதியாக, ‘ஒன்றுமில்லை சார். அந்த கடைக்காரர் நமது
வாடிக்கையாளர்களிடம் நாம் வங்கியின் பெயரைச்சொல்லி வாங்கிய
பணம் பற்றி எழுதினேன்.’ என்றேன்.
‘அது மட்டும்தானா? அல்லது வேறு ஏதாவது எழுதினீர்களா? என்று
கேட்டார்.
நான் பதட்டப்படாமல், சார். உங்களிடம் அது பற்றி புகார்
செய்தும்,
நீங்கள் எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை என்றும் எழுதினேன்.அவ்வளவுதான்.’ என்றேன்.
உடனே அவர் குரலை உயர்த்தி, ‘என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? நான் அவ்வளவு தூரம் அந்த கடைக்காரர்
அப்படிப்பட்டவர் இல்லை
என்று சொல்லியும் H.O வுக்கு எழுதியிருக்கிறீர்கள். கூடவே என்னைப்பற்றியும் குறை
சொல்லியிருக்கிறீர்கள். புதிதாக சேர்ந்த
நீங்கள் எழுதுவதையெல்லாம் H.O வில் நம்பிவிடுவார்கள் என்று
நினைத்தீர்களா?’ என்று கேட்டார்.
அப்போது நான், ‘நான் கேள்விப்பட்டது உண்மை என்று நம்பியதாலும்,
நீங்கள் நடவடிக்கை எடுக்காததாலும், H.O வுக்கு எழுதினேன்.மேல் நடவடிக்கை
எடுப்பதும் எடுக்காததும் அவர்கள் விருப்பம்.’ என்றேன்.
‘Over Smart ஆக பதில் சொல்வதாக நினைக்காதீர்கள்.உங்களை எப்படி
Deal செய்வது எனக்குத்தெரியும்.நீங்கள்
இப்போது போகலாம்.’
என்றார்.
நான் உள்ளே செல்வதையும், மேலாளர் உரத்த குரலில் ஏதோ
சொல்வதையும் பிறகு நான் வந்து என் இடத்தில் அமர்வதையும்
கிளையில் உள்ள அனைவரும் பார்த்துக்
கொண்டிருந்தார்கள்.
ஆனால் யாரும் என்னிடம் வந்து என்ன
நடந்தது என்று
விசாரிக்கவில்லை. அவ்வளவு பயம்!
என்ன நினைத்தாரோ திரும்பவும்
என்னைக்கூப்பிட்டு அனுப்பினார்.
’நீங்கள் வேளாண்மைக் கடன்களைப் பார்க்கத் தேவையில்லை.
நீங்கள் போய், சேமிப்பு கணக்குகள் Counter ல் உட்கார்ந்து Clerical வேலையைச் செய்யுங்கள்.’என்றார்.
நான் மறுப்பு ஏதும் சொல்லாமல் Counter க்கு சென்றேன். அருகில்
அமர்ந்திருந்த நண்பரும் மற்றவர்களும் மெள்ள என்னிடம், ‘என்ன சார். நீங்கள் பயிற்சி முடிந்து அலுவலராக
ஆகிவிட்டீர்கள். நீங்கள் ஏன்
எழுத்தர் பணியை செய்யவேண்டும். அவரிடம் இது பற்றி
கேளுங்கள்.’என்றனர்.
நான் அவர்களிடம்’ இப்போது இது பற்றி பேசவேண்டாம். மதியம்
உணவு
இடைவேளையின்போது பேசுவோம்’ என்று கூறிவிட்டு
எனது வேலைகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டேன். நான்
சந்தோஷமாக
என் வேலையை செய்தாலும் எனக்குப்பின்
இருந்த அலுவலர்களுக்கு நான் அவர்களுக்கு கீழே பணி
செய்வது அசௌகரியமாக
இருந்தது.
மதியம் உணவு இடைவேளையின் போது
சொன்னேன், ‘நான்
இருப்பது இப்போது Probation Period. எனக்கு கொடுத்துள்ள பணி
நியமன ஆணையில் இந்த Probation நாட்களில் எந்த வேலை கொடுத்தாலும்
செய்யவேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. நான் மேலாளரிடம் Counter ல் பணி செய்ய முடியாது என்றால் அந்த
நிபந்தனையைக் காட்டி என் மேல் நடவடிக்கை எடுக்க முடியும்.
அவர் அதைத்தான்
எதிர்பார்க்கிறார். அந்த வாய்ப்பை அவருக்கு
கொடுக்க விரும்பவில்லை.’ என்றேன்.
அதற்கு அவர்கள் சொன்னார்கள். ‘நாங்கள் தான் முன்னரே
சொன்னோமே. இவர்
சக்தி வாய்ந்தவர் என்று. நாங்கள் இவரைப்பற்றி எழுதிய புகாரை தலைமை அலுவலகம்
இவருக்கே அனுப்பி எங்கள்
மேல் நடவடிக்கை எடுக்கச்சொன்ன அவலத்தை சொல்லியும், இவரது
பின்புலத்தை புரிந்துகொள்ளாமல் இவர் மேல்
புகார் கொடுத்துள்ளீர்கள். அதனால் வந்த வினைதான் இது.’ என்று.
நான் சொன்னேன். ‘எதுவுமே நிரந்தரம் இல்லை.பார்ப்போம் இது
எதுவரை
போகிறதென்று.இதற்கெல்லாம் நான் கவலைப்படப் போவதில்லை.’ என்று.
அந்த counter லியே மேலும் இரு மாதங்கள்
பணியாற்றினேன்.
பயிற்சி முடிந்தும் பயிற்சியில் செய்யவேண்டிய பணியை மீண்டும் செய்ததால்
Clerical வேலை எல்லாவற்றையும் நன்றாக முழுமையாக கற்றுக்கொண்டேன். வங்கியில்
சொல்வார்கள். ஒரு நல்ல
எழுத்தர் தான் ஒரு நல்ல அலுவலராக முடியும் என்று.
அதனால் நான் வேளாண் நிதித்துறையில் 10
ஆண்டுகள் பணியாற்றி
பின் General Banking க்கு மாறியபோது அந்த வேலையும் எனக்கு
புதியதாய் தெரியவில்லை. முன் பெற்ற
தீவிர பயிற்சி புதிய பணியில் அலுவலராக பணியாற்ற மிக சுலபமாக உதவியது.
பிற்காலத்தில் கிளை மேலாளராகவும்
அதற்கு மேல் உள்ள
பதவிகளில் அமர்ந்தபோதும், வேலை தெரிந்திருந்ததால் என்னால்
நன்றாக பணியாற்ற முடிந்தது.
அந்த மேலாளர் என்னை உசுப்பேற்ற நினைத்தது எனக்கு உதவியாகப்
போனதை நினைத்து,அவருக்கு மனமார நன்றி சொன்னேன்!
ஒரு வார இறுதியில், தலைமை அலுவகத்தில் பயிற்சி முடித்த
அந்த நண்பர் (எனக்கு அஞ்சல் அட்டை மூலம் எச்சரித்தவர்) வேறு கிளைக்கு பணிக்கு
மாற்றல் பெற்று செல்லும் வழியில் என்னை சந்தித்தார்.
அப்போது அவர் எப்படி மேலாளருக்கு நான்
எழுதிய கடிதம் பற்றி தெரிந்தது என்று சொன்னபோது எனக்கு அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை.
தொடரும்
தைரியம் அதிகம்தான்.தன் உத்தரவின் மூலம் நன்மையே செய்து விட்டார் மேலாளர்.-ராம,ராம!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! இதுகாறும் நீங்கள் சிவா பக்தர் மட்டும் தான் என நினைத்திருந்தேன். நீங்கள் இப்போது இராம பக்தர் என்றும் காண்பித்துவிட்டீர்களே!
பதிலளிநீக்குஅரியும் சிவனும் ஒண்ணு!
பதிலளிநீக்குதங்கள் அனுபவப் பதிவு இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்! ஐயமில்லை!
பதிலளிநீக்குபுலவர் சா இராமாநுசம்
கருத்துக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி புலவர் சா இராமாநுசம் அவர்களே!
பதிலளிநீக்குஅந்த மேலாளர் என்னை உசுப்பேற்ற நினைத்தது எனக்கு உதவியாகப் போனதை நினைத்து,அவருக்கு மனமார நன்றி சொன்னேன்!
பதிலளிநீக்குஆச்சரியப்படத்தக்க
அனுபவப்பகிர்வுகள் !!
Remarkable strength of character displayed; courage of conviction to the core ; unless one is morally upright difficult to take on the diabolical devils ( your boss) considering the fact that confrontation took place at a time when sub ordinates were treated like virtual slaves and devils (boss) enjoyed unbridled powers. vasudevan
பதிலளிநீக்குஆக அந்த மேலாளர் தன்னையும் அறியாமல் உங்களுக்கு உதவி செய்திருக்கிறார் என்பது தெரிகிறது. நல்லதுதான். எப்படி தலைமை அலுவலுகத்தில் மேலாளருக்குத் தெரிந்தது என்பதை அறிய ஆவல்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திரு வாசு அவர்களே! நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.நான் பணியில் சேர்ந்தபோது ஊழியர்கள் வாய்பேசமுடியாத நிலையில்தான் இருந்தார்கள். அந்த நேரத்தில் எனக்கு நான் செய்தது சரியெனப்பட்டதால் துணிந்து பேசினேன்.முதலில் கஷ்டபட்டாலும் பின்னால் வெற்றி எனக்கே!
பதிலளிநீக்குநேர்மையும் துணிவும் உங்களுக்கு இயல்பாகவே அமைந்துள்ளது. மேலதிகாரிகளுக்கு ஜால்ரா அடித்துக் கொண்டிருப்பவர்கள் இதைப் படிக்கவேண்டும்
பதிலளிநீக்குo.k...நடக்கட்டும்...நடக்கட்டும். வாசித்தேன்....நல்வாழ்த்து..
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
வருகைக்கு நன்றி திரு பால கணேஷ் அவர்களே! மேலாளருக்கு எப்படித் தெரிந்தது என்பது அடுத்த பதிவில்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திருமதி சகோதரி வேதா.இலங்காதிலகம் அவர்களே!
பதிலளிநீக்குHow such bosses end up in life? May be, you think I am too busybody. I just wish to know.
பதிலளிநீக்குஅடுத்த பதிவை ஆவலுடன் எதிர்ப் பார்க்கின்றேன். நன்றி. தொடர வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குவருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! அந்த மேலாளர் என்னவானார், என்பதை வரும் பதிவுகளில் எழுதுவேன். தயைசெய்து பொறுத்தருள்க.
பதிலளிநீக்குவருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
பதிலளிநீக்குஉரலில் தலையை விட்டுவிட்டு உலக்கைக்குப் பயப்பட்டால் எப்படி என்பதுபோல், வந்தது வரட்டும் பிரச்சினையை சந்திப்போம் என
பதிலளிநீக்குவங்கிக்கு சென்றேன்.
உங்க துணிவு பிடித்திருக்கு மேலாலருக்கு எப்படி தெரிந்திருக்கும் என்று ஆவல்.
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!
பதிலளிநீக்குபடித்துக்கொண்டு இருக்கிறேன். தொடருங்கள்.
பதிலளிநீக்குவருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு பழனி கந்தசாமி அவர்களே!
பதிலளிநீக்கு//வங்கியில் சொல்வார்கள். ஒரு நல்ல எழுத்தர் தான் ஒரு நல்ல அலுவலராக முடியும் என்று. அந்த மேலாளர் என்னை உசுப்பேற்ற நினைத்தது எனக்கு உதவியாகப் போனதை நினைத்து, அவருக்கு மனமார நன்றி சொன்னேன்! //
பதிலளிநீக்குஎல்லாம் நன்மைக்கே. மிகவும் துணிச்சலான அனுபவங்களை ரிஸ்க் எடுத்து மேற்கொண்டுள்ளீர்கள்.
வருகைக்கும், தொடர்வதற்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! அன்று பயந்து நடுங்கியிருந்தால் பின்னாட்களில் வங்கியில் மற்ற கடினமான சூழ்நிலைகளை சந்திக்கும் தைரியம் வந்திருக்காது.
நீக்கு