புதன், 18 ஜூலை, 2012

Boss கள் பலவிதம்! 32


எதற்காக என்னைக் கூப்பிடுகிறார் என யோசித்துக் கொண்டே அவரது அறைக்கு சென்றதும், அவர் என்னிடம். என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்.

நான் நீங்கள் சொன்னபடி S B Counter ல் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். என்றேன்.

அங்க என்ன அப்படி வேலை இருக்கு ? வேலை இல்லாமல் .சும்மா இருக்கீங்க என்று நினைக்கிறேன்.’என்றார் அவர்.

இல்லை சார். இந்த Department லே வேலை  நாள் முழுக்க இருக்கும்.
அதை நான் Sincere ஆக பார்த்துக்கொண்டுதான்  இருக்கிறேன். நீங்கள் வேண்டுமானால் Check up செய்துகொள்ளலாம்.என்றேன்

எங்கே இதுவரை நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.’என்றார். 

நான் உடனே சார். ஒரு நிமிஷம். இதோ வருகிறேன். எனக் 
கூறிவிட்டு வெளியே வந்து நான் பணி செய்து கொண்டு இருந்த 
இடத்தில் வைத்திருந்த ஒரு Note Book ஐ எடுத்துக்கொண்டு உள்ளே சென்று அவரிடம் கொடுத்தேன். 

அதை அலட்சியமாக புரட்டிப் பார்த்த அவருக்கு, முகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியைப் பார்த்து உள்ளுக்குள் சந்தோஷப்பட்டேன். அப்படி என்ன அந்த நோட்டில் இருந்தது  என்றால், என்னை அவர்  S B Counter ல் உட்கார சொன்ன நாளிலிருந்து என்னை உள்ளே கூப்பிட்ட நாளுக்கு முதல் நாள் வரை, நான் செய்த பணிகளை பட்டியல் இட்டு
வைத்திருந்ததுதான்!
என்னை அவர்  Counter ல் உட்கார சொன்னபோது, நான் முடியாது
என்று சொன்னால் என் மேல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கலாம் என்று நினைத்திருக்கிறார். அது நடக்காமல் போகவே, சில நாட்கள் கழித்து கூப்பிட்டு விசாரிப்பது போல் விசாரித்துவிட்டு நான் பணி 
சரியாக செய்யவில்லை என தலைமை அலுவலகத்திற்கு எழுதி 
எனது Probation நாட்களை நீட்டிக்கலாம் அல்லது முடியுமானால் 
வெளியே அனுப்பவும் செய்யலாம் என நினைத்திருக்கிறார் 
போலும்.

ஆனால் என்னை கூப்பிட்டு Counter ல் உட்கார சொன்னபோதே புரிந்துகொண்டேன்.ஏதோ ஒரு திட்டத்தோடுதான் என்னை அங்கு 
உட்கார சொல்கிறார் என்று. எனவே நான் செய்யும் ஒவ்வொரு வேலையையும் குறித்துக்கொள்ள ஆரம்பித்தேன்.

சேமிப்புக் கணக்குப் பிரிவில் பார்ப்பதற்கு வேலை இல்லாததுபோல்
இருக்கும் ஆனால் சின்ன சின்ன வேலைகள் நிறைய இருக்கும்.
உதாரணமாக புதிய கணக்குகள் துவங்குவது, வாடிக்கையாளர்கள் 
பணம் எடுக்க காசோலையுடன் வரும்போது, வில்லை (Token)
தருவது அவர்கள் தரும் காசோலையை அவர்களது  கணக்கில்
பணம்  இருப்பின்  பற்றுப்பதிவு(Debit) செய்வது, அவர்கள் கணக்கில் கட்டும் பணத்திற்கான வரவுச்சீட்டு (Credit Slip) வந்தவுடன் சம்பந்தப்பட்டவரின் கணக்கில் வரவு வைப்பது, சேமிப்புக் கணக்குப் புத்தகத்தில் அதுவரை நடந்துள்ள பரிவர்த்தனைகளை (Transaction) 
பதிவு செய்து தருவது. காசோலை புத்தகங்கள் தருவது, காசோலை இல்லாமல் வருவோருக்கு பணம் எடுக்கும் சீட்டு (Withdrawal Slip) 
தருவது, காசோலையில் எழுதத் தெரியாதவர்களுக்கு உதவுவது மாலையில் சேமிப்பு கணக்கில் நடந்த அத்தனை பற்று வரவுகளையும் Sub-Day Book எனப்படும் பேரேட்டில் (Ledger) எழுதுவது போன்றவை 
ஆகும்.

அப்போது நான் இருந்த ஊரில் வங்கிகளுக்குள் காசோலை பரிமாற்ற
வசதி (Clearing House) இல்லாதாதால், ஒவ்வொரு வங்கியும் அவர்களது வாடிக்கையாளர்கள் தந்த மற்ற வங்கிகளின் காசோலைகளை அந்தந்த வங்கிகளில் நேரடியாக கொடுத்து  அந்த காசோலைகளுக்கான 
பணத்தை பாரத ஸ்டேட் வங்கியில் மாற்றத்தக்க காசோலைகளாக 
பெற்று செல்லும். அந்த காசோலை வழங்கும் பணியையும் நான்
பார்த்து வந்தேன்.

முதல் நாளிலேயே ஒவ்வொரு பணி செய்யும்போது அவைகளின் எண்ணிக்கையை குறித்து வைத்துக்கொண்டேன். நான் இவ்வாறு 
குறித்துக் கொள்வதைப் பார்த்த பக்கத்து இருக்கை நண்பர் என்ன சார். செய்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு  நான் பதில் சொல்லவில்லை. 
தினம் அறைக்குத் திரும்பியதும் நோட்டில் அன்றைய வேலைகளை அழகாக படியெடுத்து (Copy) வைத்துவிட்டேன். 

அந்த மேலாளர் ஒருநாள் எனது வேலை பற்றி கேட்பார் என்று ஏதோ எனது மனதுக்குப் பட்டதால் தினம் அந்த நோட்டை கிளைக்கு எடுத்து செல்வேன்.

அதனால் தான் அவர் நான் ஒன்றும் செய்யவில்லை என்றதும் 
என்னால் உடனே அந்த நோட்டைக் காண்பிக்க முடிந்தது. நான் 
இவ்வாறு எல்லாவற்றையும் நாள் வாரியாக பதிவு செய்து வைத்திருப்பேன்  என அவர் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். அதைப் பார்த்ததும் அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அந்த நோட்டை என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு, ‘நீங்கள் போகலாம். என்று சொல்லிவிட்டார். அன்று மாலை அறைக்கு வந்து நண்பர்களிடம் அன்று நடந்ததை சொன்னேன்.
  
அவர்கள் உங்களுக்கு இப்படி செய்யவேண்டுமென்று எப்படித்
தோன்றியது?’ எனக் கேட்டதற்கு எனது உள்ளுணர்வுதான் காரணம். 
இவர் தடுக்கின் கீழ் நுழைபவர் என்றால். நான் கோலத்தின் கீழே நுழைபவன் என்பது அவருக்கு இப்போது தெரிந்திருக்கும்.இனி அவர் என்னிடம் எதுவும் கேட்கமாட்டார் என நம்புகிறேன்.என்று சொன்னேன்.

எல்லோரும் எனது  செயலுக்கு பாராட்டு தெரிவித்தார்கள். ஏனெனில் அதுவரை யாருமே Probation நாட்களில் தாங்கள் செய்யும் வேலைகளை இதுபோல் ஒன்று விடாமல் பதிவு செய்தது இல்லை. மேலும் மேலாளரிடம் தைரியமாக பேசியதும் இல்லை.

அந்த நிகழ்வுக்குப் பிறகு அந்த மேலாளர் என்னை வேறு எதற்கும் 
உள்ளே கூப்பிடவில்லை! 

இது நடந்து இரண்டு மாதங்கள் கழிந்து,தற்காலிக மாற்றலில் தலைமை அலுவலகம் சென்றிருந்த எனது முன்னாள் பயிற்சியாளர், திரும்ப 
அதே கிளைக்கு வந்துவிட்டார். (அது கூட அந்த மேலாளரின் முயற்சியால்தான் என நினைக்கிறேன்.) 

எனக்கும் அங்கிருந்து தலைமை அலுவகத்திற்கு மாற்றல் வந்து விட்டது. பின்பு ஒரு சுபயோக சுபதினத்தில் என்னை அந்த மேலாளர் விடுவித்து விட்டார். 

அன்று மாலை எனது முன்னாள் பயிற்சியாளர் இரவு விருந்துக்கு 
அவரது வீட்டிற்கு கூப்பிட்டார். இவர்தான் மேலாளருக்கு வேண்டியவர் ஆயிற்றே இவர் ஏன் நமக்கு விருந்து தருகிறார் என நினைத்துக் கொண்டு, அவர் வீட்டிற்கு சென்றேன்.      


தொடரும்

22 கருத்துகள்:

  1. அவர் தடுக்கில் நுழைந்தால் கோலத்தில் நுழைபவர் நீங்கள். அப்படி உஷாராக இருந்ததால்தான் அவரை ‘ஙே’ என்று விழிக்க வைக்க முடிந்திருக்கிறது. சபாஷ். விருந்தில் நடந்தது என்னவென்று அறியும் ஆவலுடன் நான்...

    பதிலளிநீக்கு
  2. உங்களின் உள்ளுணர்வு, அன்று நன்றாக வேலை செய்திருக்கிறது சார் !

    பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

    என் தளத்தில் :
    "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கு நன்றி திரு பால கணேஷ் அவர்களே! தொடர்வதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! கருத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  5. Ordinary man waits for the opportunities; Wiseman creates opportunities.
    Ordinary man gets problem as a surprise; Wiseman surprises the problem.
    Wise you are.

    Packirisamy N

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும்,கருத்துக்கும், மனமார்ந்த பாராட்டுக்கும் நன்றி
    திரு N.பக்கிரிசாமி அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. அருமையான ஐடியா ஐயா தங்களுடையது.! நிச்சயம் மேலாளர் மிரண்டே போயிருப்பார்.! அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்த்து.!

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கு நன்றி வரலாற்று சுவடுகள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  9. நானும் கூட உங்கள் செயலுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன் ஐயா. சென்னையில் நடக்கும் பதிவர் சந்திப்பில் தங்களை நேரில் காண ஆவலாயிருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  10. ''...இவர்தான் மேலாளருக்கு வேண்டியவர் ஆயிற்றே இவர் ஏன் நமக்கு விருந்து தருகிறார் என நினைத்துக் கொண்டு, அவர் வீட்டிற்கு சென்றேன்...''
    ஆகா மறுபடியும் சஸ்பென்சா! பழையவரைப் பற்றி எனக்கெல்லாம் தெரியும், என்ன செய்வது வேலைக்காக அப்படி நடந்தேன் என்று மன்னிப்புக் கேட்கப் போகிறாரா?...ம்..ம்....நல்வாழ்த்து....பொறுத்திருக்கிறேன்....எது வென அறிய...
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  11. நானும் என் ஆபீசருக்கு இவ்வாறு தண்ணி காட்டியிருக்கிறேன். அதைப்பற்றி ஒரு பனி பதிவு போடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  12. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கவிஞர் மதுமதி அவர்களே!பதிவர் சந்திப்பில் உங்களையும் மற்ற நண்பர்களையும் சந்திக்க ஆவலுடன் இருக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  13. வருகைக்கும், அடுத்து நடந்ததை அறிய காத்திருப்பதற்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்கா திலகம் அவர்களே!

    பதிலளிநீக்கு
  14. வருகைக்கு நன்றி திரு பழனி.கந்தசாமி அவர்களே! தங்களுடைய அனுபவத்தை அறியக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. உள்ளுணர்வுகள் ஒருபோதும் பொய்யப்தில்லையே !

    சிறப்பான பணிக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  16. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஷ்வரி அவர்களே.உண்மைதான். உள்ளுணர்வுகள் எப்போதும் பொய்ப்பதில்லைதான்.

    பதிலளிநீக்கு
  17. Useful lessons to all ; how keeping records meticulously/ religiously however monotonous would be helpful in the long run. Great men have been known to keep dairies recording events daily despite busy schedules. Vasudevan K

    பதிலளிநீக்கு
  18. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!

    பதிலளிநீக்கு
  19. உங்கள் அனுபவங்கள் மேலாண்மை வகுப்புகளில் பகிர்ந்து கொள்ளத்தக்கவை.

    பதிலளிநீக்கு
  20. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  21. தங்களுக்கு ஓர் உள்ளுணர்வு ஏற்பட்டு இதுபோல செய்து வந்தது மிகவும் நல்லதாகப் போய்விட்டது. பாராட்டுகள்.

    சேமிப்புக் கணக்குப் பிரிவில் பார்ப்பதற்கு வேலை இல்லாததுபோல்
    இருக்கும் ஆனால் தாங்கள் சொல்லியுள்ளதுபோல நச்சு வேலைகளுக்குப் பஞ்சமே இருக்காது.

    அதுவும் அந்தக்காலத்தில், இன்றுபோல கம்ப்யூட்டர்களோ, கேஷ் கவுண்டிங் மெஷின்களோ, ஏ.டி.எம். மெஷின், பாஸ்புக் எண்ட்ரி மெஷின் போன்ற எதுவுமே கிடையாதே. லெட்ஜரைப்புரட்டிப் புரட்டி கையால் எழுதி வாயால் கூட்டிக் கழித்து பெருக்கி வகுத்து அல்லவா ஒவ்வொன்றையும் நாம் பொறுப்பாகவும் கவனமாகவும் செய்ய வேண்டியிருக்கும்.

    இதனையெல்லாம் 1970-இல் ஸ்டேட் பேங்கில் பணியாற்றிய நாட்களில் நானும் நிறையவே செய்துள்ளேன். கேல்குலேட்டர் கூட அப்போது கிடையவே கிடையாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு